Thursday, March 10, 2011

பேச்சுலர்ஸ் பிரியாணி டோஸ்ட் - bachelor's biriyani toast





இது என் வலை உலக முதல் தோழி தளிகா ரெசிபி கேரளா ரெசிபிகளை சுவையாக செய்வாஙக், நிறைய பேச்சு வழக்கு என்னோடு ஒத்து போகும். 
அவங்க ரெசிபியில் இத அவஙக் செய்றாஙக்ளோ இல்லையோ நான் முன்று மாதத்துக்கு ஒரு முறை செய்வேன்.சிறிது மாறுதல் இருக்கும்.

பாம்பே டோஸ்ட் தான் அடிக்கடி செய்வது, ஸ்கூலுக்கும் சரி ,இவருக்கு ஆபிஸுக்கும் சரி , எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சது, வாரம் ஒரு முறை இந்த டிபன் கண்டிப்பா உண்டு,

எப்பாவாவது இது போல் கார டோஸ்ட் செய்து கொடுத்து அனுப்புவேன்.


தேவையானவை
முட்டை - 1 
பிரட் சிலைஸ் - 3
கருவேப்பிலை - 3 இதழ்
புதினா - 3 இதழ்
பச்ச மிளகாய் - ஒன்று சிறியது
கரம் மசாலா - ஒரு சிட்டிக்கை
சின்ன வெங்காயம் - 3
உப்பு - சிறிது
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிக்கை
இஞ்சி பூண்டு பேஸ்ட் - சிறிது

செய்முறை

தேவையான பொருட்களில் பிரெட் தவிர அனைத்து பொருட்களையும் மிக்சியில் அரைத்து சிறிது தண்ணீர் அல்லது பால் சேர்த்து கொள்ளலாம் இதை தளிகா சொல்ல நான் சேர்த்து கொள்வது.அரைத்து  பிரட் ஸலைஸ் களை இரண்டு பக்கமும் தோய்த்து பேனில் பட்டர் (அ) எண்ணை (அ) நெய் கொஞ்சமா ஊற்றி இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்.

மணம் சூப்பராக இருக்கும், இது காலை அவசரடியில் செய்தது, நல்ல சத்தான காலை உணவு பால் அவலும், பிரியாணி டோஸ்டும்.
பிரட் ஷாப்ட் டாக இருந்ததால் கலவையில் தோய்க்கும் போது பிஞ்சி போச்சு ஆனால் சுடும் போது செட்டாகிடும்

மற்ற படி நான் செய்யும் இன்னொரு முட்டையில் வெங்காயம் பச்சமிளகாய் அரிந்து போட்டு மசாலாக்கள் சேர்த்து கலக்கி பிரெட்டில் ஊற்றியும் பொரிக்கலாம். இல்லை தனித்தனியாகவும் செய்யலாம்
.

23 கருத்துகள்:

ஸாதிகா said...

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த டிபன் ஐட்டம்.திடீர் விருந்தினர்களுக்கு அவசரத்துக்கு உதவும் டிபன் ஐட்டம்

Lifewithspices said...

superaana toast i hv not tried it will sure try this yummy one..

Asiya Omar said...

ரெசிப்பி சூப்பர்.பெயரும் அருமை.

'பரிவை' சே.குமார் said...

ரெசிப்பி சூப்பர்.பெயரும் அருமை.

அன்புடன் மலிக்கா said...

ஹை டோஸ்ட் பிரியாணீயா.
அக்கோவ் எனக்கும் ஒரே ஒரு செட்டு கொடுங்கக்கா.. அப்படியே துண்டுட்டு அப்படியே தூங்கிடுவேனுல்ல..

Thenammai Lakshmanan said...

நல்ல வாசனை வருது இங்கே வரைக்கும் ஜலீலா..:)

Chitra said...

Super Recipe... Thank you... :-)

Umm Mymoonah said...

Briyani toast romba nalla irruku, super idea.

Priya Suresh said...

Very tempting and super delicious toast..

R.Gopi said...

சரி...

இந்த ரெசிப்பில பிரியாணி எப்படி வந்தது?

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்

ரெசிப்பியும் பெயரும் அருமை.

ஜெய்லானி said...

பேரே வித்தியாசமா தெரியுது... பிரியாணி டோஸ்ட் டேஸ்டாதான் இருக்கும் போல :-))

@@@அன்புடன் மலிக்கா said...

ஹை டோஸ்ட் பிரியாணீயா.
அக்கோவ் எனக்கும் ஒரே ஒரு செட்டு கொடுங்கக்கா.. அப்படியே துண்டுட்டு அப்படியே தூங்கிடுவேனுல்ல..//

எனக்கூஊஊஊ...எனக்கூஊஊஊ அவ்வ்வ்வ்வ்வ்
:-))

சாருஸ்ரீராஜ் said...

வித்யாசமான டேஸ்ட்.

apsara-illam said...

சலாம் ஜலீலா அக்கா...,இந்த முறை படி எனக்கு தெரிந்தவர் வீட்டில் ஒரு முறை சாப்பிட்ட நினைவு உண்டு.மறுபடியும் சாப்பிட்டு பார்க்கும் ஆசையை தூண்டிட்டீங்க..
நான் இனிப்பு முறைப்படியும்,வெறும் மிளகு சேர்த்து அடித்து நனைத்தும்தான் டோஸ்ட் செய்வேன்.அதுதான் என்னவருக்கு பிடிக்கும் என்பதால்...
இது ஒரு முறையாவது செய்திட வேண்டியதுதான்.
வாழ்த்துக்கள் அக்கா...

அன்புடன்,
அப்சரா.

Gayathri Kumar said...

Nice toast..

GEETHA ACHAL said...

நானும் இதே மாதிரி டோஸ்ட் செய்வேன்...காரமாக எங்களும், ஸ்விட்காக அக்‌ஷ்தா குட்டிக்கும் செய்து கொடுப்பேன்...

நல்ல அருமையான காலை நேர சிற்றுண்டி...

Menaga Sathia said...

சூப்பர்ர் ப்ரெட் டோஸ்ட்!!

athira said...

சூப்பர் ஜலீலாக்கா... இங்கத்தைய குளிருக்கு இப்பூடிச் செய்து முன்னால அடுக்கிப்போட்டு ரீவி பார்த்தால் எப்பூடி இருக்கும்....ஆஆஆஆ...

நட்புடன் ஜமால் said...

பிரியாணி என்ற பெயர் ஏன் வந்துச்சு இந்த டோஸ்ட்டுக்குன்னு விளங்கயில்லை

மற்றபடி ஜாலியோ ஜிம்கானா :)

Anonymous said...

ரொம்ப சந்தோஷம் ஜலீலக்கா..நிஜமாவே நான் சமைப்பதை விட நீங்க தான் சமைக்கிறீங்க போல..ஆனால் நானும் யார் திடீர்னு வந்தாலும் எங்காவது போறப்பவும் செய்வது இது தான்..இதுவரை சாப்பிட்டவர்கள் நல்லா இருக்கு என்று சொல்லாமல் போனதில்லை.
எனக்கும் ஆசை இப்படி படத்தோடு போட பொறுமை இருக்காது..
இதற்கு வெறும் கார டோஸ்ட் என்று பெயர் என்றாலும் பிரியாணி வாசனை வருவதால் பிரியாணி டோஸ்ட் என்று சொல்லுவோம்.
இது செய்யும்பொழுதே வீடே மணக்கும்...எல்லோருடைய பதிவும் படித்தேன் ரொம்ப சந்தோஷம்


Thalika

சீமான்கனி said...

முற்றிலும் புதுவிதமா இருக்கு.... அக்கா நிறைய முறை உங்க பக்கம் வந்தாலும் பதிவுகள் படிக்க முடியல கொஞ்சம் என்னன்னு பாருங்க...நன்றி...

பாச மலர் / Paasa Malar said...

பெயர் மிகவும் புதுமையான கண்டுபிடிப்பு...பொருத்தமாக உள்ளது...

Vikis Kitchen said...

I too love a spicy bread toast , but slightly different method. Yours seem so tasty with grinding. Have to try soon. Nice recipe and catchy name dear.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா