Thursday, July 22, 2010

ஜோவர் ஆட்டா,ராகி லட்டு

தேவையானவை

ஜோவர் ஆட்டா - அரை கப்
சர்க்கரை - இரண்டு மேசை கரண்டி
ராகி - கால் கப்
நெய் ஒரு மேசை கரண்டி
நட்ஸ் - இரண்டு மேசை கரண்டி (பொடியாக அரிந்தது)
ஏலக்காய் - ஒன்று



செய்முறை
1. நட்ஸ் வகைகளை நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.

2. ஜோவர் ஆட்டா, ராகியை லேசாக வறுக்கவும்.
சர்க்கரையை ஏலக்காயுடன் சேர்த்து பொடித்து கொள்ளவும்.

3. மாவுடன் சர்க்கரை, நட்ஸ் சேர்த்து சிறிது நெய் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.

4. இதன் மனமும் ருசியும் சொல்ல வார்த்தைகள் இல்லை.



விஜியின் ராகி லட்டு பார்த்ததும் ஜோவர் ஆட்டாவில் இதை செய்து பார்த்தேன்.

ஜோவர் ஆட்டா என்றால் தினை மாவு.




19 கருத்துகள்:

எல் கே said...

புதுசா இருக்கு . சத்தா இருக்கும் போல இருக்கே

தெய்வசுகந்தி said...

healthy & Yummy!!!!!!!!!

சீமான்கனி said...

தினை மாவு....சத்தானது ஜோவர் ஆட்டா ராகி லட்டு நல்லா இருக்கு ஜலிக்கா...

ஜெய்லானி said...

ஆ...இதிலையுமா லட்டு....அப்ப சூப்பராதான் இருக்கும்..

சசிகுமார் said...

சூப்பர் அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Prema said...

Very healthy laddu,love to grab the plate...

Riyas said...

ம்ம்ம்ம் லட்டு சூப்பர்..

அக்கா உங்களை ரொம்ப நாளா கானோம்..

Chitra said...

அக்கா..... எப்படி இருக்கீங்க? நேற்றுதான் பயணங்கள் முடிந்து திரும்பி வந்தேன்.... லட்டு கொடுத்து வரவேற்கிறீங்க.... நன்றி, அக்கா!

சிநேகிதன் அக்பர் said...

லட்டு சூப்பர். நல்லாயிருக்கிங்களா?

Umm Mymoonah said...

That sounds very healthy, is there no sugar for this recipe.
There is a event going on in my, i would like to have your recipes for the event, please visit the link below:
http://tasteofpearlcity.blogspot.com/2010/07/iftar-moments-hijri-1431-event.html

Chitra said...

Very healthy .nice :)

Menaga Sathia said...

super n healthy ...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

பார்க்கவே அழகா இருக்கே...
ஹ்ம்ம் ஹ்ம்ம்.. யம் யம் யம்மி.....!! :-))

மங்குனி அமைச்சர் said...

சர்க்கரையை ஏலக்காயுடன் சேர்த்து பொடித்து கொள்ளவும்.////


எச்சூச்மி , தேவையான பொருட்கள்ல சர்க்கரை சொல்லலை , இப்ப எப்படி ஏலக்காய் கூட சர்க்கரையை சேர்ப்பது மேடம் ????

தூயவனின் அடிமை said...

என்ன சகோதரி, எல்லாம் வடநாட்டு பெயர்கள் போன்று தெரிகின்றது. அருமையாக உள்ளது.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

healthy and super

R.Gopi said...

ஜோவர் ஆட்டா, ராகி லட்டு

பலே ஃபார் ஹெல்த்....

//ஜோவர் ஆட்டா என்றால் தினை மாவு//

நீங்க இங்க தினை மாவு என்று சொன்னவுடன், தேனும் தினைமாவும் கலந்து என்றெல்லாம் முன்பு படித்தது நினைவுக்கு வந்தது...

எப்படி இருக்கீங்க ஜலீலா!!

Jaleela Kamal said...

எல்.கே. இது சத்தான லட்டு தான்

நன்றி தெய்வ சுகந்தி

நன்றி சீமான் கனி
நன்றீ ஜெய்லாணி செய்வதுசுலபம், சுவை அபாரம்

நன்றி சசி தம்பி

நன்றி பிரமலதா

நன்றி ரியாஸ் ஊருக்கு போய் இப்ப வ்ந்தாச்சு

நன்றி சித்ரா, ஆமாம் வரவேற்புக்கு லட்டு

நன்றி அக்பர்

நன்றி உம்மு மைமூன் வருகைக்கு நன்றி

நன்றி மேனகா

நன்றி ஆனந்தி


அமச்சர்ரே துப்பு துலக்கி தப்பு கண்டு பிடித்ததற்கு நன்றி மாற்றிவிட்டேன்

நன்றி இளம் தூயவன்.
வட நாட்டு ஆட்டா ஆனால் செய்முறை என்னுடையது என் முயற்சி

நன்றி அப்பாவி தங்க மணி

நன்றி கோபி நல்ல இருக்கேன். தேனும் தினை மாவும் சேர்த்து நெயிலிட்டு என்று பாடல் வரும்.

தொடர் வருகைக்கு மிக்க ந்னறீ

Anonymous said...

மன்னிக்கவும் ஜோவர் (ஹிந்தி) என்றால் சோளம் என்று பொருள். தினைக்கு ஹிந்தி பெயர் Kangni.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா