Sunday, January 30, 2011

வெந்தயம், வெந்தயக்கீரை மீன் குழம்பு - methi seed, methi leaves fish kuzampu



உயிரை பனயம் வைத்து சொந்த குடும்பத்தை பாராமல் கடலுக்கடியில்தினம் செத்து பிழைக்கும் மீனவர்களுக்காக
 please sign the petition to save tnfisherman 



தேவையானவை



வஞ்சிரமீன்
அரை கிலோ
வெங்காயம்
200 கிராம்
தக்காளி, தக்காளி பேஸ்ட்
350 கிராம், 50கிராம்
பச்சமிளகாய்
2
மிளகாய் தூள்
2 தேக்கரண்டி
தனியாத்தூள்
2 மேசைகரண்டி
மஞ்சள் தூள், சீரகத்தூள்
தலா அரை தேக்கரண்டி
உப்பு
ருசிக்கு தேவையான அளவு
வெந்தயம்
ஒரு தேக்கரண்டி
வெந்தயக்கீரை
சிறிய கட்டு 1

புளி
ஒன்னறை சிறிய லெமன் சைஸ்

தாளிக்க

நல்லெண்ணை
3 மேசை கரண்டி
கடுகு,சீரகம்,சோம்பு,மிளகு
ஒரு மேசைகரண்டி
பூண்டு
6 பெரிய பல்
கருவேப்பிலை
ஒரு கைப்பிடி

தேங்காய் பவுடர் (அ) தேங்காய் பத்தை
4 ஸ்பூன் (அ) 4 பத்தை

கொத்துமல்லி தழை
அரை கைப்பிடி





செய்முறை

மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக போடவும்.
வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.
தக்காளியை மையாக அரைத்து வைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு,சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பூண்டை தட்டி போட்டு வதக்கி,கருவேப்பிலை சேர்த்து,2 நிமிடம் வதக்கவும்.
 வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் எல்லா சமசாலா தூள்வகைகள் ஊறிய வெந்தயம், வெந்தயக்கீரை , தக்காளி பேஸ்ட் போட்டு நன்கு 2 நிமிடம் வதக்கவும்.
அரைத்த தக்காளியை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.
 5 நிமிடம் கொதிக்கவிடவும்
thகடைசியாக மீனையும் தேங்காயையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.
சுவையான மனமான மருத்துவ குணம் நிறைந்த மேத்தி மீன் குழம்பு ரெடி.


வெந்தயமும், நல்லெண்ணையும் சேருவதால் வயிற்றுக்கு எந்த உபாதையும் அளிக்காது. உடல் சூட்டை தணிக்கும் குழம்பு. பிளெயின் ரைஸ்,ரொட்டி, தோசை , ஆப்பம் குஸ்கா, மருந்து சோறு, பகறா கானா அனைத்துக்கும் பொருந்தும்.

டிஸ்கி : இது நட்புடன் ஜமால் முன்பு கேட்டதால் இப்போது போடப்பட்டுள்ளது

இவ்வளவு ருசியாக மீன் சாப்பாட்டை சாப்பிட காரணமான மீனவர்களுக்காக

please sign the petition to save tnfisherman 

http://www.petitiononline.com/TNfisher/petition.html 





23 கருத்துகள்:

எல் கே said...

thanks for sharing. please sign the petition to save tnfisherman

http://www.petitiononline.com/TNfisher/petition.html

வெங்கட் நாகராஜ் said...

Already Signed the Petition. Let us show our concern by signing the Petition and raising our voices.

முற்றும் அறிந்த அதிரா said...

ஜலீலாக்கா சூப்பர் குறிப்பாக இருக்கே. இன்றே செய்திடவேணும் என ஆசையாக இருக்கு, ஆனால் தக்காழியும் வெந்தயக் கீரையும் வீட்டில் இல்லை.

இனி வெந்தயம் நட்டால்தான் சரிவரும், வெ.கீரை வாங்குவதென்றால் கொஞ்சம் தூர ரைவ் பண்ணவேண்டும்.

நட்புடன் ஜமால் said...

Oh! romba nandringa.

petitionukkum nandri.

adutha vaaram Insha ALLAH, intha meen samayal seythu paarthiduvom

yeskha said...

சூப்பர்.. நான் ஒரு பேச்சுலர்... எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும் போலிருக்கு உங்க பதிவுகள் எல்லாம்.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் ஜலீலாக்கா,,,

மீனவர்களுக்காக,பெட்டிஷனில் கையொப்பம் போட்டு விட்டேன்.

இந்த மீன் உணவு இருக்கே,என்னோட மோஸ்ட் பேவரெட்..மீன் ஆனம் செய்முறை போட்டோ அசத்தல் வழக்கம் போல...

இங்க மணக்குது உங்க மீன ஆனம்...

அன்புடன்
ரஜின்

Menaga Sathia said...

எனக்கு மிகவும் பிடித்த மீன் குழம்பு!!

Angel said...

thanks jaleela.i 've already signed the petition .thanks for the yummy recipe too.

Anonymous said...

good job

ஜெய்லானி said...

//தக்காழியும் வெந்தயக் கீரையும்//

பூஸ்...பாவம் ரொம்பவும் அழுத்தாதீங்க...அது அழுதிடப்போகுது...

அப்படியே ஒரு பாக்கெட் குபூஸ் பார்ஸ்ல்ல்ல்ல்ல்ல்..

Geetha6 said...

super ....!

shalihazubair said...

பார்க்கும்போதே நாக்கு ஊறுதுங்க லாத்தா.சூப்பர்
அன்புடன்
சித்திஷா

சுந்தரா said...

இதுவரை செய்துபார்க்காத புதிய ரெசிபி.

நன்றி ஜலீலா!

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா அக்கா... நீங்க கொடுத்த லின்க்கில் போய் சைன் போட்டாச்சு....
நாளுக்கு நாள் உங்க குறிப்பு போலவே அதனை வெளியிடும் முறையும் மாறுபடுகிறதே..... எப்படி அக்கா... அது....?ரொம்ப நல்லாயிருக்கு... கலக்குறீங்க போங்க....
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

athira said...

January 30, 2011 9:27 PM
ஜெய்லானி said...
//தக்காழியும் வெந்தயக் கீரையும்//

பூஸ்...பாவம் ரொம்பவும் அழுத்தாதீங்க...அது அழுதிடப்போகுது...

அப்படியே ஒரு பாக்கெட் குபூஸ் பார்ஸ்ல்ல்ல்ல்ல்ல்..

//// ஜலீலாக்கா.... ஜெய்லா வுக்குச் சொல்லிவையுங்க... கனக்கக் கதைச்சால் வயசைச் சொல்லிடுவேனென... பாட்டுக் கேட்டிட்டமில்ல...

ஹையோ யாராவது காப்பாத்துங்கோ என்னை.... தெரியாமல் சொல்லிட்டேன் மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

Kanchana Radhakrishnan said...

பெட்டிஷனில் கையொப்பம் போட்டு விட்டேன்.

அந்நியன் 2 said...

ஜலீலாக்கா சூப்பர் குறிப்பாக இருக்கே.

tamil thaaniyanki work pannalaikkaa adhaan.copy/paste.

ஜெய்லானி said...

//// ஜலீலாக்கா.... ஜெய்லா வுக்குச் சொல்லிவையுங்க... கனக்கக் கதைச்சால் வயசைச் சொல்லிடுவேனென... பாட்டுக் கேட்டிட்டமில்ல...//

குபூஸ் ..இது சாப்பாட்டு ஐட்டம் நா உங்களை சொல்லவே இல்லை ...யாருங்க அது சைடுல கலாய்க்கிறது....இன்னும் சைடு பாக்கட்டில ஃபீடிங் பாட்டில் வச்சிகினு கிண்டர் கார்டன் போகும் என்னை பார்த்தா.....அவ்வ்வ்வ்வ்

Krishnaveni said...

delicious and healthy

Unknown said...

வெந்தயக்கீரையை வைத்து மீன் குழம்பு செய்ய அருமையா சொல்லிக் கொடுத்திருக்கீங்க.மிக்க நன்றிக்கா. நாங்க இருக்குற ஏரியால வெந்தயக் கீரை நிறையக் கிடைக்கும். நான் அதை புளிகுழம்பில் மட்டும்தான் போடுவேன். கீரை மசியல் மாதிரி செய்தால், அதில் ஒருவித கசப்பு சுவை இருக்கு.நீங்க வேற ஏதாவது ரெசிப்பி வெந்தயக் கீரையை வைத்து செய்வதற்கு சொல்லிக் கொடுத்தீங்கன்னா ரொம்ப உபயோகமாக இருக்கும்க்கா.நன்றி.

ஸாதிகா said...

வித்த்யாசமாக இருக்கு ஜலி.

Ahamed irshad said...

நானும் கையெழுத்து போட்டுட்டேன் ஜ‌லீலாக்கா.. இனியாவ‌து அவ‌ங்க‌ த‌லையெழுத்து மாற‌னும் ..

Thenammai Lakshmanan said...

வெந்தயக் கீரை போட்ட மீன்குழம்பு அருமைடா ஜலீலா..

பெட்டிஷன்ல சைன் பண்ணிட்டேண்டா..

ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா