Saturday, June 26, 2010

புதினா காம்பு, இஞ்சி தோல் டீ


டீ யை பல விதமாக தயாரிக்கலாம்,என் ஹஸும், கணவருக்கும் டீ நல்ல இருக்கனும், தலைவலி, ஜலதோஷம்,இருமல், சளி எல்லாத்துக்குமே இவர்கள் இருவருக்கும் என் வித வித மான டீ தான்.

இது வரை நான் தயாரித்த டீ வகைகள்.

இஞ்சி டீ
ஏலக்காய் டீ
இஞ்சி ஏலக்காய் டீ
மிளகு கிராம்பு டீ
சாப்ரான் (குங்குமப் பூ டீ)
புதினா டீ
மசாலா டீ
கரம் மசாலா டீ
பட்டை டீ
நன்னாரி டீ
பிளாக் டீ வித் சாப்ரான்
சுக்கு டீ
துளசி டீ
புதினா, ஏலம் , மிளகு , கிராம்பு,சுக்கு,பன்ங்கற்கண்டி எல்லாம் பொடித்து வைத்து போடு டீ
இஞ்சி தோல் மற்றும் புதினா காம்பு டீ

புதினாவை ஆய்ந்து காம்பை அரிந்துமண் கழுவவும்.

இஞ்சி நன்கு மண்ணில்லாமல் கழுவி தோல் சீவி எடுக்கவும்இஞ்சி தோல் மற்றும், புதினா காம்பை வெயிலில் நன்கு காய வைக்கவும்.
காய்ந்ததும் ஏலக்காய் சேர்த்து ஒன்றும பாதியுமாய் பொடிக்கவும்.
ஸ்டெப் - 1
தேவையானவை

தண்ணீர் - இரண்டு டம்ளர்
பால் பவுடர் - ஐந்து ஸ்பூன்
டீ பவுடர் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - முன்று ஸ்பூன் (தேவைக்கு)
பொடித்த புதினா,இஞ்சி பொடி,ஏலக்காய் - ஒரு ஸ்பூன்
செய்முறை


1. தண்ணீரில் பால் பவுடர், டீ தூள் கலக்கி கொதிக்க விடவும்


2. கொதிக்க ஆரம்பிக்கும்ோது ஒரு ஸ்பூன் பொடித்த (இஞ்சி தோல், புதினா,ஏலக்காய் ) பொடியை போட்டு கொதிக்க விட்டு ரங்கு (டீ காஷன் ) இரங்கியதும் சர்கக்ரை சேர்த்து வடிக்கவும்.

ஸ்டெப் - 2

பால் - ஒரு டம்ளர்
தண்ணீர் - ஒன்னே கால் டம்ளர்
இஞ்சி தோல் , புதினா பொடி - ஒரு ஸ்பூன்
டீ பவுடர் - ஒரு ஸ்பூன்
சர்க்கரை - 3 லிருந்து 4 ஸ்பூன் ( அவரவர் ருசிக்கு)

செய்முறை

தண்ணீரில் , பொடி, டீ பவுடர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது சிறிது தண்ணீர் வற்றும் அதற்கு தான் கால் டம்ளர் தண்ணீர் அதிகமாக சொல்லி இருக்கேன்.
கொதித்ததும், டீகாஷன் நன்கு இரங்கியதும் வடித்து காய்ச்சிய சூடான பாலை சேர்த்து தேவைக்கும் சர்க்கரை போட்டு கலக்கி குடிக்கவும்.


ஸ்டெப் - 3

பிளாக் டீ போல் என்று குடிப்ப தாக இருந்தால் இரண்டு டம்ளருக்கு டீ பவுடர் அரை ஸ்பூன் போதும் . பால் தேவையில்லை.


/லோ பிரெஷர் மற்றும் மயக்கம் உள்ளவர்களுக்கு புத்துணர்வு தரும் டீ, சுவைத்து மகிழுங்கள். //


இதை அடிக்கடி பயன் படுத்தி பயனடைந்துள்ளோம்.

டீ பல விதமாக தயாரிப்பது என் பழக்கம் , அதில் இஞ்சி தோல் , புதினா காம்பு (சமையலில் 50 வருட அனுபவம் உள்ள என் மாமியார் செய்வது)

பால் பவுடவில் போட்டா திரிந்து போகாதா? இங்கு வந்ததிலிருந்து பால் பவுடரில் தான் இது வரை டீ போடுகிறேன், பிரஷ் மில்க் வாங்கினால் 5 நாளில் காலி பண்ணனும் ஆகையால் ஒரு பெரிய டின் வாங்கி வைத்து விடுவது.

திரிந்து போகாது/

ஏன் திரியும் என்றால் , குழம்பு கரண்டி அல்லது டீ கெட்ட்டிலில் காரம் பட்டிருந்தால் திரியும் , பாத்திரத்தை சரியா கழுவவில்லை என்றாலும் திரியும்.

ஒரு நாளை 6 முறை தயாரிக்கிறேன், ஆனால் ஒரே மாதிரி குடிக்க பிடிக்காத தால் இப்படி முயற்சித்தது.

இப்ப தான் 6 லிருந்து 4 ஆகாக குறைத்து இருக்கேன்.


//எங்க அம்மா வீட்டிலும் வரும் வேலைக்காரிக்கு கூட சுறு சுறுப்ப்பா வேலை செய்யனும், அவள் தண்ணீயில் நின்று சாமான் கழுவுறா,வீடு துடைக்கிறா அவளுக்கு சளீ பிடிக்க கூடாதுன்னு அவள் வந்ததும் முதல் வேலை என் அம்மா அவளை உட்கார வைத்து ஒரு பெரிய டம்ளர் நிறைய டீ யை ஊற்றி கொடுத்து அவளை குடிக்க சொல்லி பிறகு தான் வேலை ஆரம்பிக்க சொல்லுவாங்க. .//

I am sending this recipe to Best out of Waste started by nithu


33 கருத்துகள்:

ஜெய்லானி said...

ஹை.. வடை..

ஜெய்லானி said...

ஹை..சட்னி..

ஜெய்லானி said...

ஹை..ஆயா..

Jaleela Kamal said...

என்ன டா இது பதிவு மட்டும் வருது.

ஆளை கானும் என்று நினைக்க வேண்டாம், ரொம்ப பிஸி,
தொடர்ந்து 4 , 5 பதிவுகள் போட்ட்டு வைத்துள்ளேன் இதோடு இந்த அட்டகாசம் , இரண்டு மாதம் கழித்துதான்


பதிவு போட முன்று நாள் ஆகிவிட்டாலே,
பதிவுலக சொந்தங்களை இழந்து விட்ட மாதிரி ஒரு பீலிங்க்.


யார் வந்து இங்கு படித்து பயனடைந்தாலும் தவறாமல் உங்கள் க்ருத்து தெரிவிக்கவும்.
என்னை யாரும் மறந்துடாதீங்க

Jaleela Kamal said...

யாருக்கும் பதில் போட முடியல, உங்க்ள் பதிவுகளுக்கும் வரமுடியல்.

Jaleela Kamal said...

சகோ ஜெய்லானி ஆயா வடை இல்லை இது பிஸ்கேட் டீ

ஜெய்லானி said...

//யார் வந்து இங்கு படித்து பயனடைந்தாலும் தவறாமல் உங்கள் க்ருத்து தெரிவிக்கவும்.
என்னை யாரும் மறந்துடாதீங்க //

மறக்ககூடிய ஆளா சமையல் உலகில்

SUFFIX said...

டீ..வெரைட்’டீ’!!,ஆரோக்கியமானதும் கூட. கலக்குறீங்க ஜலிக்கா

ஜெய்லானி said...

//சகோ ஜெய்லானி ஆயா வடை இல்லை இது பிஸ்கேட் டீ//

இது பூஸாருக்கு குடுத்த அல்வா..!!

ராம்ஜி_யாஹூ said...

podhina, inji tea will be nice,
we can add Thulasi leaves too

ஜெய்லானி said...

புதினாவில் தினம் செய்வதுண்டு . காம்பில் செய்வது புதிய முறை டிரை பன்னிடுவோம் :-))

இளம் தூயவன் said...

புதிய முயற்சி பண்ணி பார்கின்றேன் சகோதரி.

angelin said...

eppadi jaleela marakka mudiyum ungalai.tea looks so nice naanum 12 varushamaa tea podaren eee kooda ukkaradhu naan potta tea il.please send that cuppa tea to england.

Aruna Manikandan said...

vithiyasamana tea

Thx. for sharing akka :-)

நட்புடன் ஜமால் said...

மிச்சங்களை வைத்து டீயா ...

சாருஸ்ரீராஜ் said...

டீ சூப்பரா இருக்கு ஜலிலா அக்கா.

asiya omar said...

அட ஜலீலா டீயில் இத்தனை வகையா?உங்க வீட்டு ஆட்கள் கொடுத்து வைத்தவர்கள்.அருமையோ அருமை.

அக்பர் said...

மிச்சங்கலை வைத்து செய்த டீ யாருக்கும் மிச்சமிருக்காது போல :)

மூன்று விதங்களில் செய்முறை அருமை.

Chitra said...

அக்கா, டீ ல கூட அட்டகாசமான ரெசிபி..... அசத்துங்க.

Mrs.Menagasathia said...

புதினா காம்பிலயும்,இஞ்சித்தோல் டீயும் அருமை அக்கா...

Ananthi said...

வாவ்.. சூப்பர் ஐடியா..!!

புதினா, இஞ்சி தோல் ரெண்டுமே வீட்ல எப்பவும் இருக்கற பொருள்..

அது வேஸ்ட் ஆகாம டீ போட சொல்லி குடுத்திட்டீங்க.. :D :D
அருமைங்க.. :-)))

ஸாதிகா said...

டீயில் இத்தனை வகையா??சமையலில் அட்டகாசம் பண்ணும் சமையல் திலகம் ஜலீலாவை வருகவ்ருக என்று அன்புடன் வரவேற்கிறேன்.

GEETHA ACHAL said...

வித்தியசமான டீ....கலக்கல்...அருமை...

Jaleela Kamal said...

நன்றி ஷபிக்ஸ்
நன்றி ஜெய்லானி

ராம்ஜி முதல் வருகைக்கு மிக்க ந்னறி
துளசி இலையும் சேர்த்த் போடாலாம், புதினா வுடன்அதை காய வைத்து திரித்து வைத்து கொள்ளலாம்
இளம் தூயவன் முயற்சி செய்து பாருஙக்ள், நன்றி

ஏஞ்சலின் ரொம்ப சந்தோஷம். நன்றி

நன்றி அருனா
சகோ ஜமால் மிக்க ந்ன்றி
நன்றீ சாருஸ்ரீ
நன்றி ஆசியா
நன்றி அக்பர், உஙக்ள் பாராட்ட்டுக்கு மிக்க நன்றி

நன்றி சித்ரா
நன்றி மேனகா
நன்றி ஆனந்தி

நன்றி ஸாதிகா அக்கா வருகிறேன்
நன்றி கீதா ஆச்சல்

Padhu said...

I love tea and you have given a list of teas u prepare .Nice idea to dry everything and keep it .Thanks for sharing !Lovely collection of beautiful dishes u have.Do visit mine when time permits.. http://padhuskitchen.blogspot.com/

ஹுஸைனம்மா said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!!

அரபுத்தமிழன் said...

இஞ்சி தோல் 'நஞ்சு' என்பார்களே,
அடி ஆத்தி, அதையே பொடியாக்கி ..?

Sabitha said...

Jaleela madam,
Injikku puram nanju enbadhu pazhamozhi. ivvalavu samayal therindha ungalluku injiyin thol vishathanmai vayndhathu endru theriyadha?

Jaleela Kamal said...

அரபு தமிழன், சபீதா,

இஞ்சி சாறு எடுத்து பிழிந்து தேன் கலந்து குடிக்கும் போது அத்தில் உள்ள நஞ்சை தெளிய வைத்து குடிக்க்கனும்
அதை தவிர ஒன்றூம் இலை

ஜெய்லானி said...

@@@அரபுத்தமிழன் //இஞ்சி தோல் 'நஞ்சு
@@@Sabitha//Injikku puram nanju enbadhu pazhamozhi.
@@@Jaleela


அப்ப சுக்கு ,கடையில விக்குதே!!!அது தோல் எடுத்தா விக்குது. சுக்கு பவுடர் , வருதே !! ஹோட்டலில் அதிக அளவு சமையலில் போடறாங்களே அது எல்லாம் தோல் எடுத்தா போடறாங்க

விளக்க முடியுமா..?

அது பழமொழி எப்படின்னா இஞ்சிக்கு அப்புறம் நஞ்சி இல்லை. அதிக அளவு விஷ முறிவுக்கு பயன் படும் மருந்து இஞ்சி.

Jaleela Kamal said...

சபீதா நல்ல செரிமானத்துக்கு இஞ்சி தான்

கடையில் டிரை ஜின்ஞ்சர் ப்வுடருன்னு வாங்குரோம், அதென்ன தோலெடுதா உங்களுக்கு பொடித்து தராங்க.

சுக்கு முழுசு காஞ்சது அது கூட தோல் எடுத்து கிடைப்பது போல் தெரியல.

ஏன் குறை கண்டு பிடிக்க என் பின்னாடி அலையுரீங்கல்

இது என் மாமியார் செய்வது நல்ல 25 பேரன் பேத்தி எடுத்த் அனுபவ சாலி அவர்கள் ,
பெரிய வர்கள் அந்த காலத்தில் கை மருந்து ஒன்று சொல்;கிறார்கள் எனெனாரல் அதில் ஒரு அர்த்தம் இருகும்,

Sabitha said...

சகோதரி ஜலீலா,
இஞ்சி மண்ணுக்கடியில்
வளர்வதால் அதன் தோல் சுற்றியுள்ள நச்சுக்களை ஈர்த்து கொள்கிறது,அதனால் தோல் நீக்கி பயன்படுத்துதல் நல்லது.சுக்கு வெயிலில் நன்கு உலர்தப்படுவதல் நச்சு முறிந்து விடுகிறது. மீனுக்கும்,கருவாடுகுக்கும்

வித்யாசம் இருக்கிறது இல்லையா?உங்களை குறை சொல்வது என் நோக்கமில்லை. நமக்கு எல்லாம் தெரியும் என்று நாம் நினைத்துவிட்டால்,கற்பது நின்று விடும்.நீங்கள் உங்கள் மாமியாரை நம்புவது போல நான் இரண்டாயிரம் வருஷத்துக்கு முற்பட்ட தமிழ் சித்தர்களை நம்புகிறேன்.ஒ.கே.வா

Jaleela Kamal said...

naan ellaam enakku thriyum enRu sollala

ithaRku piraku pathividukiReen

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா