Thursday, April 8, 2010

இறால் பாஸ்தா/prawn pasta


தேவையான‌வை

இறால் = 10 மீடியமானது
பாஸ்தா = இர‌ண்டு ட‌ம்ள‌ர்
எண்ணை = முன்று தேக்க‌ர‌ண்டி
வெங்காயம் = இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் = இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
தக்காளி = முன்று
பச்சமிளகாய் = ஒன்று
கொத்து ம‌ல்லி , புதினா த‌ழை = சிறிது
தேங்காய் ப‌வுட‌ர் = முன்று தேக்க‌ர‌ண்டி
முந்திரி = முன்று
உப்பு = தேவைக்கு
மிள‌காய் தூள் = முக்கால் தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = சிறிது


செய்முறைவிரும்பிய வடிவ‌ பாஸ்தாவை தனியாக குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணை சிறிது உப்பு போட்டு வேகவைத்து வடித்து வைக்கவும்/


தனியாக வாயகன்ற வானலியில் இறாலை தாளிக்கவும்.
எண்ணை விட்டு பட்டை சேர்த்து வெங்காயம் வதக்கி , இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு பச்சவாடை போக வதக்கி, கொத்துமல்லி, புதினா, தக்காளி, பச்சமிளகாய் சிறிது உப்பு போட்டு தக்காளியை மசிய விடவும்.


அடுத்து இறால்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,தேவைக்கு மீண்டும் சிறிது உப்பு தூள் சேர்த்து தீயின் தனலை குறைத்து வைத்து கிரேவி கிரிப்பாக விடனும்.


பிறகு வடித்து வைத்த பாஸ்தாவை சேர்த்து தேங்காய் பவுடருடன் முந்திரி சேர்த்து அரைத்து ஊற்றி கொதிக்க விட்டு சிறிது தண்ணீர் போல இருக்கும் போதே இரக்கி விட வேண்டும்.ஆறியதும் கெட்டியாகிடும்.
குறிப்பு
இது இறாலில் செய்வதால் தனித்தனியாக வேகவைக்கனும் இறால் வேகும் நேரம் குறைவே, ரொம்ப வெந்தால் ரப்பர் போல் ஆகிடும்குக்க‌ரில் நிமிஷ‌த்தில் செய்து விட‌லாம், ஆனால் சிக்க‌ன், இறாலை த‌னித்த‌னியாக‌ தான் செய்ய‌னும்.
ம‌ட்ட‌ன் இது எல்லாத்தையும் குக்க‌ரிலேயே ஏற்றிடலாம் செய்முறை சிறிது மாறும்/


குழ‌ந்தைக‌ளுக்கு செய்வதாக‌ இருந்தால் நூடுல்ஸ் டைப்பில் செய்ய்யலாம்.


த‌க்காளிக்கு ப‌தில் த‌க்காளி பேஸ்ட், கெட்ச‌ப் போட்டு செய்து கொடுக்க‌லாம்,
டிஸ்கி:இது ம‌ங்குனி அமைச்ச‌ர் இறாலையே பார்த்த‌தில்லை என்றால் அவ‌ருக்காக‌ அமைச்ச‌ரே (உங்க‌ளுக்கு ம‌ட்டும் கூட‌ இர‌ண்டு க‌ர‌ண்டி மிள‌காய் தூள் சேர்த்து கொள்ளும், முடிந்தால் ப‌த்து ப‌ச்ச‌ மிள‌காய்.)
அமைச்ச‌ரே இறால் பிரியாணி போட‌ நாளாகும் அது வ‌ரை

இந்த‌ இறால் ச‌ப்ஜி சேமியாவை பார்த்து கொள்ள‌வும்.தங்கை பையன் எப்போது கையில் ஒரு கரண்டியோடு தான் இருப்பான், பெரிமா உங்களை விட நான் நல்ல சமைப்பேனாக்கும்.

19 கருத்துகள்:

Jaleela said...

கம்ப்யுட்டர் ரிப்பேர் ஆகையால் யாருக்கும் உடனே உடனே பதில் போட முடியல. அமைச்சருக்கு இன்று போடுறேன்னு வாக்கு கொடுத்துட்டோமே ஆகையால் அதான் பா போட்டாச்சு.

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

Mrs.Menagasathia said...

அருமையாக இருக்கு...

Geetha Achal said...

இது என்ன பாஸ்தா வாரமா...சூப்ப்பர்ப் போஸ்டிங்க்ஸ்...

Chitra said...

உங்கள் தங்கை பையன், உங்கள் செல்லம் போல. ரொம்ப influence பண்ணி இருக்கீங்க.

He is very cute. :-)

seemangani said...

இறால் எனக்கு ரெம்ப பிடிக்கும் சூப்பர் ஜலி கா...குட்டி க்யூட்...நான்தான் பஸ்ட்டா...

ஜெய்லானி said...

//அமைச்ச‌ரே (உங்க‌ளுக்கு ம‌ட்டும் கூட‌ இர‌ண்டு க‌ர‌ண்டி மிள‌காய் தூள் சேர்த்து கொள்ளும், முடிந்தால் ப‌த்து ப‌ச்ச‌ மிள‌காய்.)//


அதுவும் பெங்காளி பச்சை மிளகாயா பாத்து போடனும். அதை மங்கு சாப்பிடும் அழகை பாத்து நான் ரசிக்கனும்

மங்குனி அமைச்சர் said...

ரொம்ப தேங்க்ஸ் மேடம் , பிரிண்ட் எடுத்து வீட்ல குடுத்தாச்சு , வர்ற சண்டே நம்ம வுட்ல இதுதான்
மேடம் அடுத்து ஜெய்லானிகாக ஏதாவது வெட்னரி ரெசிபி ஒன்னு போடுங்க , பாவம் நாக்க தொங்க போட்டு அலையுது

சசிகுமார் said...

நல்ல பதிவு அக்கா, அக்கா உங்களுக்கு ஒரு விருது காத்து கிடக்குது நேரமிருந்தால் வந்து பெற்று கொள்ளுங்கள்
http://vandhemadharam.blogspot.com/2010/04/blog-post_09.html

asiya omar said...

இறால் பாஸ்தா நல்லா இருக்குமே!ஜலீலா.இறால் சேர்த்து என்ன செய்தாலும் சூப்பராக இருக்கும்.

ஸாதிகா said...

எறாலில் பாஸ்தா..கண்டிப்பா சுவையாகத்தான் இருக்கும்.இன்னும் என்னென்ன பாஸ்தா செய்யலாம்?கம்ப்யூட்டர் பிரச்சினையினால் கமெண்ட் கூட பப்லிஷ் செய்ய முடியவில்லை

Krishnaveni said...

Delicious Pasta looks really great

கவிதன் said...

உங்கள் வலைப்பூ அழகாகவும் அருசுவையுடனும் நிறைந்திருக்கிறது ஜலீலா!!! வாழ்த்துக்கள்!

ஜெய்லானி said...

// மங்குனி அமைச்சர் --//மேடம் அடுத்து ஜெய்லானிகாக ஏதாவது வெட்னரி ரெசிபி ஒன்னு போடுங்க , பாவம் நாக்க தொங்க போட்டு அலையுது//

மங்கு, நா அந்த பிளாக்கில போட்டதை இங்கே காப்பி + பேஸ்ட் பன்னிட்ட..ஐய.....மொளகா ரொம்ப காரமா ??

Jaleela said...

நன்றி தமிழினி எனக்கு ஓட்டு பட்டை இனைப்பது தான் கொஞ்சம் சிரமம் முடிந்த போது போட்டு கொள்கிறேன்.

உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி மேனகா.

கீதா ஆச்சல் பாஸ்தா என்று போட்டேன் உடனே கீழே பாஸ்தா என்றால் என்ன என்று கேள்வி , அதன் பின் அமைச்சர் இறால் குறிப்பு அதனால் வந்த விளைவே , பாஸ்தா வாரமாகிவிட்டது, நன்றி கீதா ஆச்சல்,

ஆமாம் சித்ரா எல்லாமே என் செல்லங்கள் தான், எல்லா பிள்ளைகளுக்கும் என்னை கண்டால் ரொம்ப பிடிக்கும்.

சீமான் கனி இறால் பிடிக்காத ஆளே கிடையாது அதுவும் வருத்த இறால் ந்ன் ம்ம் சூப்பரா இருக்கும். குட்டி கியுட்டுன்னு சொல்லிட்டு தலய குனிந்து விடாதீர்கள், ஒன்னு போட்ற போதுவுது...

//ஜெய்லானிக்கு என்ன ஒரு ஆசை, அமைச்சர் கண்ணில் தண்ணீர் வருவதை பார்க்க //

சசி குமார் அவார்டு கொடுத்தமைக்கு மிக்க நன்றி பார்த்தேன், என்னை முதலில் சொல்லி இருக்கீங்க ரொம்ப சந்தோஷம்.

ஆமாம் ஆசியா இறலில் கூட என்ன சேர்த்து சமைத்தாலும் நல்ல இருக்கும், இப்ப உடனே ஜெய்லானிக்கு தலை கிர்ரூன்னுமே.

அமைச்சரே , கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

ஆமாம் ஸாதிகா கம்பியுட்டர் இன்னும் பிரச்சனை தான், தினம் குறிப்பு போட்டு பழகிட்டு இரண்டு நாள் போடாமா எல்லோரையும் இழந்தது போல் ஒரு பீலிங்

முதல் வருகைக்கு மிக்க நன்றி கிருஷ்ன வேனி

கவிதன் வாஙக் உங்கள் வருகைக்கும், அருமையான கருத்துக்கும் மிக்க நன்றி.
ஆஹா எங்க பார்த்தாலும் இந்த மங்குவும் , ஜெய்லானி பன்ற ஆட்டம் ரொம்ப பெருசு.

ஜெய்லானி said...

//ஆமாம் ஆசியா இறலில் கூட என்ன சேர்த்து சமைத்தாலும் நல்ல இருக்கும், இப்ப உடனே ஜெய்லானிக்கு தலை கிர்ரூன்னுமே.//

பதில் ரெடி, என்னா ஒன்னு உங்க ரெண்டு பேரையும் கிண்டல் பண்ண வேண்டாமேன்னு நெனச்சேன்.

ஸாதிகா said...

சகோதரி உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் .அன்புடன் நான் அளித்த விருதினை பெற்றுக்கொள்ளவும்.நன்றி! http://shadiqah.blogspot.com/2010/04/blog-post_10.html

Jaleela said...

பதில் ரெடி, என்னா ஒன்னு உங்க ரெண்டு பேரையும் கிண்டல் பண்ண வேண்டாமேன்னு நெனச்சேன்

//ஜெய்லானி சொல்ல வந்த்த சொல்லிடுங்க இல்லன்னா தூக்கத்தில் உங்களுக்கு கண்ணு தெரியாம போய்ட போகுது.//

Anonymous said...

ஜ்லீலா அக்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்க்களா ரொம்ப நாளா உங்களுக்கு கருத்துக்கள் தெரிவிக்க முடியலை எல்லா ரெசிப்பியும் ரொம்ப நல்லா இருக்கு உங்க்களுக்கு எத்தனை அவார்ட் கொடுத்தாலும் பத்தாது அக்கா அதலாம் தாண்டி நீங்க போயிட்டீங்க் நீங்க் சமையல் உலகில் ஒரு பெரிய KING உங்கள்தான் நான் follow பண்ணிக்கிட்டு வரேன் அக்கா
என் கண்வருக்கு 2 கொலஸ்ட்ரால் ( triglycerdies bad cholestrol)
ரொம்ப அதிகமாக இருக்கு அதை எப்ப்டி குறைப்பது என்ன சாப்பாடு எல்லாம் கொடுக்க்லாம் என் கணவர் இப்ப இந்தியா வந்திருக்கிறார் அவருக்கு இதுவரை எதுவுமே கிடையாது (bp sugar) எல்லாம் நார்மல்தான் இப்ப தான் கொலஸ்ட்ரால் வந்திருக்கு எனக்கு எப்ப்டி ட்யட் கொடுப்பது என்ன சாப்பாடு கொடுப்பது சொல்லுங்க்கள் அக்கா by farvin

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா