Wednesday, January 12, 2011

சமையலை பற்றி தொடர்பதிவு



உளுந்து வடை:




சமையல் தொடர்பதிவுக்கு என்னை அழைத்தது மகி, விக்கி, என் வீட்டு கிச்சன் பிரியா, ஆசியா.
எல்லோரும் எழுதி இருப்பாங்கன்னு நினைக்கிறேன், நான் தான் கடைசி ரயில் என்று நினைக்கிறேன்.


1. இயற்கை உணவுகளை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதுண்டா? இயற்கை உணவுப் பழக்கம் எந்த விதத்தில் உங்களுக்கு பயன் தருகிறது?

இயற்கை உணவா இப்ப இருக்கிற அவசர உலகில் நாமே விளைவித்து சாப்பிடுவது சிரம்ம் தான், முன்பு அடிக்கடி வெந்தயம் சின்ன டப்பாவில் புதைத்து வெந்தயக்கீரை
விளைவித்து சாப்பிட்டேன்.
ஆனால் இப்ப சுண்டல் வகைகள், வேர்கடலை இப்படி அவித்து அல்லது முளைகட்டி, சாலட் போல் அதில் காய்கறி வகைகளை சேர்த்து காலை உணவிற்கு வாரம் இருமுறை சாப்பிடுகிறேன்.
அதே போல் பழங்கள் வாங்கினாலும் ஸ்வீட் அண்ட் சோர் சாலட் செய்து சாப்பிடுவேன்.
சில நேரம் அவல் பால் விட்டு சாப்பிடுவது.



2.அன்றாடம் சரியான நேரத்தில் சாப்பிடுவீர்களா? அல்லது பசிக்கும் நேரத்தில் உண்பீர்களா?

மதியம் மட்டும் தான் தினம் சரியான நேரத்தில் சாப்பிடுவது
காலையில் பையனுக்கு காலை உணவு, ஹஸுக்கு காலை உணவு + மதிய உணவு எல்லாம் லஞ்ச் பாக்ஸ் ரெடி பண்ணுவதிலேயே நேரம் போவதால் எனக்கு ஆர அமர உட்கார்ந்து சாப்பிட நேரம் இல்லை. அப்ப் அப்ப குருவிகள் போல கொரித்து கொள்வேன்.

மதியம் யாரையும் சட்ட பண்ணமாட்டேன். ஆர அமர போன் வந்தால் கூட எடுக்க மாட்டேன், ஏன்னு இங்க போய் பாருங்கள். ஒழுங்காக சாப்பிடுவேன். யாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட முடியாது, ஓவ்வொருவருக்கும் ஓவ்வொரு நேரம்.

இரவு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம். அது ரொம்ப பிடிக்கும். தோசை ரொட்டியாக இருந்தால் அடுப்பில் இருந்து சுட சுட எடுத்து வாயில் கொடுக்கனும் ஆகையால் நான் கடைசியாக தான் சாப்பிடுவது.

வெள்ளி மட்டும், தான் விடுமுறை அன்று முன்று வேளையும் ஒன்றாக சாப்பிடுவோம்.


3.வலைப் பதிவில் சமையல் சம்பந்தமாக எழுதுவதற்கு யார் உங்களுக்கு தூண்டுகோலாக இருந்தார்கள்?

பதிவுலகம் பற்றியே ஒன்றும் தெரியாது. எப்படி எழுதுவதுமுன்னு தெரியாது, முதல் முதல் அறுசுவையில் நடந்த சின்ன பிரச்சனையால் என் மற்ற ஆக்கஙக்ளை(சமையல் தவிர) எழுத முடியாமல் போச்சு, அப்போது தான் இலா அறுசுவை தோழி இதயம் பேசு கிறது என்ற வலையில் எழுதும் படி சொன்னார், ஆனால் ஓப்பன் செய்தால் எந்த மொழியும் எனக்கு ஓப்ப்பன் ஆகல அரபிக் தவிர, முயற்சி செய்து பார்த்துட்டு விட்டு விட்டேன். பிறகு தொடர்ந்து முயன்று இரண்டு குறிப்பு போட்டேன் அதன் பிறகு எதுவும் சரியாக பிடி படல.விட்டுவிட்டேன்

அப்ப தான் அறுசுவை, மற்றும் தமிழ் குடும்ப தோழியான பாயிஜா அவங்களுடைய கை வேலைகளை பிலாக்காக தொகுத்து போட்டு மெயில் அனுப்பினார்கள். உடனே நானும் முயற்சி செய்து , ஏன் என் சொந்த ஆக்கங்களை இது போல் போட்டு வைக்க கூடாது. பிற்காலத்தில் ( என் தங்கைகளில் மகள்களுக்கு உதவும்) என்ற நோக்குடன் ஆரம்பித்தேன். ரொம்ப தடுமாற்றம், கலர் மாற்றுவது எப்படி, டிசைன் மாற்று வது எப்படி எல்லாமே பிலாக்கர் மூலமாக ரொம்ப கழ்டப்பட்டு முயற்சி செய்தேன்.

சுஹைனா ஹஜ் போய் வந்து அந்த விளக்கங்களை போட ஆரம்பித்தாங்க,
நான் சமையல் குறிப்புகள் போட ஆரம்பித்தேன், பாயிஜா எல்லா கை வேலைகளும் போட்டாங்க, அப்ப தான் மேனகா பிலாக் தெரியவந்தது.


சுஹைனாவே பிலாக்கர் டிப்ஸ்கள் நிறைய போட்ட்தால் அதை பார்த்து சிலது கற்று கொண்டேன். இருந்தாலும் எடிட் ஹெ ச் டி எம் எல் போய் டிசைன் மாற்றினால் போட்ட பதிவு போய் விடுமோன்னு பயந்து சுஹைனாவிடம் சொல்லி மாற்றினேன். டவுசர் பாண்டி, சூரியா கண்ணன், வேலன், ஜெய்லானி இடுகைகள் மூலம் டிசைன் மாற்ற கற்று கொண்டேன்



4. புதியதாக ஏதாவது உணவுவகை முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா? அது சரியாக வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

ஆம், புதுசு புதுசா நிறைய முயற்சி செய்து சூப்பராகவும் வந்த்து,
சமீபத்தில் முயற்சி செய்த்தில். அடிக்கடி ஆச்சி செட்டி நாடு ஹோட்டல் போனால் அங்கு செட்டிநாடு ஸ்பெஷல் சிக்கன் ரொம்ப நல்ல இருக்குமானால் ஓவ்வொரு முறை நானாக செய்து பார்த்த்தில் கொஞ்சம் சுவை வித்தியாசப்படும். பெருநாள் மறுநாள் வெளிய போக ( சில மசாலா வகைகள் வாங்கி வந்து) செய்து பார்த்தேன் எல்லோரும் ஹோட்டலில் சாப்பிடுவதை விட நல்ல இருக்கு வீடு முழுவதும் மணம் என்றார்கள்,. அடுத்து எள் வேர்கடலை துவையல் . குழிபணியாரம் இது வரை 10 வகை செய்து பார்த்தாச்சு எல்லாம் சூப்பர்,. இன்னும் நிறைய ஐடியாக்கள் இருக்கு.
இது வரை எந்த பொருளையும் வேஸ்ட் செய்த்து கிடையாது.

5. உங்களது அன்றாட சமையலில் நீங்கள் கட்டாயம் தவிர்க்கும் சமையல் சம்பந்தமான பொருட்கள் ஏதாவது மூன்று?

மஷ்ரூம், நண்டு , அஜினமோட்டோ தவிர எல்லாம் பயன் படுத்துவேன்.

6. தினப்படி சமையலில் நீங்கள் அடிக்கடி சேர்த்துக்கொள்ளும் சமையல் பொருட்கள் சில?

இதற்கு பெரிய பட்டியலே இருக்கு. எண்ணை வெங்காயம் , தக்காளி, கொத்துமல்லி , புதினா, கருவேப்பிலை, பிரெட், மீன், கோழி, மட்டன், முட்டை, எல்லா அஞ்சறை பொட்டி சாமானும் , சொன்னா ஒரு பக்கம் நிறைந்து விடும்.



7. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உண்டாகிறது?

எல்லாம் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும் ரொம்ப மகிழ்சியாக இருக்கும்/ ஒன்றாக சாப்பிடுவதால் ஒரே நேரத்தில் எல்லாம் வேலையும் முடிந்துவிடும், மீதியாதை தவிர்க்கலாம், பகிர்ந்து சாப்பிடலாம்.
இன்னும் ஒன்று சின்னதில் இருந்து அம்மா விட்டிலும் சரி, மாமனார் வீட்டிலும் சரி எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கூட்டாக சாப்பிட்டு தான் பழக்கம், இப்ப ஊருக்கு போனாலும் அப்படி தான் சாப்பிடுவோம். அது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.


8. உங்களுக்குப் பிடித்த உணவகத்தில் நீங்கள் விரும்பாத உணவு பரிமாறப்பட்டால் என்ன செய்வீர்கள்?

இது வரை பிடித்த உணவு தான் வாங்கி சாப்பிட்டு இருக்கிறோம்.அப்ப்டி கெட்டு போய் இருந்தாலோ, நல்ல் இல்லை என்றாலோ, நேருக்கு நேர் கொண்டு வந்து வைத்தவரிடம் சொல்லி கொண்டு போய் விட்டு வேற கொண்டு வர சொல்வேன். யாரையும் சாப்பிட வேண்டாம். என்று பட்டுன்னு சொல்லிடுவேன்.
அதுவே ரொம்ப அருமையாக இருந்தால் வாழ்த்த தவற மாட்டேன்.

நான் இந்த தொடரை எழுத அழைக்க நினைப்பது. இலா, ஸாதிகா அக்கா, மனோ அக்கா , அதிரா பூஸார் வந்துதான் ஆகனும்.






குறிஞ்சி யில் pongal feast event இவை இரண்டையும் அனுப்புகிறேன்.

///பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

நல்ல கரும்பு சாப்பிட்டு பல்லை கிளீன் பண்ணிடனும் ஒகேவா///

29 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. பொங்கல் வாழ்த்து கூறியதற்கு நன்றி.

Anonymous said...

அருமையா பதில் கொடுத்து இருக்கீங்க..

Anonymous said...

ஏன் மஷ்ரூம் நண்டு சாப்பிட மாட்டிங்க?

Asiya Omar said...

நல்ல அருமையாக உங்கள் பதிலை சொல்லி இருக்கீங்க.ஜலீலா.

சாந்தி மாரியப்பன் said...

எல்லாமே நல்லாருக்கு.. அதுவும் 7,2 ரொம்ப ரொம்ப நல்லாருக்கு :-)))

'பரிவை' சே.குமார் said...

நல்ல பதில்கள்.
தைத் திருநாள் வாழ்த்துக்கள் அக்கா.

Kurinji said...

Thanks for participate with my event....

Pongal Feast Event

Kurinji kathambam

குறிஞ்சி குடில்

pudugaithendral said...

இப்படியும் ஒரு தொடர்பதிவா?

சூப்பர் போங்க

Menaga Sathia said...

உங்கள் சமையலைப் பற்றி அழகா சொல்லிருக்கிங்க அக்கா... விருதுக்கு மிக்க நன்றி அக்கா!!!

தூயவனின் அடிமை said...

நல்ல பகிர்வு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

பதில்கள் எல்லாம் சூப்பருங்க.

எம் அப்துல் காதர் said...

// மஷ்ரூம், நண்டு, அஜினமோட்டோ தவிர எல்லாம் பயன் படுத்துவேன்.//

ஏன் அப்படி ??

கேள்விக்கு பதில்கள் அருமை ஜலீலாக்கா!!

Chitra said...

அக்கா..... கலக்கல் பதில்கள்...

Unknown said...

ungalai patri arindhadhil,mikka magizhchi....following u

R.Gopi said...

ஹா..ஹா...ஹா...

அடடா... இப்போ, இந்த விஷயம் கூட தொடர்பதிவா வர ஆரம்பிச்சுடுச்சா?

நான் தான் கடைசி ரயில் என்று நினைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறீர்கள்... ஆக்சுவலா, அது, நீங்கள் தான் கடைசியாக ரயிலில் ஏறி இருக்கிறீர்கள் என்றே பொருள்...

எம்புட்டு விஷயங்கள சொல்லி இருக்கீக... நல்லா இருந்தது...

வலைத்தோழமைகள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

R.Gopi said...

நண்டு மட்டுமாவது சாப்பிடாம விட்டு வச்சு இருக்கீங்களே!!!

சரி அது மட்டும் என்ன விதிவிலக்கு?

enrenrum16 said...

உங்க பதில்களனைத்தும் உங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள உதவுகின்றன. நல்ல பதில்கள் அக்கா.

athira said...

ஜலீலாக்கா.... சூப்பர் பதிவுதான் பின்னி பெடல் எடுத்திட்டீங்க பதில்களில்.

நண்டு இஸ்லாமியர்கள் சாப்பிடமாட்டார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அப்பாவி மஷ்ரூமோடு என்ன கோபம் உங்களுக்கு? அது சிலருக்கு அலர்ஜி அதனாலோ?.

விட்டேனா பார் என பூஸாரை அழைத்திருக்கிறீங்க, ஓக்கே இதனைத் தொடர்கிறேன்.

ஆனால் எனக்கு மிகப்பெரிய சந்தோசம்....
///நான் இந்த தொடரை எழுத அழைக்க நினைப்பது. இலா, ஸாதிகா அக்கா, மனோ அக்கா , அதிரா பூஸார் வந்துதான் ஆகனும்.
//// இல்ஸ்ஸை சூப்பரா மாட்டி விட்டுட்டீங்க கிக்..கிக்..கிக்...

ஊசிக்குறிப்பு:
இல்ஸை ெழுதியபின்னரேதான் நான் எழுதுவேன், இல்லையெனில் என் பொன்னான பதில்களை அவ கொப்பி அடிச்சிடுவா.... ஆ.... இந்த விஷயத்தில மட்டும் நான் ரொம்ப ஷார்ப்பாக்கும்.. மீ... எஸ்ஸ்ஸ்.

Jaleela Kamal said...

1. மிக்க முதல் கருத்துக்கு மிக்க நன்றி வெங்கட் ராஜ்

2. வருகைக்கு மிக்க நன்றி மஹா விஜெய்

3. மஷ்ரூம் எனக்கு பிடிக்காது

என் பெரிய பையனுக்கு மட்டும் தான் பிடிக்கும்,. அவனுக்காக மட்டும் செய்வேன், இப்ப அவன் ஊரில் இருக்கிறான், வாங்குவதே இல்லை

ஆனால் மஷ்ர்ருமில் அதிக சத்துகள் இருக்கு.


4. மிக்க நன்றி ஆசியா

5. அமைதிசாரல் 2, 7 ரொம்ப நல்லா இருக்கா ரசித்து எழுதினேன்

வருகைக்கு மிக்க ந்ன்றி

6. சே. குமார் உங்கலுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
.

Jaleela Kamal said...

7. நன்றி குறிஞ்சி

8. ஆமாம் புதுகை தென்றல் ஆஹா உங்களையும் அழைத்து இருககலாமே, எல்ல்லோரும் போட்டு விட்டீர்கள் என்று நினைத்தேன்

பாராட்டுக்கு நன்றிங்க

9.மிக்க நன்றி மேனகா ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கிங்க் ரொம்ப சந்தோஷம்

10. நன்றி இளம் தூயவன்

11. மிக்க நன்றி புவனேஷ்வரி

Jaleela Kamal said...

எம் அப்துல் காதர், மஷ்ரூம் எனக்கு சின்னதில் இருந்தே பிடிக்காது, என் பெரிய பையனுக்கும் மட்டும் தான் பிடிக்கும். இப்ப அவன் ஊரில் இங்கிருந்தால் அவனுக்காக மட்டும் வாங்கி சமைப்பேன்


நண்டு எங்க குடும்பத்தில் யாரும் சாப்பிட மாட்டோம்.


அஜினமோட்டோ உடல் நலத்துக்கு கேடு என்று முன்பு கேள்வி பட்டதில் இருந்து வாங்குவதை நிறுத்தி விட்டேன்,
சைனீஸ் ச்மையலில் சுவை ய்யூட்டுவது அஜீனோ மோட்டோ தான்

ஒக்கே
வா

Jaleela Kamal said...

13. மிக்க நன்றி கீதா 6

14. உஙக்ள் பாராட்டுக்கு மிக்க நன்றி சித்ரா

15 . சவிதா வாஙக் உஙக்ள் தொடர்வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

R.Gopi said...
ஹா..ஹா...ஹா...

அடடா... இப்போ, இந்த விஷயம் கூட தொடர்பதிவா வர ஆரம்பிச்சுடுச்சா?

//ஆமாம் பாசக்கார டதோழிகள் கூப்பிட்டு விட்டார்கள் அதான்//

நான் தான் கடைசி ரயில் என்று நினைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறீர்கள்... ஆக்சுவலா, அது, நீங்கள் தான் கடைசியாக ரயிலில் ஏறி இருக்கிறீர்கள் என்றே பொருள்...

// ஆமாம் ஒரு தொடர் பதிவும், சரி , பின்னூட்டஙக்ளும் கடைசி ரயில் பிடித்து தான் எழுதுவேன். நம்ம நேரம் அப்படி கோபி//


எம்புட்டு விஷயங்கள சொல்லி இருக்கீக... நல்லா இருந்தது...

வலைத்தோழமைகள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய பொங்கல்

சேம் டு யு கோபி

Jaleela Kamal said...

//enrenrum16 said...
உங்க பதில்களனைத்தும் உங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள உதவுகின்றன. நல்ல பதில்கள் அக்kaa//

தொடர் வருகைக்கு மிக்க ந்ன்றீ என்றென்றும் 16

Mahi said...

ஜலீலாக்கா,பதில்கள் யதார்த்தமா,அழகா சொல்லிருக்கீங்க! தினமும் உங்க வாழ்க்கை எப்படி பிஸியாப் போகுது என்று புரிகிறது!

BTW,நான் அழைத்தது இந்தத் தொடர்பதிவு இல்லீங்கோ..அது வேறு 7 கேள்விகள்!உங்க நேர நெருக்கடியில் இதுபோன்ற பதிவுகள் கஷ்டம்தான்,புரியுது!

அந்நியன் 2 said...

நல்ல பகிர்வு.

எம்புட்டு விஷயங்கள சொல்லி இருக்கீக... நல்லா இருந்தது...

உங்க பதில்களனைத்தும் உங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள உதவுகின்றன.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்ல பகிர்வுங்க.. எனக்கும் அவலில், பால் விட்டு சாப்பிட பிடிக்கும்.. :-)

பொங்கல் வாழ்த்துக்கள்..!

Vikis Kitchen said...

முதல் கேள்விக்கான பதில் எனக்கு மிகவும் தேவை. சாலட் , காலை உணவுக்கு மிகவும் நல்லது. ஞாபகபடுதியமைக்கு நன்றி:) அனைத்து பதில்களும் அருமை. பொங்கல் ஸ்பெஷல் சாப்பாடு பார்த்ததும் பசிக்குது. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா.

ஸாதிகா said...

pakirvu arumai.ennaiyum kuuppittu irukkiingka.wanRi.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா