Monday, February 14, 2011

ப்ரெட் பஜ்ஜி - bread bhajji





இன்று என் செல்ல மகன் ஹனீபுக்கு பிறந்த நாள், பிறந்த நாள் எல்லாம் நாங்கள் கொண்டாடுவதில்லை, (யாரும் சிரிக்காதீங்க) ஹனீஃப் பிறக்கும் முன் வரை காதலர் தினம் என்றைக்கு என்று கூட தெரியாது. பிப்ரவரி 7 திருமண நாள் அன்று தான் டெலிவரி டேட் ஆனால் ஒரு வாரம் தள்ளி பிப்ரவரி 14 அன்று தான் பிறந்தான்.

 அப்ப தான் நர்ஸ் எல்லாம் வாழ்த்து சொன்ன போது ஹே ஹே டுடே வேலண்ட்டைன்ஸ் டே ,வாவ் என்று ஓவ்வொரு நர்ஸ், டாக்டர் எல்லாம் வாழ்த்து தெரிவித்தாங்க அப்ப இருந்த வலியில் எதுவும் காதுல விழல , அப்பரம் தான் ஓவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 காதலர்கள் தினம் என்று தெரியவந்தது.
பிள்ளைகளுக்கு பிறந்த நாள் என்றால் முதலில் ஸ்கூலுக்கு கலர் டிரெஸ் போடனும், எல்லோருக்கும் சாக்லேட் கொடுக்கனும் என்று தான் ஆசை படுவார்கள், அது போல் வாங்கி கொடுத்தாச்சு, மற்ற பிள்ளைகள்ம் கொடுக்கிறார்களே, ஃபிரென்ஸ்களுக்கு சாக்லேட் கொடுப்பதும், எல்லா ஆசிரியர்களுக்கு கொண்டு போய் சாக்லேட் கொடுப்பதும் அவனுக்கு பெரிய சந்தோஷம்.

அவர் (இனி அவன் கிடையாதாம்) மம்மி 13 இயர்ஸ் ஆகிவிட்டது இனி நான் கிட் கிடையாது, டீனேஜ் என்கிறார்.சரி சரி தவறாமல் தொழுகை ஓதல சரியா கடை பிடி பிறகு தான் எல்லாம் என்றேன்.
பெரிய கொண்டாட்டம் எல்லாம் கிடையாது, பிள்ளைகளின் ஆசைக்கு சின்ன பிள்ளைகளாக இருந்த போது கேக் வெட்ட எல்லாம் ஆசை,இப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டான். முதலில் நஃபீல் தொழுகை, அடுத்து ஊரில் மிஸ்கீன் க|ளுக்கு சாப்பாடு அம்மாவிடம் சொல்லி கொடுக்க சொல்லிடுவேன், அடுத்து அவனுக்கு பிடித்தது சமைத்து கொடுப்பேன்,  நான் வைக்கும் சாம்பார் தான் அவனுக்கு ரொம்ப பிடிக்கும் ஆகையால் மதியம் சாம்பார் வடை, இட்லி.

எல்லோரும் துஆ செய்யுங்கள், உங்கள் அனைவரின் அன்பான துஆக்கள் வேண்டும்.

பதிவில் கடைசியாக ஒரு மெசேஜ் போடலாம் என்று நினைத்தால் நேற்றே பதிவுலக தோழி ஏஞ்சலின் வாழ்த்து அட்டை அனுப்பி வாழ்த்தினாங்க,

அடுத்து இன்று பிலாக்கை ஒப்பன் செய்தா இன்ப அதிர்ச்சி, வேலன் சார் வாழ்த்தலாம் வாங்க என்ற ஒரு இழை ஆரம்பித்து தவறாமல் மற்றவர்களில் பிறந்த நாள் மற்றும் திருமணநாளை போட்டு எல்லோரையும் மணமார வாழ்த்தி கொண்டு இருக்கிறார்.
வேலன் சாருக்கு க்கு மிக்க நன்றி + சந்தோஷம்.

வாங்க ஹனீஃபின் பேவரிட் ப்ரெட் பஜ்ஜியை சுவைக்கலாம் வாருங்கள்






காலை உணவுக்கு தினம் ஒரு வகை, பாம்பே டோஸ்ட், பர்கர் சாண்ட்விச், ஹாட் டாக்,பூரி பாஜி, நூடுல்ஸ், சுண்டல் , என இப்ப ஆறுமாதமா 10 நாளைக்கு ஒரு முறை பிரட் பஜ்ஜியும் என் பையனுக்கு ரொம்ப பிடித்து விட்டது.
கொண்டு போனாலே ஸ்கூலில் ஒரு கூட்டம் சேர்ந்துடுதாம். இப்ப கொஞ்சம் கூடுதலாகவே வைத்து அனுப்புவது.

தேவையானவை

பிரெட் சிலைஸ் - 6 
கடலை மாவு - ஒரு டம்ளர்
அரிசிமாவு - கால் டம்ளர்
கார்ன் பிளார் மாவு - சிறிது
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
ரெட் கலர் தேவை பட்டால்
உப்பு தேவைக்கு
பெருங்காயம்  கால் தேக்கரண்டி(அ) இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை தேக்கரண்டி
எண்ணை சுட தேவையான அளவு

செய்முறை

ப்ரெட்டை குறுக்கால ஓவ்வொன்றையும் முன்று பாகமாக வெட்டி கொள்ளவும்.இல்லை வேண்டிய வடிவில் வெட்டி கொள்ளவும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் தயிர் பதத்துக்கு கலந்து கொள்ளவும்.
எண்ணையை காய்வைத்து ஒவ்வொன்றாக போட்டு எடுக்க்கவும்

குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்..





49 கருத்துகள்:

athira said...

ஜலீலாக்கா... டீன் ஏஜராகிவிட்ட குட்டி மகன்(இல்ல அவருக்கு கோபம்வந்திடப்போகுது, சின்ன ஆனால் பெரியமகன்) ஹனீபுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்(இதை வாசித்துக் காட்டிடுங்க ஜலீலாக்கா.

உங்களிருவருக்கும் எமது தாமதமான இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

நல்ல பஜ்ஜி. பஜ்ஜி மட்டும்தானோ? அ.கோ முட்டையுடன் பிரியாணி இல்லையா?.

அத்தோடு உங்களுக்கும் ஹனீபுக்கும் என் இனிய காதலர்தின வாழ்த்துக்கள் ஜல் அக்கா:).

Unknown said...

ஹனீப் என்றும் வளமுடன் வாழ இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

அதிரை அபூபக்கர் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் .. அல்லாஹ்வின் உதவியால் நல்ல அமல்கள் அதிகம் செய்து வாழ துஆ செய்கிறேன்.. (ஹனீப்-க்கு)

சுந்தரா said...

உங்க அன்புமகன் ஹனீஃப், சீரும் சிறப்புமாய் நூறாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் ஜலீலா!

சாருஸ்ரீராஜ் said...

many more happy returns of the day haneef.

சாருஸ்ரீராஜ் said...

b'lated wedding day wishes akka.

வெங்கட் நாகராஜ் said...

ஹனீஃப், உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Aruna Manikandan said...

My B'day wishes to Hanif ,May all his dreams come true :)

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
முதலில் ஹனீஃப்புக்கு என்னுடைய பிரார்த்தனைகள்

இறைவன் ஹனீஃப்புக்கு உடல் ஆரோக்கியத்தையும் உணவில் பரக்கத்தையும் பயனுள்ள கல்வியையும் அளிப்பானாக.

கண்டனங்கள்
அறிவியல் ரீதியாக ஒருவருடைய பிறந்த நாள் திரும்ப வருவதில்லை

மார்க்கத்திலும் பிறந்த நாள் கொண்டாட அனுமதியில்லை
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாது சஹாபாக்கள் யாரும் பிறந்த நாள் கொண்டாடியதில்லை

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா அக்கா..,ஹனீஃப் அவர்களுக்கு,எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்து விடுங்கள்.
எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நோயற்ற வாழ்வையும்,நீண்ட ஆயுளையும் தந்து,நல்லதொரு எதிர்கால வாழ்வினை தருமாறு இறைவனிடம் துஆ செய்வோமாகா....
மீண்டும் எனது அன்பான வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

Gayathri Kumar said...

Wishing a very happy birthday to your son!

Menaga Sathia said...

தங்களின் செல்ல மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..ப்ரெட் பஜ்ஜி எனக்கும் ரொம்ப பிடிக்கும்...

velanblogger said...

ஹனீப் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்ததுக்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

Angel said...

again my wishes to haneef.
i made a different card for you haneef ,but mum said that you are teen so i decided to send an ecard.
have a cakey birthday.

Kurinji said...

ஹனீஃப்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

குறிஞ்சி குடில்

Nila said...

ஹனீப் உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.நீங்க நன்றாக படித்து,உங்க அப்பா,அம்மாவுக்கு நல்லதொரு மகனாக, நோய்நொடியின்றி இருக்கவேண்டும்.

Shama Nagarajan said...

heartiest birthday wishes to him....nice blog

ADHI VENKAT said...

ஹனீஃப்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள். பிரெட் பஜ்ஜி நானும் செய்வதுண்டு.

Nizam said...

Hi,

You said correctly that you won't celebrate birthdays... Good...

But at the end you are requesting everyone to make Dua on account of your beloved son's birthday. Why is this so ??

Does birthday is a special occasion on which Dua is accpeted by Almighty Allah ?

Regards

Nizam

Priya said...

ஹனீபுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Asiya Omar said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹனீஃபிற்கு.எல்லா வளமும் நலமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்.

R.Gopi said...

ஜலீலா மேடம்...

தங்கள் அன்பு மகன் ஹனீஃப் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியம், நல்ல படிப்பு, குறையாத செல்வம், பெற்றோரையும் பெரியோர்களையும் மதித்து பேணும் நல்ல குணம், இவையனைத்தும் கை கொண்டு சீரும், சிறப்புடன் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..

பையனோட பர்த்டே அன்னிக்கு ஒரு ஸ்வீட் ரெசிப்பி போட்டிருந்தா நல்லா இருந்திருக்குமே!!

மாதேவி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஹனீஃப்.

Unknown said...

ii

baji enakuthan..

happy birthday wishes brother..

be happy
be smile
be cool

have cute life.

Anonymous said...

செல்லத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

ஜலி,ஹனீஃபிற்கு என் வாழ்த்துகளையும்,துஆகளையும் அவசியம் சொல்லி விடுங்கள்.வாழ்க வளமுடன்!

நாஸியா said...

Happy birthday dear Hanif!! :)))

Reva said...

Wow... what a wonderful day to have one's birthday... Akka, happy b'day to your son ......
Reva

Vijiskitchencreations said...

Happy Birthday Hanif.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

செல்வன் ஹனீஃப் நீண்ட ஆயுளுடன்
வளமுடன் நலமுடன் வாழ்ந்திட
வல்ல இறைவனிடம் துஆ
செய்கிறேன்.
www.nizampakkam.tk

Mahi said...

ஹனீஃபுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜலீலாக்கா!

GEETHA ACHAL said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஹனீப்...

R. Gopi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உங்கள் செல்லத்திற்கு.

எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Jaleela Kamal said...

நன்றி அதிரா, முட்டை பிரியாணி தானே போட்டுடுவோம்.

நன்றி பாரத் பாரதி.

Jaleela Kamal said...

வாங்க அதிரை அபூபக்கர், ரொம்ப வருடம் கழித்து வந்து இருக்கீங்க பிளாக் ஆரம்பித்த புதிதில் கமெண்ட் போட்டீங்க அதோடு இப்ப தான் வந்து இருக்கீங்க

ரொம்ப சந்தோஷம்.

Jaleela Kamal said...

ப்ரனவம் ரவிகுமார். வருகைகு மிக்க நன்றி

நன்றி வெங்கட் நாகராஜ்

நன்றி அருனா

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம் ஹைதர் அலி, கொண்டாடுவதில்லை தான் பிலாக் எழுத ஆரம்பித்ததிலிருந்த என், வருத்தம், சந்தோஷம் அனைத்தையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். அனாவஷிய செல்வோ ஆடம்பரமோ கிடையாது.

இதை முன்னிட்டு உங்கள் அனைவரின் தூவாக்களையும் , வாழ்த்தையும் பெற்று கொளகிறேன் அவ்வளவு தான்

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம் அப்சாரா உங்கள் தூஆவுக்கும் வாழ்த்துகும் மிக்க நன்றி

நன்றி சாரு

நன்றி தோழி சுந்தரா

நன்றீ காயத்ரி

நன்றி மேனகா

நன்றி வேலன் பிலாக்கார் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி ஏஞ்சலின் அருமையான கார்டு.

நன்றி குறிஞ்சி

நன்றி கோவை2தில்லி

நன்றி ரமா வருக்கைக்க்கு மிக்க நன்றி

நன்றி ஷாமா வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நிஜாமுதீன் ஹைதர் அலிக்கு ஏற்கன்வே பதில் சொல்லி இருக்கேன், வலைஉலக தோழ தோழியர்களின் தூவாவும் வாழ்த்தும் என் பைய்னுக்கு வேண்டும், அவ்வளவே

Jaleela Kamal said...

நன்றி காயத்ரி குமார்

நன்றி ப்ரியா

நன்றி ஆசியா

நன்றி கோபி

நன்றி மாதேவி

நன்றி தமிழரசி

நன்றி சிவா

நன்றி ஸாதிகா அக்கா

நன்றி மகி

நன்றி நாஸியா

Jaleela Kamal said...

நன்றி ரேவா

நன்றி தோழி விஜி

நன்றி நிஜாம்தீன்

நன்றி கீதா ஆச்சல்

நன்றி கோபி ராமமூர்த்தி வருகைக்கு நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கள் மகருக்கு (மகன் னா மரியாதை இருக்காது பாருங்க...அதான் மகர்...ஹா ஹா)... Happy Birthday Haneef.... Bread பஜ்ஜி சூப்பர்... என் பிரார்த்தனைகளும் ஹனீப்க்கு :)

Vikis Kitchen said...

Birthday wishes to Haneef. May God shower him with His choicest blessings. Bread bajji looks so tempting akka.

Kanchana Radhakrishnan said...

ஹனீபுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

தெய்வசுகந்தி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

arthi said...

my wishes to your son and bread bajji is simply amazing!!

Malar Gandhi said...

Belated birthday wishes to Haneef. He is adorable. Definitely, he is in his teen now, we have to respect that.

Bajji looks perfect for tea time.

Jaleela Kamal said...

நன்றி அப்பாவி தங்கமணி

நன்றி விக்கி

நன்றி காஞ்சனா


நன்றி தெய்வ சுகந்தி

நன்றி ஆர்த்தி வருகைக்கு மிக்க நன்றி

உஙக்ள் அருமையான வாழ்த்துக்கு மிக்க நன்றி + சந்தோஷம் மலர்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா