Saturday, June 12, 2010

பத்து பைசா வடையும் தீ எறிச்ச சாதமும்



அரைக்க
கடலை பருப்பு - 200 கிராம்
மிளகாய் வற்றல் - 4
சோம்பு - அரை தேக்கரண்டி
பூண்டு - மூன்றூ பல்
இஞ்சி - ஒரு அங்குல அளவு
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - ஒன்று

அரைத்த மாவில் சேர்க்க வேண்டியவை

வெங்காயம் - ஒன்று
பச்சமிளகாய் - ஒன்று
கருவேப்பிலை - இரண்டு ஆர்
கொத்துமல்லி புதினா - சிறிது
உப்பு - முக்கால் தேக்கரண்டி (தேவைக்கு)
எண்ணை - பொரிக்க தேவையான அளவு

செய்முறை

கடலை பருப்பை அரை மணி நேரம் ஊரவைத்து அரைக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

வெங்காயம் , உப்பு,பச்சமிளகாய், கொத்துமல்லி கருவேப்பிலை, புதினாவை பைனாக சாப் செய்து அரைத்த மாவில் கலந்து 2 நிமிடம் ஊறவைக்கவும்.
குட்டி குட்டி வடைகளாக சுட்டெடுக்கவும்.







இதற்கு முன் கொடுத்த ( பகறா கானா, ஆலு கோஷ், தால்சா) நிறைய செய்து மீதியாகி விட்டால் அதை தீ எறித்த சாதமாக செய்து அதுக்கு தொட்டு கொள்ள இந்த ஒரு பைசா வடை (அ) அப்பளம்,உப்பில் ஊறிய நார்த்தங்காய் சேர்த்து சாப்பிட ரொம்ப சூப்பராக இருக்கும்.





இந்த தீ எறித்த சாதத்தை மட்டும் ருசி பார்த்து விட்டால் ஓவ்வொரு முறை பகறா , சால்னா செய்யும் போது இதற்க்காகவே கூட கொஞ்சம் சேர்த்து சமைப்பீர்கள்.மசால் வடையுடன் சாப்பிட ரொம்ப அருமையாக இருக்கும்.
அவ்வளவு ருசியாக இருக்கும்.






தீ எறித்த சாதம் செய்முறை



மீதியான சாதம் இரண்டு கப்
தால்சா - ஒரு பவுள் ( முன்று கப் அளவு)
சால்னா - அரை பவுள் ( ஒன்னறை கப்)





முதலில் தால்சா, சால்னா இரண்டையும் கொதிக்க விடவும்.


சாப்பாட்டை இட்லி சட்டியிலோ (அ) மைக்ரோவேவிலோ சூடு படுத்தி கொதிக்கும் குழம்பில் சேர்த்து சாம்பார் சாதம் கிளறு வது போல் கிளறவும்.


கிளறி ஐந்து நிமிடம் சாதம் குழம்பு எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும் இரக்கிவிடவும்.




இது விஷேஷங்களில் இது போல் நிறைய மீதியாகும். மீதியாவதை இரவே தயாரித்து ஆறவைத்து மறுநாள் வடையுடன் அல்லது ஊறுகாய் அப்பளத்துடன் சாப்பிட நல்ல இருக்கும்.






(ஏன் ஒரு பைசா வடை என்று சொன்னேன் என்றால் , இப்ப தான் இதை உள்ளங்கை அளவிற்கு பெருசாக போடுகிறார்கள்.சின்ன வயதில்வெளியூரில் இருந்தோம்.)

வார வாரம் ஞாயிற்று கிழமை காலை உணவு ரவை கிச்சிடி ஒரு பைசா வடை, (அ) பழையசாதம் இது ரொம்ப அருமையாக இருக்கும்.(இரவு சாதத்தில் தண்ணீர் ஊற்றீ வைத்து காலை அதில் மோர் (அ) தயிர் வெங்காயம், பச்ச்சமிளகாய், கொத்துமல்லி தழை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வடையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.), உளுந்து வடையும் புதினா துவையலும் இன்னும் மற்ற டிபன் அயிட்டமும் அம்மா செய்வார்கள்.


மசால் வடை மட்டும் வெளியில் போய் நான் தான் வாங்கி வருவேன் ஒரு வடை பத்து பைசா, 2 ரூபாயிக்கு வாங்கி வருவேன். எனக்கு அது ரொமப் பிடிக்கும். இன்னும் அதை மறக்கல எந்த இனிப்பு டிபன் போட்டாலும் கூட காரத்துக்கு ஒரு வடை அல்லது சுண்டல் செய்வது என் பழக்கம். அதில் இங்கு நிறைய குறிப்புகளில் பார்த்து இருப்பீர்கள்.








எப்ப வடை சுடும் போது பிள்ளைகளுக்காக இப்படி தான் செய்வேன். எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். நோன்பு காலங்களில் மாலை நோன்பு திறக்கும் போது வெள்ளை கஞ்சி கீமா கஞ்சிக்கு கூட இதை செய்து கொள்ளலாம்.
நான் சுவைத்ததை நீஙக்ளும் சுவைத்து மகிழுங்கள்.











40 கருத்துகள்:

எல் கே said...

//பத்து பைசா வடையும் தீ எறிச்ச சாதமும்//

அது என்ன பத்து பைசா வடை?? கணிப்ப அத பண்ண பத்து பைசாக்கு மேல ஆகும். பதில் சொல்லுங்க

Thenammai Lakshmanan said...

ரொம்ப அட்டகாசம்.. தீ எறிச்ச சாதம் பத்து பைசா வடைதான் நாளைக்கு.. ஜலீலா டியர்..:))

அன்புடன் மலிக்கா said...

LK said...
//பத்து பைசா வடையும் தீ எறிச்ச சாதமும்//

அது என்ன பத்து பைசா வடை?? கணிப்ப அத பண்ண பத்து பைசாக்கு மேல ஆகும். பதில் சொல்லுங்க//



அதுவா கார்த்திக் அக்கா சின்னபுள்ளையா இருக்கும்போது பத்துபைசாவுக்கு வாங்யிருக்காங்க வடையை. அதுதான்

நான் வடைவாங்கும்போது சின்னப்புள்ளையில 150. 2 ரூபாய்..

இப்ப எம்பூட்டு ஏன்னா துபை வடை 15 ரூபாய்.
அதாவது 1 திர்கம்..

அப்பாடா மூச்சு வாங்கிடுச்சி.

அக்கா உங்களுக்கு வேலையை மிச்சம் பண்ணிட்டேனா இல்லை வம்பை விலைகொடுத்துவாங்கிட்டேனா..ஹி ஹி..

அதென்ன நீரோடையின்பக்கம் ஆளையே காணோம்.

Menaga Sathia said...

//வார வாரம் ஞாயிற்று கிழமை காலை உணவு ரவை கிச்சிடி ஒரு பைசா வடை, (அ) பழையசாதம் இது ரொம்ப அருமையாக இருக்கும்.(இரவு சாதத்தில் தண்ணீர் ஊற்றீ வைத்து காலை அதில் மோர் (அ) தயிர் வெங்காயம், பச்ச்சமிளகாய், கொத்துமல்லி தழை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வடையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.), உளுந்து வடையும் புதினா துவையலும் இன்னும் மற்ற டிபன் அயிட்டமும் அம்மா செய்வார்கள்.// ஐயோ அக்கா அந்த அருமையான சாப்பாட்டை ஞாபகப்ப்டுத்திட்டீங்களே....நான் கூட தலைப்பை பார்த்து என்னடான்னு யோசித்தேன்...ம்ம்ம்ம் சாப்பிடுங்க சாப்பிடுங்க....

நட்புடன் ஜமால் said...

.பத்து பைசா வடை - ஜோர்

தீ எறிச்ச சாதம் - இது ரொம்ப புதுசு.

Asiya Omar said...

தீயெரிச்ச சோறு வடை நல்லாயிருக்கு ஜலீலா,ஊறுகாயும் பொருத்தமாக இருக்கும்.

ஜெய்லானி said...

//மசால் வடையுடன் சாப்பிட ரொம்ப அருமையாக இருக்கும்.//

அடடா சின்ன வயசு நினைவை உண்டாக்கிட்டீங்களே!!

Riyas said...

ஐ... வட.... செய்து சாப்பிட்டுட்டு வர்ரேன்

Ananya Mahadevan said...

உங்களோட இந்த வடையை நான் சுவைச்சிருக்கேனே அக்ஸ்.. சூப்பர்.. சோம்பு வாசனையா ரொம்ப நல்லா இருந்ததே..

தூயவனின் அடிமை said...

சகோதரி அந்த 10 பைசா வடை தான் புரிய மாட்டேங்குது , ஒரு சின்ன சந்தேகம் நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்று ஹி ஹி ...... நம்ம தளத்து பக்கம் வந்துட்டு போங்க.

ஸாதிகா said...

ம்ம்..புதுசு புதுசா போட்டு அசத்தறீங்க.தீ எரிச்ச சாதம் நான் அறிந்ததில்லை.உங்கள் பதிவு பார்த்ததும் சாப்பிடவேண்டும் போல் உள்ளது.

சீமான்கனி said...

பழமையிலும் புதுமை என்பது இதுதானா...அக்கா அசத்தல் வடை சுட்டு சாப்ட்டு ரெம்பநாள் ஆச்சு நியாபகப்படுத்திடீக...

நாஸியா said...

அடடே இப்படி ஒண்ணு இருக்கா? பார்த்தாலே வாய் ஊருது! யக்கோவ்!

Ahamed irshad said...

சூப்பர்... ஆனா தலைப்பு......!?

SUFFIX said...

தலைப்பே அசத்துது, சாதம் புதுசா கேள்விபடுறேன், இப்ப உள்ள சூழ்நிலைக்கு பத்து ரூபாய் வடைன்னு மாத்திக்கலாம்.

Jaleela Kamal said...

எல்.கே நீஙக் பதிவ சரியா படிக்கல

கீழே மலிக்காவும் பதில் அளித்து விட்டாங்க .

அந்த காலத்தில் 10 பைசா என்று சொல்ல வந்தேன்/

Jaleela Kamal said...

தேனக்கா வாங்க இது குழந்தைகளுக்கு எடுத்து சாப்பிட ஈசியாக இருக்கும் , கண்டிப்பாக செய்து பாருஙக்ள்

Jaleela Kamal said...

மலிக்கா எஅன்க்கு பதிலா விளக்கி சொன்னமைக்கு ரொம்ப நன்றி

Jaleela Kamal said...

மேனகா அந்த பழைய கனாக்காலத்தை இப்ப நினைத்தாலும் பெற முடியாது.

நன்றி மேனகா

Jaleela Kamal said...

சகோ.ஜமால், வடை எல்லோரும் செய்யும் மசால் வடைதான்.
தீஎறிச்ச சாதம் நாங்க அடிக்கடி செய்வது தான்

Jaleela Kamal said...

ஆசியா இது உங்கள் வாப்பாவை நினைவு படுத்தி இருக்கும்.

Jaleela Kamal said...

நன்றீ சகோ.ஜெய்லானி

Jaleela Kamal said...

ரியாஸ் ம்ம் சாப்பிட்டு வந்து சொல்லுங்கல்

Jaleela Kamal said...

ஆமாம் அநன்யா சோம்பு மணத்துடன் அருமையாக இருக்கும்.

Jaleela Kamal said...

இளம் தூயவன் உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி

10 பைசாவிற்கு நான் சின்னதாக இருந்த போது வாங்கியதை நினைவு கூர்ந்து சொன்னேன்.

இபப் புரிகீறதா? உங்கள் பிளாக் ஐடி கொடுங்கள்.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா இது நாங்க அடிக்கடி செய்வ்து தான்
இது போல் முன்றூம் செய்யும் போது இந்த சாதத்த்தை செய்து பாருங்கள்.
சாம்பார் சாதம் போல் ஆனால் சாம்பார் சாதம் இல்லை.
நன்றீ ஸாதிகா அக்கா.

Jaleela Kamal said...

சீமான் கனி நீங்கள் எல்லாம் சமைப்பதால் இதன் அருமை தெரிகிறது.

தவறாமல் வந்து பின்னூட்டமிடுவதற்கு மிக்க ந்ன்றி

Jaleela Kamal said...

நாஸியா இப்படி ஒரு இருப்பதே நிரைய பேருக்கு இப்ப தான் தெரியுதா?

வந்தால் வடை கிடைக்கும்/

Jaleela Kamal said...

மிக்க நன்றி இர்ஷாத்.

தலைப்பு நல்ல இருக்கா. சந்தோஷம்.

Jaleela Kamal said...

ஷபிக்ஸ் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

இது பழைகாலத்து வடை, அதான் 10 பைசா.

எம் அப்துல் காதர் said...

//பத்து பைசா வடையும் தீ எறிச்ச சாதமும்//

//மசால் வடை மட்டும் வெளியில் போய் நான் தான் வாங்கி வருவேன். ஒரு வடை பத்து பைசா, 2 ரூபாயிக்கு வாங்கி வருவேன்//.

உம்மா வாப்பா சொல்லும் போது ஆச்சர்யமாக இருக்கும். இது சாத்தியமா என்று. இப்ப நீங்க சொல்லும் போது தான் விளங்குதுக்கா. ஆனாலும் இப்ப அவர்கள் உயிருடனில்லை. நீங்கள் எழுதியதை படிக்கும் போது நினைவுகள் பின்னோக்கி போகின்றன.

http://mabdulkhader.blogspot.com/

நீங்களும் இந்த தளத்துக்கு வந்து பார்த்து விட்டு, கருத்து சொல்லிவிட்டு போங்களேன். எனக்கும் சந்தோசமாக இருக்கும் சகோதரி!

தூயவனின் அடிமை said...

http://ilamthooyavan.blogspot.com

Chitra said...

தீ எரிச்ச சாதம் என்பது புதுசு, எனக்கு....
Looks good.

R.Gopi said...

வணக்கம் ஜலீலா...

நீண்ட இடைவெளிக்கு பிறகு (தாய்நாட்டிற்கு 40 நாட்கள் விசிட்) இங்கே ஒரு விசிட் அடிக்கறேன்...

நிறைய ஆர்டிகிள் பெண்டிங் இருக்கு படிக்க... அப்புறம் வர்றேன்... இப்போ ஒரு ஆஜர் மட்டும்..

சசிகுமார் said...

அது என்ன 10பைசா இருந்தா ஒரு பத்து அனுப்பி வையுங்க நான் ஒரு ரூபா கொடுத்துடறேன் அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஓட்டும் போட்டுவிட்டேன்

Jaleela Kamal said...

எம் அப்துல் காதர் , வருகைக்கு மிகக் நன்றி, ஆமாம் நீங்க்ள் சொல்வது சரி தான்.
கிரான் மாவின் அட்வைஸ் படி உம்மா வாப்பா சொல் தட்டியதே இல்லை.

பழைய நினைவுகள் நினைக்க் நினைக்க இனிமையே.

Jaleela Kamal said...

கோபி வாங்க ரொம்ப நாட்களாக காணும் நாணும் வந்து பார்ர்த்தேன்.
நானே ஒரு கெஸ் வெகேஷனாதான் இருக்கும் என்று.
ரொம்ப சந்தோஷம், உடனே வந்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

சசிகுமார் பார்சல் தானே கொடுத்துட்டா போச்சு,
வருகைக்கு மிக்க நன்றி .

ஹுஸைனம்மா said...

இந்தத் தீயெரிச்ச சோறுக்குதான் போட்டி நடக்கும் எங்க வீட்டில. உறுகாய்தான் பெஸ்ட் காம்பினேஷன். சூப்பரா இருக்கும். இப்ப ஃபிரிட்ஜ் வந்ததுல மறுநாளும் நெய்ச்சோறாவே சாப்பிட்டுட்டுறதால, தீயெரிக்க சான்ஸே கிடைக்கிறதில்ல!! :-(

Mahi said...

மலரும் நினைவுகளுடன் அருமையான ரெசிப்பிகள் ஜலீலாக்கா!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா