Wednesday, May 19, 2010

ஒரு வயது குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சனையா?


குழந்தை வளர்பு பதிவு போட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது.

ஆமினாவின் ஒரு வயது குழந்தைக்கு மோஷன் போவது ரொம்ப சிரமமாக இருக்கு போன பதிவில் கேட்டு இருந்தார்கள்.

இதற்கு முக்கிய காரணம் நீங்கள் கொடுக்கும் உணவு முறைதான்.
எடுத்ததும் ஆப்பிலும் கேரட்டும் தான் வேக வைத்து கொடுப்போம்.
இது போல் நம்பர் 2 போக கழ்டபடும் குழந்தைகளுக்கு ஆப்பில் கேரடை கொஞ்சமாக கொடுப்பது நல்லது. ஆப்பிலும் கேரட்டும் மோஷன் அதிகமாக போவதை கட்டுப்படுத்தும்.

குழந்தைகளுக்கு திட உணவு ஆரம்பித்ததும். அடிக்கடி தண்ணீர் அதிகமாக குடிக்க கொடுக்கனும்.
ரொம்ப கழ்டபடும் குழந்தைகளுக்கு ஹார்டாக கடித்து முழுங்கும் உணவுகளை தவிர்க்கவும்.
முதலில் வாழை பழம் சாப்பிட பழக்குங்கள். இல்லை வாழைபழத்தை ஹல்வா போல் (அ) மில்க் ஷேக் போன்று தேங்காய் பால் சேர்த்து மிக்சியில் அடித்து கொடுக்கவும்.
இதை தேங்காய் பாலில் தான் தயாரிக்கனும் என்றில்லை காய்ச்சி ஆறிய பாலில் செய்தாலும் நல்ல இருக்கும்.
பால் பழம், வாழை சேர்த்த மில்க் ஷேக்குகள் செய்த்தும் உடனே குடிக்கனும் இல்லை என்றால் கருத்து போய்விடும். வெயில் காலஙகளில் ஐஸ் கியிப்ஸ் சேர்த்தும் தயாரிக்கலாம்

பால் சாப்பாடு சாப்பிடும் குழந்தைய இருந்தால் பால் வாழைப்பழம் சிறிது சர்க்கரை சேர்ர்த்து பிசைந்து ஊட்டி விடவும்.
ராகி ( கேழ்வரகு) கூழகவோ (அ) பானமாகவோ தயாரித்து கொடுக்கவும்.இந்த உணவும் குழந்தைகள் மோஷன் பிரியாக உதவும். ராகி பானம் இங்கு குறிப்பிலேயே இருக்கு.

ஆரஞ்சும் பாலும் சேர்த்து ஜூஸாக அல்லது சுளைகளாக பிரித்து அதில் லேசாக சர்க்கரை தூவி கொடுக்கலாம்.
இப்படி கழ்டபடும் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட முடியாமல், குமட்டி கொண்டு வரும்.

எப்போதும் காய்ச்சி ஆறிய வெண்ணீரை அடிக்கடி கொடுத்து கொண்டே இருக்கவும்.

விளக்கெண்ணை வயிற்றில் சர்குலர் மூமெண்டில் நன்கு தேய்த்து விட்டு வெண்ணீர் அருந்த கொடுக்கவும்.
விளக்கெண்ணைய வெரும் வயிற்றில் குடிக்க கொடுத்தாலும் ஃபிரியாக ஆகும்.குழந்தைகளுக்கு மோஷன் போகும் இட்த்திலும் கொஞ்சம் தடவி விடனும்
ரெயிஸின்ஸ் (கிஸ்மிஸ் பழம்) பழத்தை நன்கு தண்ணீரில் ஊறவைத்து ஜூஸாக அடித்து கொடுத்தால் உடனே மோஷம் ஆகும் (இது மனோ அக்கா சொன்னது, நானும் நிறைய டிப்ஸில் சொல்லி இருக்கேன், இது தினம் இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை பிழிந்து குடித்தால் அடிக்கடி ஏற்படும் சளித்தொல்லையும் கட்டு படும்

ரசம் சாதம் குழைவாக, பருப்பு கீரை கடைசல், வெள்ளை வாயு கஞ்சி போன்றவை கொடுக்கவும். ரசத்தில் இஞ்சி ரசம் செய்து குழைவாக சாதத்தில் போட்டு பிசைந்து ஊட்டி விடவும்.
சோம்பை கருகாமல் வருத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட்டு கால் டம்ளராக்கி குடிக்க கொடுக்கவும்.
புரூன்ஸ் பழம், அத்தி பழம் இதையும் தொடர்ந்து கொடுக்கலாம்.
மெயினாக நிறைய பழம் காக்டெயில் ஜூஸ் வகைகள் அதிகமாக கொடுக்கவும், மாம்பழ சீசனில் தேங்காய் பாலுடன் மாம்பழ மில்க் ஷேக்கும் கொடுக்கலாம்.


வாழை தேங்காய் மில்க் ஷேக்

தேவையானவை


வாழைபழம் = ஒன்று
தேங்காய் பால் - ஒரு கப்
வென்னிலா ஐஸ் கிரீம் - ஒரு குழிகரண்டி அளவு.
சர்க்கரை - தேவைக்கு

செய்முறை


வாழை பழத்தை பொடியாக அரிந்து அதில் தேங்காய் பால் ஐஸ் கிரீம் சர்க்கரை சேர்ர்த்து மிக்சியில் நுரை பொங்க அடித்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

அதே போல ஒரு நல்ல விஷேசம் என்றால் ,பொண்ணு மாப்பிள்ளைகளுக்கு கொடுக்கும் பாலும் பழமும் கூட கரைத்தும் கொடுக்கலாம்.


இன்னும் வேறு ஏதும் டிப்ஸ்கள் ஞாபகத்துக்கு வந்தால் போடுகிறேன்.
ஏற்கனவே இதற்குண்டான பதிவு போட்டு இருக்கேன். இன்னும் கூடுதல் டிப்ஸ் இதில் போட்டுள்ளேன்.


இது எல்லா வயதினர்களுக்கும் பொருந்தும். எல்லா வயது குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் பொருந்தும்

40 கருத்துகள்:

எல் கே said...

அருமையான குறிப்புக்கள் ஜலீலா . என் பெண்ணுக்கு தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு வாழைபழம் குடுக்கிறேன். நான் மறந்தாலும் அவளே கேட்டு வாங்கி சாப்பிடுவாள்

ஸாதிகா said...

அருமையான பயனுள்ள தகவல்கள்/இளம் தாய்மார்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

malar said...

வாழைபழம்
தேங்காய் பாலும் செர்த்து அடிக்கும் போது நிறம் மாறாதா?

நாஸியா said...

thanks Akka! Jazakallahu khair..

insha Allah innum indha madhiri niraiya podunga!

Menaga Sathia said...

பயனுள்ள தகவல்கள்!!

GEETHA ACHAL said...

சூப்பர்ப்...அருமையான தகவல்கள்...சூப்பர்ப்...

Chitra said...

பயனுள்ள தகவல்கள். எளிதான முறையில் விளக்கி சொல்லி இருப்பது, இன்னும் நல்லா இருக்குதுங்க.

sukumar said...

please change your background. it could not read properly

Jaleela Kamal said...

மலர் வாழைப்பழம் சேர்ந்து செய்யும் மில்க் ஷேக், மற்றும் பாலும் பழமும் கரைத்தாலும் கருப்பாக தான் ஆகும் செய்ததும் உடனே குடிக்கனும்.

ஜெய்லானி said...

ஆல் இன் ஆல்
:-))))))

இலா said...

ஜலீலாக்கா! நல்ல குறிப்பு.. என் பிரெண்ஸ் குழந்தைகள் எப்பவும் மலசிக்கலில் அவதிபடுறாங்க... இதை காமிக்கணும்...

Romeoboy said...

ரொம்ப பயனுள்ள பதிவு .. ஆனால் படிப்பதற்கு தான் சிரமமாக இருக்கிறது. டெம்ப்ளேட் மாற்றவும்

Krishnaveni said...

really excellent tips for all. Thanks madam

Vikis Kitchen said...

Very good post dear.

Asiya Omar said...

தொடர்ந்து எழுதுங்கள் ஜலீலா,நல்ல பயனுள்ள பகிர்வு.

சசிகுமார் said...

ரொம்ப பயனுள்ள பதிவு அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

athira said...

நல்ல பதிவு ஜலீலாக்கா, அனைவருக்கும் பிரயோசனப்படும்.

Priya said...

பயனுள்ள தகவல்கள்.... (வருங்காலத்தில் எனக்கு பயன்படும்... நன்றி)

மங்குனி அமைச்சர் said...

நீங்க ஆல் இன் ஆல் இல்லைங்கோ , டபுள் ஆல் இன் டபுள் ஆல்

பித்தனின் வாக்கு said...

nice article. how are you and your childran?. i am fine in India.

பனித்துளி சங்கர் said...

ஆஹா அனைவருக்கும் அவசியமான பதிவு அருமை . பகிர்வுக்கு நன்றி

Unknown said...

thank u soo much mam.enoda periya kavalaiya ithu irunthathu.unga tips kandipa en kavalaiya theerkumngra nambikaiyoda en manamarntha nanrigal mam.once again thanks a lot mam.

Unknown said...

thank u soo much mam.enoda periya kavalaiya ithu irunthathu.unga tips kandipa en kavalaiya theerkumngra nambikaiyoda en manamarntha nanrigal mam.once again thanks a lot mam.

SUFFIX said...

தேவையான அறிவுரை, நன்றி!!

Jaleela Kamal said...

எல்.கே. தொடர்வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
.

//என் பெண்ணுக்கு தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு வாழைபழம் குடுக்கிறேன். நான் மறந்தாலும் அவளே கேட்டு வாங்கி சாப்பிடுவாள்//

நல்லது/

Jaleela Kamal said...

நிறைய பிள்ளைகலுக்கு இந்த பிரச்சனை இருக்கு ஸாதிகா அக்கா எல்லோருக்கும் பயன் படட்டும் என்று தான் எல்லாம் கோர்வையாக போட்டேன்.

Jaleela Kamal said...

மலர் வாழை பழம் சேர்த்து அடித்ததும் நிறம் மாறாது. சிறிது நேரம் வைத்து விட்டால் நிறம் மாறும்.

Jaleela Kamal said...

நன்றி நாஸியா நேரம் கிடைக்கும் போது போடுகிறென்.

Jaleela Kamal said...

மேனகா , கீதா ஆச்சல், சித்ரா உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

சுகுமார் உஙக்ள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.பதிவுகள் நிறைய இருப்பதால் லேட் ஆகுது.

Jaleela Kamal said...

நன்றி ஜெய்லாணி

Jaleela Kamal said...

இலா வாங்க உங்கள் வருகைக்கு மிக்க சந்தோஷம்.

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

ரோமியோ மிக்க நன்றீ,. கூடிய விரைவில் மாற்ற முயற்சிக்கிறேன்.

Jaleela Kamal said...

நன்றி கிருஷ்னவேணி
நன்றி ஆசியா முடிந்த போது எழுதுகிறேன்.
உங்கள் பாரட்டுக்கு மிக்க நன்றீ விக்கி

Jaleela Kamal said...

சசிகுமார் எல்லோருக்கும் பயன் பட்டால் சந்தோஷம் தான்

அதிரா கண்டிப்பாக பிரயோஜனப்படனும்.

பிரியா வருங்காலத்தில் உங்கள் பயன்படுவது குறித்து ரொம்ப சந்தோஷம்.

Jaleela Kamal said...

அமைச்சரே மிக்க நன்றீ.

சுதாகர் சார் எப்படி இருக்கீங்க. நாங்க பிள்ளைகள் நலம் ,
இந்தியாவிலா நல்ல என்ஞாய் பண்ணுங்க அப்ப வந்து நிறைய பதிவு இருக்கும்.

Jaleela Kamal said...

பனித்துளி சங்கர் உங்கள் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி/

Jaleela Kamal said...

ஆமினா என் டிப்ஸ் மூலம் உங்கள் பையனுக்கு சரியான அதுவே போதும்.
உங்களுக்காக தான் இந்த பதிவே/

Jaleela Kamal said...

நன்றி ஷபிக்ஸ் /

Aradhya said...

மலச்சிக்கல் உடனடியாக குணமாக | Malachikkal Treatment in Tamil

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா