Tuesday, April 6, 2010

ஸ்வீட் பாஸ்தா - sweet Pasta

தேவையான பொருட்கள்

விரும்பிய வடிவில் பாஸ்தா = ஒரு கப்
பால் = முன்று கப்
ஸ்வீட்டன் கண்டென்ஸ்ட் மில்க் = ஒரு குழிகரண்டி
சர்க்கரை = முன்று மேசைக்கரண்டி
முந்திரி பாதம் = 8 அரைத்து சேர்க்க‌
முந்திரி = 4
நெய் = ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் = 2


செய்முறை


பாஸ்தாவை கழுவி குக்கரில் நெய் அரை தேக்கரண்டி வேக‌வைத்து தண்ணீரை வடித்து சிறிது தண்ணீரில் அலசி வடித்து வைக்கவும்.
பாலை ஏலக்காய் சேர்த்து காய்ச்சி சிறிது வற்ற விடவும்.
முந்திரி பாதமை அரைத்து சேர்த்து நன்கு கிரிப்பாக கொதிக்க விடவும்.பிறகு பாஸ்தாவை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, சர்க்கரை சேர்த்து நெயில் முந்திரியை பொடியாக அரிந்து வருத்து சேர்க்கவும்.
கடைசியாக கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவும்.


இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும், ஒன்று ஒன்றாக எடுத்து சாப்பிட பிடிக்கும்.டிஸ்கி:பாஸ்தா ஸாதிகா அக்கா பதிவில் போட‌சொன்னாங்க உடனே போட்டாச்சு, நாளைக்கு வேற பாஸ்தா.

39 கருத்துகள்:

ஸாதிகா said...

ஹை ஜலி அதுக்குள்ளே பாஸ்தா போட்டுட்டீங்க.என்னே அன்பு..ஆஹா..

Ammu Madhu said...

அக்கா இது கிட்ட தட்ட பால் கொளக்கட்டை குறிப்பு போல இருக்கு.குழக்கட்டைக்கு பதிலா பாஸ்தா. Amazing thought அக்கா.கலக்கறீங்க.

ஜெய்லானி said...

பாக்கும் போதே சாப்பிட தோனுது.

மன்னார்குடி said...

nice.

asiya omar said...

நான் இன்று ஜலீலாட்ட பேசி ஓட்டுப்பட்டை எப்படி இணைக்கணும்னு கேட்டேன்,அவசரத்திலும் புரிகிறமாதிரி எடுத்து சொன்னாங்க, வேலை முடிந்தது.நன்றி ஜலீலா,ஆகா வந்த கதை மறந்து சொந்த கதை பேசுகிறேனே,
ஸ்வீட் பாஸ்தா சூப்பர்.

நாஞ்சில் பிரதாப் said...

ஜலீலாக்கா நீங்க ஏன் கேஎப்சி மாதிரி எக்ஸ்க்ளுசிவ் ஓட்டல் ஆரம்பிக்ககூடாது. எங்கோயோ போய்ருவீங்க... உங்க பார்முலாவை யார்கிட்டயும் சொல்லாதீங்க...

seemangani said...

ஆஹா...இவ்ளோ ஈசியா இருக்கு குடுத்தா அப்டியே சாப்டுவேன்....ஹும்ம்ம்ம்...நன்றி ஜலி அக்கா...

kamalabhoopathy said...

Sweet pasta enakum pidikum nalla recipe.

athira said...

ஜலீலாக்கா அதுக்குள்ளேயா?? கண்பட்டிடப்போகுது... சுத்திப்போடுங்கோ.... சுவையான குறிப்பு.

பித்தனின் வாக்கு said...

ஜலில்லா ரொம்ப பாஸ்டா இருக்கீங்க. எனக்கு இன்னமும் பாஸ்தான்னா என்னனு தெரியல்லை. அதுக்கு எதாது தமிழ் பெயர் அல்லது வேற பெயர் இருக்கா?
சரி ஸ்வீட் நல்லாவே இருக்கு. மிக்க நன்றி.

Kanchana Radhakrishnan said...

குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.நன்றி Jaleela

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைசர் ?
உள்ளேன் டீசெர்

Jaleela said...

அதிரா கண் தான் பட்டு விட்டது. இரண்டு கை விரலும் கத்தியால் வெட்டு பட்டு விட்டது.

பெரிய‌ பூச‌னி, அல்ல‌து ப‌லாப‌ழ‌ம் எடுத்து தான் சுற்றி போட‌னும்.

Jaleela said...

ஸாதிகா அடுத்து பாஸ்தா தான் இரண்டு செய்து ரெடி பண்ணியாச்சு நீங்கள் சொன்னதும் தட்ட முடியுமோ அதான் அக்காவிற்காக, இது என் டாடி சொல்லி கொடுத்தது, இனிப்பு டிபன் தான் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்.
பாஸ்தா என்னும் மக்ரோணி தான் ஸ்வீட்டில் அவ்வளவா போடுவதில்ல்லை.
ஆனால் எல்லோருக்கும் ரொம்ப பிடித்து விட்டது.

Jaleela said...

அம்மு ஆமாம் கீழே நோட்டில் எழுதனும் என்று இருந்தேன், இது கிட்ட தட்ட பால் கொழுக்கட்டை போல தான். நல்ல வித விதமான ஷேப்பில் இருக்கு பிள்ளைகளுக்கு விருப்பமான டிசைன் வாஙகி செய்து கொடுக்கலாம்

Jaleela said...

ஜெய்லானி உடனே தங்ஸ் கிட்ட சொல்லி செய்து விட வேண்டியது தானே//

Jaleela said...

மன்னார்குடி மிக்க நன்றி,

Jaleela said...

ஆசியா எனக்கு உங்களுடன் கதைத்து (அதிரா பாணியில்)மிகுந்த சந்தோஷம்.


தொடர் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela said...

நாஞ்சிலாரே இங்கு வந்த புதிதில் அதான் சொன்னேன் என் ஹஸிடம், யாருக்காவது ஃபுட் பாயிஷ்ன் ஆச்சுன்னா உன்ன உள்ள தூக்கி வைச்சுடுவாஙக்ன்னு பயம்புடுத்தி விட்டார்...

என் பையனும் அதான் சொல்வான் உஙக்ள் ரெசிபி சீக்ரெட்டா எல்லாம் சொல்லிடுறீஙகள், வேஸ்ட் என்பான்

Jaleela said...

கமல பூபதி உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி, கருத்து தெரிவித்தமைக்கும் நன்றி

Jaleela said...

சுதாகர் சார் இத பத்தி ஒரு பெரிய விபரம் சொல்லிட்டு தான் போடனும் என்று இருந்தேன், அடுத்து காரம் பாஸ்தா போடுவேன் அப்ப்ப சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள்..

Jaleela said...

சீமான் கனி ரொம்ப ஈசியா பேசுலர்களும் செய்துடலாம். எல்லோருக்குமே யாராவது செய்து கொடுத்தா நல்ல தான் இருக்கும்.

SUFFIX said...

பாஸ்ட்டா, டேஸ்ட்டா..ஒரு பாஸ்தா :)

ஜெய்லானி said...

// athira said...

ஜலீலாக்கா அதுக்குள்ளேயா?? கண்பட்டிடப்போகுது... சுத்திப்போடுங்கோ.... //

உங்களை சுத்தி எங்கே போடனும் ? ஆத்த தாண்டி போட்டா தான் வரமாட்டீங்க( பூஸுக்கு நீந்த தெரியுமா?)

ஜெய்லானி said...

//Jaleela said...

அதிரா கண் தான் பட்டு விட்டது. இரண்டு கை விரலும் கத்தியால் வெட்டு பட்டு விட்டது.//

பாத்து பொருமையா செய்யுங்க

//பெரிய‌ பூச‌னி, அல்ல‌து ப‌லாப‌ழ‌ம் எடுத்து தான் சுற்றி போட‌னும்.//


ஏங்க அவங்களே ரெடி . அப்புறம் பூசனி, பலாப்பழம் எதுக்கு.

ஜெய்லானி said...

// மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைசர் ?
உள்ளேன் டீசெர்//

ஐ..பாஸ்தா...பாஸ்தா..மங்கு இது என்னை மாதிரி கொயந்தகளுக்கு உன்னை மாதிரி தாத்தாக்கு நல்ல காரமா அப்புறம் தருவாங்க!!

Jaleela said...

அடுத்த பாஸ்தா மங்குவிற்காக காரமா தயார் பண்ணியாச்சு.

சசிகுமார் said...

//ஜலில்லா ரொம்ப பாஸ்டா இருக்கீங்க. எனக்கு இன்னமும் பாஸ்தான்னா என்னனு தெரியல்லை. அதுக்கு எதாது தமிழ் பெயர் அல்லது வேற பெயர் இருக்கா?//

ரிப்பிட்டேய்

LK said...

//கடைசியாக கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவும்.//

namma oor aavin milk okva? jallela . intha sunday senju pakkalam

ஹுஸைனம்மா said...

பாஸ்தா பாயாசம்னு சொல்லலாம் போல!!

sarusriraj said...

பாஸ்தா இருக்கு செய்து பார்கிறேன் .

Mrs.Menagasathia said...

ஸ்வீட் பாஸ்தா சூப்பர்ர்...

அன்புத்தோழன் said...

ada idha paakkave illaiye.... hmmm.... payasam madhuriya.... paathadhume echchil oorudhu....

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி

http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
################

athira said...

ஜெய்லானி said...
//
உங்களை சுத்தி எங்கே போடனும் ? ஆத்த தாண்டி போட்டா தான் வரமாட்டீங்க( பூஸுக்கு நீந்த தெரியுமா?)/// நீந்தத் தெரியுமாவா???? ம்ஹூம்.... ஜலீலாக்கா கொஞ்சம் எடுத்துவிடுங்கோ... என் நீச்சல்பற்றி.... பாவம் இனிப்பு பாஸ்தா சாப்பிடும் கொயந்தையாச்சே.. ஏழுகடல்தாண்டி இருந்தாலும் இப்படி நடங்குறார்..... விட்டுவிடுவம் ஜலீலாகா பார்க்கப் பாஆஆஆஆஆஆஆஅவமாஆஆ இருக்கு.... சீயா.... மீயா...

Anonymous said...

//என் பையனும் அதான் சொல்வான் உஙக்ள் ரெசிபி சீக்ரெட்டா எல்லாம் சொல்லிடுறீஙகள், வேஸ்ட் என்பான்//

பையன் கிட்ட சொல்லுங்க, அம்மா கையால செய்வதன் ருசி நாங்களாக செய்து பார்க்கும் போது வராது. அம்மாமாரோட சீக்ரட் Ingredient ஒன்னு இருக்கு. அதை அம்மா போட்டால் தான் ருசியாக இருக்கும். அதனால் பயப்படாம ரெசிப்பி எழுதலாம் என்று கூறுங்கள். =))

Anonymous said...

அக்கா J,

பஸ்டா பாயசம் என்று சொல்லித் தான் செய்தேன். வீட்ல‌ செய்வாங்க என்று பொய் சொல்லித் தான் செய்ய ஆரம்பிச்சேன். இல்லை என்றால், இந்த மூன்று பசங்களும் (My Homies) என்னை செய்து பார்க்க விடமாட்டாங்க. நல்லா இருக்குனு ஆளுக்கு மூணு கப் குடிச்சாங்க. ஹா ஹா. பிறகு தான் ஒரு வலைத் தளத்தில் பார்த்தேன் என்று சொன்னேன். சின்னதாக இருப்பதால் ஷெல் பஸ்டா போட்டேன். பாதாம் கலப்பது யாருக்கும் பிடிக்காததால், கொஞ்சம் கஷு நட்ஸ் பொரித்து போட்டேன். கொஞ்சம் மஞ்சள் ரெய்சினும், அன்னாசி எமலூஷனும் போட்டேன். நன்றாகவே வந்தது. ரொம்ப திக்காக செய்யவில்லை. கொஞ்சம் தண்ணியாக எடுத்தேன்.

Thanks for the recipe!!!

LK said...

அன்பு தோழி
நான் நடத்தும் வேழம் இதழின் இந்த வார இதழில் இந்த சமையல் குறிப்பை உபயோகபடுத்தி கொள்ள உங்கள் அனுமதி வேண்டும்

Nithu Bala said...

Yummy yummy..this is my husband's favourite..My mamiyar used to make this...veetuku relatives yar vandhalum ethai seidhu thara solluvangha..

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா