Friday, May 20, 2011

கொள்ளு ஓட்ஸ் பார்லி குழிபணியாரம் - horse gram oats kuzipaniyaram


தேவையாவை

கொள்ளு - அரை கப்
ஓட்ஸ் - கால் கப்

பட்டாணி பருப்பு - கால் கப் 
அரிசி  - கால் கப்
பார்லி - கால் கப்
காஞ்ச மிளகாய் - 6
பூண்டு  - 3 பல்
பெருங்காயம் - சிட்டிக்கை
இட்லி சோடா - 2 சிட்டிக்கை
வெங்காயம் - ஒன்று
கொத்துமல்லி தழை , கருவேப்பிலை சிறிது 
உப்பு தேவைக்கு
செய்முறை


ஓட்ஸ் ,கொள்ளு, பார்லி, அரிசி, மட்டர் தால் வகை களை இரவே ஊறபோடவும்.
மிளகாய், பூண்டு, பெருங்காயம் சேர்த்து ஊறவைத்த அனைத்தையும் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.( அரைப்பதற்கு 10 நிமிடம் முன் ஓட்ஸை ஊறவைக்கவும்)

அரைத்த அடை மாவுடன் வெங்காயம், கருவேப்பிலை, கொத்துமல்லி தழை பொடியாக அரிந்து சேர்த்து உப்பு, இட்லி சோடாவும் சேர்த்து கிளறிவைக்கவும்.

குழிபணியார சட்டியை காயவைத்து லேசாக எண்ணை தெளித்து ஓவ்வொரு ஸ்பூன் முக்கால் பாகம் இருக்குமாறு ஊற்றி முடி போடவும்.


தீயின் தனலை குறைவாக வைக்கவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கமும் அதேபோல் வேக விட்டு இரக்கவும்.


குறிப்பு :பருப்படை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுக்கு நிறைய எண்ணை ஊற்றி சுட்டால் தான் நல்ல இருக்கும் , நான் அடை மாவை குழிபணியாரமாக முயற்சி செய்தேன். நல்ல வந்தது
தொட்டுகொள்ள வெல்லம் அல்லது சட்னி வகைகளுடன் சாப்பிட அருமையாக இருக்கும்

ஆக்கம் 
ஜலீலா.

I sending these recipes to akila's dish name start with h.event.

ஹமூஸ்
கொள்ளு ரசம்
கொள்ளு ஓட்ஸ் தோசை

25 கருத்துகள்:

எல் கே said...

கொள்ளு ஓட்ஸ் புதிய காம்போ

Kurinji said...

Nice combo and beautiful clicks.
Kurinjikathambam

ADHI VENKAT said...

நல்ல ரெசிப்பி.

அஸ்மா said...

நல்ல சத்தான டிஃபன்! குழிப்பணியார சட்டி (வெயிட் அதிகமாக உள்ளதால்) இங்கு எடுத்து வரமுடியவில்லை. இதையே அடையாக ஊற்ற வேண்டியதுதான் :) பகிர்வுக்கு நன்றி ஜலீலாக்கா.

Menaga Sathia said...

எல்லா பருப்பு வகைகளும் சேர்ந்த சத்தான் குழிப்பணியாரம்,நல்லாயிருக்கு..

GEETHA ACHAL said...

ரொம்ப நல்லா இருக்கு...

Nandinis food said...

The paniyarams look so perfect! Nutritious ones!

Prema said...

Healthy combo,delicious paniyaram...

Chitra said...

சூப்பரா இருக்குது.

Angel said...

நல்ல சத்து நிறைந்த பணியாரம் .பகிர்வுக்கு நன்றி .

Chitra said...

Superb combo. enakku thevai yaana saapaadu :) thnx for sharing

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

hmm... nice and healthy recipe...thanks

Mahi said...

நல்லா இருக்கு ஜலீலாக்கா! நான் இதுகூட கொஞ்சம் உளுந்தும் போட்டு தோசையா சுடுவேன்.:)

Geetha6 said...

பயனுள்ள டிப்ஸ்...பகிர்வு.

ஸாதிகா said...

சத்துமிக்க காலை டிபன்.

Unknown said...

ஆஹா அசததாலான புது காம்பினேஷன்... சூப்பர்

Jayanthy Kumaran said...

great n healthy combinations..

Tasty Appetite
Event: Letz Relishh Ice Creams

Jaleela Kamal said...

முதல் கருத்துக்கு மிக்க நன்றி எல்.கே

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி குறிஞ்சி

நன்றி கோவை 2 தில்லி

Jaleela Kamal said...

அஸ்மா என்னிடமும் ரொம்ப நாளா கிடையாது, எல்லா வகைகளையும் இது வரை தோசையாக அடையாக சுட்டு இருக்கேன், சட்டி கிடைத்ததில் இருந்து சட்டி அழுவுது.
கண்டிப்பா செய்து பாருங்கள் ரொம்ப சத்தானது
வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஆமாம் மேனகா எல்லா பருப்பு வகைகளும் சேர்ந்த அருமையான குழிபணியாரம் , வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி கீதா ஆச்சல்

வருகைக்கும் கருத்துதெரிவித்தமைக்கு மிக்க நன்றி நந்தினி

நன்றி பிரேமலதா

நன்றி சித்ரா

நன்றி அப்பாவி தங்கமணி

Jaleela Kamal said...

ஆம் ஏஞ்சலின் மிகவும் சத்தானது

சித்ரா உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கா இந்த குறிப்பு சந்தோஷம்

Jaleela Kamal said...

மகி உளுந்தும் சேர்ப்பேன் அது வேற மற்ற பொருட்களுடன்,
சில நேரம் உளுந்து சேர்க்கும் போது கிரிஸ்பி வரல, அதான் இதில் உளுந்து சேர்க்கல.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி மகி

Jaleela Kamal said...

நன்றி கீதா 6

நன்றி ஸாதிகா அக்கா
என்ன பிஸி போல ,

நன்றி பாயிஜா

நன்றி ஜெய்

Kanchana Radhakrishnan said...

நல்லா இருக்கு...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா