Thursday, September 30, 2010

சிம்பிள் பீட்ரூட் பொரியல் - simple beetroot poriyal
தேவையான பொருட்கள்


பீட்ரூட் – 150 கிராம்
தேங்காய் துருவல் – ஒரு மேசை கரண்டி
உப்பு – தேவைக்கு (அரை தேக்கரண்டி)
தாளிக்க
எண்ணை – ஒரு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
வெங்காயம் – 1
பூண்டு – 2 பல்
கருவேப்பிலை – இரண்டு ஆர்க்
பச்சமிளகாய் – 1
செய்முறை1. பீட்ரூடை தோலை நீக்கி பொடியாக அரிந்து கொள்ளவும்.2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எண்ணை, கடுகு ,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை சேர்த்துதாளித்து, வெஙகாயம் ,பூண்டு,பச்சமிளாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி பீட்ருட்டை சேர்த்து தேவைக்கு உப்பும் போட்டு ஒரு கை அளவு தண்ணீர் தெளித்து முடிபோட்டு ஐந்து நிமிடம் வேகவிடவும்.3. வெந்த்தும் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இரக்கவும்.
4. பிளெயின் சாதம், வெண்டைக்காய் மோர் குழம்பு,சிக்கன் லாலிபாப் பிரையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். குழந்தைகளுக்கு பார்க்க கலர் புல்லாகவும் இருக்கும். நல்ல சத்தான ஒரு மதிய உணவு.

லெமன் லாலி பாப் சிக்கன் ஃப்ரை

பீட்ருட் பொரியல்பீட்ரூட் பொரியல்

This recipe goes to sanyukta's A Visuval Treat Event , priya's healing foods-beetroot and ummu mymoon's Any One Can Cook.

Lemon Loli Pop Chicken Fry


பீட்ரூட் முளைபயிறு இட்லி
பீட்ரூட் ஹல்வா
பீட்ரூட் பொரியல்

Wednesday, September 29, 2010

ஒரு புது டெம்லேட் மாற்றுவது எவ்வளவு கஷ்டம்நேற்று காலையில் தீடீருன்னு பிளாக் ஓப்பன் செய்த்தும். ஒன்றுமே புரியல பேஜ் முழுவதும் சின்ன லேபில் கட்டம் போல .என்னடாது பதிவு 450 க்கு மேல் அவ்வளவு தான் யாரோ அபேஸ் பண்ணிட்டாங்களேன்னு நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன்.

கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா மெசேஜ் ஜலீலாக்கா உங்கள் பிலாக் ஓவர்லாப் ஆகிவிட்ட்து எனக்கு மட்டும் தான் இப்படியா இல்லை எல்லோருக்குமா?
மறுபடி பகீர்.


எனக்கு கமென்ட் வரும் ஜீமெயில் என் சமையலறை கீதா ஆச்சல் உங்கள் பிளாக்கில் வைரஸ்.
ய்ம்மா

நீரோடை மலிக்கா யக்கா என்ன பண்ணீங்க உங்கள் பிலாக் ஒன்றுமே பார்க்க முடியல.
முதலில் டெம்லேட்ட மாத்துங்க.

முதலில் பதிவ சேவ் பண்ணனுமே. பிளாக்கரில் போய் எதோ ஒரு டெம்ப்லேட் மாற்றியாச்சு./


எல்லா பதிவும் எங்கும் போகல எதுவும் ஆகல / அப்பாடா பெரு மூச்சு விட்டாச்சு//
அப்படியே வந்து விட்ட்து.
(ஏன் இப்படி ஆச்சு இதில் உள்ளது எல்லாம் அனைத்தும் பயனுள்ள பதிவுகள் )

புதுசு புதுசா டெம்லேட் மாற்றுகிறீங்க சூப்பர் எல்லோரும் வந்து கீழே சொல்லும் போது ஏன் மாற்றினேன் என்று நான் பட்ட கஷ்டத்த எப்படின்னு சொல்லுவேன்.
எதுவுமே சரிபட்டு வராததால் தான் இப்படி மாற்றினேன்.
===================================================================
புதுசு புதுசா டெம்லேட் மாற்ற ஆசையா?

ஐய்யோ என் பதிவெல்லாம் போச்சேன்னு கவலை வேண்டாம் முதலில் ஜெய்லானி இடுகையில் உள்ள் படி சேமித்து கொள்ளுங்கள்.


ஆனால் இவ்ளோ கஷ்ட பட்டு பதிவு போட்டு விட்டேன் ஏதாவது அழிந்து விட்டால். அதெல்லாம் ஒன்றும் ஆகாது வாங்க முதலில் ஜெய்லானி சொல்லியுள்ள படி இது வரை போட்ட பதிவ சேமித்து விடுங்கள்.

பிறகு நீங்க உங்கள் இஷ்டத்துக்கு டிசைனா மாற்றலாம்.பிளாக்கர் அகவுண்டுக்குள் லாகின் ஆகுங்க http://www.blogger.com/1. நீங்க முதல்ல, வழக்கமா நம்ம போற dashboard குப் போங்க.

அதில கீழே, Tools and Resources லBogger in Draft ன்னு ஒண்ணு இருக்கும்.அதை க்ளிக் பண்ணுங்க.அதுக்கப்புறம் பார்த்தா,


உங்க dashboard ல பதிவோட பேருக்குக்கீழே design என்ற ஒரு வார்த்தை புதுசா சேர்ந்திருக்கும்.


அடுத்து அதை க்ளிக் பண்ணுங்க.அடுத்து ப்ளாகரோட எடிட் லே அவுட் வரும்.


அதில்Template Designer ன்னு இருக்கும்.அதை க்ளிக் பண்ணுங்க.உள்ளே போனா, உங்களுக்கே நிறைய டிசைன் கிடைக்கும்.


(இதை சொல்லி கொடுத்த சுந்தராவிற்கு நன்றி)


2. http://www.finalsense.com/services/blog_templates/அதே போல் இந்த லின்கில் போனாலும் நிறைய டிசைன்ஸ் இருக்குஇதில் ஏகபப்ட்ட டிசைன் இருக்கு சைடில் தலைப்பு வாரியாக கிளிக் செய்தால் டிசைன் கள் வரும்
அதில் பிடித்ததை செலக்ட் செய்து அதை கிளிக் செய்து html code கோட் படத்தில் காட்டியுள்ள பகுதியில் சின்ன பாக்ஸ் ஸிற்குள் இருப்ப்பதை மாற்றினால் தான் புது டிசைன் கிடைக்கும்
dashbord - lay out - edit html - இங்குள்ள் பழிய கோடை எடுத்து விட்டு இந்த கோடை சேர்க்கனும்.
சேர்த்து சேவ் கொடுத்ததும்.ஆனால் என்ன மாற்றினாலும், எந்த கமெண்டும் , போஸ்டும் அழியாது. அதே போல் தமிலிழ் கோட் ஆட் பண்ணதும் பழைய பதிவுகளுக்கு உள்ள ஓட்டுகளும் அப்படியே வந்துடும்.
( நான் முன்பு மாற்ற பயந்தது கமெண்ட், போஸ்ட் , ஓட்டு போய் விடும் என்று பயந்து தான்.)கடைசியில் 400 பதிவும் போனால் போகட்டும் மறுபடி போட்டு கொள்ளலம் என்று தைரியமாக மாறியதில் கிடைத்த அனுபவம் தான் இதுநான் கற்றது கை மண் அளவு தான் , எனக்கு தெரிந்ததை உங்களுக்கு சொல்லி கொடுத்து விட்டேன் அவ்வளவு தான்.. இப்ப ஜாலியா சந்தோஷமா தைரியமாக வித வித மான டிசைனை மாற்றி கொள்ளுங்கள்
( இதற்கு முன் மாற்ற பயந்து வேறு இரு நல்ல உள்ளங்களை மாற்ற சொன்னேன். அவர்களும் நான் கேட்ட டிசைனிலில் மாற்றி கொடுத்தார்கள், நான் எத்தனை டிசைன் மாற்றினாலும் முதல் போட்ட இரண்டு டிசைன் தான் எனக்கு ரொம்ப பிடித்தது.)
அது சரியாக ஓப்பன் பண்ண முடியாததால் முயற்சித்ததன் விளைவு தான் இந்த பதிவு.சில பேர் ஓப்பன் பண்ண முடியல ஒப்பன் ஆக ரொம்ப டைம் எடுக்குது என்கிறார்கள்.


அது என் பதிவில் மட்டும் இல்லை.பதிவுகள் அதிகமாக அதிகமாக எல்ல்லோரின் பதிவும் இப்படி தான் ஓப்ப்பன் ஆக லேட் ஆகுது.


50 பதிவுக்கு மேல் போட்டவர்கள் பதிவு எல்லாமே அப்படி தான் இருக்கு.

அதே போல் நிறைய படங்கள் போட்டு இருந்தாலும் ஓப்பன் ஆக ரொம்ப டைம் எடுக்கும்.
இது எனக்காக சுஹைனா போட்டு கொடுத்த சமையல் டெம்லேட் இது எனக்கு ரொம்ப பிடித்தது, ஆனால் இதுவும் நாளடைவில் ஓப்பன் செய்ய முடியாம போச்சு.
பதிவுகள் ஏனோ தானான்னு எழுதுரவஙக் வித விதமா மாத்திக்குங்க. நிறைய பதிவு போட்டு அது அழிந்த்தும் மன நொந்து போகிறவர்கள் ரொம்ப கவனமாக இருக்கும் பதிவ டவுண்ட் லோடு செய்து சேவ் பண்ணி வைத்துவிட்டு மாற்றுங்கள்.

// தம்பி சசி, சூரியா கண்ணன் சார் ,வேலன் சார்,இன்னும் பிளாக்கர் டிப்ஸ் போடுபவர்கள் இதை படித்தால்/ இந்த பிளாக்கரில் உள்ள டிசைனும் நானும் எல்லோரின் பதிவையும் ஓப்பன் செய்யும் போது அதிக டைம் எடூக்குது. இப்ப என்னுடையதும் ஓப்பன் ஆக அதிக நேரம் ஆகுது, அதற்கு என்ன செய்யனும் என்று பதில் கீழே தரவும்///


Sunday, September 26, 2010

கேசரி லட்டு - kesari ladduதேவையான பொருட்கள்
ரவை = ஒரு கப்
பட்டர் = கால் கப்
சர்க்கரை = ஒரு கப்
நெய் = இரண்டு தேக்கரண்டி
பாதம், முந்திரி = ஐந்து
கிஸ்மிஸ் பழம் = ஆறு
ரெட் கலர் பொடி = இரண்டு பின்ச்


செய்முறை

1. நெயில் பாதம் ,முந்திரி பொடியாக அரிந்து,கிஸ்மிஸ் சேர்த்து கருகாமல் வறுத்து தனியாக வைக்கவும்.பட்டரை உருக்கி அதில் ரவையை போட்டு லேசான பொன்னிறமாக வறுக்கவும்.

2. அதற்குள் பக்கத்து அடுப்பில் ரவை ஒரு கப்பிற்கு இரண்டு கப் அளவு தண்ணீர் எடுத்து அதில் கலர் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

3. கொதித்ததும் வறுத்து கொண்டிருக்கும் ரவையில் கொட்டி கை விடாமல், கட்டி தட்டாமல் ஊற்றி கிளறவும்.

4. ரவை சிறிது கெட்டியாகி வரும் போது சர்க்கரை கொட்டி கிளறி, வறுத்த முந்திரி,பாதம்,கிஸ்மிஸ் ஐ கலந்து இரக்கவும்.
ஆறியதும் அதை உருண்டைகளாக பிடித்தோ (அ) டைமண்ட் ஷேப்பிலோ கட் பண்ணவும்.

குறிப்பு

இப்படி செய்வதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.முந்திரி பாதத்தை பொடித்தும் போட்டு உருண்டைகளாக பிடிக்கலாம்.

நொய் உருண்டை

I am sending these recipes to nithu's kitchen celebrate Sweet laddu event
இன்று என் அம்மாவின் பிறந்த நாள், துஆ செய்யுங்கள். அருமையான சுவையான என் சமையலை உலகமே சுவைத்து கொண்டிருக்கும் அட்டகாசமான சமையலை சொல்லி தந்த தாயிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உஙக்ள் எல்லோரின் வாழ்த்தும் என் அம்மாவுக்கே.
( யாராவது எங்க வீட்டுக்குவருவதாக இருந்தால் அங்கு சூப்பராக இஞ்சி சாயா கிடைக்கும் அங்கேயே போய் குடித்து கொள்ளலாம் என்று வருவார்கள்.

கூடையில் பழங்கள் கொண்டு வந்து விற்கும் பழக்காரர் , அந்த கூடைய இரக்கி வைத்ததும் அவர் முதலில் செம்பு நிறைய தண்ணீர கொடுத்துட்டுதான் பழமே வாங்குவார்கள்.
வீட்டு வேலக்காரி வந்தாலும் முதலில் அவளுக்கு டீ குடிக்க சொல்லிட்டு தான் வேலையே பார்க்க சொல்லுவாங்க./

அத ஏன் கேட்குறீங்க 20 வருடம் முன் மாப்பிள்ளைய ஏற்போட்டில் வரவேற்க வரும் போது கூட பிளாஸ் ஃபுல்லா இஞ்சி டீ தான் , ஹஸ் சந்தடி சாக்குல இந்த இஞ்சி டீ கொடுத்தே மயக்கிட்டாங்க என்பார். அம்மா ஹரீரா பால் நல்ல செய்வாங்க அதை தான் கொடுக்கலாம் என்று இருந்தேன் , போட்டோ எடுக்கல.

அதுபோல் யாரையும் பசியோடு அனுப்பவே மாட்டாங்க .அன்பு தொல்லை அதிகமாவே இருக்கும்.

தூஆ செய்யுங்கள்.


Thursday, September 23, 2010

மசாலா சாய் - masala chai


குளிர் நேரத்துக்கு இதமாக சூப்பரான மசாலா சாய்
தொண்டைக்கு இதமான மசாலா சாய், இருமல், தொண்டை கர கரப்பு, சளி தொல்லைக்கு இதம் தரும் சாய் மசாலாவகைகள்சுக்கு ஒரு துண்டு,மிளகு 5,கிராம்பு 2 ,பன்ங்கற்கண்டு ஒரு சிறிய ஸ்பூன்,ஏலம்2, - அனைத்தையும் சேர்த்து பொடிசெய்து கொள்ளவும்.டீ தயாரிக்க


ஏழு தேக்கரண்டி பால் பவுடரை , 4 டம்ளர் தண்ணீரில் கலக்கி கொதிக்க விட்டு ஒரு தேக்கரண்டி டீ இலையும், பொடித்த மசாலாபொடியும் சேர்த்து தீயின் தணலை குறைத்து வைத்து கொதிக்க விடவும்.

மாசாலா நன்கு ஊறி டீ கொதித்து நிறம் வந்த்தும் தேவைக்கு (8 தேக்கரண்டி) சர்க்கரை சேர்ர்த்து கலக்கி சிறிது நேரம் கழித்து வடிக்கட்டி குடிக்கவும்.
குறிப்பு

மசாலா சாயில் தேயிலை அதிகம் தேவையில்லை லைட்டாக இருந்தால் போதும், மசாலா சாய் பல வகைகளில் இதுவும் ஒரு வகை.

இதே போல் துளசி ,புதினா, கரம் மசாலா, திப்பிலி, சாப்ரான்,சேர்த்தும் டீ வகைகள் தயாரிக்கலாம்,பிரஷ் பாலில் போடுவதாக இருந்தால் இரண்டு டம்ளர் பால், இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.Tuesday, September 21, 2010

முளைபயிறு பீட்ரூட் இட்லி - Sprouted Moong Dal Beetroot Idly


சுவையான சத்தான டயட் உணவு முளை பயிறு பீட்ரூட் இட்லி,

பயிறு வகைகளை கீழே உள்ளபடி முளை கட்டி பயன் படுத்தினால் உடம்பிற்க்கும் மிகவும் நல்லது, புரோட்டின் சத்து அதிகம் உள்ளது.
இதே போல் கொண்டைகடலை கொள்ளு , வெந்தயம் போன்றவைகளை முளைகட்டி பயன் படுத்தலாம்ஸ்டெப் - 1
முழுபயிறை 8 மணி நேரம் ஊறவைத்து வைத்து வடிக்கவும்
ஒரு மல் துணியில் கட்டி ஹாட் பேக்கில் வைக்கவும், லேசாக மூடிவைக்கவும்.

முளைபயிறை வேகவைத்து கொள்ளவும்.
இப்போது முளைகட்டிய பயறு ரெடி


ஸ்டெப் - 2
முளை பயிறு பீட்ரூட் பொரியல்தேவையானவை
பீட்ருட் – 2
வெந்த முளை பயிறு - அரை கப்
தாளிக்க
எண்ணை – ஒரு மேசை கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
பூண்டு – இரண்டு பல்
வெங்காயம் - ஒன்று
கருவேப்பிலை – சிறிது
தேங்காய் - ஒரு மேசைகரண்டி தேவைபட்டால்.
செய்முறை
/பீட்ரூட்டை பொடியாக அரிந்து உப்பு சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெந்த பீட்ரூட்டையும் வெந்த முளைபயிறையும் சேர்த்து சிறிது நேரம் கிளறி இரக்கவும். /
முளைபயிறு பீட்ரூட் இட்லி மிளகாய் பொடி
ஸ்டெப் - 3
தேவையான பொருட்கள்
இட்லி மாவு - முன்று கப்
முளைபயிறு பீட்ரூட் பொரியல் - ஒரு கப்


//முளைபயிறு பீட்ரூட் பொரியலை செய்து இட்லி மாவில் கலந்து இட்லியாக வார்க்கவும்.//


முளை பயிறு பீட்ரூட் இட்லி செட்டிநாடு பெப்பர் சிக்கன்

beetroot halvaI am sending these recipes to priya's healing foods-beetroot event

Monday, September 20, 2010

கிளியர் லைம் ஜூஸ் வித் ஜிஞ்சர் - clear lime juice with ginger


முன்பு படிக்கும் காலத்தில் ஊரில் மார்ச் ஏப்ரலில் தான் நோன்பு வரும் ,அடிக்கிற வெயில் சுருண்டு போய் எநத சாப்பாடும் ஏற்காது ஒன்லி லெமன் ஜூஸ் தான்

வடை பஜ்ஜி + லெமன் ஜூஸ் தான் அதுவும் எனக்கு ஒரு பெரிய ஜக் ஃபுல்லாவேனும். அம்மாவும் 20 டம்ளர் கொள்ளும் அளவுக்கு நிறைய கரைத்து வைப்பாங்க.அந்த ஞாபகம் .அதில் எனக்கு 4 டம்ளர்

இந்த முறை சரியான வெயிலில் தான் நோன்பு எவ்வளவு தண்ணீர் குடிச்சாலும் ஜூஸ் குடித்தாலும் தாகம் அடங்கல இப்ப இந்த தடவை இரண்டு நாளைக்கு ஒரு முறை லெமன் ஜூஸ் தான் சளி பிடிக்காம இருக்க இதில் நான் இஞ்சி சாறு சேர்த்து செய்வேன். நல்ல அருமையாக இருக்கும் அதுவு அதை வடிகட்டி கிளியராக குடிக்க நல்ல இருக்கும்.

அதே போல் நன்னாரி ஒரு குழிகரண்டி சேர்த்தும் லெமன் ஜூஸ் தயாரிப்பேன். அதுவும் அருமையான் மனத்துடன் நல்ல இருக்கும்.

இதற்கு பின்னாடி உள்ள பிஷ் படம் ஹனீப் வரைந்து பெயிண்ட் பண்ணது.தேவையான பொருட்கள்

லெமன் – 6
தண்ணீர் – 8 டம்ளர்
சர்க்கரை – 150 கிராம் (சுவைக்கு தக்க கூட்டிக்கொள்ளவும்)
இஞ்சி சாறு – ஒரு மேசை கரண்டி
உப்பு – அரை சிட்டிக்கை
ஐஸ் கட்டிகள் – 10
( இஞ்சி பிழிந்து ஒரு கிண்ணத்தில் வைத்து நஞ்சை தெளித்து சாறை தனியாக எடுத்து வைக்கவும்.) இஞ்சி சாறு செய்முறை படம் எடுத்து வைத்துள்ளேன் பிறகு போடுகிறேன்

லெமனை பிழிந்து கொட்டை எடுத்து லெமன் சாறு, ஐஸ் கட்டி, சர்க்கரை, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அடிக்கவும்.

பிறகு டீ வடிகட்டியில் வடிகட்டி இஞ்சி சாறு சேர்க்கவும்.

தொண்டையில் எதுவும் தட்டாமல் சர்ருன்னு குடிக்கலாம்.

Saturday, September 18, 2010

மிக்ஸ்ட் தந்தூரி ஃபிஷ் டீப் பிரை - mixed tandoori fish deep fry
மீன் வகைகள் ( வஞ்சிர, வ்வ்வால்,சங்கரா,கிளங்கா) - அரை கிலோ
தயிர் - முன்று மேசை கரண்டி
காஷ்மீரி ரெட் சில்லி பொடி – ஒரு மேசை கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி
கரம் மசாலா – கால் தேக்கரண்டி
ப்ப்பரிக்கா பவுடர் – கால் தேக்கரண்டி
சீரகதூள் – அரை தேக்கரண்டி
பிளாக் (அ) வொயிட் பெப்பர் பொடி – அரை தேக்கரண்டி

அலங்கரிக்க – புதினா,கேரட்மீன் வகைகளை கழுவி சுத்தம் செய்து மேலே குறிப்பிட்ட அனைத்து மசாலாக்களையும் சேர்த்து நன்கு பிரட்டி, ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.ஊறிய மீனை ஒரு ஆழமான வானலியில் டீப் பிரை செய்யவும்நெய் சாதம் , மிளகு மீன் குழம்பிற்கு குபூஸுக்கு ஏற்ற சைட் டிஷ்.

இதை ஓவனிலும் கிரில் செய்து எடுக்கலாம். இல்லை பார்பி கியு அடுப்பிலும் சுட்டெடுக்கலாம்.
Thursday, September 16, 2010

கருப்பு கொண்டைகடலை சுண்டல் - black channa dal sundal


இது இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை சுண்டல் வகைகளில் இதுவும் ஒன்றாகும்.நவரத்திரி கொலுவில் போது தினம் செய்யும் வகை வகையான சுண்டல் வகைகளில் இதுவும் ஒரு வகை சுண்டல்

தேவையான பொருட்கள்
கருப்பு கொண்டை கடலை - ஒரு கப்துருவிய தேங்காய் - கால் கப்சின்ன வெங்காயம் - முன்றுஎண்ணை - இரண்டு தேக்கரண்டிகடுகு - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டிகாஞ்ச மிளகாய் - இரண்டு
சர்க்கரை - ஒரு சிட்டிகைஎண்ணை - இரண்டு தேக்கரண்டிஉப்பு - தேவைக்கு
செய்முறை
1. கொண்டை கடலையை இரவே ஊறபோடவும்.
2. காலையில் களைந்து தண்ணீரை வடித்து அதில் முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து குக்கரில் ஐந்து விசில் விட்டு இரக்கவும்.வெந்ததும் அதை வடித்து வைக்கவும்.
4. ஒரு வாயகன்ற வானலியில் எண்னி காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, காஞ்சமிளகாய் கிள்ளி போட்டு ,பச்சமிளகாயை பொடியாக அரிந்து சேர்த்து கிளறி கடைசியாக கருவேப்பிலையையும் சேர்த்து தாளிக்கவும்.
5. அதில் வடித்து வைத்துள்ள கடலையை சேர்த்து தேவைக்கு உப்பு, சர்க்கரை,தேங்காய் துருவலும் சேர்த்து நன்கு இரண்டு நிமிடம் கிளறி இரக்கவும்.
6. கொத்துமல்லி தழை தூவி சாப்பிடவும்.


குறிப்பு


இது இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை சுண்டல் வகைகளில் இதுவும் ஒன்றாகும்.
நவரத்திரி கொலுவில் போது தினம் செய்யும் வகை வகையான சுண்டல் வகைகளில் இதுவும் ஒரு வகை சுண்டல்.
கொண்டை கடலை ஊற வைக்கும் நேரம் எட்டு மணி நேரம் போதும்.பருப்பு வகைகளில் நிறைய புரோட்டீன் உள்ளது வரம் இருமுறை சாப்பிடுவது நல்லது.
//டயட்டில் உள்ளவர்கள் வெந்த கொண்டை கடலையில் கேரட்,வெங்கயாம், கேப்சிகம்,கொத்துமல்லி தழை, எலுமிச்சை சாறு சிறிது பிழிந்து சாலட் போல் காலையில் டிபனாகவும் சாப்பிடலாம்.//
குழந்தைகளுக்கு லன்சுக்கும் கொடுத்து அனுப்பலாம், குழந்தைகளுக்கு காரம் கொஞ்சம் குறைத்து கொள்ளவும்.
hamuuS


I am sending these recipes to nithu's kitchen CWF - LB -Chickpeas Event.
Tuesday, September 14, 2010

ட்ரை கலர் பெல் பெப்பர் ஃபிரைட் ரைஸ் - tri colour bel pepper fried rice


தேவையானவை


உதிரியாக வடித்த சாதம் – இரண்டு கப்

பச்சை,மஞ்சள்,சிவப்பு கொட மிளகாய் – பொடியாக அரிந்த்து ஒரு கப்பூண்டு – 5 பல்
வெங்காய தாள் – இரண்டு ஸ்ட்ரிப்
எண்ணை + பட்டர் – இரண்டு மேசை கரண்டி
சர்க்கரை – அரை தேக்கரண்டி
சோயா சாஸ் – ஒரு மேசை கரண்டி
உப்பு தேவைக்கு
வொயிட் பெப்பர் (அ) கருப்பு மிளகு தூள் – ஒரு தேக்கரண்டிசெய்முறை


வெங்காய தாள் , கொட மிளகாய் வகைகள், பூண்டை பொடியாக நருக்கி வைக்கவும்.


ஒரு வாயகன்ற நான் ஸ்டிக் பேனில் எண்ணை + பட்டர் கலந்து ஊற்றி பூண்டு, சர்க்கரை சேர்த்து வதக்கவும்.பிறகு வெங்காயத்தாளை சேர்த்து வதக்கி , சிவப்பு,மஞ்சள், பச்சை குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். எல்லாம் பாதி வேக்காடு வதங்கினால் போதும்.பிறகு உதிரியான சாதம் சேர்த்து வதக்கில் சோயா சாஸ், சிறிது மிளகு தூள் தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இரக்கவும்.
குறிப்பு


அசைவ பிரியர்கள் சிக்கன் அல்லது முட்டை சேர்த்து கொள்ளவும்
குடை மிளகாய் வாசத்துடன் சாதம் பிடித்து சாப்பிட அருமையாக இருக்கும்.
தொட்டு கொள்ள பட்டர் பனீர் மசாலா ( அல்லது) காலிபிளவர் மஞ்சூரியனுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

(இது சாதம் வடித்து பிரிட்ஜில் வைத்து பிறகு செய்தால் இன்னும் உதிரியாக இருக்கும், அதே போல் மீதி ஆன சாதத்திலும் செய்யலாம்)ஆக்கம்
ஜலீலா
துபாய்


Monday, September 13, 2010

அவார்டுடன் ஷீர் குருமா

என் இனிய இல்லம் தோழி பாயிஜா அன்புடன் கொடுத்த அவார்டுகள்.

மிக்க நன்றி பாயிஜாஈத் ஸ்பெஷல் அவ்வளவா போட முடியாமல் போய் விட்டது. ஏற்கனவே புத்தாண்டில் இதை கொடுத்து விட்டதால் இத போடல,

ஷீர் குருமா பாக்கிஸ்தானியர்களில் ஸ்பெஷல் ரிச் பாயாசம், நம் நாட்டில் அதிகமா உருது முஸ்லீம்கள் செய்வார்கள். சாப்ரான் குங்குமப்பூ மணத்துடன் ஒரு வித்தியாசமான சுவை. ஈத் என்றால் இத்தனை வருடகாலம் 15. இப்ப 17 வருடமா முதலில் ஈத் க்கு செய்வது இந்த ஷீர் குருமா தான், அடுத்து தான் மற்ற ஸ்வீட் வகைகள்.

விளக்கப்படத்துடன் கீழே உள்ள லிங்கில் கொடுத்துள்ளேன்.இந்த லின்க்கில் இங்கு கொடுத்துள்ள ஷீர் குருமாவை சுவைத்து மகிழுங்கள். இதை

இது அருசுவையில் கூட்டாஞ் சோறிலும், யாரும் சமைக்காலாமிலும் கொடுத்துள்ளேன்.

ஈத் பெருநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
மிக்க நன்றி பாயிஜாநன்றி தோழி பாயிஜா
Thursday, September 9, 2010

ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்
ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்


இந்த வருடம் சிறப்பாக நோன்பு நிறைவேறியது இனி வருகிற வருடமும் ஆண்டவன் சிறப்பாக நிறைவேற்றி தர துஆ கேட்போம்.

பீட்ரூட் ஹல்வா
//ஈத் பற்றி மெயிலில் வந்த த்கவல்/பிஸ்மில்லாஹிர் ர‌ஹ்மானிர் ர‌ஹீம்

ஈது பெருநாட்க‌ள் க‌ட‌மையாக்க‌ப்ப‌ட்ட‌ விப‌ர‌ம்:

இஸ்லாத்தில் ஈது பெருநாட்க‌ள் க‌ட‌மையாக்க‌ப்ப‌ட்ட‌த‌ற்கு கார‌ணம்;

1.அல்லாஹுத்த‌ஆலா அடியானுக்கு இட்ட‌ க‌ட்ட‌ளையை ஏற்று, அவ‌னுக்கு முற்றிலும் அடிப‌ணிந்து அதை நிறைவேற்றிய‌ ம‌கிழ்ச்சியை அவ‌ன‌து தூத‌ர் காட்டிய‌ வ‌ழியில் வெளிப்ப‌டுத்துவ‌து.


2. இர‌த்த‌ ப‌ந்த‌ உற‌வின‌ர்க‌ளுக்கும், ஏழைக‌ளுக்கும், தேவையுடைய‌வ‌ர்க‌ளுக்கும் உத‌வி செய்து அவ‌ர்க‌ளையும் ம‌கிழ்ச்சிய‌டைய‌ச் செய்வ‌து.


அன‌ஸ்(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள்: அல்லாஹுடைய‌ தூத‌ர்(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் மதீனாவிற்கு (ஹிஜ்ர‌த் செய்து) வ‌ந்த‌ ச‌ம‌ய‌ம் ம‌தீனாவாசிக‌ள்(அன்சாரிக‌ள்) இர‌ண்டு நாட்க‌ள் விளையாடிக் கொண்டிருந்தார்க‌ள். இவ்விரு நாட்க‌ளில் ஏன் விளையாடுகிறீர்க‌ள் என்று ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கேட்ட‌த‌ற்கு, அறியாமைக்கால‌த்தில் இவ்விரு நாட்க‌ளில் விளையாடுவோம் என்று ப‌தில் கூறினார்க‌ள். அப்போது அண்ண‌ல் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கூறினார்கள்:நிச்ச‌ய‌மாக‌ அல்லாஹ் இவ்விரு நாட்க‌ளை விட‌ சிறந்த‌ நாட்க‌ளை உங்களுக்கு ப‌க‌ர‌மாக்கி இருக்கின்றான். அதுதான் ஈதுல் அழ்ஹா, ஈதுல் ஃபித்ரு (ஆகிய‌ இரு பெருநாட்க‌ள்) ஆகும்.


(அஹ்ம‌த்‍‍ந‌ஸ‌யீஇப்னு ஹிப்பான்)இத‌ன்ப‌டி, முத‌ல் ஈதுல் ஃபித்ரு பெருநாள் ஹிஜ்ரி இர‌ண்டாம் ஆண்டு முத‌ல் க‌ட‌மையாக்க‌ப்ப‌ட்ட‌து.


ஈதுல் ஃபித்ரு பெருநாள் தின‌த்தில் க‌டைப்பிடிக்க‌ வேண்டிய‌ செய‌ல் பாடுக‌ள்:


1. குளிப்ப‌து

2. புதிய‌ ஆடைக‌ள் அணிந்து கொள்ளுத‌ல், அல்லது த‌ன்னிட‌ம் இருக்கும் ஆடைக‌ளில் சிற‌ந்த‌ ஆடையை அணிந்து கொள்ளுத‌ல்.

3. தொழுகைக்கு புறப்படும் முன் உணவு உண்டுகொள்ளுத‌ல். ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ஈதுல் ஃபித்ரு பெருநாள‌ன்று தொழுகைக்குச் செல்லும் முன் ஒற்றைப்ப‌டையாக‌ பேரீத்த‌ம் ப‌ழ‌ங்க‌ளை சாப்பிட்டார்க‌ள் என்று அன‌ஸ்(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள்.

4. ஜ‌க்காத்துல் ஃபித்ரை தொழுகைக்கு முன்பே உறிய‌வ‌ர்க‌ளுக்கு கொடுத்து விடுத‌ல். இர‌ண்ட‌ரை கிலோ கோதுமை அல்ல‌து அரிசி போன்ற‌ தானிய‌மாக‌வோ, அல்ல‌து அத‌ன் கிர‌ய‌த்தையோ ஃபித்ராவாக‌ நிறைவேற்ற‌ வேண்டும்.


5. இர‌த்த‌ ப‌ந்த‌ உற‌வின‌ர்க‌ள் ஏழைக‌ளுக்கு உபகார‌ம் செய்த‌ல்.

6. தொழுகைக்குச் செல்லும்போது ஒரு வ‌ழியாகவும், திரும்பும்போது ம‌ற்றொரு வ‌ழியாக‌வும் வ‌‌ருத‌ல்.

7. பெருநாள‌ன்று ம‌கிழ்ச்சியை வெளிப்ப‌டுத்தும் வ‌கையில் விளையாட்டுக்க‌ளிலும் ஈடுப‌ட‌லாம்.இத‌னால் க‌ட‌மையான‌ தொழுகையைவிட்டு விடாம‌லும், முஸ்லிம்க‌ளின் உரிமைக‌ள் ம‌ற்றும் சொத்துக்க‌ளுக்கு பாதிப்பு ஏற்ப‌டுத்தாத‌ வ‌கையிலும் ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும்.

ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள்:நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ அய்யூப்(ரழி) அறிவிக்கிறார்கள்: யார் ரமழான் மாத்தில் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்புகள் வைக்கிறாரோ அவர் காலம் முழுவதும் நோன்பு வைத்தவர் போன்றாவார். (முஸ்லிம்)தொகுப்பு: மவ்லவி அ. சீனி நைனார் முஹம்மது தாவூதி. துபாய். (0559764994)
ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்