Sunday, January 23, 2011

முட்டை கோஸ் முட்டை ஃப்ரைட் ரைஸ்

சைவ பிரியர்கள் முட்டை, சிக்கன் சேர்க்காமல் மற்ற பொருட்களை சேர்த்து செய்யலாம்./
இது என் ட்ரை கலர் பெல் பெப்பர் ஃப்ரைட் ரைஸ்


முட்டை கோஸ் – 150 கிராம்
முட்டை – 3
பச்சை,ரெட்,யெல்லோ கேப்சிகம் – அரை கப்
பாசுமதி அரிசி – 400 கிராம்
கேரட் – 50 கிராம்
பீஸ்,பீன்ஸ் – 50 கிராம்
பூண்டு 5 பல்
சர்க்கரை – அரை தேக்கரண்டி
பச்சமிளகாய் – 3
பட்டர் + எண்ணை – தேவைக்கு
வெங்காயம் – 1
வெங்காய தாள் – 3 ஸ்டிக்
மேகி சிக்கன் கியுப்
– இரண்டு சிறிய பாக்கெட்(ஒரு பாக்கெட்டில் இரண்டு இருக்கும்)
வெள்ளை மிளகு தூள் – இரண்டு தேக்கரண்டி
சோயா சாஸ் – இரண்டு மேசை கரண்டி
சில்லி சாஸ் – ஒரு தேக்க்ரண்டி
கருப்பு மிளகு தூள் – அரை தேக்கரண்டி

எலும்பில்லாத சிக்கன் துண்டு – 5 பொடியாக்வெட்டி கொள்ளவும்
(சிக்கனுக்கு பதில் இறால், பீஃப், மட்டன் துண்டுகளும் சேர்க்கலாம்.)




செய்முறை
முட்டையுடன் கருப்பு மிளகு தூள் ,சிறிது உப்பு தூள் போட்டு நன்கு கலக்கிவைக்கவும்.
அடுத்து முட்டையை சிறிது பட்டர் + எண்ணை போட்டு பொரித்து எடுத்து கொத்து பரோட்டா போல் கொத்தி கொள்ளவும்
அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும்.




முட்டைகோஸ், கேரட் நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.
பீன்ஸ், கேப்சிகம் பொடியாக அரிந்து வைக்கவும்.வெங்காய தாளையும் பொடியாக அரிந்து வைக்கவும்.

( இது லாங்க் பொரோசிஜர் என்றாலும் எல்லாம் ரெடி பண்ணி கொண்டால்  செய்வது மிகச்சுலபம்)

ஹோட்டல் டேஸ்ட் கிடைக்கும்.
முதலில் சாதம் ரெடி பண்ணிக்கனும்.
ரைஸ் குக்கரில் சிறிது மொத்தமே ஒரு தேக்கரண்டி (பட்டர் + எண்ணை ) ஊற்றவும். அரை வெங்காயம், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி, அத்துடன் மேகி கியுப் ஒன்று , சோயா சாஸ் ஒரு தேக்கரண்டி ஊற்றி அரிசி சேர்த்து வதக்கவும். வதக்கி ஒரு கப்புக்கு ஒன்னே கால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.
சிறிதளவு உப்பு சேர்த்தால் போதும்.
உதிரியாக வரும். 



அடுத்து ஒரு வாயகன்ற பேனில் எண்ணை + பட்டர் சேர்த்து பச்சமிளகாய். பூண்டு , சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
அடுத்து வெங்காயம், முட்டை கோஸ்ம் , கேரட் சேர்த்து வதக்கவும், அடுத்து வெங்காய தாள், கேப்சிகம், பீன்ஸ், பீஸ் சேர்த்து வதக்கவும்.
மேகி கியுப், சிறிது உப்பு , வெள்ளை மிளகு தூள், சில்லி சாஸ் அனைத்தும் சேர்த்து வதக்கவும்.

முன்று கலவையும் ரெடி காய்கள்கறிகள், முட்டை, சாதம்,
எல்லாவற்றையும் ரைஸ் குக்கர் சாத்த்தில் சேர்த்து சாதம் உடையமல் நன்கு கிளறவும்.




( இதில் உப்பு, எண்ணை , பட்டர் மட்டும் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்)
சுவையான முட்டை கோஸ் , முட்டை ஃபிரைட் ரைஸ் ரெடி.சில்லி சிக்கனுடன் சாப்பிட அருமையாக இருக்கும். 
ஹோட்டல் என்றாலே எல்லொரும் முதலில் ஆர்டர் செய்வது ஃப்ரைட்  ரைஸ் தான். நான் என் முறையில் செய்ய ஆரம்பித்ததில் இருந்து இது வரை அவ்வளவாக ஹோட்டலில் ஃபிரைட் ரைஸ்சாப்பிடுவது கிடையாது.

முட்டை கோஸ் யாரும் சாப்பிட மாட்டார்கள் , இது போல் ஃபிரைட் ரைஸுடன் சேர்த்து என்றால் சேர்த்ததே தெரியாது.
( இதுக்கு தொட்டுகொள்ள என் சாய்ஸ் பெப்பர் சிக்கன் தான்) பிள்ளைகளுக்கு பிடித்தது சில்லி சிக்கன்.


டிஸ்கி :ரங்ஸ் கிட்ட ஏதாவது முன்று காய் வாங்கி வாங்கன்னு சொன்னா முதலில் என் மண்டை சைஸில் ஒரு பெரிய முட்டை கோஸ் தான் வரும் என்னவோ அந்த மாதம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடுவது போல் ஆனால் யாருக்கும் பிடிக்காது, அதான் இதை ஃபிரைட் ரைஸ் , நூடுல்ஸ்,கொத்துபரோட்டா, முர்தபா, சோமாஸ், சமோசா போன்றவைகளில் வெங்காயத்துக்கு ஈக்வலா ஒரு கப் அளவு சேர்த்து ஹைட் பண்ணி தான் உள்ள தள்ளுவது முட்டைகோஸ் சேர்த்தமாதிரியே தெரியாது.
முட்டை கோஸ்கேன்சர் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது



சிக்கன் ஃப்ரைட் ரைஸ் அறுசுவையில்




ஃப்ரான் ஃப்ரைட் ரைஸ் தமிழ் குடும்பத்தில்/


23 கருத்துகள்:

R.Gopi said...

முட்டை கோஸுக்கு துணையாக 3 முட்டையை போட்டு ஃப்ரைட் ரைஸ் தயார் செய்த உங்கள் ரெசிப்பி நிஜமாகவே அசத்தல் ரகம் தான் ஜலீலா அவர்களே!!!

Chitra said...

சூப்பராக இருக்குதே.

athira said...

ஜலீலாக்கா, இன்று என்ன சமைக்கலாம் என வந்தேன், படம் போட்டே காட்டிவிட்டீங்கள்... செய்திட்டால் போச்சு. ஃப்ரைட் ரைஸ் எங்க வீட்டிலும் விருப்பம். அசத்தலாக இருக்க்கு.

athira said...

அந்த முட்டைகோஸ்:)

///டிஸ்கி :ரங்ஸ் கிட்ட ஏதாவது முன்று காய் வாங்கி வாங்கன்னு சொன்னா முதலில் என் மண்டை சைஸில் ஒரு பெரிய முட்டை கோஸ் தான் வரும் என்னவோ அந்த மாதம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடுவது போல் ஆனால் யாருக்கும் பிடிக்காது,/// கரெக்ட்டாச் சொல்லிட்டீங்க.... சிரித்திட்டேன்... என்னாலும் அந்தப்பெரிய முட்டைக்கோஸை(கோவா) கண்டால் விட்டுவிட்டுவரமனம் வராது, அதே நேரம் சமைக்கவும் மனமில்லை, ஃபிரிச்சையாவது அலங்கரிக்கட்டுமே என விட்டுவிடுவேன்.

கஸ்டப்பட்டு சமைத்து முடித்தால், உடனே புதிசு வாங்கிவிடுவேன்... பழக்கத்தை மாத்த முடியேல்லை:))

Thirumalai Kandasami said...

ஹிந்தி - அறிந்தும் அறியாமலும்.

http://enathupayanangal.blogspot.com

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா அக்கா...,நலமா?
ஃப்ரைட் ரைஸ் ரொம்ப அஸத்தலாக இருக்கு.சில்லி சாஸ்,மேகி சிக்கன் க்யூப் போட்டு நான் இதுவரை செய்தது இல்லை.இனி செய்து பார்த்துட வேண்டியதுதான்.
வாழ்த்துக்கள் ஜலீலா அக்கா...

அன்புடன்,
அப்சரா.

athira said...

ஜலீலாக்கா செய்து சாப்பிட்டும் விட்டோம், சூப்பராக வந்துது. சோயா சோஸ் சேர்த்தது புதுவிதக் கலரைக் கொடுத்தது.

லீக்ஸ், கரட், மஸ்ரூம் மட்டும் சேர்த்தேன்... எல்லாம் இருக்கவில்லை வீட்டில். நன்றாகவே வந்துது. நன்றி நல்ல குறிப்புக்கு.

Menaga Sathia said...

விளக்கபடங்களுடன் கலர்புல்லா இருக்கு அக்கா....

enrenrum16 said...

//முதலில் என் மண்டை சைஸில் ஒரு பெரிய முட்டை கோஸ் தான் வரும் என்னவோ அந்த மாதம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடுவது போல் /// இங்கயும் அதே கதை தான்க்கா... அத இத செஞ்சு கோஸை காலி பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும்... இந்த வாரம் கூட ஒரேயொரு பீட்ரூடும் இந்த கோஸும் அப்படியே உக்காந்துட்டிருக்கு... மற்றதும் வாங்கி ஃப்ரைட் ரைஸ் பண்ணிட வேண்டியதுதான். ;)

Angel said...

cabbage is very good for health.
(naan cook seyyaamal appadiye sappiduven.)
.thanks for sharing this recipe.

தெய்வசுகந்தி said...

super fried rice!!

Reva said...

Akka, I am honoured to have u in my blog. Unga recipes arusuvaiyil padichu seithum irukkein...athanaiyum arumai, aanaa ingae ungala santhippeinu ninaikkala... romba santhoshamaa irukku... unga blog kalakkalaa irukku...
Reva

அந்நியன் 2 said...

ஃப்ரைட் ரைஸ் ரொம்ப அஸத்தலாக இருக்கு,விளக்கபடங்களுடன் கலர்புல்லா இருக்கு அக்கா...

நன்றி நல்ல குறிப்புக்கு

ஆமினா said...

நல்ல குறிப்பு அக்கா

வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

சூப்பர்க்கா. மச்சான் இதுபோல் செய்வார்கள்.. அசத்துங்க..

சாருஸ்ரீராஜ் said...

சூப்பரா வந்து இருக்கு டிரை பண்ணிடுவோம்

சாருஸ்ரீராஜ் said...

சூப்பரா வந்து இருக்கு டிரை பண்ணிடுவோம்

apsara-illam said...

நான் செய்யும் ஃப்ரட் ரைஸ்லேயே இன்று உங்கள் மெத்தடில் சிக்கன் ஸ்டாக் பொடித்து போட்டு செய்தேன்.நன்றாக இருந்தது அக்கா.
அப்புறம் சொல்ல மறந்துட்டேன்...உங்களுடைய ஃபோட்டோவின் புதுவித முயற்ச்சிகள் நல்லா இருக்கு.

அன்புடன்,
அப்சரா.

Vikis Kitchen said...

முட்டைகோசை தீர்க்க வழி சொன்னதுக்கு நன்றி:) இங்கும் அதே கதை தான். fried ரைஸ் சூப்பர். நானும் செய்து பார்க்க போறேன்.

Mahi said...

//ரங்ஸ் கிட்ட ஏதாவது முன்று காய் வாங்கி வாங்கன்னு சொன்னா முதலில் என் மண்டை சைஸில் ஒரு பெரிய முட்டை கோஸ் தான் வரும் // ஹாஹ்ஹா! ஜலீலாக்கா,வர வர உங்க காமெடி சூப்பரா இருக்குது! :):)

எனக்கு முட்டைகோஸ் பிடிக்கும்..ஒரு முறை வெள்ளை,ஒரு முறை வயலட் இப்படி மாறி மாறி வாங்குவேன். பொரியல்,கடலைப்பருப்பு கூட்டு,உப்மா,நூடுல்ஸ்,சட்னி இப்படி சலிக்காம ஏதாவது ஒண்ணு செய்வேன்.என்னவருக்கு ப்ளெய்ன் முட்டைகோஸ் பொரியல் ரொம்ப பிடிக்கும்,டெய்லி செய்தாலும் சாப்பிடுவார். :)

ப்ரைட்ரைஸ் நல்லா கலர்புல்லா இருக்கு!

Unknown said...

எல்லாமே எனக்குதான்
எல்லாத்தயும் பார்சல் பண்ணிடுங்க
இந்த வாரம் இந்த டிஷ் தான்

குறையொன்றுமில்லை. said...

ஜலீலா நானும் ஏற்கனவே உங்கபக்கம் வந்திருக்கேன். நான் ப்யூர்வெஜிடேரியன்.அதனால கருத்து சொல்ல முடியலை.அதனால எந்தபின்னூட்டமும் கொடுக்காமலே போவேன். இப்பவும் அதே. நான் வந்தேன்னு உங்களுக்கு தெரியவேண்டாமா?அதுக்குத்தான் இது.

ஸாதிகா said...

அருமையா இருக்கு ஜலி.அவசியம் செய்து பார்த்துடுறேன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா