Thursday, May 26, 2011

பெருந்துயரஅறிவிப்பு

அன்பின் சகோதர சகோதரிகளே...


அனைவரின் அன்புக்கும் ஆளான நம் சகோ.ஜலீலா அக்காவின் தந்தையார் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு இருந்தனர். இந்த ஒரு வாரமாகதான் சிறு முன்னேற்றம் தென்பட்டிருந்தாலும் இன்று காலை இறைவனின் நாட்டப்படி இவ்வுலகை நீங்கிவிட்டார்கள்.  தந்தைக்காகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்காகவும், தந்தையை மிகவும் விரும்பிய, கடந்த சில நாட்களாகவே இதன்பொருட்டு மன உளைச்சலில் இருந்த சகோ. ஜலீலா அக்காவின் மனம் சாந்தி அடைவதற்காகவும் இறைவனிடம் இறைஞ்சுவோம்.


”இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன்”

இறைவன் அன்னாரது சிறு பிழைகளையும், பெரும் பிழைகளையும் மன்னித்து, மக்ஃபிரத் அளித்து, குறையாத அவன் கருணையை பொழிந்து அன்னாரின் நல் அமல்களை பொருந்திக் கொள்வானாக. ஆமீன்

அவரின் கப்ரில் விசாலத்தையும், வெளிச்சத்தையும் தந்தருள்வானாக. ஆமீன்

கப்ரின் வேதனையிலிருந்தும், அதன் நெருக்கத்திலிருந்தும் பாதுகாப்பளிப்பானாக. கேள்வி கணக்குகளை எளிதாக்குவானாக. ஆமீன்

மறுமை நாள் வரையிலும், தீர்ப்பு கூறும் அந்நாளிலும், அதன் பின்பும் எல்லா வேதனைகளிலிருந்தும் கடினங்களிலிருந்தும் காப்பாற்றி அருள்வானாக. ஆமீன்

அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களின் ஷிஃபா’அத்தை பெற்றுத் தருவானாக. ஆமீன்

மறுமை வாழ்வில் ஜன்னத்தையே பரிசாக தந்து ஜஹன்னத்திலிருந்து விடுதலை அளித்து ரட்சிப்பானாக. ஆமீன்

எங்கள் ரப்பே அன்னாருக்காக எங்களின் து’ஆவை ஏற்றுக் கொள்வாயாக. அன்னார் நோய்வாய்ப்பட்டு வருந்திய நொடிகளனைத்தையும் அன்னாரது மறுமையில் அமல்களாக மாற்றி ஷி’ஃபா தந்தருள்வாயாக. ஆமீன்

எங்களைப் படைத்து பாதுகாப்பவனே அன்னாரை இழந்து வாடும் அவர் குடும்பத்திற்கும், மற்றும் அவரது உறவினர்களுக்கும் அமைதியையும், உன் கருணையையும் தந்தருள்வாயாக. ஆமீன்

ஜலீலா அக்காவின் மனதிற்கு தைரியத்தையும் இந்த துயரத்திலிருந்து மீண்டு வாழ்வை எதிர்கொள்ளும் சக்தியையும் தந்தருள்வாயாக. ஆமீன்

தூயோனே... உன்னிடத்திலிருந்தே வருகிறோம். இன்னும் உன் புறமே திரும்ப உள்ளோம். துயரம் சூழ்ந்த இந்த நொடிகளில் எங்களையும், எங்கள் ஈமானையும் பாதுகாப்பாயாக. ஆமீன், ஆமீன், யா ரப்பில் ஆலமீன்.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன்ம் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன்ம் மஜீத்.

Tuesday, May 24, 2011

மைதா மற்றும் கடலைமாவு சுழியன்

இங்கு துபாயில் உள்ள டீ கடைகளில் இந்த சுழியன் , இனிப்பு பனானா பஜ்ஜி, பகோடா போடுவார்கள். இந்த சுழியனை முதல் முதல் பஜார் ஏரியாவில் ஒரு வீட்டுக்கு சென்ற போது கீழே டீகடையில்  ஆர்டர் செய்து கொடுத்தாங்க பாசிப்பயிறில் இனிப்பு சுண்டல் , கார சுண்டல் மற்றும் பல அயிட்டங்கள் செய்தாலும் இந்த சுழியன் ரொம்ப  பிடித்து அதில் இருந்து நானும் என் இழ்டத்துக்கு கலவைகள் போட்டு அடிக்கடி செய்வது .நோன்பு காலங்களிலும் செய்வேன். இது இரண்டுவகையான சுழியன் செய்து இருக்கிறேன் சுவைத்து மகிழுங்கள். 

Sunday, May 22, 2011

அவித்த முட்டை புளி குழம்பு - boiled egg puli kuzampu//வெஜ்டேரியன்கள் இதில் ஏதேனும் காய் சேர்த்து செய்து கொள்ளலாம் , சேமங்கிழங்கு, கருனை கிழங்கு,

Friday, May 20, 2011

கொள்ளு ஓட்ஸ் பார்லி குழிபணியாரம் - horse gram oats kuzipaniyaram


தேவையாவை

கொள்ளு - அரை கப்
ஓட்ஸ் - கால் கப்

Wednesday, May 18, 2011

சாசேஜ் சாண்ட்விச் - Sasuage sandwich


சாசேஜ் என்றால் பிள்ளைகளுக்கு கொள்ளை பிரியம்.
அதை அபப்டியே சமைக்காமல் கொஞ்சம் குக்கரில் வேகவைத்து பொரித்து கொடுத்தால் நல்ல இருக்கும்.


Monday, May 16, 2011

சென்னை ஃப்ளாசாவின் புதிய புர்கா மாடல்கள்

சென்னை ஃப்ளாசாவின் விபரம் அறிய இங்கு சென்று பார்க்கவும்.


Sunday, May 15, 2011

மொரு மொரு காலி பிளவர் - crispy cauliflower
ஏன் ஹோட்டலுக்கு சொன்று தான் மொரு மொருன்னு சாப்பிடனுமா என்ன வீட்டிலும் நிமிஷத்தில் தயாரிக்கலாமே/

காலிபிளவர் - கால் கிலோ ( ஒரு சிறிய பூ)


மாவு கலக்கி கொள்ள

மைதா - அரை கப்
கார்ன் மாவு - கால் கப்
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேகக்ரண்டி
உப்பு - தேவைக்கு
இஞ்சி பூண்டுபேஸ்ட்  அரை தேக்கரண்டி
ரெட் கலர் பொடி - சிறிது (தேவை பட்டால்)

செய்முறை:

காலிபிளவரை பூ பூவாக பிரித்தெடுத்து கழுவு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இரக்கவும்.
தண்ணீரை வடிக்கவும்.


மாவு கலக்க கொடுத்துள்ளவைகளை நன்கு கட்டி தட்டாமல் கலக்கவும்.

எண்ணையை காய வைத்து ஓவ்வொரு பூவாக கலக்கிய மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.

சுவையான நல்ல கிரிஸ்பியான காலிபிளவர் ஃப்ரிட்டர்ஸ் ரெடி.

பொரித்தத்தும் சாப்பிடனும், மூடி போட்டு வைத்தாலோ, அல்லது நெடு நேரம் வைத்திருந்து சாப்பிட்டாலோ மொரு மொருப்பு போய்விடும்.

I sending these recipes to mina joshi's kids delight colorful eventSaturday, May 14, 2011

ஸ்ராபெர்ரி மில்க் ஷேக் - strawberry milk shake


//எல்லா குழந்தைகளும் விரும்பும் ஸ்ராபெர்ரி பழத்தை சாலட் ஆகவும், மில்க் ஷேக்காவும், தயிர் சேர்த்து ஸ்ராபெர்ரி லஸ்ஸியாகவும் செய்யலாம்.//

தேவையானவை 

ஸ்டாபெர்ரி பழம் - 5
பால் - அரை டம்ளர்
ஐஸ் கட்டிகள் - 2
தண்ணீர் - அரை டம்ளர்
சர்க்கரை - இரண்டு தேக்கரண்டி
ஸ்டாபெர்ரி ஐஸ் கிரீம் - ஒரு குழி கரண்டிசெய்முறை


ஸ்ராபெர்ரி பழத்தை பொடியாக அரிந்து அத்துடன் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் நுரை பொங்க அடித்து பெரிய ஜூஸ் டம்ளரில் ஊற்றவும்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஜூஸ்.

sending these recipes to kurinji's healthy summerWednesday, May 11, 2011

பூண்டு முட்டை சாதம் (கர்பிணி பெண்களுக்கு) - garlic egg riceஇது கர்பிணி பெண்களுக்கு 9 மாதம் ஆரம்பித்ததும்  தினம் இந்த சாதத்தை செய்து குழந்தை பெறும் வரை செய்து கொடுத்தால் வயிற்றில் உள்ள வாயு வெளியேறி சுகப்பிரசம் ஆகும்.தேவையானவை

சாதம் - ஒரு கோப்பை
--முட்டை - இரண்டு
-- பூண்டு - 8 பல் (பெரியது)
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - சிறிது
சின்ன வெங்காயம் - 5
நல்லெண்ணை  - ஒரு குழிகரண்டி


செய்முறை

1.முட்டையை நன்கு அடித்து அதில் மிளகு தூள் பொடித்து உப்பு ,பாதி சீரகம் சேர்த்து அடித்து வைக்கவும்.
.2..நல்லெண்ணையை காயவைத்து அதில் சீரகம் சேர்த்து (ஒன்றும் பாதியுமாய் பொடித்தது) பூண்டை பொடியாக அரிந்து சேர்த்து நன்கு வதக்கவும்.
3..சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4.. வதங்கிய வெங்காயத்தில் கலக்கி வைத்துள்ள முட்டையை பரவலாக ஊற்றி சமப்படுத்தவும்.
5. முட்டையை தோசை போல் சுட்டெடுக்கவும்
6 . வெந்ததும் எடுத்து வைத்திருந்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி இரக்கவும்.
சுவையான பூண்டு முட்டை சாதம் ரெடி

குறிப்பு

( இது கர்பிணி பெண்களுக்கு 9 மாதம் சுகப்பிரசம் ஆக தினம் குழந்தை பெறும் வரை செய்து கொடுக்க்கும் சாதம். மற்றவர்கள் சாப்பிடுவதாக இருந்தால் இதில் பச்சமிளகாய், மிளகாய் தூள்,நல்லெண்ணைக்கு பதில் சாதா எண்ணை சேர்த்து அவசர லன்ச் பாக்ஸுக்கு ஈசியாக எடுத்து செல்லலாம், குழந்தைகளுக்கு பச்ச மிளகாய் சேர்க்க வேண்டாம்  பட்டர் ( அ) நெய்யில் செய்து கொடுக்கலாம்.)


சிம்பிள் வெஜ் சாலட் - simple salad


கொளுத்தும் வெயிலுக்கு தினம் தினம் ஒரு ஃபுரூட் சாலட் அல்லது வெஜ் சாலட் சாப்பிடுவது நல்லது,. ரொம்ப சிம்பிளா சிறுவர், பேச்சுலர், எல்லோரும் உடனே தயாரிக்கும் ஈசியான சாலட் இது.

தேவையானவை

வெள்ளரி, கேரட், வெங்காயம், தக்காளி லெமன் , உப்பு, மிளகு தூள் , சிறிது கொத்துமல்லி தழை


செய்முறை

கேரட் வெள்ளரியை தோலெடுத்து , அனைத்து காய்களையும் வட்டவடிவமாக வெட்டி , நம் விருப்படி அடுக்கி வைத்து, உப்பு, மிளகு தூள் லெமன் பிழிந்து சாப்பிடலாம்.

டிஸ்கி: வீட்டில் பிள்ளைகளுக்கு இப்ப தேர்வு முடிந்து விடுமுறை எல்லாத்தையும் அரிந்து அவர்களையும் தட்டில் அழகாக அடுக்க சொல்லலாம், மிகவும் விரும்பி செய்வார்கள்.


Monday, May 9, 2011

பீட்ரூட் பீனட் ரெய்தா - beetroot peanut raita

பீட்ரூட் பீனட் ரெய்தா பார்க்கவே அருமையான கலர்.
 குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் , வேர்கடலையுடன் கடித்து சாப்பிட பிரமாதமாக இருக்கும்.


தேவையானவை:

துருவிய பீட்ரூட் – 1 பெரியது
தயிர் – 200 மில்லி
பச்சமிளகாய் – 1
பூண்டு – 2 பல்
உப்பு  -தேவைக்கு
வெங்காயம் - 1
வறுத்த வேர்கடலை – ஒரு கைபிடி அளவு
கொத்துமல்லி தழை – அலங்கரிக்க

செய்முறை
பச்சமிளகாய்,பூண்டு , வேர்கடலையை கொர கொரப்பாக திரிக்கவும்( மிக்சியில் பஸ்ஸில் இருமுறை திருப்பினால் போதும்).திரித்த கலவை
 துருவிய பீட்ரூட்,பொடியாக அரிந்த வெங்காயம் தயிர் அனைத்தையும் ,  உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கொத்துமல்லி தூவி ,வெள்ளரியை வட்டவடிவமாக அரிந்து வைத்து அலங்கரிக்கவும்.

சுவையானரிச்சான கலர்ஃபுல் பீட்ரூட் பீனட் ரெய்தா ரெடி.


குறிப்பு
அருணா மாணிக்கம் ஒரு மேகஜினில் பார்த்து செய்த்தா போட்டு இருந்தாங்க அதில் பட்டர் மில்க் சேர்த்து செய்து இருந்தாங்க.
இந்த ரெசிபி மனோ அக்கா கேரட்டில் தக்காளி, சேர்த்து செய்து இருந்தார்கள்.
நான் என் சுவைக்கு ஏற்ப கலவைகளை பீட்ரூடில் செய்து இருக்கிறேன்.
Sunday, May 8, 2011

அம்மா அம்மா


படம் நன்றி கூகுள் அக்கா

என்ன அன்னையர் தினம் வைத்தால் தான் அன்னையை போற்றுவீர்களா? இல்லை யாரும் அன்னையை நினைப்பதிலை என்று நினைத்து விட்டார்களா?அப்படி எழுதினேன், கவிதை போல் தோன்றியது , இது என் முதல் கவிதை, கவிதை தானா? சொல்லுங்களே?

அம்மா அம்மா


//பத்து மாதம் சுமந்து
பெற்று எடுத்தவள்

நிலாவை காட்டி சோறூட்டி
 நம்மை வளர்த்தெடுப்பவள்
உலகத்தில அப்பா முதல் மற்ற
அனைவரையும்
அடையாளம் காண்பிப்பவள்,

நம் முகம் வாடினாள்
 நொந்து போவாள்

நம் முகம் மலர்ந்தால்
 சந்தோஷமடைபவள்

நம் தேவைகளை
பார்த்து பார்த்து செய்பவள்

வாய்க்கு ருசியாக
சமைத்து கொடுப்பவள்.

எந்நாளும் நம் முன்னேற்றத்தை
 மனதில் வைத்திருப்பவள்.

என்றும் நம்
நலனுக்காகவே பிரத்திப்பவள்.//


@@@@@@@@@@@@@@@@@%%%%%%%%%%%%%%%%%@@@@@@@@@@@@


அம்மா = உங்களையே உற்று நோக்கி கொண்டு இருக்கும் அம்மாவுக்காக ஏதாவது செய்தீங்களா?

உங்கள் குழந்தைக்கு ஒரு சாக்லேட் வாங்கிகொடுத்தால், ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தால் அம்மாவுக்கு வாங்கிகொடுங்க, அம்ம்மா தனக்கு வாங்கி சாப்பிடுவதில்லை.எனக்கு சாப்பிடனும் போல் இருக்கு என்று யாரிடமும் கேட்பதில்லை.

அம்மாவுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் என்று கேட்டு செய்தோ அல்லது வாங்கியோ கொடுங்கள்,
இப்ப எல்லாம் வெளிநாடுகளில் அம்மா என்ன செய்கிறாஙக் ஏது செய்கிறாஙக்ன்னு யாராவது கேட்கிறீஙக்ளா?
இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது போன் செய்து விசாரியுங்கள்.
போன் செய்கிறேன் என்று கண்ட நேரத்தில் போன் செய்து அவர்கள் அக்காடான்னு தூங்கும் நேரம் கிளப்பி விடாதீஙக்
இரவு மாத்திரை மருந்துகளை சாப்பிட்டு விட்டு காலையில் எழுதிருக்கும் வேலையிலும் போன் செய்யாதீர்கள்.இரவு தூக்ககலக்கதில் இருக்கும் போதும் போன் செய்யாதீர்கள்.

கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகா காலை 11 மணிக்கோ அல்லது மாலை 5 லிருந்து 7 மணி அளவிலோ போன் செய்து நலம் விசாரியுங்கள்.


///கண் பார்த்தால் கை செய்யனும்.
 இது சின்ன வயதில்  என் அம்மா சொன்னது,

அதே போல் கூப்பிட்ட சத்ததுக்கு உடனே ஏன்ன்னு கேட்கனும்.
அதான் இது வரை கடை பிடித்து வருவது.
 இத பற்றி நேற்று என் பையனிடம் மதியம் லுஹர் தொழுதுட்டு பேசிய போது, மம்மிய சந்தோஷப்படுத்துவதா இருந்தா , ஒரே கத்த வைக்க கூடாது கூப்பிட்ட சத்ததுக்கு முதல என்னான்னு கேட்கனும்,
 இத நான் அவனை செய்ய சொல்லல

என் மம்மி என்ன கூப்பிட்டாங்கன்னா?  நான் உன் வயதில்  என்ன பண்ணுவேன் எங்கிருந்தாலும் ஜலீல்ல்ல்ல்ல்லீஇ என்று சொல்லும் போது லின்னு முடிப்பதற்குள் பறந்து வந்து நிற்பேன் என்றேன்.
இன்னும் என்ன அவங்க சொல்லாமலே அங்கிருக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்வேன்,

உதாரணத்துக்கு ,இப்படி சொன்னேன்.


இதோ உன் புக் இப்படி கிடக்குது இத நீயே அடிக்கி வைத்து நீட்டாவைத்தா எனக்கு சந்தோஷம் தானே, இதோ எல்லோரும் குடிக்கும் தண்ணீர் பாட்டில் காலியா இருக்கு இத நான் சொல்லும் முன் நீயே பிடித்து வைத்தா எனக்கு சந்தோஷம் தானே என்றேன்.
சரி மம்மி நானும் இனி செய்கிறேன் மம்மி என்றான் ரொம்ப சந்தோஷமாகிவிட்டது,
, என்னாளும் இப்படி இருக்க கிருபை செய் அல்லாஹ் என்றூ. மனதிற்குள் துஆ செய்து கொண்டேன்.//

இன்னொன்று ஹனீப் பற்றி சொல்லனும், போனவருடம் எங்க வீட்டில் இருந்த போது அம்மாவுக்கு புரை யேறிவிட்டது, அப்ப எல்லா பேரன் பேத்திகளும் பயத்தில் பார்த்தாமாதிரி ஒன்னும் புரியல நின்று கொண்டு இருந்தாங்க, ஹனீப் மட்டும் ஓடி போய் தண்ணி கொண்டு வந்து கொடுத்தான்.
அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். உடனே கிடு கிடுன்னு ஓடி போய் தண்ணீ எடுத்து வந்தானே என்று இப்ப கூட எல்லார் கிட்டேயும் சொல்லி சொல்லி காண்பிப்பாங்க.

எனக்கு என் அம்மா சொல்லி கொடுத்த முதல் முதல் ரெசிபி, இஞ்சி சாயா, புத்துணர்வு தரும் இஞ்சி சாயா,இப்பவும் காலையில் 5 மணிக்கு இத குடிச்சா தான் எனக்கு அடுத்த வேலையே. ஓடும்.நான் ஊருக்கு போனாலும் என் மாமானார் அப்பாடா ஜலீலா வந்தாச்சு இனி 5 மணிக்கு டான்னு டீ வந்துடும் என்பார்கள்.
 ...
 தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது,

 அம்மாவை சந்தோஷபடுத்தினாலே எல்லாம் நமக்கு கிடைத்த மாதிரிதான்.

அம்மாக்கள் சில வீட்டில் பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக கொஞ்சி கவனிப்பாங்க, சில வீட்டில் ஒரே தினம் தினம் திட்டு தான், சில வீடுகளில் அடி தடி, சில வீடுகளில் நாயே பேயே.. என்று இப்படி தான் ஓடிகொண்டு இருக்கும்.
திட்டிட்டாங்களே என்பதால் நம் மேல் பாசம் இல்லாமலோ அல்லது பிடிக்கமலோ சதா திட்டமாட்டார்கள், எல்லாம் நம் நன்மைக்கே, அது அவங்க அவங்க ஒரு காலம் புரிஞ்சிப்பாங்க , அப்ப நிறைய மிஸ் பண்ணிட்டோமோ என்று வருந்துவீர்கள்.
 அம்மாக்கள் கிடைக்காப்பெறாத பொக்கிஷம் அல்லவோ.
உலகில் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.


Thursday, May 5, 2011

கிரில் ஃபிஷ் - Grill fish


இது ட‌ய‌ட் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு ஏற்ற‌ டிஷ்.சப்பாத்தி குப்பூஸுடன் சாப்பிட சூப்பாரான அயிட்டம்

தேவையான பொருட்கள்
மீடியமான முழு மீன் - இரண்டு
பூண்டு பொடி - ஒரு தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேகக்ரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு தூள் - ஒன்ன‌றை தேக்கரண்டி(தேவைக்கு)
எலுமிச்சை சாறு - முன்று மேசை க‌ர‌ண்டி
ப‌ப்ப‌ரிக்கா ப‌வுட‌ர் - அரை தேக்க‌ர‌ண்டி
வினிக‌ர் - ஒரு தேக்க‌ர‌ண்டி
உருளை கிழ‌ங்கு - இர‌ண்டு
வெங்காய‌ம் ஒன்றுசெய்முறை
மீனை சுத்த‌ம் செய்து இடை இடையே ந‌ன்கு ஆழ‌மாக‌ கீறி விட‌வும்.
மேலே குறிப்பிட்ட‌ அனைத்து ம‌சாலாக்க‌ளையும் மீனில் ந‌ன்கு பிர‌ட்டி முன்று ம‌ணி நேர‌ம் ஊற‌வைக்க‌வும்.
200 டிகிரியில் முற்சூடு செய்ய‌ ப‌ட்ட‌ அவ‌னில் 35 நிமிட‌ம் பேக் செய்ய‌வும்.
முத‌லில் உருளை கிழ‌ங்கை வ‌ட்ட‌ வ‌டிவ‌மாக‌ க‌ட்செய்து டிரேயின் அடியில் வைத்து அத‌ன் மேல் மீனை வைத்து மேலே வெங்காய‌த்தை வ‌ட்ட‌வ‌டிவ‌மாக‌ க‌ட்செய்து வைக்க‌வும்.
இது பேக் செய்யும் போது த‌ண்ணீர் கீழே நிற்கும்.அத‌ற்கு முத‌லில் மேல் தீயில் 15 நிமிட‌ம் வைக்க‌வும்
அடுத்து மேலும் கீழும் உள்ள‌ தீயை செல‌க்ட் செய்து 10நிமிட‌ம் வைக்க‌வும்.
க‌டைசியாக‌ அடியில் டிரேயில் வைத்து ப‌த்து நிமிட‌ம் வைக்க‌வும்.குபூஸுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

சுவையான‌ பேக்டு முழு மீன் கிரில் ரெடி.

இதில் உள்ள குபூஸ் வீட்டில் என் கை பக்குவதில் செய்தது.
முன்பு அடிக்கடி செய்வேன். இப்ப ஓவன் ரிப்பேர் ஆனதில் இருந்து செய்வதில்லை, எல்லாம் வீட்டு கிட்டேயே நிறைய க்டைகள் வந்துவிட்டது, ஆகையால் அவ்வளவா செய்வதில்லை/

முழு மீன் டீப் ஃபிரை

டிஸ்கி: இதை ஏற்கனவே அருசுவையில் 1 1/2 வருடம் முன் கொடுத்தது. யார் யாரோ என் குறிபப காப்பி அடித்து அவஙக் தளத்தில் அவர்கள் குறிபப் போட்டு கொள்கிறார்கள், அதான் இங்கேயும் பிளாக் தோழ தோழியர்களுக்காக இங்கும்.இப்ப என் அரேபிய சமையல் ரெசிபிகளும், சாண்ட்விச் அயிடங்கள்,சிக்கன் கிரில் பார்பிகியு மட்டுமே எடுத்து ஒருத்தங்க பிலாக் ஆரம்பித்து இருக்காங்க, பெயர் சொல்ல விரும்பவில்லை.

நானே மறந்தாலும், கிளப்பி விட்டுடுராங்களே..


Tuesday, May 3, 2011

குபூஸ் - kuboosகுபூஸ்(அரெபியன் ரொட்டி)
துபாய் மற்றும் சவுதியில் அரேபியர்கள் உடைய பேமஸான ரொட்டி இந்த குபூஸ். இந்த குபூஸ் இல்லாமல் அவர்களுக்கு சாப்பாடு கிடையாது. எல்லா வகையான சாண்ட் விச்சுக்கும் இந்த ரொட்டி தான் உபயோகபடுத்துவார்கள். தேவையான பொருட்கள்
மைதா - முன்று டம்ளர் 
ஈஸ்ட் - ஒரு பின்ச் 
சர்க்கரை - இரன்டு தேக்கரண்டி 
சூடான பால் - அரை டம்ளர் 
உப்பு - அரை தேக்கரண்டி 
பட்டர் - ஐம்பது கிராம் 
செய்முறை
சூடான தண்ணிரில் உப்பு,சர்க்கரை,சூடான பால் ,ஈஸ்ட், பட்டரை உருக்கி போட்டு கலக்கி கோதுமை,மைதா கலவையில் கலக்கவும். 
ஒரு கட்ட கரண்டி வைத்து கலக்குங்கள் அப்ப தான் கையில் மாவு ஒட்டாது கலக்கி நல்ல குழைத்து முன்று மணி நேரம் 
அப்படியே வைக்கவும். 
மாவை சற்று தளர்த்தியாக குழைக்க வேண்டும். 
பிறகு அதை எடுத்தால் புஸ் என்று உப்பி இருக்கும். 
அதை எடுத்து மறுபடியும் குழைத்து ஒரு கமலா பழம் சைஸ் உருண்டை எடுத்து நல்ல நிறைய மைதா மாவு தடவி நடுவிலிருந்து உருட்டவும். 
தேய்க்கும் போதே நல்லா சூப்பரா ரவுண்டு ஷேப் வரும் அதை எடுத்து தவ்வவில் போட்டு சுட்டெடுக்கவும். 
நல்ல பொங்கி வரும். 
சூப்பரான குபூஸ் ரெடி. 

குறிப்பு:

இதற்கு தொட்டு கொள்ள எல்லாவகையான குருமாக்கள், சிக்கன், ஹமூஸ், கார்லிக் பேஸ்ட், கிரில்ட் சிக்கன் எல்லாமே பொருந்தும். 

இந்த குபூஸுடன் வெரும் ஹமூஸ் இருந்தாலே கூட வாழைப்பழத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்கிரில்லில் சுடும் சிக்கன் அயிட்டங்களுக்கும்,BBQ அயிட்டங்களுக்கும் தொட்டு சாப்பிடலாம். சில்லி சிக்கன்,பட்டர் சிக்கன் போன்றவைக்கும் தொட்டு கொள்ள நல்ல இருக்கும். குழந்தைகளுக்கு பட்டர் தடவியும் கொடுக்கலாம். இதை கோதுமை மாவிலும் செய்யலாம். 

குபூஸுக்கு சரியான காம்பினேஷன் சிம்பில் அண்ட் ஈசி குபூஸ் - ஆஃப் பாயில்


குறிப்பு : இதை பல முறை செய்து இருக்கேன், பட்டர் சேர்க்காமல் செய்தால் ஓவ்வொரு முறை செய்யும் போது தவ்வா மாவு பட்டு கரியும் , அப்ப சுத்தமா துடைத்து கொள்ளனும், அதுக்கு தான் பட்டர் சேர்த்துள்ளேன், பட்டர் சேர்ப்பதால் கரிந்து போகாது. இன்னும் விபரஙக்ள் பிற்கு எழுது கிறேன்.