Saturday, February 5, 2011

போட்டி (குடல்)கத்திரிக்காய் சால்னா



ஆட்டிறைச்சி வகைகளில் குடலும் ஒன்று இந்த சால்னா வயிற்றிற்கு ரொம்ப நல்லது, சூப் வைத்து குடித்தால் வயிற்று புண் ஆறும். இது எங்க பாட்டி எனக்கு சொல்லிக்கொடுத்தது

தேவையான பொருட்கள்
ஆட்டு குடல் சால்னா (போட்டி குர்மா ) - முழுசு ஒன்று
வெங்காயம் - ஐந்து (பெரியது)
தக்காளி - நான்கு (பெரியது)
பச்சமிளகய் - 4
இஞ்சி, போண்டு பேஸ்ட் - 5  மேசை கரண்டி
கொத்து மல்லி - கால் கட்டு
புதினா - கொஞ்சம்
மிளகாய் தூள் இரண்டரை தேக்கரண்டி
தனியா தூள் - இரண்டரை மேசை கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் - அரை முறி
எண்ணை - 5 தேக்கரண்டி
பட்டை,லவங்கம், ஏலம் தலா - இரண்டிரண்டு
கத்திரிக்காய் - அரை கிலோ
கடலைப்பருப்பு - கால் கப்










செய்முறை
குடலை மஞ்சள் தூள் கொஞ்சம் வினீகர் போட்டு, நன்றாக பத்து நிமிடம் ஊற வைத்து அதில் உள்ள அழுக்கை தேய்த்து கழுவவும்.
கிளீன் ஆன குடல் கிடைத்தால் பிரச்சனை இல்லை.
சட்டியை காயவைத்து எண்ணை ஊற்றி சூடு வந்ததும் பட்டை,லவங்கம், ஏலம் போடவும், போட்டு அரிந்து வைத்துள்ள் வெங்காயத்தை வத்க்கவும்.
வதங்கியதும் இஞ்சி போண்டு பேஸ்ட் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அத்துடன் குடலையும் போட்டு நல்ல பெறட்டவும்.பிறட்டி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து பிறகு தக்காளி,பச்ச மிளகாய், மிளகாய் தூள், தனியா தூள்,மஞ்சள் தூள், உப்பு போட்ட்டு வதக்கி ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
அதற்கு ஏற்றார் போல தண்ணீர் ஆறு ஏழு கப் ஊற்றிஅரை மணி நேரம் குக்கரில் வேகவிடனும். கடலைப்பருப்பை அந்த குக்க்கரிலேயே ஐந்து நிமிடம் ஊற வைத்து ஒரு சிரிய டப்பியில் மூடி போட்டு மூடி போட்டு வெயிட்டையும் போட்டு வேகவிடவும்.
வெந்து குக்கர் சவுண்டு அடங்கியதும் அதில் உள்ளே வைத்திருக்கும் கடலைப்பருப்பை லேசாக நச்சு போடவும்.
போட்டு கத்திரிக்காயை நான்காக அரிந்து போட்டு தேங்காயையும் அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு .கத்திரிக்காயை வெந்ததும் இறக்கிவிடவும்.


சாப்பிடும் அளவு: 8 நபர்கள்

16 கருத்துகள்:

Unknown said...

மட்டன் சாப்பிட மாட்டேனே...:((((

அந்நியன் 2 said...

எல்லாம் நல்ல சுவையாக இருக்கின்றது வாழ்த்துக்கள் சகோ !

நட்புடன் ஜமால் said...

I don't eat both botti & kathirikkai

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்
போட்டி கத்திரிக்காய் சால்னா நல்லா இருக்கு. விளக்கம் அருமை.வாழ்த்துக்கள்.

நேற்று தமிழன் டி.வி யில் சி எம் என் ஜூம்மா சித்தனையில் துபாயில் இருந்து ஜலீலா என்ற
சகோதரி கேள்வி கேட்டார்கள்.அது நீங்களா ?

நீங்கள் இல்லை என்றால், இனி பார்க்கவும்.

இந்திய நேரம் 1.45 .pm to 2.30..

Shanavi said...

Jaleela Mam ,my family makes this kudal kuzhambu,but after coming to US ,I don get this and I know cleanin this kudal is much difficult,..U made me remember my mom n my grandma.. First time ,Love ur space..U've our traditional recipes..Do drop @ http://jellybelly-shanavi.blogspot.com when u r free..Glad to follow u also..

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா அக்கா..,குடல் நான்,எனது வீட்டுக்காரர் சாப்பிட மாட்டோம் இருப்பினும் உங்கள் செய்முறை விளக்கம் எனது அக்கா செய்வது போன்றே உள்ளது.... என் அக்காவும்,அப்பாவும் தான் இதை விரும்பி சாப்பிடுவர்.... இதே போல் சால்னா செய்து சுட சுட தோசையுடன் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.அந்த நினைவு எனக்கு வந்து விட்டது....
வாழ்த்துக்கள் அக்கா...

அன்புடன்,
அப்சரா.

Unknown said...

its yummm:) cant read in tamil that well got it translated sure will try it soon :)

ஸாதிகா said...

வித்தியாசமாக படம் எடுத்து அழகாக பறிமாரி இருக்கீங்க ஜலி

Malar Gandhi said...

You know what? I love this boti' had big trouble...cleaning it up tho'...too good, I make it bit different. Loved ur versiona s well.

Menaga Sathia said...

இட்லி,தோசையுடன் சாப்பிட எனக்கு ரொம்ப பிடிக்கும்...

Jaleela Kamal said...

சிவா சாப்பிடவில்லை என்றாலும் வருக்கைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க நாட்டமா உஙக்ள் கருத்துக்குமிக்க ந்னறி

Jaleela Kamal said...

நன்றி சகோ ஜமால்

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம் ஆயிஷா
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
தமிழன் டீவில் கேள்வி கேட்டது நான் இல்லை

Jaleela Kamal said...

வாங்க ஷான்வி , இத கிளீன் செய்வது தான் கடினம் , இங்கு கிளீன் செய்தே கிடைக்குது ஆகையால் நோ பிராப்ளம்

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம் அப்சாரா , நாங்க பிளெயின் சாதம், இல்லை பரோட்டாவிற்கு சாப்பிடுவோம்
குடல் நல்லதாச்சே ஏன் சாப்பிட மாட்டீஇஙக், சரி சில பேருக்கு பிடிக்காது இல்லையா?

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா