Tuesday, September 14, 2010

ட்ரை கலர் பெல் பெப்பர் ஃபிரைட் ரைஸ் - tri colour bel pepper fried rice


தேவையானவை


உதிரியாக வடித்த சாதம் – இரண்டு கப்

பச்சை,மஞ்சள்,சிவப்பு கொட மிளகாய் – பொடியாக அரிந்த்து ஒரு கப்பூண்டு – 5 பல்
வெங்காய தாள் – இரண்டு ஸ்ட்ரிப்
எண்ணை + பட்டர் – இரண்டு மேசை கரண்டி
சர்க்கரை – அரை தேக்கரண்டி
சோயா சாஸ் – ஒரு மேசை கரண்டி
உப்பு தேவைக்கு
வொயிட் பெப்பர் (அ) கருப்பு மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி







செய்முறை


வெங்காய தாள் , கொட மிளகாய் வகைகள், பூண்டை பொடியாக நருக்கி வைக்கவும்.


ஒரு வாயகன்ற நான் ஸ்டிக் பேனில் எண்ணை + பட்டர் கலந்து ஊற்றி பூண்டு, சர்க்கரை சேர்த்து வதக்கவும்.



பிறகு வெங்காயத்தாளை சேர்த்து வதக்கி , சிவப்பு,மஞ்சள், பச்சை குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். எல்லாம் பாதி வேக்காடு வதங்கினால் போதும்.



பிறகு உதிரியான சாதம் சேர்த்து வதக்கில் சோயா சாஸ், சிறிது மிளகு தூள் தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இரக்கவும்.




குறிப்பு


அசைவ பிரியர்கள் சிக்கன் அல்லது முட்டை சேர்த்து கொள்ளவும்
குடை மிளகாய் வாசத்துடன் சாதம் பிடித்து சாப்பிட அருமையாக இருக்கும்.
தொட்டு கொள்ள பட்டர் பனீர் மசாலா ( அல்லது) காலிபிளவர் மஞ்சூரியனுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

(இது சாதம் வடித்து பிரிட்ஜில் வைத்து பிறகு செய்தால் இன்னும் உதிரியாக இருக்கும், அதே போல் மீதி ஆன சாதத்திலும் செய்யலாம்)



ஆக்கம்
ஜலீலா
துபாய்


26 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

குடை மிளகாய் வாசத்துடன் சாதம் பிடித்து சாப்பிட அருமையாக இருக்கும்

உண்மைதான் ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

இப்பவே கண்ண கட்டுதே...

GEETHA ACHAL said...

ஆஹா...எனக்கு மிகவும் பிடித்தது...சூப்ப்பர்...

Jaleela Kamal said...

நன்றி எல்.கே

Jaleela Kamal said...

சகோ.ஜமால் நலமா? ஹாஜர் எப்படி இருக்காங்க
தொடர் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

வெறும் பய கண்ண கட்டுதா? பேச்சுலர்களுக்கு ஒன்னும் பண்ண முடியாது, ச்சமைப்பவாராக இருந்தால் உடனே சமைத்து சாப்பிடலாம்

Jaleela Kamal said...

நன்றி கீதா ஆச்சல், இதை மீதியான சாதத்தில் தான் செய்தேன்.

Umm Mymoonah said...

Romba nalla irukku akka, neenga sonapadi word verification eduthetataein :-)

Chitra said...

looks so good........ yummy!

Unknown said...

பார்க்கவே நல்லா இருக்கு..

Jaleela Kamal said...

உம்மு மைமூன் உங்க்ள் பாராட்டுக்கு மிக்க நன்றீ

Jaleela Kamal said...

நன்றி தாயம்மா

Jaleela Kamal said...

நன்றி பாயிஜா

Muruganandan M.K. said...

ரொம்ப ருசியா இருக்கும் போலிருக்கிறதே.

தெய்வசுகந்தி said...

கலர்ஃபுல் சாதம்!!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

குடை மிளகாய் வாசனையே தனி தான்.. கண்டிப்பா சூப்பர்-ஆ இருக்கும்..
பகிர்வுக்கு நன்றி.. :)

nice pictures..

R.Gopi said...

ஜலீலா மேடம்....

விதவிதமான சமையல் குறிப்பின் அசத்தலில் இப்போது த்ரி கலர் பெல் பெப்பர் ஃப்ரைட் ரைஸ்....

இந்த தலைப்பை இப்படி மாற்றினால் இன்னமும் நன்றாக இருக்கும்

ட்ரை கலர் பெல் பெப்பர் ஃப்ரைட் ரைஸ்....

சும்மா ஒரு சஜஷன் தான்....

ஈத் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியதா?? சிறிய சுற்றுப்பயணம் எங்காவது சென்றீர்களா? தெரியப்படுத்தவும்....

Anonymous said...

yummy ..ரொம்ப சூப்பர் ஆ இருக்கு தோழி ..படம் பார்த்தாலே சாபிடணம் போல் இருக்கு ..நன்றி

Nithu Bala said...

Colorful rice akka..loved it..

Jaleela Kamal said...

டாக்டர் முருகானந்தன் ரொம்ப நாள் கழித்து வந்து கருத்து தெரிவித்து இருக்கீங்க நன்றி + ரொம்ப சந்தோஷம்.

Jaleela Kamal said...

நன்றி தெய்வ சுகந்தி

Jaleela Kamal said...

ஆமாம் ஆனந்தி குடமிள்காய் வாசத்தில் ஒரு வித்தியாசமான சுவை.
வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

கோபி உங்கள் கருத்து சரியானதே.
ஈத் நல்ல படியாக விருந்தினர் வருகையால் சிறப்பாக இருந்தது.

தலைப்பு பெயரை மாற்றி விட்டேன்.
சில நேரம் அவசரத்தில் யோசிக்காமல் பெயரை வைப்பது. அதான்..இப்படி

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க ந்னறி சந்தியா.

Jaleela Kamal said...

நன்றி நீத்து ஆமாம் பார்க்க நல்ல கலர் ஃபுல்லாக இருக்கும்.

Riyas said...

நீண்ட நாளைக்குப்பிறகு வருகிறேன்.. பதிவெல்லாம் சிறப்பா இருக்கு

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா