Sunday, April 11, 2010

பதிவர் சந்திப்பும் அவார்டும்

எல்லா தோழிகளுமே வலை வழி பழக்கம் தான் ஆனால் யாரையும் நேரில் சந்தித்தது கிடையாது. ஆனால் அருசுவை தோழி மர்லியை மட்டும் நேரில் போய் பார்த்து இருகிறேன். தமிழ் குடும்ப தோழி , தமிழ் குடும்பத்தில் பிளாக் ஆரம்ப்க்கும் முன் அக்கா உங்கள் கிட்ட பேசனுமே எப்படி பொதுவான இடத்தில் என் மெயில் ஐடியோ,போன் நம்பரோ எப்படி கொடுப்பது. அது எங்க வீட்டிலும் விருப்பம் கிடையாது. ஆகையால் என்ன விஷியம் என்றேன். அதற்கு பிறகு ஒன்றும் பதிலிலலை, அதோடு நின்றது. அடுத்து பிளாக் மூலமாக ரொம்ப நல்ல தோழியாகிட்டாங்க
ஓவ்வொரு முறையும் சந்திக்காதது காதல் கோட்டை அஜீத், தேவையானை போல ஆகிவிட்டது, நான் ஒகே சொல்ல அவர்களால் வரமுடியாமல், அவர்கள் ஒகே சொல்ல நான் வரமுடியாமல் போனது.
ரொம்ப‌ நாளா உங்க‌ளை பார்க்க‌னும் அக்கா, என்று சொல்லி கொண்டே இருந்தார்க‌ள், நாங்க‌ளும் ஓவ்வொரு முறை அவ‌ங்க‌ துபாய் வ‌ரும் போதும் ஏதாவ‌து ஒரு கார‌ணத்தால் ச‌ந்திக்க‌ முடியாம‌ல் போய் விடும்.

ஒரு வ‌ழியா வெள்ளி கிழ‌மை காலையில் டூட்டி ஃப்ரூட்டி பான் கேக் செய்து முடித்து விட்டு, ம‌திய‌ சாப்பாடுக்கு மீன் சால்னா, ஓம‌ம் ஃபிஷ் பிரை, க‌ட்டி ப‌ருப்பு, ரெடி ப‌ண்ணி கொண்டு இருந்தேன்,அவசர அவசரமா வேலைகளை முடித்தேன், பையனுக்கு விடுமுறை முடிந்து பள்ளி ஆரம்பம் ஆக போவதால் நோட், புக்ஸ் எல்லாம் அட்டை போடனும். யுனிபார்ம் ரெடி பண்ணனும். அதுக்குதான் .ம‌திய‌ம் 11.30 ம‌ணி இருக்கும், தீடீருன்னு போன் அக்கா
உங்கள் வீட்டு வாச‌லில் நிற்கிறேன். நான் போய் கையில் போன‌ துக்கி கொண்டே ஒரு எட்டு எங்கே? அவ‌ங்க‌ அட‌ உங்க‌க்க‌மக்கா, நான் வ‌ரேன் துபாயிக்கு ஃபிரைடே மார்கெட்டுக்கு வ‌ந்துடுங்க‌. நானும் ச‌ரி என்று சொல்லிவிட்டு ஃபிரைடே மார்கெட் என்றால் ஒரு ஆள் கூப்பிட்டு போக‌னும் இங்கு ப‌க்க‌தில் என்றால் ந‌ட‌ந்து போய்விடலாமே. என்று யோசிக்க‌ உட‌னே லு லு வே வ‌ந்துடட்ரேங்கா, அஸ‌ர் தொழுதுட்டு 4 ம‌ணிக்கு மேல‌ பாப்போம்.. ஓகே


உட‌னே அப்ப‌வே நோட்டு புக்குக்கு அட்டையும் போட்டு முடித்து, ம‌திய‌ம் சாப்பாடு வேலையும் முடிந்து அஸ‌ர் தொழுது இஞ்சி டீயும் குடிச்சாச்சு ம‌ணி 4.30 போன் வ‌ரல.
(இந்த் சந்திப்புக்கு ரெடியானது எப்படி இருந்தது என்றால் ஹிந்தி படம் பார்க்க ரொம்ப பிடிக்கும் சின்ன வயதில் சனிக்கிழமை ஆன மாலை டீவியில் ஹிந்தி படம் அதற்காகா அம்மா சொல்லும் வேலை எல்லாம் பரந்து பரந்து முடிப்பேன். படம் புரியுதோ இல்லையோ பார்க்கும் போது யாரும் டிஸ்ரப் பண்ண கூடாது என்று, அந்த ஞாபகம் இன்று வேலைய முடித்தது)
கடைசியில அண்ண வீட்டுக்கு போரேன்க்கா, ஆஹா இனும் பர்க்க முடியாதா என்று நினைத்தேன், 5.30 க்கு வந்துட்டு கால் பன்றேன் அப்ப வாங்க.உடனே மலிக்கா கேட்ட கொழுக்கட்டை ஞாபகம் வந்தது அதையும் செய்து எடுத்து கொண்டு பையன கூட்ட்பிட்டு கொண்டு நேரா லூ லூ க்கு 5.15 க்கு எல்லாம் போயாச்சு


அப்படி ஒரு ரவுண்டு அடித்து மீதி உள்ள கால் மணி நேரத்தையும் ஓட்டியாச்சு.வந்தாங்க பெட்சீட் பக்கம் இரண்டு பெண்கள் என்னை நோக்கி ஆனால் வருகிறவர்கள் என்னை நோக்கி வரும் போதே அவஙக் தான் ஆனா ஒரு சந்தேகத்தில் அப்படியே நின்றேன். பின்னாடி வந்து எக்கா எக்கா... ஒரே ஹி ஹி ஹி தான்.
உட்னே பின்னாடி இருக்கும் பார்க்கில் உட்கார்ந்து கொஞ்சம் நேரம் தான் பேசியது போல் இருந்தது, போன் வருது ஹஸுக்கிட்ட இருந்து மணிய பார்த்தா 2 மணி நேரம் மேல ஆகிவிட்டது. என்ன இருந்தாலும் நட்புக்கு எண்ணங்க்ளை பறிமாறிக்கொள்ளும் நட்புக்கு ஈடு இனை எதுவுமே கிடையாது.
சந்திக்க போன ஆள் யாருன்னு கேட்கிறீங்களா அவங்க கவிதையால கொஞ்ச நாள் முன்பு ஜார்ஜாவுல மழை வெள்ளம் கூட் வந்துடுச்சின்னா பாருங்கள்//
இந்த வலை உலகில் நிறைய தோழிகள் முகம் தெரியாத பல தோழிகள் என்னை அக்கா அக்கா என்று உரிமையோடு கூப்பிடும் போது , ரொம்ப சந்தோஷமாய் இருக்கு அதோடு அக்கா அக்கான்னு சொல்லி நிறைய கிரீடம் வேறு கொடுத்து விடுகிறார்கள், அதுவும் வைர கிரீடம்.


இது பதிவுலகில் ஜெய்லானி வழங்கியது இத அவரே ராப்பகலா வடிவமைத்து ரொம்ப பெரியய்ய்ய்ய்ய் மனசோடு பதிவுலக தோழ தோழியர்களை வலையில் வலை போட்டு தேடி எல்ல்லோருக்கும் கொடுத்து இருக்கிறார், அதில் எனக்கும் இந்த வைர கிரீடம் பச்சை ரோசா முத்திரையுடன். மிக்க நன்றி ஜெய்லானி




பதிவுலகில் அருசுவை தோழி, இப்ப பதிவுலகிலும் மிக அருமையான தோழி எனக்கு ராணி கிரீடம் கொடுத்துள்ளார்க்ள் , மிக்க நன்றி ஸாதிகா அக்கா.
நல்ல புது புது தகவலுடன் பதிவுகளை தந்து அசத்திக்கொண்டிருக்கும் ஸாதிகா அக்கா கொடுத்தது.



இது சைவ கொத்து பரோட்டா கொடுத்தது இவர் தினம் பதிவுகளை வித விதமான கொத்து பரோட்டா போல கொத்தி போடுவார், பரோட்டாவை பத்து விதவா செய்வாராம் ஆனால் இவர் பதிவுலகில் இவர் ஒரு குழந்தையாம்
தம்பி சசிகுமாரும் இந்த விருதை கொடுத்து இருக்கிறால், பிளாக் ஆரம்பிப்பவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும் இவர் பதிவு. அதோடு கீழே போடும் லொள்ளு படங்களும் நல்ல இருக்கும்
இருவருக்கும் மிக்க நன்றி

இந்த விருதுகளை நான் யாருக்கும் இப்போதைக்கு கொடுக்க போவதில்லை. ஏனென்றால் இது விருது மாதம் போல யார் பிளாக் ஓப்பன் செய்தாலும் ராஜா , ராணி , வைர கிரீடமா இருக்கு. இன்னும் எவ்வளவோ பதிவர்கள் அவர்களை தேர்ந்தெடுத்து பிறகு கொடுத்து கொள்ளலாம்.
//இது நான் இப்போதைக்கு கொடுக்க நினைத்தது, வலை உலகில் எல்லோரும் ஓருவ்ருக்கு ஒருவர் விருது பரிமாறிக்கொள்கிறோம், ஆனால் பல 100 (தோழிகள்)குறிப்புகளில் எனக்கு முதல் முதலா 2 வருடம் முன் 300 குறிப்பு முடித்ததற்கு எனக்கு வலை உலகில் முதல் முதல் பரிசு கிடைத்தது தமிழ் குடும்பத்தில் தான், ஆகையால் இந்த ராஜா ராணி கிரீடத்தை, இப்போதைக்கு தமிழ் குடும்பத்தின் தூண் தமிழ் நேசன் அவர்களுக்கும் அதை செம்மையாக நடத்தும் அவருடைய மனைவிக்கும் இதை கொடுக்கிறேன்//

ஒரு வழியா பெண் பதிவர் சந்திப்பு நல்ல படியாக முடிந்தது,ரொம்ப சந்தோஷம், சந்தித்த தோழி யாருன்னு தெரியவேண்டாமா மீதிய இங்கு சென்று படித்து கொள்ளவும்



48 கருத்துகள்:

Prathap Kumar S. said...

//இந்த விருதுகளை நான் யாருக்கும் இப்போதைக்கு கொடுக்க போவதில்லை. //

சே..அப்படி ஜொல்லாதீங்க...காசா பணமா...?? குடுத்துடுங்க...

Prathap Kumar S. said...

அடேங்கப்பா....பதிவர் சந்திப்புல்லாம் நடத்த ஆரம்பிச்சட்டீங்க...
கரண்டி இல்லாமலே கலக்குறிங்கப்போங்க...:))
அரசியல் கட்சி ஆரம்பிக்கிற எண்ணம் ஒண்ணும் இல்லயே....:))

ஸாதிகா said...

அடடா..சந்திப்பு தித்திக்குதே.படிக்கவே மகிழ்ச்சியாக உள்ளது.விருதுக்கு வாழ்த்துக்கள்.

மாதேவி said...

விருதுகள் கிடைத்ததற்கு பாராட்டுக்கள்.

தோழியின் சந்திப்பு தந்த மகிழ்ச்சியில் நானும் கலந்துகொள்கின்றேன்.

நாஸியா said...

vada poche! che kozhukkattai poche!!

aagaaa miss aayitteeeee :(((

செந்தமிழ் செல்வி said...

ஜலீலா,
சந்திப்பை நல்லா சொல்லி இருக்கீங்க! என்னையெல்லாம் எப்ப சந்திக்கப் போறீங்க?

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி மன்னார்குடி, (ஹல்வா பார்சல்)

Jaleela Kamal said...

//அடேங்கப்பா....பதிவர் சந்திப்புல்லாம் நடத்த ஆரம்பிச்சட்டீங்க...
கரண்டி இல்லாமலே கலக்குறிங்கப்போங்க...:))
அரசியல் கட்சி ஆரம்பிக்கிற எண்ணம் ஒண்ணும் இல்லயே....:)).//

நாஞ்சிலாரே ஏற்கனவே சசி குமார் கட்சி ஆரம்பித்தா முதல் ஓட்டு போடுவதாக சொல்லி இருக்கிறார். இப்போதைக்கு எண்ண‌ம் இல்லை வ‌ந்தா சொல்றேன்.


//சே..அப்படி ஜொல்லாதீங்க...காசா பணமா...?? குடுத்துடுங்க//

கொடுத்த பிறகு ஏமாந்தது ஜலீலாக்கான்னு எழுதி வைக்கவா

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா கூடிய சீக்கிரம் இதைவிட தித்திப்பா நாமும் சந்திப்போம்.

Jaleela Kamal said...

//தோழியின் சந்திப்பு தந்த மகிழ்ச்சியில் நானும் கலந்துகொள்கின்றேன்/

மிக்க நன்றி மாதேவி

Jaleela Kamal said...

நாஸியா இப்ப வருத்தப்பட்டு புரோயோஜனம் இல்லை, ஹி ஹி
அதையும் போடலாம் என்று தான் இருந்தேன். நாஙக் இரண்டு பேரும் சேர்ந்து சந்திக்க்க நினைத்தது ஒரு குழந்தைய அது மிஸ்ஸாகிவிட்டது என்று

Jaleela Kamal said...

செல்வி அக்கா அந்த நாளை தான் எதிர் பார்க்கிறேன், அதுவும் சீக்கிரமே... ஜே மாமி பார்த்தா காதில் புகை வரும் இரண்டு முறை வ்ந்து அவங்களை பார்க்க முடியாமல் போய் விட்டது,

சைவகொத்துப்பரோட்டா said...

நீங்க யாரை சந்தித்தீர்கள் என்பது
எனக்கு தெரியுமே!!!
அவங்களும் எழுதி இருக்காங்க........ஹி.....ஹி......

அன்புடன் மலிக்கா said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள் வாங்கிய விருதுக்கு சோக்கேஸ் அனுப்பட்டுமா.அக்கா.

அன்புடன் மலிக்கா said...

தித்திக்குதே தித்திக்குதே
திதிதிக்குதே.

பாட்டு படிச்சேன்
சந்திப்பில் மகிழ்ச்சி நிறைந்த மனம் ததும்பியது ஆனந்ததில்.

கொழுகட்டை சூப்பர் நம்ம ஜெய்லானிக்கும் ரெண்டு பார்சல் அனுப்புங்கக்கா.
பாவம்.

அப்புறம்.
Jaleela said...
ஸாதிகா அக்கா கூடிய சீக்கிரம் இதைவிட தித்திப்பா நாமும் சந்திப்போம்..//

இதைவிட தித்திப்பான்னா. கொழுக்கடையில்லாமல்
தேன் லட்டு கொண்டுபோகப்போறிங்கலாக்கா.

ஜெய்லானி said...

கொழுக்கட்டை போச்சே!!!

ஜெய்லானி said...

ச்ந்திப்பு எல்லாம் சரிதான் , ஆனா ரெண்டு பேருமே என்ன பேசுனீங்க அதை யாருமே சொல்லலையே ??. ( ஓடிடு.. ஜெய்லானி...ரெண்டு பேருக்கு நடுவில மாட்டிக்காதே!!!)

ஜெய்லானி said...

//எனக்கும் ரொம்ப சந்தோஷம், இதில் ஒன்றும் சொல்லனும் நானும், மலிக்காவும் சேர்ந்து பார்க்க நினைத்தது ஒரு குழந்தைய ஆனால் பார்க்க முடியல‌//

ஒரு வேளை ’’பிரியாணியா ’’?

Asiya Omar said...

அக்கா தங்கையின் சந்திப்பிற்கும்,விருதிற்கும் வாழ்த்துக்கள்....

ஜெய்லானி said...

// Jaleela said...

ஸாதிகா அக்கா கூடிய சீக்கிரம் இதைவிட தித்திப்பா நாமும் சந்திப்போம்.//

அதிரசம் , ஜாங்கிரி (ஜிலேபி ) எதுவும் ரெடி பண்ணுறீங்களா என்ன ?

மலீக்காக்கா அங்க வேகாத கொழுக்கட்டைன்னு சொல்லிட்டாங்க !!( ஹையா எப்டி கோத்து விட்டாச்சி ஜெய்லானி என்னாஆஆ வில்லத்தனம் )

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் அக்கா!! தொடரட்டும் நட்பு...நாந்தான் இந்த முறை இந்தியா போனபோது செல்விம்மாவை பார்க்கமுடியாமல் போனதில் வருத்தம்..

சீமான்கனி said...

உங்கள் சந்திப்பை கண்முன்னே காட்ச்சியாவே ஓடவிட்டுடீங்க பர்தா பார்த்து பழகிப்போனதால் நான் மலிக்கா அக்கா பதிவில் கண்டு பிடித்து விட்டேன் ஜலி அக்கா யாரு மல்லி அக்கா யாருன்னு.ஏதோ என்னால முடிஞ்சது...
வாழ்த்துக்கள் ஜலி அக்கா....

முற்றும் அறிந்த அதிரா said...

ஜலீலாக்கா... என்ன இது சொல்லாமல் பறையாமல் பப்ளிக்கில் ஒரு கட்டிப்பிடிப்பு மன்னிக்கவும் சந்திப்பூ..

இருப்பினும் என்னையெல்லாம் சந்திக்கும்போது, கொழுக்கட்டை தந்து பேய்க்காட்ட முடியாது.. மண்சோறுதான் வேணும் உள்ளே அவித்த கோ.... இருக்கோணும்.

பிங் பேர்ஷை மறைச்சிட்டீங்களே ஜலீலாக்கா இட்ஸ் ஓக்கை... எனக்கும் பிங் ஓக்கை ஆனால் உள்ளே ஒரு குட்டிப்பூஸார்தான் வேணும் கொயின் வாணாம்...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாழ்த்துக்கள்.. பதிவுலக தோழியை நீங்க சந்தித்த மகிழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.. :) :)

GEETHA ACHAL said...

சூப்பர்ப் சந்திப்பு...

Chitra said...

அக்கா, பதிவர் சந்திப்பை பற்றி நீங்கள் சொல்லியுள்ள விதம் படிக்கும் போது, நானும் ஜலீலா அக்காவை எப்பொழுது சந்திப்போம் என்று ஆவலாய் உள்ளது.
அக்கா, நிறைய விருதுகள் வாங்கி இருக்கீங்க. வாழ்த்துக்கள்!
நீங்கள், சகலகலா ராணி ஆச்சே! உங்கள் கையால் விருது வாங்க, அடுத்து யாருக்கு கொடுத்து வைத்து இருக்கிறதோ...... ம்ம்ம்........!

Jaleela Kamal said...

ஜெய்லானி அங்கேயும் இங்கேயும் சந்தித்தவர்கள் யார் யார், கொழுக்க்கடைய கண்டு பிடிக்க, குழந்தைய கண்டி பிடிக்க ஓடி ஓடி களைத்து விட்டார் அவருக்கு ஒட்டக பாலில் ஒரு ஐஸ் டீ கொடுங்கள்.

Jaleela Kamal said...

அதிரா உங்களை பார்க்க லண்டன் வருவேன், அப்ப கண்டிப்பா மண் சோறும், பூஸாருடன் பர்ஸும் உண்டு.

நலந்தானோ, இன்று வழியில் உங்கள் இரட்டையரை பார்த்தேன், உங்கள் நினைவுடன், நீங்கள் கதைத்தை நினைத்து கொன்டே வந்தேன்,முதலில் சோகத்துடன் வந்து கொண்டு இருந்தேன், பிறகு இரட்ட்டையரை பார்த்ததும் அப்படியே மணம் மாறி விட்டது,

நட்புடன் ஜமால் said...

போட்டு தாக்குங்க

துபாய் ஏற்கனவே ஹாட்டு

இப்போ ஹாட்டோ ஹாட்டு

ஜமாய்ங்க

விருதுகளுக்கும் வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

ஒருவழியாப் பாத்துகிட்டீங்களா ரெண்டு பேரும்? சந்தோஷம். முடிஞ்சா இன்னும் ஒரு சந்திப்பு எங்களுக்கும் சேத்து ஏற்பாடு பண்ணுங்கக்கா (உங்க ரெண்டு பேர்ல யார் பிரியாணி, தாள்ச்சா, சிக்கன் லாலிபாப், கேக், ஸ்வீட் செஞ்சாலும் ஓக்கேதான்!!)

அன்புடன் மலிக்கா said...

ஜலீலாக்கா... என்ன இது சொல்லாமல் பறையாமல் பப்ளிக்கில் ஒரு கட்டிப்பிடிப்பு மன்னிக்கவும் சந்திப்பூ..//

ஹி ஹி அதிரா கண்ணில் புகை வருதோ.
பாசம் பப்ளிக்கை மறைத்துவிட்டது.

யக்கோவ் புதுசா கதை சொல்லியிருக்கேன் வாங்க வந்து கேளுங்க

சசிகுமார் said...

அக்கா ஒரு சந்திப்புக்கே இவ்வளவு நாளா, எப்படியோ ஒருவழியா சந்திச்சாச்சு. இந்த முயற்சிகள் எவ்வளவு நாளாக நடந்தது.

R.Gopi said...

பலே பதிவர் சந்திப்பு....

பரபர விவரிப்பு.... கூடவே ஜலீலா ஸ்பெஷல் கலகல...

அண்ணன் நாஞ்சிலார் கேட்கிறார்... கரண்டி இல்லாமல் கலக்குறீங்களே.. அரசியல் கட்சி ஆரம்பிக்கற எண்ணம் இருக்கான்னு... நானும் அதையே கேட்டு... ஒரு சின்ன துண்டு போட்டு வைக்கிறேன்... அங்க எங்களுக்கு ஒரு 33% இட ஒதுக்கீடு கூட இல்லாமயா போகும்??

////சே..அப்படி ஜொல்லாதீங்க...காசா பணமா...?? குடுத்துடுங்க//

கொடுத்த பிறகு ஏமாந்தது ஜலீலாக்கான்னு எழுதி வைக்கவா//

ஹா...ஹா...ஹா... இந்த பதிலை மிகவும் ரசித்தேன்... காமெடில உங்கள அடிச்சுக்க ஆளே இல்லீங்கோ. கைப்புள்ளயே கையேந்தணும்னு சொல்ல வந்தேன்..

வாழ்த்துக்கள் ஜலீலா...அன்புடன் மலிக்கா....

Jaleela Kamal said...

//பாசம் பப்ளிக்கை மறைத்துவிட்டது//


நாங்க பேசி முடித்து விட்டு போய் வரேன் என்று சொன்னதும் இருந்த அமைதி ஜோன்னு மழை பெய்து விட்டமாதிரி இருந்தது, எங்கள சுற்றி இருந்தவர்களை பற்றி நினைகக்வே இல்லை.....

Jaleela Kamal said...

//நீங்க யாரை சந்தித்தீர்கள் என்பது
எனக்கு தெரியுமே!!!
அவங்களும் எழுதி இருக்காங்க........ஹி.....ஹி//

சை.கொ.ப ஒரு வழியா இரண்டு பேர் பக்கத்துக்கும் போய் தெரிந்து கொண்டீர்கள்.

Jaleela Kamal said...

மலிக்கா ஜெய்லானிக்கு கொழுக்கட்டை பார்சல் அனுப்பினால் மங்கு வந்தா காதுல புகை வந்துட்டும்.

துபாய் ராஜா said...

நட்'பூ' மணம் சிறக்க வாழ்த்துக்கள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹிம்ம்ம்ம் !!!! பதிவர் சந்திப்பல்லாம் கலக்குங்க .. எங்க ஆபீஸ்ல பிளாக் எல்லாம் தடை பண்ணியாச்சு அதனால ரீடரில் படிக்க மட்டுமே முடியும்... கமென்ட் போடவே முடியாது :(

Jaleela Kamal said...

ராஜ் குமார் நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்.

பரவாயில்லை. ஆஹா ஆப்பு வச்சிடாங்கலா? பொழப்பு தான் முக்கியம்,

Jaleela Kamal said...

நன்றி துபாய் ராஜா

Jaleela Kamal said...

//அக்கா ஒரு சந்திப்புக்கே இவ்வளவு நாளா, எப்படியோ ஒருவழியா சந்திச்சாச்சு. இந்த முயற்சிகள் எவ்வளவு நாளாக நடந்தது//

சசிகுமார். ஒரு வருடமாக முயற்சி..

Jaleela Kamal said...

வாங்க சகோ.ஜமால் சந்தித்ததில் ஹாட்டு எல்லாம் ஒன்றும் தெரியவோ இல்லை.

ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க. நன்றி

Jaleela Kamal said...

நன்றி காஞ்சனா

Jaleela Kamal said...

கோபி வந்தாலே பாயிண்டுக்கு பாயின்ட் விளாவாரியான கமெண்ட் தான்
நன்றி.

Jaleela Kamal said...

சித்ரா என்னப்பா எல்லோரும் ஓவ்வொரு விதத்தில் சகல கலா வள்ளிகள் தான்.

நிங்கள் காமடி பதிவில் சகல கலா வள்ளி

Jaleela Kamal said...

நன்றி ஆசியா
நன்றி கீதா ஆச்சல்

Jaleela Kamal said...

ஹுஸைன்னாம்மா போன வாரம் கூட மலிக்கா கூப்பிட்ட போது ஹுஸைனாம்மா, நாஸியாவும் வரட்டும் ஒரு இடத்தில் வைத்து சந்திப்போம் என்று தான் சொன்னேன். , அதற்கு மீட் பண்ணியாச்சு பார்க்கலாம் அடுத்து எல்லோருக்கும் ஒரு தோதுவான நேரம் கிடைக்குதான்னு.

Jaleela Kamal said...

///அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா! இதைப் படித்துவிட்டு அது மலிக்காதான்னு புரிந்தது. ஏன்னா 'மலிக்கா கேட்ட கொழுக்கட்டை ஞாபகம் வந்தது அதையும் செய்து எடுத்து கொண்டு'- இந்த வார்த்தைய வச்சி கெஸ் பண்ணிக்கிட்டேன் :‍) நீங்க தந்த லிங்க் வழியா நான் நினைத்தது கரெக்டா போச்சு :) இதையே மலிக்காவிடமும் சொல்லியாச்சு :)

அது என்ன, இருவரும் சஸ்பென்ஸா சொல்லி லிங்க் மட்டும் கொடுக்கணும்னு பேசி வைத்துக் கொண்டீர்களா? :-)

நாமெல்லாம் என்றாவது ஒருநாள் சந்திக்கும் காலம் இன்ஷா அல்லாஹ் வரத்தான் செய்யும். இறைவன் அதற்கு உதவி செய்வானாக! ///

வா அலைக்கும் சலாம் அஸ்மா

கண்டிப்பா இறைவன் நாடினால் எல்லோரும் சந்திப்போம்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா