Saturday, May 1, 2010

முழுபயறு தால் தர்கா, பஞ்சி ஆப்பமும் தேங்காய் பாலும்

முழு பயறு தால் தர்கா

தேவையானவை

முழு பச்சை பயறு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கொத்துமல்லி கருவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
தேங்காய்பவுடர் தேவை பட்டால் = ஒரு தேக்கரண்டி
பச்ச மிளகாய் = ஒன்று சிறியது
மிளகாய் தூள் கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு - ருசிக்கு ஏற்ப
கொத்துமல்லி தூள் = கால் தேக்கரண்டி


முழு பாசிபயறை எட்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.




குக்கரில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து, முழுபயறு சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு நாலு, ஐந்து விசில் விட்டு இரக்கவும். (சித்ரா ரஜினி படம் பார்க்கும் போது அடிக்கும் விசில் அல்ல) குக்கர் விசில்.

சுவையான ஆப்பம், முழுபயறு தால் தர்கா, காலை நேர டிபனுக்கு, இரவு டிபனுக்கும் நன்றாக இருக்கும்.










தேவையான பொருட்கள்


ஊற வைக்க
பச்ச அரிசி - ஒரு கப்
புழுங்கல் அரிசி - ஒரு கப்
வெந்தயம் - கால் தேக்கரண்டி
ஜவ்வரிசி - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் கப்
சேர்த்து அரைக்க
சாதம் - ஒரு கை பிடி
தேங்காய் துருவல் - கால் முறி
செய்முறை
அரிசி, உளுந்து, வெந்தயம், ஜவ்வரிசியை இரவே ஊறவைத்து காலையில் அரைக்கும் போது தேங்காய், சாதம் சேர்த்து அரைக்கவும்.எட்டு மணி நேரம் புளிக்க விட்டு பிறகு சுடவும்.

(ஆப்பம் சுடும் போது பிஞ்சி பிஞ்சி வந்தால் முதலில் சூடான வானலியில் கொஞ்ச்மா எண்ணை விட்டு வெங்காயத்தை அரை வட்டமாக அரிந்து சுற்றி முழுவதும் தடவவும்.அப்ப தான் ஒட்டாமல் வரும்.சுடும் போது மாவை ஊற்றியதும் மூடி போட்டு வெந்தததும் அப்படியே எடுக்கவும். ).

ஒரு ஆழாமான இரும்பு வானலியில் சிறிது எண்ணை ஊற்றி துடைத்து விட்டு தீயின் தனலை மீடியாமாக வைத்து ஓவ்வொரு ஆப்பமாக ஊற்றி எடுக்கவும்.
ஏலக்காயுடன் தேங்காய் பாலை சேர்த்து அரைத்து பாலெடுத்து தேவைக்கு சர்க்கரை சேர்த்து ஆப்பத்துடன் சாப்பிடவும்.
ஏலக்காய் தேங்காய் பால்
தேங்காய் = 8 பத்தை
ஏலக்காய் = 2
சர்க்கரை = ருசிக்கு தேவையான அளவு

தேங்காயுட‌ன் ஏல‌க்காய் சேர்த்து பால் எடுத்து வ‌டிக்க‌ட்ட‌வும்.தேவைக்கு ச‌ர்க்க‌ரை க‌ல‌ந்து ஆப்ப‌த்துக்கு தொட்டு சாப்பிட‌வும்.ஏலக்காய் சேர்ப்பதால் நல்ல மணமாக இருக்கும், ஹோட்டலில் சாப்பிடுவது போல் இருக்கும்.
இது குழ‌ந்தைக‌ளுக்கும் பெரிய‌வ‌ர்க‌ளுக்கும் ரொம்ப‌ பிடிக்கும்.



குறிப்பு:
வெந்தயம் சேர்ப்பது மொருகலாக சிவற‌,ஜவ்வரிசி, சாதம் சேப்பது பஞ்சு போல் வர எல்ல வ‌கையான குருமாக்களும் இதற்கு பொருந்தும். முட்டை வட்லாப்பம் ரொம்ப நல்ல இருக்கும், தேங்காய் பாலும் ஊற்றி சாப்பிடலாம். தேங்காய் துருவல் சேர்த்து அரைப்பதற்கு பதிலாக, ஆப்பம் சுடும் போது ஆப்பத்திற்கு தொட்டு கொள்ள தேங்காய் பால் எடுக்கும் போது கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்ததை கூட சேர்க்கலாம்.

தால் தர்கா என்பது பாக்கிஸ்தானியர்கள் ரெஸ்டாரண்டில் ரொட்டிக்கு வைபப்து, இதை கடலை பருப்பில் தான் பெரும்பாலும் செய்வார்கள், நாம் பொங்க்லுக்கு போடும் பாசிப்பருப்பிலும் செய்ய்லாம் மூங் தால் , இது நான் முழுபயறில் செய்துள்ளேன்.
மலையாளிகள் பெரும்பாலும் , புட்டு கடலை கறி, ஆப்பம் முழுபயறு செய்வார்கள். இதை மலையாளிகளின் தால் தர்கா என்றும் வைத்து கொள்ளலாம். சுலபமான ஒரு சைட் டிஷ்.

29 கருத்துகள்:

ஜெய்லானி said...

யக்கோவ், ஆப்பமும் , தேங்கா பாலும் கூடவே வெல்லக்கட்டியும் குடுத்துடுங்க அது போதும்.

ஜெய்லானி said...

தேங்காய் பால் +வெல்லம் கலந்து வையுங்க. டீக்கு பதிலா..........

ஒன்னுமில்ல ஜொள்ள்ள்ள்ள்ள்ள்

மனோ சாமிநாதன் said...

ஆப்பம் செய்முறை நன்றாக இருக்கிறது, ஜலீலா! ‘முறி’ என்றால் என்ன அளவு?

ஜெய்லானி said...

@@@ மனோ சாமிநாதன்--//ஆப்பம் செய்முறை நன்றாக இருக்கிறது, ஜலீலா! ‘முறி’ என்றால் என்ன அளவு?//

தேங்காய் பாதி உடைத்தது. அதாவது பாதி மூடி

Krishnaveni said...

I never tried appam but it looks great and am going to try your version. Thanks for the recipe madam

Chitra said...

அக்கா, .......... ஆப்பமும் தேங்காய் பாலும் - one of my favorites - வேற ஒன்றும் வேண்டாம். அப்படியே சாப்பிடுவேன்........... உய் ......... உய்........ விசில் தானா வந்துடும். :-)

சைவகொத்துப்பரோட்டா said...

அக்கா, ஆப்பம் ரெண்டு செட், பார்ச........ல் :))

அன்புடன் மலிக்கா said...

அக்கா, ஆப்பம் ரெண்டு செட், பார்ச........ல் :))

அதே அதே எனக்கும்..

Asiya Omar said...

ஜலீலா பார்க்கவே அருமையாக இருக்கு.சூப்பர்.

ஹுஸைனம்மா said...

பச்சைப் பயறு கறி செய்முறைதான் தேடிகிட்டிருந்தேன். தேங்ஸ்க்கா.

சிநேகிதன் அக்பர் said...

பார்த்தவுடனேயே சாப்பிடனும் போல இருக்கு .

அருமை.

Jaleela Kamal said...

இது இன்று இரவு போஸ்ட் செய்ய வைத்து இருந்தேன் தெரியாமல் பதிவாகிவிட்டதும் சரி பரவாயில்லை

Jaleela Kamal said...

ஜெய்லானி என்ன வெல்லக்கட்டி , வெல்லம் தொட்டு சாப்பிடுவீங்களா?

Jaleela Kamal said...

மனோ அக்கா உங்க்ள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்சி.

ஒரு முழு தேஙகாயை ஒரு முறி என்போம்,

இது அரை முறி. ஆனால் ஊரில் தேஙகய் சின்னதாக இருக்கும்.

மொத்தமே எட்டு பத்தை போல் தான் வரும்.

Jaleela Kamal said...

Thank you very for your valuable comment krishnaveni.
it's very light tiffin, (aappam, theengkay paal combination )we all like much.

Jaleela Kamal said...

சித்ரா ஆப்பத்துக்கு விசிலா , ஹாஹா

எங்க ஆத்து காரருக்கு ரொமப் பிடிக்கும்.

இதுக்கு மிளகு கோழி செய்தால் சூப்பராக இருக்கும்.

வயிற்று புன் இருந்தால் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட குண்மடையும்.

Jaleela Kamal said...

சை.கொ.ப,

பரோட்டா கடைக்கு ஆப்பம் இரண்டு செட் பார்சல்’ஒகே

Jaleela Kamal said...

ஒகே பா அதே பார்சலை நீரைக்கும் அனுப்புஙக்ள் .. ஹிஹி

Jaleela Kamal said...

ஆசியா ஆமாம் எனக்கு இப்ப உடனே மறுபடி ஆப்பம் செய்து சாப்பிடனும் போல் இருக்கு..

Jaleela Kamal said...

ஹுஸைன்னாம்மா ஹஸுக்கு ஆபிஸ் கட்டி கொடுக்க தினம் யோசிக்கிறது, இது காலையில் செய்து அதில் தால் தர்கா ஊற்றி வைத்தேன், சாப்பிடும் போது நல்ல இருந்தது என்றார்

Jaleela Kamal said...

அக்பர் வருகைக்கு மிக்க நன்றி.

ஜெய்லானி said...

@@@ Jaleela--//ஜெய்லானி என்ன வெல்லக்கட்டி , வெல்லம் தொட்டு சாப்பிடுவீங்களா?//

சீனிக்கு பதில் சக்கரை கட்டி ( வெல்லம் ) நல்ல காம்பினேஷன். அதாங் என்ன்க்கு புய்க்க்கும்.

SUFFIX said...

என்ன இது தர்கா? நான் இந்த வார்த்தையை சமையலில் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை, ஆப்பம் அருமை!

மின்மினி RS said...

அருமை.அருமை.அருமை..

Menaga Sathia said...

சூப்பரான ஆப்பம்...ஒரு ப்ளேட் பார்சல் அனுப்புங்கக்கா...

Anonymous said...

DAL THATKA ITS NOT DAL THARKA
THATKA MEANT (THALIPU)

Priya Suresh said...

Wat a spread, appam and thengai paal, appadiye yeduthu saapidanam pola irruku...Kalakals!!

malar said...

கும்மிய பதிவுலேயே அடிசிட்டேங்க...

(
விசில்)

பச்சைப் பயறு கறி செய்முறை..புது வகை செய்து பார்கனும்..

ஆப்பதுடன் பால் பழம் மிக்ஸ் பண்ணி சாப்பிட்டால் ரொம்ப நல்ல இருக்கும்...

நலமா?

Vikis Kitchen said...

ஆப்பமும் , தேங்காய் பாலும் ரொம்ப அருமை. தால் தர்கா சத்து மட்டுமல்ல ருசியாகவும் இருக்கும் போல் உள்ளது. டிப்ஸ் சூப்பர்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா