Wednesday, May 18, 2011

சாசேஜ் சாண்ட்விச் - Sasuage sandwich


சாசேஜ் என்றால் பிள்ளைகளுக்கு கொள்ளை பிரியம்.
அதை அபப்டியே சமைக்காமல் கொஞ்சம் குக்கரில் வேகவைத்து பொரித்து கொடுத்தால் நல்ல இருக்கும்.






லாங் பன் = 4
சாசேஜ் = 4
லெட்டியுஸ் இலைகள் = தேவைக்கு
மையானஸ் = தேவைக்கு
கெட்சப் = தேவைக்கு
சில்லி சாஸ் = சிறிது
பட்டர் = பொரிக்க தேவையான அளவு
பெப்ப‌ர் தூள் (அ) மிள‌காய் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
உப்பு = கால் தேக்க‌ர‌ண்டி
சோயா சாஸ் = கால் தேக்க‌ர‌ண்டி








இது பார்க்க‌ நிறைய‌ பொருட்க‌ள் போல‌ இருக்கு ஆனால் ரொம்ப‌ சுல‌ப‌மும், ருசியாக‌வும் இருக்கும்.


சாசேஜை குக்க‌ரில் போட்டு முழ்கும் அள‌வு த‌ண்ணீர் ஊற்றி அதில் பின்ச் சால்ட், சோயாசாஸ் சேர்த்து ஒரு விசில் விட்டு இர‌க்கி த‌ண்ணீரை வ‌டித்து அதை நீள‌வாக்கில் இர‌ண்டாக‌ அரிந்து ஒரு பேனில் சிறிது ப‌ட்ட‌ரில் போட்டு மிள‌காய் தூள் (அ) மிள‌கு தூள், உப்பு சேர்த்து வ‌ருத்தெடுக்க‌வும்.


ப‌ன்னை இர‌ண்டாக‌ அரிந்து அங்கேங்கே சிறிது ப‌ட்ட‌ர் த‌ட‌வி லேசாக‌ சிவ‌ந்த‌ மாதிரி சூடு ப‌டுத்த‌வும், க‌ருக‌விட‌ வேண்டாம்.


இப்பபோது ப‌ன்னின் இரு புற‌மும் மையான‌ஸ் த‌ட‌வி லெட்டியுஸ் இலைக‌ளை ப‌ர‌ப்பி, மேலும் கீழுமாக‌ இர‌ண்டு ப‌க்க‌மும் நீள‌வாக்கில் பொரித்த‌ சாசேஜ் இர‌ண்டு வைக்க‌வும். மேலே கெட்ச‌ப், சிறிது சில்லி சாஸ் தெளித்து மூட‌வும்.
சுவையானா சம்முன் வித் சாசேஜ் சான்ட்விச் ரெடி.


குறிப்பு


குழந்தைகளுக்கு பள்ளிக்கு எடுத்து செல்ல வசதியாக இருக்கும். விரும்பி சாப்பிடுவார்கள்.
இதே போல் பொடியா அரிந்து வதக்கியும் சேர்க்கலாம். சாசேஜ் குழம்பு, சாசேஜ் புலாவ், சாசேஜ் நூடுல்ஸ் எல்லாம் குழந்தைகளுக்கு பிடிக்கும்.

ஏற்கனவே போட்ட குறிப்பு தான் மறு படி ரீ போஸ்ட்
பாம்பே டோஸ்ட்

ட்ரூட்டி ஃப்ரூட்டி பான்கேக்

சிக்கன் சாண்ட்விச்


கொத்துமல்லி குழிபணியாரம்

நொய் உருண்டை

மசாலா தோசை



I am sending these recipes to Srivalli's breakfast mela event

18 கருத்துகள்:

Anonymous said...

very epertising 4 kids

SUFFIX said...

இந்த ஹாட் டாக், சாசேஜ் பக்கம் நாங்க‌ போவதே இல்லை ஜலீலா!!

S.A. நவாஸுதீன் said...

ஹாட் டாக் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

Saraswathy Balakrishnan said...

My kids would just fell in love with these sandwiches..a great snack for the kutties pa

Jaleela Kamal said...

ஷபிக்ஸ் எனக்குசாசேஜ் என்றாலே பிடிக்காது,

ஆனால் பிள்ளைகளுக்காக மாதம் இரண்டு முறை செய்து கொடுப்பது.

ஆமாம் நவாஸ் பிள்ளைகலூக்கு ரொம்ப பிடிக்கும்,

சரஸ்வதி உங்கள் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்குமா?
அப்ப இன்னும் இரண்டு டைம் போடுகிறேன்

ஹுஸைனம்மா said...

அக்கா, சாஸேஜை குக்கரில் ஏன் வேக வைக்கணும்? ஃப்ரை மட்டும் செய்தால் போதாதா?

Chitra said...

superaa irukku..

Anonymous said...

ஹ..சூப்பரா இருக்கே

Kurinji said...

very tempting and yummy...
Kurinjikathambam

நிரூபன் said...

சாசேஜ் சாண்ட்விச்சைப் பார்ப்பதற்கு அருமையாக இருக்கு சகோ. வெளிநாட்டுச் சமையலைப் பரிமாறியிருக்கிறீங்க.
உங்களின் சாசேஜ் பற்றிய அறிமுகத்திற்கு நன்றிகள் சகோ.

நம்ம ஊரில் இதெல்லாம் கிடைக்காது சகோ. எங்காச்சும் வெளிநாடு போனால் வாங்கிச் சாப்பிட்ட பின்னர் டேஸ்ட் எப்படி என்று சொல்லுறேன்.
அவ்.....

Reva said...

Super akka... Kutties special asathuthu...:)
Reva

Chitra said...

super!!! looks good.

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மா ,நீங்க முன்பு கேட்ட து
//அக்கா, சாஸேஜை குக்கரில் ஏன் வேக வைக்கணும்? ஃப்ரை மட்டும் செய்தால் போதாதா?//
எனக்கென்னவோ அதை பச்சையாக வ்றுக்க பிடிக்காது, இதுபோல் வேகவைத்து செய்தால் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும் , இத்தனை வருட காலமா இப்படி தான் செய்கீறேன்.

Jaleela Kamal said...

வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி சதீஷ் குமார்

Jaleela Kamal said...

நன்றி குறிஞ்சி

Jaleela Kamal said...

நிருபன் வாங்க தொடர் வருகைக்கு மிக்க நன்றி
ஆமாம் இது வெளிநாட்டில் நிறைய கிடைக்கும், ஊரில் இருக்கான்னு தெரியல

Jaleela Kamal said...

ஆம் ரேவா குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா