Sunday, October 17, 2010

கோதுமை மாவு குழி பணியாரம் - atta kuzipaniyaram



தேவையானவை

கோதுமை மாவு = முக்கால் டம்ளர்
இட்லி மாவு - ஒரு குழி கரண்டி
ரவை - ஒரு மேசை கரண்டி
முட்டை = ஒன்று
தேங்காய் துருவ‌ல் = கால் ட‌ம்ளர்
முந்திரி - இரண்டு மேசை கரண்டி பொடியாக அரிந்தது
உப்பு = ஒரு சிட்டிக்கை
வெல்ல‌ம் = முக்கால் டம்ளர் (பொடித்தது)
ஏலப்பொடி = அரை தேக்க‌ர‌ண்டி
எண்ணை = பொரிக்க‌ தேவையான‌ அள‌வு


செய்முறை

வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும்.
கோதுமை மாவில் இட்லி மாவு,ரவை,முட்டை,முந்திரி,உப்பு,ஏலப்பொடி,வடித்த வெல்லம் அனைத்தையும் போட்டு நன்கு கலக்கவும்.
கலவை கட்டியாக இருந்தால் தேவைக்கு தண்ணீர் ஊற்றி கலக்கி சிறிது நேரம் ஊறவக்கவும்.
குழிபணியார சட்டிய காயவைத்து கொஞ்சமாக எண்ணை விருப்பபட்டால் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.
குட்டி குட்டியா பார்க்க வே அழகா இருக்கு சுட்டு வைத்தா லபக் லபக் க்குன்னு வாயில் போய் விடும்.


இது ஏற்கனவே நான் செய்த கோதுமை மாவு அப்பம் தான், இப்ப சிலபொருட்கள் சேர்த்து குழிபணியாரமா சுட்டாச்சு.


குழிபணியாரம் எனக்கு ரொம்ப பிடிச்சது ஆனால் ஓவ்வொரு முறை ஊரிலிருந்து சட்டி வாங்கி வரனும் என்று நினைத்து அதிக லக்கேஜ் காரணமா வாங்க முடியாம போய் விடும். இங்கு அதிக காசு கொடுத்து வாங்கனும்.ரொம்ப ஆசையா இருந்தா இதை தயாரித்து விட்டு என்னையில் அப்பம் போல் சுட்டு சாப்பிடுவது. இல்லை ஆச்சி செட்டி நாடில் வாங்கி சாப்பிடுவது
இந்த தடவை எப்படியோ வாங்கி வந்துவிட்டேன். நான் ஸ்டிக் என்பதால் அதிக எண்ணையும் தேவைபடல.


அறுசுவையின் சைலண்ட் ரீடர் ஜெயஸ்ரீ சவுதியில் இருக்கிறாங்க என் ரெசிபிகளை மட்டுமே பார்த்து செய்வார்கள். ரசப்பொடி, சாம்பார் பொடி , குழந்தைகளுக்கு சத்துமாவு பொடி எல்லாம் என் முறை படி தான் திரித்து வைத்து கொள்வார்கள். அவங்க முதல் பையனுக்கு இருமலுக்கு, மாமனார் ஹாட் பிராப்ளம் க்கு டயட் ரெசிபி ( எல்லாமே அறுசுவையில் கொடுத்துள்ளேன்), இரண்டாவது குழந்தை உண்டான போது ரெசிபிகள், குழந்தை பிறந்த பிறகு டிப்ஸ்கள் எல்லாம் மெயிலிலேயே கேட்டு கொள்வார்கள். இரண்டு வருடமாக பேசி கொண்டு இருக்கோம், எப்படியும் 15 நாட்களுக்கு ஒரு முறை போன் செய்வார்கள்,அவர்களிடம் தான் குழிபணியாரத்துக்கு சரியான அளவு எப்பட்டி என்று கேட்டேன். அவர்கள் சொன்ன அளவு படி இனிப்பு மற்றும் காரம் செய்து பார்த்து ரொம்ப அருமையாக வந்த்து.


மிக்க நன்றி ஜெயஸ்ரீ, போட்டோ எடுக்கல எடுத்தால் போடுகிறேன். அதற்கு பிறகு வெரைடியா என் ஐடியாவில் 7 வகை செய்து பார்த்தாச்சு எல்லாம் சூப்பர்.


இன்னும் நிறைய ஐடியா இருக்கு குழிபணியாரத்துக்கு, பள்ளிக்கும், ஆபிஸுக்கும் எடுத்து போக ரொம்ப வசதியா இருக்கு. வரும் நேரம் கிடைக்கும் போது ஒன்று ஒன்றா..

குழி பணியார மாவுக்கு


புழுங்கல் அரிசி – ஒரு ஆழாக்கு
பச்ச அரிசி – ஒரு ஆழாக்கு
உளுந்து - அரை ஆழாக்கு
வெந்தயம் – அரை தேக்கரண்டி


மாவை 4 மணி நேரம் ஊறவைத்து அரைத்து புளிக்க வைத்து இனிப்பு மற்றும் காரவகைகளை விரும்பம் போல் சுட்டு சாப்பிடலாம்.

40 கருத்துகள்:

ஜெய்லானி said...

//குட்டி குட்டியா பார்க்க வே அழகா இருக்கு சுட்டு வைத்தா லபக் லபக் க்குன்னு வாயில் போய் விடும்.//

ஆஆஆஆஆஆஆஆ.....!! எங்கே வாயில போகலையே...!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஜெய்லானி said...

//குட்டி குட்டியா பார்க்க வே அழகா இருக்கு சுட்டு வைத்தா லபக் லபக் க்குன்னு வாயில் போய் விடும்.//

ஆஆஆஆஆஆஆஆ.....!! எங்கே வாயில போகலையே...!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

erodethangadurai said...

அருமை. !

இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

ஸாதிகா said...

அசத்தல் குழிப்பணியாரம்.ஆனால் எனக்கு காரப்பணியாரம்தான் பிடிக்கும்

Asiya Omar said...

இந்த முறையிலும் செய்து பார்க்கவேண்டும்.அருமை.

Menaga Sathia said...

மிகவும் அருமையான குழிப்பணியாரம்...

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) அதிரைவரலாறு வலைப்பூவை பார்வையிட்டு
கருத்து சொல்லுங்கள்.
அதிரை வரலாறு
http://adiraihistory.blogspot.com/

தெய்வசுகந்தி said...

அசத்தல் பணியாரம். எனக்கும் கார பணியாரம்தான் பிடிக்கும்.

Krishnaveni said...

lovely recipe, beautiful

Unknown said...

ella paniyaramum enakuthan..

nanthan firstu..

akka markama anupidungo..

very healty paniyaram...

Prema said...

paniyaram luks wounderful,never tried in wheat flour.very innovative recipe.

சிங்கக்குட்டி said...

நல்லா இருக்குங்க... பகிர்வுக்கு நன்றி :-)

Chitra said...

Yummy recipe... Thank you.

சசிகுமார் said...

THANK YOU

ஹுஸைனம்மா said...

இந்த முறையும் செஞ்சுப் பார்க்கணும். நான் வேற மாதிரி சிம்பிளா செய்வேன். (அரிசி மாவு, முட்டை, தேங்காய், சீனி மட்டும்). காரம்தான் என் ஃபேவரைட்டும் கூட.

அந்நியன் 2 said...

என்னக்கா பணியாரம் தானா ஆனா (த.அ) மாத்திரை சைசில் இருக்குது, இதுலாம் ரெண்டு கைப் பிடித்து தூக்குற சைசில் இருக்கணும், சரியா,அப்புறம் நாங்கள் அம்பது திண்டுட்டோம் நூறு திண்டுட்டோம்னு சொல்லவா ?

அசத்துங்கள் !!!

vanathy said...

looking super, akka.

Unknown said...

First time here..Ella recipes um nalla irukku..

Geetha6 said...

waav!!!!!!!!

மங்குனி அமைச்சர் said...

மேடம் எங்க வீட்டுல இதை இனிப்பு பணியாரம்ம்னு சொல்லுவோம்

Jaleela Kamal said...

ஜெய்லானி நம்ம சுட்டு வைத்த வாயில் லபக்குன்னுபோகும் என்றேன். சரி அட்ரெஸ் வேண்டா கொடுங்க போஸ்ட் பண்ணிடுரேன்.

Jaleela Kamal said...

ஈரோடு தஙக் துறை வருகைக்கு மிக்க நன்றி.
முடிந்த போது கண்டிப்பாக வரேன்.

Jaleela Kamal said...

ஸாதிகா எங்க் வீட்டில் இனிப்பு பிரியர்கள் ஆகையால் முதலில் முன்று வகை பணியாரம் இனிப்பில் , இனி காரம்தான்.

Jaleela Kamal said...

ஆசியா இது நான் செய்யும் இனிப்பு கோதுமை மாவு தோசை + கோதுமை மாவு அப்பம் இப்பகுழிபணியாரம் செய்து பாருங்கள் சூப்பராக இருக்கும்.

Umm Mymoonah said...

Super snacks, very delicious. Thank you for linking it with Any One Can Cook.

Jaleela Kamal said...

மிக்க நன்றி மேனகா

Jaleela Kamal said...

அதிரை வராலாறு கண்டிப்பா முடியும் போது வந்து படிக்க்கிறேன்
வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

தெய்வ சுகந்தி எல்லோருக்கும் கார பணியாரம் தானா, எனக்க்ம் காரம் தான் , ஆனால் வீட்டில் இனிப்பு தான் பிடிக்கும்,

Jaleela Kamal said...

நன்றி கிருஷனவேனி

Jaleela Kamal said...

சிவா கண்டிப்பா அனுப்புரேன்

Jaleela Kamal said...

பிரேம லதா நான் அடிக்கடி செய்வது கோதுமையில் தான். ரொம்ப யும்மியாக இருக்கும்.

Jaleela Kamal said...

சிங்ககுட்டி அம்மணி கிட்ட சொல்லிட்டீங்கலா?

Jaleela Kamal said...

நன்றி சித்ரா

நன்றி சசி

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மா நீங்கள் சொலவதும் ரொம்ப ஈசியா இருக்கு செய்து பார்க்கிறென்.
காரம் நிறைய முறையில் செய்யலாம்.

Jaleela Kamal said...

அய்யுப் வாங்க் ஊரிலிருந்து வந்தாச்சா இல்லை அங்கிருந்து பதில் போடுகிறீர்களா?

பேச்சுலர்களுக்கு 50 தேவைபடும்.

Jaleela Kamal said...

நன்றி வானதி

Jaleela Kamal said...

ரம்யா முதல் வருகைக்கும் கமெண்டுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

கீதா 6 மிக்க நன்றி

Jaleela Kamal said...

அமைச்சரே பேர ரொம்ப புதுசா சொல்றீர்,
கருத்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

umm thanks for your lovely comment

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா