Monday, June 21, 2010

டிரை நெத்திலி டீப் ஃபிரை



தேவையானவை

நெத்திலி கருவாடு - கால் கிலோ
காஷ்மீரி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி என்பது ஒரு டீஸ்பூன் (5 கிராம் அளவு )
உப்பு - கொஞ்சம் போதும் ஏற்கனவே கருவாடில் உப்பு இருக்கும்,
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
வினிகர் - இரண்டு ஸ்பூன்
என்னை - இரண்டு மேசைகரண்டி
கருவேப்பிலை - இரண்டு ஆர்க் (பதினைந்து இலைகள்)
செய்முறை

முதலில் நெத்திலி கருவாடை வெண்ணீரில் வினிகர் சேர்த்து இரண்டு நிமிடம் ஊறவைத்து மன்ணில்லாமல் கழுவி எடுக்கவும்.
எண்ணை தவிர அனைத்து மசாலாக்களையும் சேர்த்து 5 நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு இரும்பு வானலியில் எண்ணையை காயவைத்து கருவேப்பிலை சேர்த்து ஊறிய கருவாடை போட்டு நன்கு பொரித்து எடுக்கவும்.

கருவாடு கழுவும் விதம்

நெத்திலியின் தலையை கிள்ளி எடுத்து விடவும்.
அதை வினிகரில் ஊறவைத்து கழுவும் போது சாதம் வடிக்கும் வடிகட்டியில் ஊற்றி சிங்கில் டேப்பில் காண்பித்து இரண்டு மூன்று தடவை கழுவினால் வடிகட்டி மூலம் மண் வெளியில் வந்து விடும் .இன்னும் மண் போக நாலைந்து முறை கழுவி கொள்ளலாம்.

குறிப்பு



கருவாடு நிறைய பேருக்கு பிடிக்கும். அதுவும் தண்ணி பருப்பு, கட்டி பருப்புடன், பிளெயின் ரைஸுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
இதை குழம்பு போல் வைப்பதாக இருந்தால் கருவாடுடன் கேரட் சேர்த்து புளி குழம்பு போல் வைக்கலாம்.



டிஸ்கி: அமைச்சருக்கு மிளகாய் தூள் உப்பு எல்லாம் அளவு புரியலையான் ( ஹும் இவர் தான் வீட்டில் சமைபப்து போல்) அதான் அளவை அமைச்சர் கண்ணுக்கு தெரிவது போல் கொடுத்துள்ளேன்.

51 கருத்துகள்:

சசிகுமார் said...

அக்கா வழக்கம் போல நல்ல பதிவு. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

அக்கா நீங்கள் சொல்லிய பிறகுதான் பார்த்தேன் என்னுடைய பதிவு யூத்புல் விகடனில் வெளியானதை மிகவும் சந்தோசமாக உள்ளது. எனக்கு தெரிய படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி அக்கா. யூத்புல் விகடனுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

Chitra said...

Looks so good! :-)

ஹைஷ்126 said...

இது என் ஆல் டைப் பேவரிட்...

சூப்பர இருக்கு

வாழ்க வளமுடன்

athira said...

டீப்ஃபிரை என்றாலே சூப்பர்தான்:) ஜலீலாக்கா.

மங்குனி அமைச்சர் said...

டிஸ்கி: அமைச்சருக்கு மிளகாய் தூள் உப்பு எல்லாம் அளவு புரியலையான் ( ஹும் இவர் தான் வீட்டில் சமைபப்து போல்) ///

ம்ம்ம்ம்............. அந்த பயம் இருக்கட்டும்


(சும்மா தமாசு )

மங்குனி அமைச்சர் said...

நெத்திலி கருவாடு - கால் கிலோ//
கருவாட்டுக்கு கால் இருக்கா ?

//இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி//
இஞ்சி , பூண்டு சரி .. இந்த பேஸ்டு எது மேடம் ? குளோஸ் அப் இல்ல கோல்கேட்

//சீரகத்தூள் - அரை தேக்கரண்டி//
எங்க வீட்ட்ல எல்லாம் முழு தேக்கரண்டியா இருக்கு , இப்ப என்னா செய்றது மேடம் ?

எம் அப்துல் காதர் said...

சும்மா பொறிக்கப் பொறிக்க கிச்சனில் நின்று வெறுமெனே சாப்டுக்கிட்டே இருக்கலாம். வீட்டம்மா முறைக்க முறைக்க.. (ஆனா அவங்களுக்கு நம் செய்கை, உள்ளுக்குள்ளே சந்தோஷமாவே இருக்கும் என்பது வேறு விஷயம்......! ) ஹி..ஹி..

மங்குனி அமைச்சர் said...

பிறகு இரும்பு வானலியில் எண்ணையை காயவைத்து கருவேப்பிலை சேர்த்து ஊறிய கருவாடை போட்டு நன்கு பொரித்து எடுக்கவும்.

கருவாடு கழுவும் விதம்
///



எச்சூச்மி , கருவாட்ட பொரிச்சு எடுத்திட்டு அப்புறம் தான் கழுவணுமா ???

Asiya Omar said...

இதே முறையில் ஃப்ரெஷ் நெத்திலியில் செய்தாலும் அருமையாக இருக்கும்.நெத்திலி ஃப்ரெஷ் தான் நிறைய செய்திருக்கேன்.கருவாட்டிற்கு வெறும் மிளகாய்த்தூள் மட்டும் தான்,நான் சேர்ப்பது.உங்கள் முறைப்படி நெத்திலி கருவாட்டில் செய்து பார்க்கணும்.பார்க்க சூப்பர்.

ஜெய்லானி said...

மி...யா...வ்...

ஜெய்லானி said...

வாசனை இங்கேயே ஆளை தூக்குதே...!!!

தூயவனின் அடிமை said...

எனக்கு ரொம்ப பிடித்த நெத்திலி கருவாடு. குளிசாதன பெட்டி வந்தவுடன் மக்கள் இதுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தாட்ட காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

ஜெய்லானி said...

//கருவாட்டுக்கு கால் இருக்கா ?//

ஓய் மங்கு..!! . வரும் போதே காலை ஒடச்சி கொண்டு வந்ததா இருக்கும் ?

சைட் டிஸ்ஷ பத்தி கேக்காதே..!!அப்புறம் மெயின் டிஷ் கிடைக்காது

ஜெய்லானி said...

@@@ athira--//டீப்ஃபிரை என்றாலே சூப்பர்தான்:) ஜலீலாக்கா. //

என்ன சத்தத்தையே கானோம்..மீ எஸ்ஸ்ஸ்ஸ்கேப்

Jaleela Kamal said...

இந்த மங்கு ஆசியா பிளாக் ல போட்ட கமெண்ட இங்க காப்பி பேஸ்டா?

நெத்திலி வறுத்துட்டு கழுவனும்
அதெல்லாம் சமைக்கிறவஙக்ளுக்கு புரியும், உம்மை மாதிரி, மூக்கு பிடிக்க தம் கட்டுபவர்களுக்கு ஒன்னியம், பிரியாது( ஹி ஹி நானும் ஜும்மா தமாஜுக்கு தான் சொன்னேன்)

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...

இந்த மங்கு ஆசியா பிளாக் ல போட்ட கமெண்ட இங்க காப்பி பேஸ்டா?

/////

ஸ்டைல் ஒண்ணுதான் ஆனா , வேறு, வேறு கேள்விகள்

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...


நெத்திலி வறுத்துட்டு கழுவனும்
அதெல்லாம் சமைக்கிறவஙக்ளுக்கு புரியும், உம்மை மாதிரி, மூக்கு பிடிக்க தம் கட்டுபவர்களுக்கு ஒன்னியம், பிரியாது( ஹி ஹி நானும் ஜும்மா தமாஜுக்கு தான் சொன்னேன்)///


இதென்னங்க அநியாயமா இருக்கு , சமைக்கும் போது மூக்க புடுச்சிட்டு தம்மு வேற கட்டனுமா ???

மங்குனி அமைச்சர் said...

athira said...

டீப்ஃபிரை என்றாலே சூப்பர்தான்:) ஜலீலாக்கா.///


எச்சூச்மி , நம்மள்ட்ட அரளிவிதை டீப்பிரை ரெசிபி இருக்கு வேணுமா ???

சிநேகிதன் அக்பர் said...

ஆளாளுக்கு கருவாட்டை காட்டி வ‌யித்தெரிச்சலைக் கிளப்புறீங்க. ஊருக்கு போனதும் முதல்ல கருவாட்டு கொழம்பு வைக்கச்சொல்லணூம். :)

எல் கே said...

ஆஜர் ஜலீலா மேடம்

Starjan (ஸ்டார்ஜன்) said...

பார்க்கும்போதே நாக்குல எச்சி ஊறுது.. செய்து சாப்பிட்டா.. ரொம்ப நல்லாருக்கும்.

Jey said...

அப்படியே கொஞசம் பார்சல் கட்டி கொரியர்ல அனுப்பி வைங்க மேடம்.( ஒட்டெல்லாம் ஓசில போட்டிருக்கேன்,
சனிக்கிழமை வந்து சேர்றமதிரி அனுப்புனா, கள்ள ஓட்டுகூட போடத்தயார் என்பதை தெரிவித்துகொள்கிறேன்)

நட்புடன் ஜமால் said...

வாழ்க வாழ்க

நெத்திலி கருவாடு சாப்பிடுவோர் சங்கம்

பனித்துளி சங்கர் said...

ஆஹா இன்னைக்கு நமக்கு பிடிச்ச ஐட்டம் அருமை .
பகிர்வுக்கு நன்றி .
என்ன Tamilishla பதிவை இணைக்கவில்லை ?

சீமான்கனி said...

அக்கா எனக்கு ரெம்ப பிடிச்ச ஐடம்....என்ன விட்டுட்டு சாப்டதிங்க சொல்லிட்டேன்...

Jaleela Kamal said...

நன்றி சசி என் பதிவு யுத் ஃபுல் விகனில் வந்ததிலிருந்து

நான் எப்பவாவது சில நேரம் பார்ப்பதுண்டு
அதான் சொன்னேன்

Jaleela Kamal said...

நன்றி சித்ரா

சகோ.ஹைஷ் உங்கள் வருகைக்கும் கமெண்டுக்கும் மிகக் நன்றி + சந்தோஷம்

Jaleela Kamal said...

அதிரா என்ன்கும் ரொம்ப பிடிக்கும்.

Jaleela Kamal said...

நெத்திலி கருவாடு - கால் கிலோ//
கருவாட்டுக்கு கால் இருக்கா ?

//அமைச்சரே கருவாடுக்கு கால் இல்லை அதற்கு பதில் கொசுகால போட்டுக்க்கோங்கோ///

//இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி//
இஞ்சி , பூண்டு சரி .. இந்த பேஸ்டு எது மேடம் ? குளோஸ் அப் இல்ல கோல்கேட்

//உங்களுக்கு ஒட்டும் பசையே போதும்//

//சீரகத்தூள் - அரை தேக்கரண்டி//
எங்க வீட்ட்ல எல்லாம் முழு தேக்கரண்டியா இருக்கு , இப்ப என்னா செய்றது மேடம்

//ஐயோ என்ன் கொடுமை தாங்க்லா

சமைக்க தெரியாதவர எல்லாம் வைத்து மல்லு கட்ட வேண்டி இருக்கே//

Jaleela Kamal said...

ஆசியா பிரெஷ் நெத்திலியில் குழம்பு வைப்பதுண்டு

இந்த நெத்திலி கருவாடில் டீப் , மற்றும் நெத்திலி கேரட் புளி குழம்பு செய்வதுண்டு
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

எம் அப்துல் காதர், நீங்கள் சொல்வது சரிதான் பொரித்ததும். பகோடா சாப்பிடுவது போல் சும்மாவே சாப்பிடலாம் போல் இருக்கும்.

Jaleela Kamal said...

நன்றி ஜெய்லானி, ஸூ ஸூ என்ன இது கருவாடு வாசனைக்கு பிளாக் உள்ளேயே பூணை வந்து விட்டது.

Jaleela Kamal said...

எங்க உம்மா மீன் க்ருவாடு கழுவும் போது வரும் பூனைக்குக்கு ஒரு பங்கு வைப்பாங்க. ஆகையால் எல்லா பூனைக்கும் இங்கு பங்கு உண்டு

Jaleela Kamal said...

//எனக்கு ரொம்ப பிடித்த நெத்திலி கருவாடு. குளிசாதன பெட்டி வந்தவுடன் மக்கள் இதுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தாட்ட காட்ட ஆரம்பித்து விட்டார்கள்/

இளம் தூயவன் எல்லோருக்கு கருவாடுனா உசுறு தேன்

Jaleela Kamal said...

//ஆளாளுக்கு கருவாட்டை காட்டி வ‌யித்தெரிச்சலைக் கிளப்புறீங்க. ஊருக்கு போனதும் முதல்ல கருவாட்டு கொழம்பு வைக்கச்சொல்லணூம்//

ஏன் அக்பர் அங்கு தான் கேரிபோர், லூ லூ எல்லாம் வ்ந்துவிட்டதே,
கருவாடு இருக்குமே.

வாங்கி நீஙக்ளும், ஸ்டார்ஜனும் சேர்ந்து சமைக்கலாமே

Jaleela Kamal said...

//பார்க்கும்போதே நாக்குல எச்சி ஊறுது.. செய்து சாப்பிட்டா.. ரொம்ப நல்லாருக்கும்.//

நன்றி ஸ்டார்ஜன்

Jaleela Kamal said...

.//ஆஜர் ஜலீலா மேடம்//
ஒகே எல் கே

Jaleela Kamal said...

//அப்படியே கொஞசம் பார்சல் கட்டி கொரியர்ல அனுப்பி வைங்க மேடம்.( ஒட்டெல்லாம் ஓசில போட்டிருக்கேன்,
சனிக்கிழமை வந்து சேர்றமதிரி அனுப்புனா, கள்ள ஓட்டுகூட போடத்தயார் என்பதை தெரிவித்துகொள்கிறேன்//



ஜெய் கருவாடு கெட்டு போகாது அட்ரெஸ் கொடுங்க கொரியர் பண்ணுகிரேன்

Jaleela Kamal said...

//வாழ்க வாழ்க

நெத்திலி கருவாடு சாப்பிடுவோர் சங்கம்//

சகோ.ஜமால் , வருகைக்கு மிக்க நன்றி.

அப்ப சங்கத்துக்கு நீங்க தான் தலைவரோ

Jaleela Kamal said...

//ஆஹா இன்னைக்கு நமக்கு பிடிச்ச ஐட்டம் அருமை .
பகிர்வுக்கு நன்றி .
என்ன Tamilishla பதிவை இணைக்கவில்லை //

பனித்துளி சங்கர் வருகைக்கு மிக்க நன்றி

தமிலிஷ் இனைக்க முடியல

Jaleela Kamal said...

//அக்கா எனக்கு ரெம்ப பிடிச்ச ஐடம்....என்ன விட்டுட்டு சாப்டதிங்க சொல்லிட்டேன்//

தம்பிக்கு எடுத்து வைக்காமா சாப்பிட முடியுமா
.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா நம்ம பேவரைட் ஐட்டம், எங்கம்மா செஞ்சாங்கன்னா தெருவே மணக்கும்! ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம்! நம்ம என்ன பாவம் பண்ணுனமோ? ம்ம்ம்ம்!

Prathap Kumar S. said...

நெத்திலி மீனா...சூப்பர்... வெங்காயம் போட்டு தேங்காய் அரைச்சு அம்மா செஞ்சுக்கொடுப்பாங்க...
செம டேஸ்டி...

Jaleela Kamal said...

பன்னி குட்டி ராம்சாமி வருகைக்கு மிக்க் நன்றி
எல்ல்லா அம்மாக்களும் கருவாடு சமைத்தால் தெருவே மணக்கும் அபப்டி ஒரு மணம்.

நீங்க எந்த பாவமும் செய்யல.பிழைப்பு, எல்லோருடைய வாழ்விலும் இப்படி தான்....

Jaleela Kamal said...

நாஞ்சிலாரே இது நெத்திலி மீனில்ல , கருவாடு,

Menaga Sathia said...

சூப்பர்ர் வறுவல்!!

ஹுஸைனம்மா said...

டிரை நெத்திலி, இங்க சூப்பர்மார்க்கெட்ல வாங்குவீங்களா இல்லை ஊரில இருந்து கொண்டு வருவீங்களா?

கருவாடு ரொம்பப் பிடிக்கும்; ஆனா இங்க கிடைக்கிறது நல்லா இல்லை (நான் சமைச்சா!!).

Asiya Omar said...

ஜலீலா புது டெம்ப்லேட் அருமையாக இருக்கு,ஹுசைனம்மா உங்க ஏரியாவில் இருக்கிற மிஸ்பா ஃபுட் ஸ்டஃப் - பில் இருக்கு.ஒரு பாக்கெட் 2.50 அல்லது 3 திர்கம் இருக்கும்.

ஸாதிகா said...

ஜலி..இதில் முழு வேர்க்கடலையை சேர்த்தால்..ம்ம்..சூப்பர்.

Jaleela Kamal said...

//டிரை நெத்திலி, இங்க சூப்பர்மார்க்கெட்ல வாங்குவீங்களா இல்லை ஊரில இருந்து கொண்டு வருவீங்களா?//

ஹுஸைம்மா ஊரில் இருந்து முன்பு கொண்டு வந்தோம்,
என் ஹஸ் துணியெல்லாம் ஸ்மெல் வரும் கொண்டு வர கூடாது என்று சொல்லிவிட்டார்.

இபப் கிடையாது, இரண்டு வருடம் ஆகி விட்டது கருவாடு சாப்பிட்டு அதான் கேரி போரில்வாங்கி பொரித்து ஒரு வழியா சாப்பிட்டாச்சு, கருவாடு ஆசையும் தீர்ந்தது.///


ஆசியா ப்ஹுஸைனாம்மாவுக்கு பதில் சொன்னமைக்கு மிக்க நன்றி


ஸாதிகா அக்கா வருத்த வேர் கடலையா? சேர்ப்பீங்க இதும் நல்ல ஐடியா?

நன்றி ஸாதிகா அக்கா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா