Tuesday, June 1, 2010

புளிப்பு மாம்பழ மாங்காய் தொக்கு

புளிப்பு மாம்பழ மாங்காய் தொக்கு

மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டது, வாங்கி வந்தால் மாங்காய் மாம்பழம் இரண்டுமே புளிப்பு எல்லாத்தையும் தொக்க்காக செய்து விட்டேன்.. முன்று பழங்கள் இரண்டே நாளில் காலி.

தேவையானவை
புளிப்பு மாங்காய் - ஒன்று
புளிப்பு மாம்பழம் - இரண்டு

வெந்தயம் - வருத்து பொடி செய்தது அரை தேக்கரண்டி
கார மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
வெல்லம் - ஒரு மேசை கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி (தேவைக்கு)


தாளிக்க
நல்லெண்ணை - முன்று மேசை கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - இரண்டு சிட்டிக்கை






செய்முறை
மாங்காய், மாம்பழம் இரண்டையும் தோலிடுத்து பொடியாக நறுக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மாங்காய், மாம்பழம் இரண்டையும் சேர்த்து , வெந்தயப்பொடி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
கடைசியாக வெல்லம் சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் வதக்கி இரக்கவும்.
ஆறியதும் பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொள்ளவும். தேவைப்படும் போது எடுத்து சாப்பிடலாம்.
ஸ்ஸ்ஸ்ஸ் ருசி அபாரம்.
இதில் மாம்பழ குழம்பு, மாம்பழ கேசரி போன்றவைகளூம் செய்யலாம்
(கர்பிணி பெண்களுக்கு மசக்கை நேரத்தில் வாய்க்கு ருசிபடும்)

24 கருத்துகள்:

Chitra said...

Naaaaku ooooooooooruthu ;)

நாஸியா said...

யக்கோவ் கொஞ்சம் இந்த பக்கம் அனுப்பி விடுறது ;)

கொஞ்ச நாளா தொண்டை வலி.. :( ஏதாச்சும் டிப்ஸ் குடுங்களேன்.. :( மாத்திரையும் போட முடியாது

Priya said...

படத்தை பார்க்கும் போதே சாப்பிட சொல்லுது!
குறிப்பும் சுலபமா இருக்கு, நன்றி!

Asiya Omar said...

மாம்பழ மாங்காய் தொக்கு சூப்பர்.பார்க்கவே அருமை.

Menaga Sathia said...

superaa irukku akka!!

Nithu Bala said...

Superb thokku..

Prema said...

wow! mouthwatering,really very nice.

சுந்தரா said...

பாக்கும்போதே வாய்ஊறுது...

வாரக்கடைசியில மாங்காயும் பழமும் வாங்கியே ஆகணும் :)

vanathy said...

WOW! super.

செந்தமிழ் செல்வி said...

படத்தைப் பார்த்ததும் ரொம்ப நாளாக செய்யாமல் விட்ட இந்த குறிப்பை திரும்ப செய்யத் தூண்டுது.
போன வாரம் தான் இருந்த மாங்காய் எல்லாம் அம்மாவிடம் கொடுத்து விட்டேன். இன்னும் மாங்காய் இருக்கான்னு பார்க்கிறேன் (பக்கத்து வீட்டு மரத்திலேதான்;))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

பாத்ததுமே இப்பவே சாப்பிடனும் போல தோண வெச்சுடீக... என்ன சொல்ல என்ன சொல்ல? மாங்காய்க்கு நான் எங்கே போக?....................... ஹும்.......................

Riyas said...

ஓட்டு போட்டாச்சு...

கொரியர்ல ஒரு பார்சல் அனுப்ப முடியாதா..

ஜெய்லானி said...

பாக்கும் போது மாங்கா பச்சடி மாதிரியே இருக்கு ம்...ம்...ம்..

Shanthi Krishnakumar said...

Wonderful and delicious

ஸாதிகா said...

பார்க்கவே கலர்ஃபுல்லாக இருக்கு ஜலீலா.நானும் இது போல் செய்து விடுவேன் மாம்பழசீஸனில்.

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...

Jaleela Kamal said...

நன்றி சித்ரா,

நாஸியா தொக்கு ரெடி வந்தால் எடுகொண்டு போகலாம்.

தொண்டைவலிக்கு பதில் டிப்ஸில் போட்டாச்சு.

Jaleela Kamal said...

நன்றி பிரியா ஆமாம் இது ரொம்ப சுலபம்,
ஆசியா யாருக்குமே இந்த பெயரை சொல்லும் போதே நாவில் நீர் ஊரும்.
நன்றி மேனகா

நன்றி நீத்து

ஆமாம் பிரேமா வாயூரவைக்கும் , வருகைக்க்கு மிக்க நன்றி

சுந்தரா கண்டிப்பா செய்து பாருஙக்ள்

நன்றி வானதி

Jaleela Kamal said...

அப்பாவி தஙக்மணி ஏன் உங்கள் இடத்தில் இப்ப மாங்காய் கிடைக்காதா?
அப்ப ஒன்றும் செய்ய முடியாது, இத பார்த்து கொண்டு ரெடி மேட் தொக்கு வாங்கி கொள்ளுஙக்ள்

Jaleela Kamal said...

வாங்க செல்வி அக்கா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க ந்ன்றி,
எல்லோருக்கும் ரொமப் பிடித்த தொக்கு இது,

Jaleela Kamal said...

ரியாஸ் வாங்க வருகைக்கு மிக்க நன்றி

ஓட்டு போட்டாச்சா ரொமப் சந்தோஷம், கண்டிப்பா கொரியரில் அனுப்பு கிறேன்.
அட்ரஸ கொடுஙக்

Jaleela Kamal said...

ஜெய்லாணி ஆமாம் மாங்காய் பச்சடி போல் ஆனால் மாங்காய் பச்சடி இல்லை

நன்றி

Jaleela Kamal said...

சாந்தி முதல் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஆமாம் ஸாதிகா அக்கா எல்லோரும் அடிக்கடி செய்வது தான், நன்றீ ஸாதிகா அக்கா

நன்றி கீதா ஆச்சல்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா