Wednesday, September 1, 2010

டேங்க் கடல்பாசி - tank agar







கடற் பாசி என்னும் சைனா கிராஸ் இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உனவு களில் இதுவும் ஒரு வகையாகும்.


கடற்பாசியை ரோஸ் எஸன்ஸ் ஊற்றி பால் சேர்த்தும் செய்யலாம்.


இரண்டு வகையான கலர் சேர்த்து தனித்தனியாக செய்து கலந்து கலர்புல்லாகவும் செய்யலாம்,இளநீரில் (அ) தேங்காய் உடைத்த தண்ணீரிலும் செய்யலாம், ஜூஸுக்கு கரைக்கும் டேங்கிலும் செய்யலாம்.


இது ஒரு வெஜ்டேரிய‌ன் உண‌வு தான் . நோன்பினால் வரும் வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும் . உடல் சூடுக்குக்கும் நல்லது.

தேவையான பொருட்கள்



க‌ட‌ற்பாசி = ஒரு கை பிடி அள‌வு
ச‌ர்க்க‌ரை = ஒரு மேசைக‌ர‌ண்டி அள‌வு
ஏதாவ‌து ஒரு பிளேவ‌ர் டேங்க் ப‌வுட‌ர் = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி அளவு
த‌ண்ணீர் = இர‌ண்டு ட‌ம்ளர்






செய்முறை



1. ஒன்ன‌றை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் க‌ட‌ற்பாசியை க‌ரைத்து ஊற‌வைத்து ச‌ர்க‌க்ரை சேர்த்து ந‌ன்கு காய்ச்ச‌வும்.
2. ந‌ன்கு க‌ரைந்து வ‌ரும் போது டேங்க் ப‌வுட‌ரை க‌ல‌ந்த்து ஊற்றி சதுர வடிவ டிரேயில் அல்லது பிரிஜர் ஐஸ் டேரேவில் ஊற்றி தேவையான நட்ஸ் வகையை தூவி ஆற‌விட‌வும்.
3. ஆறிய‌தும் பிரிட்ஜில் வைத்து குளிற‌ வைத்து சாப்பிட‌வும். மாலை நோன்பு திறக்கும் போது சாப்பிட நல்ல இருக்கும்.










மேலும் வித விதமான கடல்பாசி வகைகளை இங்கு சென்று பார்க்கவும்.


30 கருத்துகள்:

ஸாதிகா said...

புளிப்புசுவையுடன் அசத்தலாக இருக்க்குமே

நட்புடன் ஜமால் said...

இளநீர் சேர்த்து சமீபத்தில் சாப்பிட்டேன் ரொம்ப சுவை

நட்புடன் ஜமால் said...

வரலாறு ஏதும் போடலையா

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு... சாப்பிட்டதில்லை..
உங்க வீட்டுக்கு வந்து ட்ரை பண்ணனும்.. :-)))

சிங்கக்குட்டி said...

சாப்பிட எவ்வளவு சுவையாக இருக்குமோ அதே போல் பார்க்கவும் அழகாக இருக்கிறது :-)

வரலாறு எங்கே?

வர வர சமையல் ஜலீலாவில் இருந்து நீங்க வரலாறு ஜலீலா ஆக போறீங்க :-)

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா வாங்க இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

Jaleela Kamal said...

சகோ ஜமால்
தினம் இங்கு இளநீர் கடல் பாசி தான் நுங்கு போல் அருமையாக இருக்கு.

Jaleela Kamal said...

வரலாறா வேண்டாம் நாமெல்லாம் ஒன்று சொல்ல அய்யுப் ஒரு பெரிய வரலாறோடு வந்து விடுவார்.

இஸ்லாமிய இல்ல ஸ்பெஷல் சமையல் பிரியாணி அதை பற்றி தெரிந்து கொள்ளவே அந்த வரலாறு

Jaleela Kamal said...

அனந்தி வாங்க ட்ரை பண்ண்டிடலாம்

Jaleela Kamal said...

சிங்கககுட்டி வாங்க நீங்களும் ஏதாவது வரலாறு இருந்தால் அலசி ஆராயலாம் என்று வந்தீர்கள்.

ஆனால் சூப்பரான தகவல் பஜ்ஜிக்கும், பிரியாணிக்கும் நன்றி.

Chitra said...

நோன்பு கால உணவு பொருட்கள் பற்றி நிறைய தெரிந்து கொள்கிறேன். பகிர்வுக்கு நன்றி, அக்கா..!!!

Unknown said...

சுவையான கடல் பாசி சூப்பர் அக்கா

R.Gopi said...

ஜலீலா மேடம்....

இந்த டேங்க் கடல்பாசி உணவை பார்த்திருக்கிறேன்... ஆனால், சாப்பிட்டதில்லை....

நன்றாக இருக்கும் என்று சாப்பிட்ட நண்பர்கள் சொல்ல கேள்வி....

'பரிவை' சே.குமார் said...

பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு... சாப்பிட்டதில்லை..

ஜெய்லானி said...

அப்படியே பார்ஸல் சாப்பிட்டுட்டுதான் சொல்வேன் ஹி..ஹி..

Chef.Palani Murugan, said...

Superb!

Kanchana Radhakrishnan said...

பார்க்க நன்றாக இருக்கு... சாப்பிட்டதில்லை..

அந்நியன் 2 said...

தீர்ப்புலாம் ..பெண்டிங்க்லே கிடக்கு ..அதுனாலே வரலாரை தேட மாட்டேன்.

இதுலாம் நோன்புக்கு முன்னாடியே போட்டிருக்கணும் .
எல்லாம் நல்லாவே இருக்கு,அப்புறம் நீங்களும் ராஜ வம்சமும் சொன்ன மாதுரி எனக்கு தெரிஞ்ச அளவுக்கு" நாட்டாமைன்னு" ப்ளாக் போட்டுக்கிட்டு இருக்கேன்.

சாரம் கட்டிக்கிட்டு இருக்கேன் ,எல்லா வேலையும் முடிஞ்ச பிறகு கார்ட் அனுப்புறேன் வந்து கலந்துக்குருங்க.

அப்புறம் அந்தக் கடற்பாசி சைனாவுலே இருந்து வந்ததாக சொன்னிய ......லே ...இருங்க ..இருங்க சொல்லி முடிக்குரதுக்குள்ளே அடிக்க வர்றியே.
ஆமா அது சைனா க்ராஸ்தான்.

vanathy said...

super!

Menaga Sathia said...

சூப்பர்ர்+கலர்புல் கடல்பாசி...

Krishnaveni said...

looks so colourful and yummy

Jaleela Kamal said...

தொடர் வருகைக்கு மிக்க நன்றி சித்ரா

Jaleela Kamal said...

நன்றி பாயிஜா

Jaleela Kamal said...

கோபி இது சைவ உணவு , செய்து சாப்பிட்டு பாருங்கள் நல்ல இருக்கும்.
தொடர் வருகைக்கு மிகக்நன்றி

Jaleela Kamal said...

சே.குமார் வாங்க வருகைக்கு மிக்க நன்றி, சாப்பிட்டு பாருங்கள் ,,
அதுவும் இளநீரில் ரொம்ப அருமையாக இருக்கும்

Jaleela Kamal said...

ஜெய்லாணி செய்தட்தும் பார்சல் அனுப்பினேனே கிடைக்கலையா?

Jaleela Kamal said...

செஃப் பழனி உங்கள் தொடர் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி காஞ்சனா வாங்கி செய்து பாருங்கள்

Jaleela Kamal said...

நாட்டம அய்யுப் ஆரம்பிங்க பெயரும் புதுசா இருக்கு அப்ப கூட்டம் நிரைய சேரும்.ஆரம்பித்ததும் முதல் அழைப்பு வரனுமாக்கும்.

Jaleela Kamal said...

நன்றி மேனகா
நன்றி வானதி
நன்றி கிருஷ்ணவேனி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா