Friday, February 4, 2011

சிரி சிரி சிரி சிரி


No : 1

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No: 2

உன் பேரு என்ன..?

" சௌமியா "

உங்க வீட்ல உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *


No : 3 ( இண்டெர்வியூ.. )

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா " கோவா "

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 4

( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா
வாங்க கடைக்குச் போறான். )

கடைக்காரர் : சார் உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க...!??

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *No : 5

நடிகர் : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு
மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு
இருக்கேன்..

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே
அது மக்களுக்கு பண்ற பொதுசேவை
தானே சார்..!!No : 1 ( ஹோட்டலில் )

" ஒரு காபி எவ்ளோ..? "

" அஞ்சு ரூபா.. "

" எதிர் கடையில 50 பைசான்னு
போட்டு இருக்கே..?!! "

" டேய் லூசு.., அது ஜெராக்ஸ் காப்பிடா..!! "

* * * * * * * * * * * * * * * * * *

No : 2

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு
ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை
கொடுக்கணும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு..

* * * * * * * * * * * * * * * * * *

No : 3 ( கல்யாண மண்டபம்.. )

"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?
பொண்ணு வீட்டுக்காரரா..? "

" ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!"

* * * * * * * * * * * * * * * * * *

No : 4 ( Exam Question Paper... )

Sum :
Prove that LHS = RHS

( 2a+3b) X ( 10x+4y)=(9x+6)

ஒரு பையன் இதை எப்படி
Prove பண்ணினான்னா...

Ans :
( 2a+3b) X ( 10x+4y) = (9x+6)

(( 2a+3b) X ( 10x+4y)) X 0 = (9x+6) X 0

0 = 0

Hence Proved LHS = RHS

No: 1

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?

அவர் : தெரியுது...

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

* * * * * * * * * * * * * *

No : 2 ( கட்சி ஆபீஸ்.. )

தொண்டர் 1 : நம்ம தலைவர் தன்னோட
எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி
வெச்சிட்டாரு..!

தொண்டர் 2 : சந்தோஷமான விஷயம்
தானே..!

தொண்டர் 1 : அட போப்பா..,
கட்சியை அவரோட மகனுக்கு
எழுதி வெச்சிட்டாரு..!!

* * * * * * * * * * * * * *

No : 3

நிருபர் : நடிக்க வரலைன்னா என்ன
பண்ணியிருப்பீங்க..?

நடிகை : Doctor ஆயிருப்பேன்..

நிருபர் : அதான் நடிக்கவே வரலைல்ல.,
போயி Doctor ஆக வேண்டியது தானே..?!

* * * * * * * * * * * * * *

No : 4

( Exam ஆரம்பிக்கும் முன்... )

மாணவன் : டீச்சர் ஒர் Doubt...

டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும்
அரை மணி நேரம்தான் இருக்கு..,
இப்ப போயி என்னடா Doubt..?

மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?

* * * * * * * * * * * * * *
No: 5

மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..

அப்பா : Very Good.., பொண்ணுங்க
இப்படிதான் இருக்கணும்..,
எந்த துறையைல சாதிக்க போற..

மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு
பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்..

* * * * * * * * * * * * * *

No : 6

நண்பன் 1 : காலையில உங்க வீட்டுக்கு
வந்து இருந்தேன்.., உங்க அப்பாகிட்ட
நீ எங்கேன்னு கேட்டதுக்கு.,
" அந்த மாடு எங்கயாச்சும் ஊர் மேய
போயிருக்கும்னு " சொன்னார்டா..!

நண்பன் 2 : என்கிட்ட
" அந்த எருமை வந்துட்டு போச்சுன்னு "
சொன்னாரு.., அது உன்னைத் தானா..!!
--
--
BY

-Thanks & Regards-
K.veerakumar

33 கருத்துகள்:

இனியவன் said...

எல்லாம் சூப்பரா இருக்கு.புதிதாகவும் இருக்கு.வாழ்த்துக்கள்.

Chitra said...

Hilarious! Thank you for sharing!

ஜெய்லானி said...

ஹா..ஹா... செம ஜோக் ஒவ்வொன்னும்..கூடவே போட்டோவும் சூப்பர் :-)))

தினமுமொன்னு போட்டு கலக்குறீங்க ப்போல :-))))))))))))

ஜெய்லானி said...

//அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?

அவர் : தெரியுது...

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!//


ஹா...ஹா...

athira said...

ஐ.... ஜலீலாக்கா.... என்ன இது ஒரே சிரிப்பூ மயம். பூஸாரின் சிரிப்பென்றால் சொல்லவா வேணும்... சிரிப்பூ வருது சிரிப்பூ வருது சிரிக்க சிரிக்க சிரிப்பூ வருது.... அப்பூடியே வடையையும் எனக்கு தாங்க.

உண்மையிலயே வீட்டில் விருந்தினர் வருகை அதனால எட்டிப் பார்க்கக்கூட முடியேல்லை, வராமல் இருந்திருப்பேன்... மயிலை மட்டும் செக் பண்ண வந்தேன் “தண்ணி” மயில் + உங்கமயில்... வராமல் இருக்க முடியேல்லை.

மாத்தி யோசி said...

wow...... really super.i like these jokes very much.i still laugh.....thank you sir.

Samudra said...

சூப்பர்..

Malar Gandhi said...

Thanks for sharing all these jokes with us Jaleela, I really had good laugh:)

Anonymous said...

super ஜலீ.
குடல் குழம்பு open ஆகவில்லை

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா.. எல்லாமே சூப்பர்..
அதிலும், அந்த அக்சிடன்ட் ஜோக்...
அப்புறம்.. பிஸ்ஸா ஜோக்.. அந்த செராக்ஸ்.. காப்பி.. ஜோக் எல்லாம்... ரொம்ப ரொம்ப சூப்பர்..

ரசித்து சிரிச்சேன்.. தேங்க்ஸ்.. :-))))

தங்கராசு நாகேந்திரன் said...

எல்லாமே கலக்கல் குறிப்பா அந்த சாதிக் இன்னும் சூப்பர்

எம் அப்துல் காதர் said...

செம ஜோக் ஜலீலாக்கா எங்கேருந்து புடிச்சிங்க!!

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா அக்கா...,நிஜமாவே...ஒவ்வொரு ஜோக்கும் சிரியோ சிரி தான்....
அதுவும் கேள்விபடாத ஜோக்குகள்....
வாய்விட்டு சிரித்தேன்....

அன்புடன்,
அப்சரா.

enrenrum16 said...

ஜோக்ஸ் புதுசாவும் கடியா இல்லாமலும் இருக்கு.... எல்லா ஜோக்ஸுமே சூப்பர்க்கா...

LHS=RHS இது முன்னமே தெரிஞ்சிருந்தா படிச்சு முன்னேறியிருக்கலாம் ;)

அக்கா.. எனக்கு இன்ட்லியில யாரோட (சிலது தவிர) பதிவுக்கும் ஓட்டு போட்டா 'the page you were looking for doesnt exist' அப்டீன்னு வருது... தெரிஞ்சா சொல்லுங்க...:(

அந்நியன் 2 said...

ஹ ..ஹா ..நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர் ..

நல்ல ஜோக்குக்கா.
எல்லாமே சூப்பர்

அப்பாவி தங்கமணி said...

பூனை படத்தை போட்டுட்டு சிரி சிரினா எப்படிங்க... எனக்கு அது செம அலர்ஜி... ஹா ஹா ஹா... ஆன ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்... ஹா ஹா ஹா...

//தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க//
இது செம....ஹா ஹா ஹா

Mahi said...

சூப்பர் ஜோக்ஸ் அன்ட் போட்டோஸ் ஜலீலாக்கா!

siva said...

: 5

நடிகர் : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு
மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு
இருக்கேன்..

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே
அது மக்களுக்கு பண்ற பொதுசேவை
தானே சார்..!!//ஹிஹி
நீங்க யாரா சொன்னேங்கனு எனக்கு தெரியுமே...

asiya omar said...

எல்லாம் புதுசாக இருக்கு.சூப்பர்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எல்லா ஜோக்ஸும் சூப்பர்

angelin said...

naan kandippa indha recipe seydhu sapidanum.ella jokesum padichu sirichu sirichu en vayiru punn aagidichu.ella jokesum superb.

Jaleela Kamal said...

இனியவன்.

சித்ரா

ஜெய்லானி

அதிரா நேரமில்லாத போதும் வந்து படித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

மாத்தியோசி வாங்க உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி

வாங்க சமுரா உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி

மலர் காந்தி வருகைக்கு மிக்க நன்றி ப, எல்லோரும் நல்ல சிரிச்சிங்களா அதான் அதான் வேனும்.

Jaleela Kamal said...

மஹா விஜெய் குடல் குழம்பு போட்டு 3 மாதம் ஆச்சு, அன்று தெரியாம பப்லிஷ் ஆகிவிட்டது போல/

இப்ப ஓப்பன் ஆகும்,


ஆனந்தி ரசித்து சிரிச்சீங்களாரொம்ப சந்தோஷம்

தஙக ராசு வாங்க உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி


அம் அப்துல் காதர் என்னாது எங்கேருந்து பிடிச்சிங்கலாவா ,அது தான் தா பா வந்துசு மெயிலில்.


வா அலைக்கும் அஸ்ஸ்ல்லாம் ஆமாம் இது போல் நிறைய ஜோக்ஸ் மெயிலில் இருக்கு, எப்பவாவது போடுவேன்.

இப்ப கூட ஐந்து ஆறு கிட்ட இருக்கு


//அக்கா.. எனக்கு இன்ட்லியில யாரோட (சிலது தவிர) பதிவுக்கும் ஓட்டு போட்டா 'the page you were looking for doesnt exist' அப்டீன்னு வருது... தெரிஞ்சா சொல்லுங்க...:(

February 4, 2011 11:54 //

என்றென்றும் பதினாறு இதை பற்றீ எனக்கு தெரியலையெ.
எனக்கு நெட்டே பிரப்ளம் தான் எப்ப ஓப்பன் ஆகுதோ அப்ப மொத்தமா பதிவ போட்டு வைத்து விடுவது முடிந்த போது வந்துபதில் கொடுப்பேன்.

Jaleela Kamal said...

மஹா விஜெய் குடல் குழம்பு போட்டு 3 மாதம் ஆச்சு, அன்று தெரியாம பப்லிஷ் ஆகிவிட்டது போல/

இப்ப ஓப்பன் ஆகும்,


ஆனந்தி ரசித்து சிரிச்சீங்களாரொம்ப சந்தோஷம்

தஙக ராசு வாங்க உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி


அம் அப்துல் காதர் என்னாது எங்கேருந்து பிடிச்சிங்கலாவா ,அது தான் தா பா வந்துசு மெயிலில்.


வா அலைக்கும் அஸ்ஸ்ல்லாம் ஆமாம் இது போல் நிறைய ஜோக்ஸ் மெயிலில் இருக்கு, எப்பவாவது போடுவேன்.

இப்ப கூட ஐந்து ஆறு கிட்ட இருக்கு


//அக்கா.. எனக்கு இன்ட்லியில யாரோட (சிலது தவிர) பதிவுக்கும் ஓட்டு போட்டா 'the page you were looking for doesnt exist' அப்டீன்னு வருது... தெரிஞ்சா சொல்லுங்க...:(

February 4, 2011 11:54 //

என்றென்றும் பதினாறு இதை பற்றீ எனக்கு தெரியலையெ.
எனக்கு நெட்டே பிரப்ளம் தான் எப்ப ஓப்பன் ஆகுதோ அப்ப மொத்தமா பதிவ போட்டு வைத்து விடுவது முடிந்த போது வந்துபதில் கொடுப்பேன்.

Jaleela Kamal said...

நாட்டாம.

அப்பாவி தங்கமனி

மகி


சிவா வாங்க வருகைகு மிக்க நன்றி

ஆசியா

ஆர் கே சதீஷ் குமார்

எல்லோரும் நல்ல சிரிச்சீங்களா ஒகே ஒகே ரொமப் சந்தோஷம்.

Jaleela Kamal said...

அதிரா உஙக்ளுக்காகவே பூஸார தேடி தேடி போட்டேன்

ஜெய்லானி said...

//அதிரா உஙக்ளுக்காகவே பூஸார தேடி தேடி போட்டேன் //

எதை போட்டீங்க ..இந்த அளவுக்கு சிரிக்குது ( நா படத்தைதான் சொன்னேன் ))ஹா..ஹா..

படத்தை பார்தாலே சிரிப்பு தானா வருது :-))

angelin said...

recipe yum jokes um e mail reader il vandhadhaal same post endru ninaithu vitteeen.

இமா said...

;)))

ஸாதிகா said...

நல்லா சிரிச்சுட்டேன் ஜலி.

அன்னு said...

jaleela akkaa,

kaalangaathaala purai eera vachuttiingale??? sari joku, ellame top. vijayai maraimugama solra jokum, manaivikku sleeping doseum supero superb. vaarathukku onnu podungga. :)))

அமைதிச்சாரல் said...

கலக்கல் ஜோக்ஸ் ஜலீலா..

ஆறாவது ஜோக் ஜூப்பரு :-)))

Jaleela Kamal said...

ஜெய்லானி
ஏஞ்சலின்

இமா

ஸாதிகா அக்கா

அன்னு

அமைதிச்சாரல்

கருத்து தெரிவித்தமை அனைவருக்கும் மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா