Saturday, August 28, 2010

தக்காளி ரசம் - tomato rasam







தேவையான பொருட்கள்
நன்கு பழுத்த பெரிய தக்காளி - 3
ரசப்பொடி - ஒன்னறை தேக்கரண்டி
சாம்பார் பொடி - அரை தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பவுடர் - கால் தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
மஞ்சள் தூள் -- கால் தேக்கரண்டி
புளி - ஒரு கொட்டை பாக்கு அளவு
கருவேப்பிலை, கொத்து மல்லி


தாளிக்க

எண்ணை - ஒரு தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
கருவேப்பிலை - ஒரு கொத்து
கொத்து மல்லி தழை - அரை கைப்பிடி
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிக்கை




செய்முறை

தக்காளியை நன்கு கழுவி நான்காக நருக்கி முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் மஞ்சள் , உப்பு சேர்த்து வேகவிடவும்.

வெந்த தக்காளியை நன்கு மசித்து சாறை வடிக்கவும், மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சக்கையை பிசைந்து சாறை எடுத்து வடிகட்டவும்.
புளியை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து மேலும் அரை டம்ளர் ஊற்றவும்.

வடித்து வைத்துள்ள தக்காளி புளி கலவையில் சாம்பார் பொடி,ரசப்பொடிமிளகாய் தூள்,சிறிது கருவேப்பிலை,கொத்து மல்லி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.




கடைசியாக் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
கம கமக்கும் தக்காளி ரசம் ரெடி.

இது எட்டு நபர்கள் சாப்பிடலாம்.

நான் இதை அடிக்கடி செய்வது, ஊரிலும் போய் அம்மா வீட்டிலும் ,மாமியார் வீட்டிலும் செய்து எல்லோருக்கும் ரொம்ப பிடித்து டைரியிலும் நோட் பண்ணி கொண்டார்கள்.
ரசத்த குடிப்பவர்கள் சும்மா அப்ப்டியே குடிக்கலாம்.
தக்காளி ரசத்தில் தக்காளி பழத்தை பிசைந்து செய்வார்கள், என் பிள்ளைகளுக்கு அது பிடிக்காது ஜூஸ் போல் எடுத்து வாயில் எதுவும் தடுக்காமல் அப்படியே சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.
ஒரு வயது குழந்தைக்களுக்கு கூட கொடுக்கலாம்.ரசித்து சாப்பிடுவார்கள், அவர்களுக்கு செய்து போது காரம் சிறிது குறைவாக போட்டு கொள்ளனும்.





34 கருத்துகள்:

srividhya Ravikumar said...

yummy rasam...looks like soup...

tamildigitalcinema said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை http://writzy.com/tamil/ இல் இணைக்கவும்.

Jaleela Kamal said...

நன்றி ஸ்ரீவித்யா சூப் போல் அருமையாஅக இருக்கும்.

athira said...

வாய் ஊறுது ஜலீலாக்கா, கலக்கிறீங்க நோன்பு நேரத்திலும்.

நாஞ்சில் பிரதாப் said...

அய்...எனக்கு வைக்கத்தெரிஞ்ச ஒரே ஐட்டம் இதுதான்...வெரி சிமபிள்...:))

சைவகொத்துப்பரோட்டா said...

ரசம் வாசனை பிரமாதாம் :))

Jaleela Kamal said...

அதிரா இதை உடனே செய்யனும், இரட்டையர்களுக்கு ரொம்ப பிடிக்கும் கொடுத்து பாருங்கள் இனி அடிக்கடி செய்ய்வேண்டி வரும்

Jaleela Kamal said...

நாஞ்சிலாரே அப்ப இந்த சிம்பிள் ரசத்தையும் செய்து பார்த்து சொல்லுங்கள்.

ரொம்ப ஈசியா பேச்சுலர்களள் செய்யும் வண்ணம் கொடுத்து இருக்கேன்.

Jaleela Kamal said...

சை.கொ.ப, ரொம்ப நாள் கழித்து வந்து உடனே கமெண்டும் போட்டதற்கு மிக்க நன்றி

Chitra said...

அக்கா கைமணம் தனிதான்.

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

நட்புடன் ஜமால் said...

அதென்னவோ தக்காளி என்றால் பிடிப்பதில்லை

Krishnaveni said...

beautiful, lovely colour, yum yum

Padhu said...

I love rasam very much.Most comforting food

இளம் தூயவன் said...

இது எல்லாம் அநியாயமாக தெரியலையா ,பாவம் அண்ணன் நோன்பு நாட்களில் சஹர்க்கு ரசம் வச்சி கொடுக்குறிங்க.

Chitra said...

I feel like drinking it ..will try sometime :)

asiya omar said...

சூப்பர் ஒருநாள் சகருக்கு வைக்கனும்.நல்லாயிருக்கு ஜலீலா.

Mohamed Ayoub K said...

இப்பத்தான் தக்காளி விலை குறைஞ்சிக்கிட்டு வருது, இந்த நேரத்தில் ரசம் கிசம்னு, டேஸ்ட்டை சொல்லிக் கொடுத்திவிட்டீர்கள் என்றால் அப்புறம் தக்காளி விலை எகிறப் போகுது.

சரி ..சரி இதுலாம் நமக்கு வைக்கத்தெரியாது, அட்ரெஸ் தர்றேன் கூரியரில் அனுப்பி வையுங்கள்.
சரி, யாரையுமே என் இனிய (இல்லம்) வீட்டிற்கு வரவே இல்லையே, ரசத்தைக் கையில் எடுத்துக்கிட்டு அங்கே வாங்கள் பறவைக் கூடு கட்லெட் இருக்கு ஒருப் புடி புடியுங்கள்

ஜெய்லானி said...

இந்த ரசம் சமாசாரத்தை நா அப்படியே குடிச்சிதான் பழக்கம் .. அந்த கோப்பையை அப்படியே தள்ளுங்க இந்த பக்கம்

சிநேகிதி said...

அக்கா தக்காளி ரச வாசனை சூப்பராக இருக்கு....

சீமான்கனி said...

ரசம் இவ்ளோ ஈஸியா...??கிரேட் நன்றி ஜலீக்கா...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

செய்முறைக்கு நன்றி............

நான் குக்கரில் வேக வைப்பதர்க்கு பதிலாக பாத்திரத்தில் வேக வைப்பது வழக்கம். இனிமே குக்கரில் வைத்துப்பார்கிறேன்...

R.Gopi said...

சூப்பர்....


தக்காளி ரசம் தான் ரசங்களின் அரசி என்று நினைக்கிறேன்...

செய்வது மிக எளிது.... குழந்தைகளுக்கு நன்கு குழைந்த சாதத்தில், சிறிது பருப்பிட்டு, நன்கு பிசைந்து, சிறிது தக்காளி ரசம் விட்டு கொடுத்தால், சப்பு கொட்டி சாப்பிடுவர்..

எனக்கும் மிகவும் பிடிக்கும்...

யெட் அனதர் சூப்பர் ரெசிப்பி ஃப்ரம் அவர் ஜலீலா...

ஃபோட்டோவில் ரசத்தில் தக்காளி காணோம்... பக்கத்தில் ஸ்டைலாக போஸ் மட்டும் தருகிறதே!! இதன் மர்மமென்ன!!?

Jaleela Kamal said...

சகோ.ஜமால் ஏன் பிடிக்கவில்லை,உடமபுக்கு ரொம்ப நல்லதாச்சே.சரி உங்கள் ஹாஜருக்க்காவது செய்து கொடுக்க சொல்லுங்கள்

Jaleela Kamal said...

நன்றி கிருஷ்னவேனி
நன்றி பது

Jaleela Kamal said...

இளம் தூயவன் வெரும் ரசத்த வைத்தா ஓடுமா, கூட மூளை முட்டை பொரியல், அப்பளம்.

என் பையன் ஒரு ரசபிரியன்

Jaleela Kamal said...

நன்றி சித்ரா இத ஊற்றி குடிக்கனும் போல தான் இருக்கும்.

Jaleela Kamal said...

ஆசியா கண்டிப்பா சகருக்கு வைத்து சாப்பிடுங்க் கருத்தை தெரிவியுங்கள்

Jaleela Kamal said...

ஜெய்லாணி அந்த ஒரு கோப்பை போதுமா?

Jaleela Kamal said...

நன்றி பாயிஜா

Jaleela Kamal said...

ஆமாம் சீமான் கனி இதை பேச்சுலர்களும் ஈசியாக செய்துடலாம்

Jaleela Kamal said...

அய்யுப் தொடர் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க ந்னறீ

பறவை கூடு கட்லெட் பார்த்தாச்சு.
ஆனால் கமெண்ட் போட அப்ப நேரமில்லை, முடிந்த போது எப்படியும் கமெண்ட் போட்டு விடுவேன்.

Jaleela Kamal said...

வழி போக்கன் யோகேஷ் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

குக்கரில் வைத்தால் நிமிஷத்தில் செய்துடலாம்.

Jaleela Kamal said...

கோபி குறிப்ப சரியா படிக்கலன்னு நினைக்கிறேன்.

தக்காளி பிசைந்து விட்டு செய்தால் பிள்ளைகளுக்கு பிடிக்காது ஆகையால் வாரம் ஒருமுறை இப்படி வேகவைத்து அந்த சூப்பை மட்டும் எடுத்து ரசம் தாயாரிப்பேன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா