Thursday, September 30, 2010

சிம்பிள் பீட்ரூட் பொரியல் - simple beetroot poriyal








தேவையான பொருட்கள்


பீட்ரூட் – 150 கிராம்
தேங்காய் துருவல் – ஒரு மேசை கரண்டி
உப்பு – தேவைக்கு (அரை தேக்கரண்டி)
தாளிக்க
எண்ணை – ஒரு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
வெங்காயம் – 1
பூண்டு – 2 பல்
கருவேப்பிலை – இரண்டு ஆர்க்
பச்சமிளகாய் – 1








செய்முறை



1. பீட்ரூடை தோலை நீக்கி பொடியாக அரிந்து கொள்ளவும்.



2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எண்ணை, கடுகு ,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை சேர்த்துதாளித்து, வெஙகாயம் ,பூண்டு,பச்சமிளாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி பீட்ருட்டை சேர்த்து தேவைக்கு உப்பும் போட்டு ஒரு கை அளவு தண்ணீர் தெளித்து முடிபோட்டு ஐந்து நிமிடம் வேகவிடவும்.



3. வெந்த்தும் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இரக்கவும்.








4. பிளெயின் சாதம், வெண்டைக்காய் மோர் குழம்பு,சிக்கன் லாலிபாப் பிரையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். குழந்தைகளுக்கு பார்க்க கலர் புல்லாகவும் இருக்கும். நல்ல சத்தான ஒரு மதிய உணவு.

லெமன் லாலி பாப் சிக்கன் ஃப்ரை

பீட்ருட் பொரியல்



பீட்ரூட் பொரியல்

This recipe goes to sanyukta's A Visuval Treat Event , priya's healing foods-beetroot and ummu mymoon's Any One Can Cook.

Lemon Loli Pop Chicken Fry


பீட்ரூட் முளைபயிறு இட்லி
பீட்ரூட் ஹல்வா
பீட்ரூட் பொரியல்

27 கருத்துகள்:

Umm Mymoonah said...

Healthy and yummy poriyal, cute presentation :-)

Umm Mymoonah said...

Thank you for linking it to Any One Can Cook.

Nithu Bala said...

Simple yet yummy beetroot poriyal..good click..

சாருஸ்ரீராஜ் said...

very nice akka enga veetla ellorkum piditha poriyalna ithu than ....

வேலன். said...

சகோதரிக்கு ,

தங்கள் தளமு்ம் மால்வேரால் பாதிக்கப்பட்டிருந்தது.தங்களை தொடர்பு கொள்ள முடியவி்ல்லை. அதற்கான பதிவும் போட்டிருந்தேன். கவனித்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.
பீட்ரூட் பொரியல் அருமை சகோதரி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Unknown said...

Ur procedure in beet root poriyal is very useful 4 us.today i tried this 4 our lunch.Its really superb.Thanks 4 sharing

தெய்வசுகந்தி said...

ஈசி பொரியல்!!

Menaga Sathia said...

simple n healthy poriyal...

Anisha Yunus said...

என்னடா இதே படத்தை ஆஸியாக்கா அட்ரஸிலும் பார்த்தேனேன்னு யோசிச்சேன். அட போட்டி...இது மாதிரி வாரத்துக்கு ஒன்னு வச்சா நம்ம மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் சவுகரியமா போயிடும். எனக்கும் எங்கப்பாவுக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்ச பொரியல் இதாங்கக்கா. கலக்குங்க!!

Krishnaveni said...

my fav poriyal, looks yum

சசிகுமார் said...

வாழ்த்துக்கள் அக்கா

நட்புடன் ஜமால் said...

சிம்பிள்ன்னு போட்டு செமையானதை போட்டு இருக்கீங்க

உடலுக்கும் ரொம்ப நல்லது ...

மங்குனி அமைச்சர் said...

எச்ச்சூச்மி , பீட் ரூட்டுக்கு கால் இருக்கா ? அந்த படத்துல ரெண்டு லெக் பீசு இருக்கு

Vijiskitchencreations said...

helathy recipe.

Jaleela Kamal said...

Thanks for your valuable comment umm.

Jaleela Kamal said...

nithu thanks for your lovely comment

Jaleela Kamal said...

சாரு எங்க வீட்டில் பொரியல் அப்படின்னா இதான் முதலில். சின்னதிலிருந்து பீட்ரூட்டுக்கு தான் முதலிடம்.
இதே பல வகையாக செய்யலாம்.

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வேலன் சார் மால்வேர் பிராப்ளமா? எனக்கு பிளாக் படிகக் முடியாம ஆனதும் என்ன செய்வதென்ன்று தெரியமல். உடனெ டெம்லேட் டிசைன மாற்றினேன்.

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி தெய்வ சுகந்தி

நன்றி மேனகா

Jaleela Kamal said...

அன்னு இது எப்போதும் செய்வது தான் ஆனால் ரொமப் ஈசி. இது இப்ப தான் சமையலில் செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்., இந்த குறிப்ப செய்து போன வாரமே எடிட் பண்ணியாச்சு, லின்க் கொடுக்க முடியாம திடீருன்னு பிளாக் வைரஸ் வந்து 6 நாட்களாக பிராப்ளம்,
எங்கள் குடும்ப பேவரிட் பொரியல் இது அம்மா வித விதமா செய்வாங்க

பீட்ரூட் சாப்பிட்டா அவ்வளவும் ரத்தம் ரோஸாகிடுவ என்றூ சொல்லியே கொடுப்பான்ங்க/.

Jaleela Kamal said...

நன்றி கிருஷ்னவேனி

நன்றி சசி


ஜமால் நிஜம் தான் இது சிம்பிலா இருந்தாலும் எங்களு ரொம்ப பிடிச்சது. கருத்துக்கு நன்றி

Jaleela Kamal said...

மங்குனி அமைச்ச்ருக்கு தான் எடக்கு மடக்கு கேள்வி எல்லாம் கேட்க தெரியும்/.

Jaleela Kamal said...

நன்றி விஜி

Jaleela Kamal said...

கஸ்தூரி ராஜம் வருக்க்கும்ம் மிக்க நன்றி, செய்து பார்த்து வந்து கருத்து தெரிவித்தது மிகவும் சந்தோஷம்.

Asiya Omar said...

நல்லாயிருக்கு.ஜலீலா.

Jaleela Kamal said...

நன்றி ஆசியா

Unknown said...

மிக நல்ல பதிவு


http://denimmohan.blogspot.com/

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா