Monday, November 29, 2010

தாய்லாந்து ஸ்வீட் ரைஸ் - Thailand Sweet Rice

பிசின் அரிசி சாதம்  (அ) தாய்லாந்து ஸ்வீட் ரைஸ்



தேவையானவை



தாய்லாந்து (ஸ்டிக்கி )ரைஸ் – 100 கிராம்
கட்டியான தேங்காய் பால் – கால் கப்
சர்க்கரை – 25 கிராம் ( ருசிக்கு தேவையான அளவு)
பிஸ்தா – பொடியாக அரிந்த்து ஒரு தேக்கரண்டி

//இது ஸ்டிக்கி ரைஸ், தாய்லாந்து அரிசியில் செய்த்து. அரிசி பார்க்கவே சில்கியா இருக்கும்.நாம் புட்டரிசி செய்வோம் அது சாப்பிடுபவகளுக்கு இது ரொம்ப பிடிக்கும். இது பிலிப்பைனிகளின் காலை நேர உணவும் ஆகும் ரைஸ் கேக். என்று சொல்வார்கள்,.//பிலிப்பைனிகள் பிரவுன் ரைஸ் + வெயிட் ரைஸ் இரண்டையும் கலந்து பேக் செய்வார்கள்.

செய்முறை



அரிசியை ஒரு நாள் முழுவதும் ஊறவைக்கனும், இரண்டு முறை தண்ணீரை மாற்றவும்.
ஊறிய அரிசியை வடிகட்டி இட்லி பானையில் வைத்து 45 நிமிஷம் அவிய விடவும். 10 நிமிடம் மட்டும் அதிக தணலிலும், பிறகு சிம்மில் வைத்து அவிய விட்டு இரக்கவும்.
வேறு பாத்திரத்தில் வெந்த அரிசியை மாற்றி அதில் தேங்காய் பால் சர்க்கரை சேர்த்து கலக்கி சிறிதுநேரம் வைத்தால் செட்டாகிடும்.சிறிது பிஸ்தா தூவி அலங்கரிக்கவும்.
சுவையான பிசின் அரிசி சாதம் ரெடி.

இதனுடன் பழம் , சுண்டல் சாலட், ஆம்லேட் ,ஏதாவது வறுவலுடன் சாப்பிடலாம்.
(புட்டரிசி என்பது சிவப்பாக இருக்கும், அதுவும் இதே போல் அவித்து தேங்காய் துருவியது, சர்க்கரை கலந்து சாப்பிடனும்).


இதற்கு முன் பதிவில் போட்ட பீக்கோ போல் தான் இதுவும்.



Sunday, November 28, 2010

your life your choice

தொழுகை. அதை மிகனும் பேணிதொழவேண்டும். பொடுபோக்காவோ பிறர் பார்வைக்காகவோ தொழக்கூடாது. இறைவனுக்காக நாளை மறுமையில் கேட்க்கும் கேள்விகளுக்கு நமககு உதவியாக இருக்கக்ககூடிய தொழுகையை மிக கவனத்துடன் தொழவேண்டும்

இந்த கானொளியை பாருங்கள்.
24 நான்கு மணி நேரத்தில் ஐந்து வேலை தொழுகை. 10 நிமிடம் ஆகுமா?
எங்கிருந்தாலும் வக்து விடாமல் தொழ முயற்சி செய்யுங்கள்.







இங்கு துபாயை பொருத்த வரை எங்கு ஷாப்பிங் மால் சென்றாலும் கண்டிப்பாக பிரேயர் ஹால்லுன்னு ஆண்களுக்கு தனியா பெண்களுக்கு தனியாக இருக்கும்.


ஐவேளை தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருதல்:
"எவர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருவாரோ அல்லாஹ்விடத்தில் அவரை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் ஓர் உடன்படிக்கை இருக்கிறது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத், நஸாஈ).




எங்கு சென்றாலும் அந்த் அந்த வேலை தொழுகைய முடித்து கொள்வது, அது இங்குமட்டும் தான்.
அதே போல் பள்ளிகளிலும் பெண்களுக்கு தனி இடம் உண்டு வெளியில் சென்றாலும் பள்ளிகளிலும் தொழுது கொள்ளலாம்.

Wednesday, November 24, 2010

ஒரு முக்கியமான விஷியம் வாங்கபா எல்லோரும்


அன்பான பதிவுலக தோழ தோழிகளே வாங்க ஒரு முக்கியமான விஷியம் வாங்கபா எல்லோரும் வாங்க எல்லோரும் வாங்க



இந்தங்க இந்த பூங்கொத்த பிடிங்க

எல்லோரும் லட்டு எடுத்து கொள்ளுங்கள்












என் பிலாக் ஐடி இனி www.allinalljaleela.blogspot.com இது கிடையாது,
www.samaiyalattakaasam.blogspot.com இந்த ஐடியை இனைத்து கொள்ளுங்கள்.
தவறாமல் வந்து இனைந்து கருத்திடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.


இப்படிக்கு

என்றும் உங்கள் ஜலீலாக்கா




Monday, November 22, 2010

பீக்கோ - biko






தேவையானவை

தாய்லாந்து ரைஸ் – 50 கிராம்

கட்டியான தேங்காய் பால் – கால் கப்

கருப்பெட்டி வெல்லம் – 25 கிராம் ( ருசிக்கு தேவையான அளவு)

பிஸ்தா – பொடியாக அரிந்த்து ஒரு தேக்கரண்டி



//இது ஸ்டிக்கி ரைஸ், தாய்லாந்து அரிசியில் செய்த்து. அரிசி பார்க்கவே சில்கியா இருக்கும். இது பிலிப்பைனிகளின் காலை நேர உணவும் ஆகும் ரைஸ் கேக். என்று சொல்வார்கள்.//





செய்முறை


அரிசியை ஒரு நாள் முழுவதும் ஊறவைக்கனும், இரண்டு முறை தண்ணீரை மாற்றவும்.

ஊறிய அரிசியை வடிகட்டி இட்லி பானையில் வைத்து 45 நிமிஷம் அவிய விடவும். 10 நிமிடம் மட்டும் அதிக தணலிலும், பிறகு சிம்மில் வைத்து அவிய விட்டு இரக்கவும்.

கருப்பட்டி வெல்லத்தை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க் விட்டு கரைந்த்தும் வடிக்கவும்.



வடித்த வெல்ல கரைசலுடன் கட்டியான தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டவும்.

கொதித்து கட்டியாக இருக்கும். அவித்து வைத்துள்ள அரிசியில் கொட்டி கிளறி சமப்படுத்தி வைக்கவும்.சிறிது நேரம் கழித்து செட்டாகிவிடும்.பிஸ்தா தூவி அலங்கரிக்கவும்.

குறிப்பு

சுவையான பீக்கோ ரெடி , இது நான் சுவைத்த சுவையின் படி இதை செய்துள்ளேன்.





கேரிஃபோர் , மாயாலால்ஸ் போன்ற இடங்களில் ஃபுட் செக்‌ஷனில் பிலிப்பைனிகளுக்கு ரெடி மேட் காலை உணவு இருக்கும்,அதில் ஒன்று தான் இந்த பீக்கோ, வாங்கி வந்து சுவைத்து செய்துள்ளேன்.அது இன்னும் புட்டரிசி போல் மென்று சாப்பிடுவது போல் இருந்தது, நான் கொஞ்சம் நல்லவே வேகவைத்தேன்.

இது பிலிப்பைனிகளின் உணவு, அவர்கள் ஓவனில் வைத்து செய்வார்கள். கருப்பட்டிக்கு பதில் அவர்கள் பிரவுன் சுகர் கேக்குக்கு பயன் படுத்துவது சேர்த்து செய்வார்கள்.

இதே இஸ்லாமியர்கள் இனிப்பு உருண்டை சோறு என்று குக்க்கரில் அரிசி+ வெல்லத்தை வேகவைத்து உருண்டை பிடித்து துருவிய தேங்காய் சேர்த்து செய்வார்கள்.




நொய் உருண்டை வெல்லஞ்சோறு






Saturday, November 20, 2010

சுறா மீன் கட்லெட்


தே்ையானவை

சுறா மீன் - கால் கிலோ ( வெந்தது)
சீரக தூள் - இரண்டு தேக்கரண்டி
உருளை கிழங்கு - 100 கிராம்
கேரட் - 50 கிரம்
வெங்காயம் - இரன்டு (பொடியாக அரிந்தது)
பச்ச மிளகாய் - இரண்டு (பொடியாக அரிந்தது)
கொத்து மல்லி கீரை - ஒரு கை ப்டி அளவு (பொடியாக அரிந்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் (அ) மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு



கட்லெட் தோய்க்க

கார்ன் பிளேக்ஸ் - ஒரு கால் கப்
ஓட்ஸ் - கால் கப்
முட்டை - ஒன்று + அரை


செய்முறை


1. உருளை , கேரட்டை வேக வைத்து ஆறியதும் தண்ணிரை வடித்து மசித்து கொள்ளவும்.

2. வெந்த மீனில் இஞ்சி பூண்டு பேஸ்ட்,சீரக தூள், உப்பு தூள், மிளகுதூள், கரம் மசாலா துள் சேர்த்து நன்கு பிசையவும்.

3.அடுத்து பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்ச மிளகாய், கொத்து மல்லி தழை சேர்த்து நன்கு பிசையவும்.

4.கடைசியாக மசித்து வைத்துள்ள உருளை, கேரடை சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

5. முட்டையை நன்கு அடித்து வைக்கவும், கார்ன் பிளேக்ஸை கையால் நள்ள நொருக்கி அத்துடன் ஓட்ஸை கலந்து வைக்கவும்.

6.இப்போது உருட்டி வைத்துள்ள உருண்டைகளை முட்டையில் இருபுறமும் முக்கி ஓட்ஸ், கார்ன் பிளேக்ஸ் கலவையில் பிறட்டி ஒரு தட்டில் அடுக்கி பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.

7. பிறகு எடுத்து பொரித்து சாப்பிடவும்.

8.சுவையான சுறா மீன் கட்லெட் ரெடி.

குறிப்பு



சுறாமீன் சால்னா (குழம்பு) தயரிக்கும் போது அரை கிலோவாக எடுத்து அதில் உப்பு, சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட்,சீரக தூள் சேத்து வேக வைத்து அதிலிருந்து முள்ளில்லாமல் கால் கிலோவை எடுத்து வைத்து கொள்ளவேன்டும் (இதை கட்லெட் (அ) புட்டு (அ) வடை செய்து கொள்ளலாம்.

கிரெம்ஸ் பொடிக்கு பதில் இப்படி ஓட்ஸ், கார்ன் பிளேக்ஸ் சேர்ப்பதால் நல்ல இன்னும் கிரிஸ்பியாக வரும்.

என் கு்றிப்ப காப்பி அடிக்காதீங்க.

Monday, November 15, 2010

ஈத் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி




















மட்டன் - 1 கிலோஅரிசி - 1 கிலோ
எண்ணை - 100 கிராம்டால்டா - 150 கிராம்
பட்டை - இரண்டு அங்குல துண்டு இரண்டு
கிராம்பு - ஐந்து
ஏலக்காய் - முன்று
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/2 கிலோ
இஞ்சி - 3 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 150 கிராம்
பூண்டு - 2 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 100 கிராம்
கொ. மல்லி - ஒரு கட்டு
புதினா - 1/2 கட்டுப. மிள்காய் - 8
தயிர் - 225 கிராம்
சிகப்பு மிளகாய் தூள் - 3 1/2 டீஸ்பூன்
மஞ்சள் போடி - 1 பின்ச்
ரெட்கலர் பொடி - 1 பின்ச்
எலுமிச்சை பழம் - 1நெய் - ஒரு டீஸ்பூன்





செய்முறை





முதலில் சட்டி காய்ந்ததும்எண்ணையும் டால்டாவையும் ஊற்றி நல்ல கய்ந்ததும்ஒரு விரல் அளவு பட்டை , கிராம்பு , எலக்காய் போடவும்.


அது வெடித்ததும் நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி போடவும்.


நல்ல பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும்.


ஓவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேன்டும்.அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும். பிறகு கொ . மல்லி புதினா வை போட்டு கிளறவும்

அதன் பின் தக்காளி ப.மிளகாய் போடவும்.இரன்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்ஜள் தூள், உப்பு தேவையான் அளவு போட்டு வேகவிடவும்.நல்ல எண்ணையில் எல்லா பொருட்களும் வதங்கியவுடன் மட்டனை போடவும்.

போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக முன்று நிமிடம் கிளறவும்.பிறகு தயிரை நல்ல ஸ்பூனால் அடித்து ஊற்றவும்.அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும்.வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும்.தீயின் அள‌வை குறைத்து வைத்து செய்வ‌தால் அடி பிடிக்காது.



அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும் ஊறவைத்த அரிசியை வடிக்கவும் .உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழியவும்.

வெந்ததும்நல்ல பதமாக பார்த்து ஓவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடித்தல் போதும். உடனே சிம்மில் வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் கொட்டவும்


கொட்டி சமப்படுத்தி சட்டிக்கு கிழே தம் போடும் கண் தட்டு (அல்லது) டின் மூடி வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு மேலே வடித்த கஞ்சி சட்டியை வைத்து தம்மில் விடவும்



ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி விட்டு ரெட்கலர் பொடியை அந்த சுடு கஞ்சி இரன்டு டேபுள் ஸ்பூனில் கரைத்து துவிவிடவும்.

அதன் பின் இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும்.பிறகு பத்து நிமிடம் புழுங்க விட்டு மேலிருந்து கீழாக நல்ல உடையாமல் பதமாக கிளறி சூடாக பறிமாறவும.























note:
வீட்டில் சாதாரணமாக செய்யும் போது டால்டாவின் அளவை குறைத்து கொண்டு எண்ணையை செர்த்து கொள்ளலாம். கறியின் அளவும் குறைத்துக் கொள்ளலாம். விரிவாக எழுதி உள்ளேன் மெதுவாக படித்து புரிந்து கொண்டு செய்து பார்க்கவும். நம்மால் முடிந்தால் தக்காளி ஹல்வா, கேரட் ஹல்வா, பீட்ரூட் ஹல்வா செய்து கொள்ளலாம். இந்த ஈதுபெரு நாளுக்கு டிரை பண்ணி பாருங்கள்.தொட்டுக்கொள்ள எண்ணக் கத்திரிக்காய், தயிர் சட்னி, கேசரி, மிட்டாகான முதலியவை.மிட்டாகானா







Sunday, November 14, 2010

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் - உப்பு கன்டம் கறி (குர்பாணி கறி) - uppu kandam

















எல்லோருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

இன்றி்ரவு அரஃபா நோன்பு வைக்க தவற வேண்டாம்.

இதன் விளக்கத்தை


சகோதரி அஸ்மா பதிவு போட்டு இருக்கிறார்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


இந்த வருடம் ஹஜ் சென்றுள்ள சகோதர சகோதரிகளுக்கு சிரமம் இல்லாமல் கடமையை நிறைவேற்ற ஆண்டவன் கிருபை புரியட்டும்.

இனி நமக்கும் அல்லா சீக்கிரம் ஹஜ் பாக்கியம் கிடைத்திட கிருபை புரிவானக.

குர்பாணி கறி சொந்தங்கள் வீடுகளில் இருந்து வந்து குமியும் , நாமும் சொந்தங்களுக்கு கொடுப்போம்.
அதை எப்படி பதப்படுத்தி வைப்பது உப்புகன்டமாக்கி வைக்கலாம்

இன்னும் ஒன்று வருடா வருடம் ஹஜ் பெருநாள் வரும் போது எல்லா வீடுகளிலும் ஆடு குர்பாணி கொடுப்பார்கள், அப்போது எல்லா வீட்டிலிருந்தும் கறி வந்து குமியும் அந்த காலத்தில் பிரிட்ஜ் கிடையாது நிறைய பேர் வீட்டில், ஆகையால் கூடுமான வரை கொடுப்பவர்களுக்கு எல்லாம் கொடுத்துவிட்டு, மீதியை சமைத்து விட்டு, கொஞ்சம் கறியை உப்பு, மஞ்ச பொடி போட்டு சுருட்டி வைப்பார்கள். அது மறு நாள் சமைக்க பயன்படுத்தி விட்டு மீதியுள்ள கறியை காயப்போட்டு பதப்படுத்தி வைப்பார்கள்.



உப்பு கன்டம் கறி (குர்பாணி கறி)

இதை தட்டி சுடுவதால் தட்டு கறி என்றும், காய போட்டு சுடுவதால் காய போட்ட கறி என்றும் சொல்வார்கள்

இது பெயர் தட்டு கறி, உப்பு கன்டம்,காய போட்ட கறி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். முன்பு காலங்களில் ரங்கூன், பர்மா, மலேஷியா நாடுகலுக்கு பொருள் ஈட்ட செல்லும் போது அங்கு ஹலால் உணவு கிடைக்குமோ இலையோ ஆகையால். நம் நாட்டவர் கறி, இறால், பீஃப் போன்ற வற்றை பதப்படுத்து அல்லது காய வைத்து கொண்டு செல்வார்கள் இது எத்தனை நாள் ஆனாலும் கெடாது.



தேவையான பொருட்கள்

துண்டு கறி - ஒரு கிலோ
உப்பு - இரண்டு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முன்று மேசை கரண்டி
மிளகாய் தூள் - நாலு மேசை கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

செய்முறை

கறி துண்டாக தடிமானாக போடாமல் சிறிது சப்பையாக போடனும் போட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்து அதில் உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வெறவி பத்து நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

பிற்கு சுத்தமான சணல் கயிறை கழுவி,சுத்தமான பெரிய கோணி ஊசியில் ஒவ்வொரு கறியா கோர்த்து ஒரு இன்ச் இடைவெளி விட்டு துணி காய போடும் கொடியில் மாலை போல் தொங்க விட்டு வைக்கவேண்டும்.

இந்த கறியை காய போடும் போது அதை காக்கா தூக்கி கொண்டு போகாமல் இருக்க கூட வே ஒரு கருப்பு துணியையும் வைப்பார்கள்.நல்ல காய்ந்ததும் எடுத்து பயன் படுத்தலாம். முக்கியமாக இதை வெளியூருக்கு எடுத்து வரலாம்.


குறிப்பு:
காய்ந்த கறியை பொரிக்கும் போது  ஒரு பேப்பரில் வைத்து நன்கு தட்ட வேண்டும், பிறகு கொஞ்சமாக‌ எண்னை ஊற்றி பொரித்து எடுக்கவேண்டும்.

தொட்டுக்க ஒன்றும் இல்லாத போது, திடீர் சமையலுக்கு இது மிகவும் கை கொடுக்கும்.வெரும் ரசம் சாத்த்துடன் சாப்பிட நல்ல இருக்கும்.
அதை தட்டி பொரிப்பதால் தட்டி பொரித்த கறி என்று பெயர்.

இதை மற்றொரு முறையில் காஞ்சமிளகாய் பயன் படுத்தியும் செய்வார்கள் அதை பிறகு போடுகிறேன்

தட்டு கறி , உப்புகன்டம் கறி,uppu kandam kari ,sukkaa kari ஹஜ் பெருநாள்

Saturday, November 13, 2010

கைக்கு மருதாணி போட்டு கொள்ளலாம் வாங்க



.
மருதாணி இல்லாத பெருநாளா? ஒரு பண்டிகை விஷேசம் என்றால் முதலில் எல்லா பெண்களுக்கும் மருதாணி இடுவது தான் பிடித்த விஷியம்
வாஙக வித விதமான டிசைன் மெயிலில் வந்த்து. எனக்கு அந்த அளவுக்கு டிசைன் போட தெரியாது, இத ஆனா போட்டு விடுவேன் எப்படிய்யோ கைய நிரப்பி விட்டுடுவேன்.
இத பார்த்து டிசைன் போட்டு கொள்ளுஙக்ள்.
உடல் சூட்டை தணிக்கும் மருதானி, உள்ளங்கையில் வைப்பதால் மூளைக்கும் நல்லது. சூப்பர் சூப்பர் டிசைன்கள் போட ஈசியா சிம்பிளாகவும் இருக்கிறது.















































Monday, November 8, 2010

புரோக்கோலி பாஸ்தா



தேவையானவை

மட்டன் கீமா – 50 கிராம்
டொமேட்டோ பேஸ்ட் – 50 கிராம்
விரும்பிய வடிவில் பாஸ்தா 200 கிராம்
புரோக்கோலி – 100 கிராம்
உப்பு – தேவைக்கு
பூண்டு – 4 பல்
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
எண்ணை + பட்டர் – இரண்டு மேசை கரண்டி
சோயா சாஸ் – ஒரு தேக்கரண்டி

செய்முறை
 முதலில் முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு பாஸ்தாவை சேர்த்து அதில் சிறிது உப்பு, எண்ணை விட்டு வேகவைக்கவும்.
 எண்ணையை காயவைத்து அதில் பூண்டு வெங்காயம் போட்டு வதக்கி தக்காளி பேஸ்ட் சேர்த்து அதில் மிளகாய் தூள், உப்பு தூள் சோயாசாஸ் சேர்த்து நன்கு கிளறவும்,
 சுத்தமாக கழுவிய மட்டன் கீமாவை சேர்த்து நன்கு வேகவிட்டு, வெந்த பாஸ்தாவை வடித்து சேர்த்து பிரட்டி இரக்க்வும்.
 சுவையான புரோக்கோலி மட்டன் கீமா பாஸ்தா ரெடி

Note:




Deit seypavarkaL
மட்டன் கீமாவிற்கு சிக்கனில் (அ) வெஜ் டேபுள்ஸ் சேர்த்து செய்து கொள்ளலாம்.
பட்டர் நெய் சேர்க்காமல் ஒரு தேக்கரண்டி எண்ணையில் தாளித்தால் கூட போதும்.
கீமாவில் செய்வதால் குழந்தைகளுக்கு ஈசியா ஜீரணம் ஆகும்.
கீமாவும், புரொக்கோலியும் ரிச் அயர்ன், கர்பிணி பெண்களுக்கு ஹிமோகுளோபின் கம்மியாக இருந்தால் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
லன்ச் பாக்ஸ்க்கும் ஏற்றது.


Saturday, November 6, 2010

எந்த திருடி எந்த திருடனுன்னு தெரியலையே



எந்த திருடி எந்த திருடனுன்னு தெரியலையே இந்த் அனியாயத்த கேட்க யாரும் இல்லையா?

என் குறிப்ப எங்கு பார்த்தாலும் அப்பட்டாமா அப்படியே காப்பி அடிச்சி வைத்து இருக்காங்களே
இதற்கு முன் சுவையோ சுவைன்னு முன்று பேர் சேர்ந்து பிளாக் ஆரம்பித்து, என் அறுசுவை குறிப்புகள், தமிழ் குடும்ப குறிப்புகள் , பிளாக் குறிப்புகள் அனைத்தையும் காப்பி அடிச்சி போட்டு இருந்தாங்கள்

இப்ப தமிழ் சமையலுன்னு பிலாக் பெயர் , தமிழ் செஃப் ந்னு போட்டு மறுபடி எல்லா குறிப்பையும் எடுத்து ஒன்று விடாம போட்டு வைத்து இருக்க்காங்களே/


அட காப்பி அடிச்ச லூசுகளா சோத்துல உப்பு போட்டு தானே சாப்பிடுரீங்க
எத்தனை தடவை சொல்வது இப்படி போட்டோ முதல் கொண்டு என் குறிப்புகளை அப்படியே எடுத்து போட்டு இருக்கீஙக், அறிவில்ல. நான் பிழையா எழுதியதையும் அப்படியே காப்பி அடிச்சி இருக்கீங்களே.


யாரது இதற்கு முன் பதிவு திருட்டு செய்த அதே கும்பலா?


எல்லோரும் இப்ப நான் கொடுத்துள்ள லிங்க பாருங்கள் யாருன்னு கண்டு பிடிக்க முடியுதா?

தமிழ் சமையல் தழிழ்செஃப் ஆம் இவங்க
மண்ணின் மைந்தன் தூத்துக்குடியில் இருந்து

அன்னு வெண்டைக்காய் குறிப்பு தேட போன இடத்தில் இப்படி தெரியவந்து அன்னு சொல்ல போய் தான் தெரிந்த்து.

இதில் என் குறிப்பு மட்டும் இல்ல, மற்றவர் (தோழி) களுடையதும் இருக்கு,

லூசுங்க திருந்தாத ஜென்மங்க்ள்.

முடிந்த வரை பாதிக்க பட்டவர்கள் அங்கு போய் கும்முங்கள்





இதுல தமிழ் செஃப்னு வேற பேரு வேற பிளாக்க்கு.
நீ உண்மையான தமிழ் செஃப்பா இருந்தா . செய்து உங்கள் சொந்த போட்டோவ போடுங்கள்.


டிஸ்கி:
இனி என் குறிப்புகளில் உள்ள அனைத்து குறிப்புகளில் பெயர் மாற்றம் செய்து என் பிளாக் பெயரையும் மாற்றி போட போகிறேன்.


Thursday, November 4, 2010

பதிவுலக தோழ தோழியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்



உலகில் உள்ள அனைவருக்கும் , வலை உலக தோழ தோழியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்


பட்டாசு கடைக்கார் களுக்கெல்லாம் அமோகம் விற்பனை தான். போன வருட ஸ்டாக் எல்லாம் வெளியாகும் ஹிஹி பார்த்து வாங்குங்க



பட்டாசு சுட்டு சுட்டு போட்ட்டுமா
இடம் பார்த்து வெடிங்கபா பிள்ளைகள் பத்திரம்




எனக்கு கொடுக்காம யாரும் ஸ்வீட்ட சாப்பிட கூடாது.

சீடை, முறுக்கு, ஸ்வீட், ம்ம்ம் வெட்டுங்க அதுக்கு முன்னாடி தீபாவளி லேகியமுன்னு ஒன்னு செய்வாஙகளே அத சாப்பிட்டுங்க.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

Monday, November 1, 2010

பிஸ்தா கீர்(பீர்னி) - पिस्ता खीर - pista kheer





கீர் பல வகையாக தயாரிக்கலாம். இது சிம்பிளாக அரைத்து செய்யும் கீர் இதில் நெய் கூட சேர்க்கவில்லை. டயபட்டீஸ் உள்ளவர்கள் கூட இதை லோ பேட் பாலில் செய்து சுகர் பிரி சேர்த்து செய்து சாப்பிடலாம். இது வாய் புண் மற்றும் வயிற்று புண் உள்ளவர்களுக்கு வெரும் பஞ்சி தோசைக்கு வைத்து கொடுக்க்லாம், மெயினாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதை பிஸ்தா சேர்க்காமல் வெரும் பாலில் ரவை சேர்த்தும் செய்யலாம்
.







தேவையானவை

பிஸ்தா – 25 கிராம்
அரி்ி - 1 மேசை க்்்்ி
பிஸ்தா – பொடியாக அரிந்த்து (ஒரு மேசை கரண்டி)
பால் - அரை லிட்டர்
ரவை – ஒரு மேசை கரண்டி
ஏலக்காய் – 2
பிஸ்தா எஸன்ஸ் – ஒரு துளி
சர்க்கரை – 50 கிராம்
கண்டென்ஸ்ட் மில்க் – சிறிய டின்

செய்முறை
அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும், பிஸ்தாவை வெண்ணீரில் 5 நிமிடம் ஊறவைத்து தோலை எடுக்கவும்.
பிஸ்தாவையும் , அரிசியையும் அரைத்து எடுக்கவும்।

பாலில் ஏலக்காய் சேர்த்து கொதிக்கவைத்து அரைத்த பேஸ்டை சேர்க்கவும்.
தீயின் தனலை குறைத்து ரவை தூவி கட்டி இல்லாமல் கிளறவும்.

கொதித்து திக்காகும் போது ஒரு துளி பிஸ்தா எஸன்ஸ் ஊற்றி பொடியாக அரிந்த பிஸ்தாவை தூவி இரக்கவும்.



தோசை ,குட்டி பன்னுடன் சாப்பிட அருமையாக இருக்கும்

முஸ்லீம் திருமணங்களில் மாப்பிள்ளை தஸ்தரில் வைக்கும் சுவையான பிர்ணி இது , இதை வெள்ளை பீர்னி  ,மஞ்சள் பீர்னி ன இருவகைகளாக தயாரிப்போம். வெள்ளை பீர்ணி என்பது ரவை முந்திரி சேர்த்து செய்வது அல்லது அரிசி , முந்திரி, பாதாம் அரைத்து செய்வது ஒரு வகை, மஞ்சள் பீர்னி என்பது ரவை பாதம் சாப்ரான் சேர்த்து அரைத்து செய்வது அல்லது அரிசி பாதாம் , சாஃப்ரான் சேர்த்து அரைத்து செய்வது. கொஞ்சம் கலர் பொடியும் சேர்த்து செய்யலாம், இது மற்றொரு வகை.



இதை பன், நாண், தோசை, இடியாப்பம் ஆகியவைக்கு பக்க உணவாக வைத்து சாப்பிடலாம்.

This recipe goes to umm mymoon's celebrate sweets kheer event