Sunday, May 8, 2011

அம்மா அம்மா


படம் நன்றி கூகுள் அக்கா

என்ன அன்னையர் தினம் வைத்தால் தான் அன்னையை போற்றுவீர்களா? இல்லை யாரும் அன்னையை நினைப்பதிலை என்று நினைத்து விட்டார்களா?



அப்படி எழுதினேன், கவிதை போல் தோன்றியது , இது என் முதல் கவிதை, கவிதை தானா? சொல்லுங்களே?

அம்மா அம்மா


//பத்து மாதம் சுமந்து
பெற்று எடுத்தவள்

நிலாவை காட்டி சோறூட்டி
 நம்மை வளர்த்தெடுப்பவள்
உலகத்தில அப்பா முதல் மற்ற
அனைவரையும்
அடையாளம் காண்பிப்பவள்,

நம் முகம் வாடினாள்
 நொந்து போவாள்

நம் முகம் மலர்ந்தால்
 சந்தோஷமடைபவள்

நம் தேவைகளை
பார்த்து பார்த்து செய்பவள்

வாய்க்கு ருசியாக
சமைத்து கொடுப்பவள்.

எந்நாளும் நம் முன்னேற்றத்தை
 மனதில் வைத்திருப்பவள்.

என்றும் நம்
நலனுக்காகவே பிரத்திப்பவள்.//


@@@@@@@@@@@@@@@@@%%%%%%%%%%%%%%%%%@@@@@@@@@@@@


அம்மா = உங்களையே உற்று நோக்கி கொண்டு இருக்கும் அம்மாவுக்காக ஏதாவது செய்தீங்களா?

உங்கள் குழந்தைக்கு ஒரு சாக்லேட் வாங்கிகொடுத்தால், ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தால் அம்மாவுக்கு வாங்கிகொடுங்க, அம்ம்மா தனக்கு வாங்கி சாப்பிடுவதில்லை.எனக்கு சாப்பிடனும் போல் இருக்கு என்று யாரிடமும் கேட்பதில்லை.

அம்மாவுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் என்று கேட்டு செய்தோ அல்லது வாங்கியோ கொடுங்கள்,
இப்ப எல்லாம் வெளிநாடுகளில் அம்மா என்ன செய்கிறாஙக் ஏது செய்கிறாஙக்ன்னு யாராவது கேட்கிறீஙக்ளா?
இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது போன் செய்து விசாரியுங்கள்.
போன் செய்கிறேன் என்று கண்ட நேரத்தில் போன் செய்து அவர்கள் அக்காடான்னு தூங்கும் நேரம் கிளப்பி விடாதீஙக்
இரவு மாத்திரை மருந்துகளை சாப்பிட்டு விட்டு காலையில் எழுதிருக்கும் வேலையிலும் போன் செய்யாதீர்கள்.இரவு தூக்ககலக்கதில் இருக்கும் போதும் போன் செய்யாதீர்கள்.

கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகா காலை 11 மணிக்கோ அல்லது மாலை 5 லிருந்து 7 மணி அளவிலோ போன் செய்து நலம் விசாரியுங்கள்.


///கண் பார்த்தால் கை செய்யனும்.
 இது சின்ன வயதில்  என் அம்மா சொன்னது,

அதே போல் கூப்பிட்ட சத்ததுக்கு உடனே ஏன்ன்னு கேட்கனும்.
அதான் இது வரை கடை பிடித்து வருவது.
 இத பற்றி நேற்று என் பையனிடம் மதியம் லுஹர் தொழுதுட்டு பேசிய போது, மம்மிய சந்தோஷப்படுத்துவதா இருந்தா , ஒரே கத்த வைக்க கூடாது கூப்பிட்ட சத்ததுக்கு முதல என்னான்னு கேட்கனும்,
 இத நான் அவனை செய்ய சொல்லல

என் மம்மி என்ன கூப்பிட்டாங்கன்னா?  நான் உன் வயதில்  என்ன பண்ணுவேன் எங்கிருந்தாலும் ஜலீல்ல்ல்ல்ல்லீஇ என்று சொல்லும் போது லின்னு முடிப்பதற்குள் பறந்து வந்து நிற்பேன் என்றேன்.
இன்னும் என்ன அவங்க சொல்லாமலே அங்கிருக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்வேன்,

உதாரணத்துக்கு ,இப்படி சொன்னேன்.


இதோ உன் புக் இப்படி கிடக்குது இத நீயே அடிக்கி வைத்து நீட்டாவைத்தா எனக்கு சந்தோஷம் தானே, இதோ எல்லோரும் குடிக்கும் தண்ணீர் பாட்டில் காலியா இருக்கு இத நான் சொல்லும் முன் நீயே பிடித்து வைத்தா எனக்கு சந்தோஷம் தானே என்றேன்.
சரி மம்மி நானும் இனி செய்கிறேன் மம்மி என்றான் ரொம்ப சந்தோஷமாகிவிட்டது,
, என்னாளும் இப்படி இருக்க கிருபை செய் அல்லாஹ் என்றூ. மனதிற்குள் துஆ செய்து கொண்டேன்.//

இன்னொன்று ஹனீப் பற்றி சொல்லனும், போனவருடம் எங்க வீட்டில் இருந்த போது அம்மாவுக்கு புரை யேறிவிட்டது, அப்ப எல்லா பேரன் பேத்திகளும் பயத்தில் பார்த்தாமாதிரி ஒன்னும் புரியல நின்று கொண்டு இருந்தாங்க, ஹனீப் மட்டும் ஓடி போய் தண்ணி கொண்டு வந்து கொடுத்தான்.
அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். உடனே கிடு கிடுன்னு ஓடி போய் தண்ணீ எடுத்து வந்தானே என்று இப்ப கூட எல்லார் கிட்டேயும் சொல்லி சொல்லி காண்பிப்பாங்க.

எனக்கு என் அம்மா சொல்லி கொடுத்த முதல் முதல் ரெசிபி, இஞ்சி சாயா, புத்துணர்வு தரும் இஞ்சி சாயா,இப்பவும் காலையில் 5 மணிக்கு இத குடிச்சா தான் எனக்கு அடுத்த வேலையே. ஓடும்.நான் ஊருக்கு போனாலும் என் மாமானார் அப்பாடா ஜலீலா வந்தாச்சு இனி 5 மணிக்கு டான்னு டீ வந்துடும் என்பார்கள்.
 ...
 தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது,

 அம்மாவை சந்தோஷபடுத்தினாலே எல்லாம் நமக்கு கிடைத்த மாதிரிதான்.

அம்மாக்கள் சில வீட்டில் பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக கொஞ்சி கவனிப்பாங்க, சில வீட்டில் ஒரே தினம் தினம் திட்டு தான், சில வீடுகளில் அடி தடி, சில வீடுகளில் நாயே பேயே.. என்று இப்படி தான் ஓடிகொண்டு இருக்கும்.
திட்டிட்டாங்களே என்பதால் நம் மேல் பாசம் இல்லாமலோ அல்லது பிடிக்கமலோ சதா திட்டமாட்டார்கள், எல்லாம் நம் நன்மைக்கே, அது அவங்க அவங்க ஒரு காலம் புரிஞ்சிப்பாங்க , அப்ப நிறைய மிஸ் பண்ணிட்டோமோ என்று வருந்துவீர்கள்.
 அம்மாக்கள் கிடைக்காப்பெறாத பொக்கிஷம் அல்லவோ.
உலகில் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்.


20 கருத்துகள்:

Kurinji said...

Happy Mother's Day to you too!

Ahamed irshad said...

Good article.

Feel Good :)

Happy Mother's Day.

நிரூபன் said...

முதல் கவிதை, வசன கவியாக- அருமையாக வந்திருக்கிறது.
வாழ்த்துக்கள் சகோ.

நிரூபன் said...

அன்னையைச் சந்தோசப்படுத்துவதன் மூலம் வாழ்வில் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ளலாம் என்பதனை அனுபவப் பகிர்வினூடாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

எல் கே said...

Happy mothers day

Kanchana Radhakrishnan said...

Happy Mothers Day.

Asiya Omar said...

கலக்கலான பகிர்வு.அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

முற்றும் அறிந்த அதிரா said...

ஜலீலாக்கா உங்களுக்கும் மற்றும் அனைத்து அன்னையர்க்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள்.

முதன்முதலில் எழுதிய கவிதையா கலக்கல். தொடருங்கோ....

முற்றும் அறிந்த அதிரா said...

நிறைய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறீங்க. எங்கள் வீட்டிலயும் கூப்பிட்டவுடன்... ஓம் எனச் சொல்லோணும் என்று சொல்லிவச்சிருக்கிறோம்... அதனால கூப்பிட்டவுடன் யேஸ்ஸ்ஸ் என்று மட்டும் குரல் கேட்கும், ஆனா எங்க இருக்கினம் என நான்தான் கண்டுபிடிக்கவேண்டியும் இருக்கும்:).

முற்றும் அறிந்த அதிரா said...

ஊருக்குப் போனால் சாமம்:) 5 மணிக்கு எழும்பி ரீ போட்டிடுவீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்.

Unknown said...

Hi Jaleela, first time on your blog - happy mother's day to you too :)

சிநேகிதன் அக்பர் said...

அன்னையர் தின வாழ்த்துகள்.

Angel said...

Happy Mothers Day to you Jaleela .
//திட்டிட்டாங்களே என்பதால் நம் மேல் பாசம் இல்லாமலோ அல்லது பிடிக்கமலோ சதா திட்டமாட்டார்கள், எல்லாம் நம் நன்மைக்கே, அது அவங்க அவங்க ஒரு காலம் புரிஞ்சிப்பாங்க//
its 100 % true .
நான் தினமும் அம்மாவுடன் பேசுவேன்
அருமையான பதிவு ஜலீலா .

கோமதி அரசு said...

படம், கவிதை, பதிவு எல்லாம் அருமை. அம்மாக்கள் எதிர்ப்பார்ப்பதை அழகாய் கூறிவிட்டீர்கள் ஜலீலா.

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் said...

அம்மாவைப் பற்றி அழகாய் சொல்லி இருக்கீங்க. அன்னையர் தின வாழ்த்துகள்

ஹுஸைனம்மா said...

கவிதைக்கும், அன்னையர் தினத்துக்கும் வாழ்த்துகள் அக்கா.

மாமனார் மெச்சும் மருமகள் போல!! சந்தோஷமாருக்கு.

Jaleela Kamal said...

நன்றி குறிஞ்சி

நன்றி இர்ஷாத்

நிருபன் வாங்க வருகைக்கு மிக்கநன்றி
வசன கவியா.பாராட்டுக்கு நன்றீ


நன்றி எல் கே

நன்றி காஞ்சனா

நன்றி ஆசியா

அதிரா ஆமாம் உங்கள் அனைவரையும் பார்த்து ஏதோ ரொம்ப சிம்பிளா மனதில் தோன்றியது, ரொம்ப மண்டைய சொரிஞ்சா முடி கொட்டுது..
இங்கு சமையல முடித்து விட்டு வேலைக்கு ஓடனுமே சீக்கிரம் எழுந்து பழகியதால் அபப்டியே அங்கும் , அதுவும் இல்லாமல் சின்ன வய்தில் இருந்தே பழக்கம்.

Jaleela Kamal said...

நன்றி சினேகிதன் அக்பர்

ஏஞ்சலின் இது நான் நிறைய இடத்தில் கண்கூடா பார்ப்பது, சில அம்மாக்கள் குறை பட்டு கொள்வது எல்லாம் சேர்ந்து தான் பொதுவாக போட்டுட்டேன்


// Now Serving said...
Hi Jaleela, first time on your blog - happy mother's day to you too :)//

வாங்க வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

கோமதி அக்கா நீங்க சொன்னா சரி தான்

வாங்க எம் அப்துல் காதர் , மிக்க நன்றி


ஹுஸைனாம்மா ஆமாம் மாமானார் க்கு என்னை ரொம்ப பிடிக்கும்.
அவஙக் பேசும் போது இப்படி சொல்லும் போது ( அதுவும் நடு கூடத்தில் வைத்து சொல்வார்) எனக்கும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்

Avargal Unmaigal said...

//உங்கள் பின்னூட்டம் தான் என் அடுத்த பதிவுக்கு பூஸ்ட்//

என் பதிவிற்கு வந்து எனக்கு பூஸ்ட தந்த ஜலீலா மேடத்துக்கு அன்பு வணக்கம். உங்கள் கவிதையை படித்தேன் பின்னுட்டம் மூலம் நீங்கள் முதன் முதலாக முயற்சி செய்தீரகள் என அறிந்து கொண்டேன் மேன்மேலும் சிறப்பாக எழுதி வளர வாழ்த்துகள்.
எல்லா வல்ல இறைவன் உங்கள் எல்லா முயற்சிக்கும் ஒரு துணையாக இருப்பான்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா