Sunday, August 28, 2011

ஈரானி அம்மா


துபாய் வருவதற்கு முன் நோன்புகாலங்களில் தினம் தரவீஹ் தொழுகை வீட்டில் தான் தொழுவோம். கிரான்மா வீட்டில் எல்லோரும் மகள்கள் பேத்திமார்கள் என கூட்டாக சேர்ந்து தொழுவோம்.


ஆனால் இங்கு வந்தவுடன் முதலில் பள்ளிகளில் பெண்கள் தொழுவது தெரியாது. வீட்டில் நானே தனியாக தொழுது கொள்வேன்.



கொஞ்ச நாட்கள் கழித்து தான் ஈடிஏவில் பெண்களுக்கு என தொழ தனியாக இடம் உள்ளது என்று தெரிய வந்த்து27 தொழுகைக்கு மட்டும் அங்கு போய் தொழுவோம்,எங்க சொந்தங்களும் சில பேர் அங்கு வருவார்கள், எல்லோரையும் பார்த்த மாதிரி இருக்கும்.


இரவு தொழுகைக்கு எங்க ஏரியாவிலேயே உள்ள பள்ளியில் தொழ போவோம்.
பிறகு பக்கத்தில் உள்ள பள்ளியிலேயே இத்தனை வருடமாக நாங்க என் பையன் , ஹஸ்,பக்கத்துவீட்டு பேமிலி எல்லோரும் போய் தொழ போவோம்.
இந்த தடவை பையனும் ஹஸ் தினம் தொழுதுட்டு  அருகில் இருக்கும் ரீஃப் மாலுக்கு போனால் அங்கு நடுவில் கூடாரம் அமைத்து காவா டீ யும் பேரிட்சையும் தரப்படும்,


எத்தனை பேர் வந்தாலும் பிளாஸ்கிலிருந்து சடையாமல் ஊற்றி கொடுக்க ஒரு ஆளை நியமித்துவைத்து இருக்கிறார்கள். சில நேரம் நானும் தொழுது முடித்துட்டு அங்கு போய் இளைபரிட்டு காவா குடிப்பதுண்டு, இது அரேபியர்களில் காஃபி. அவர் கிட்டேயே எங்க கிடைக்கும் இந்த பொடி என்று கேட்டும் வாங்கி கொண்டேன்.


,



பிறகு சில வருடங்களாக வீட்டின் அருகே உள்ள பள்ளிகளிலேயே தினம் தொழ போவோம். இருந்தாலும் ஓவ்வொரு வருடமும்  சின்ன வயதில் கிரான் மா வோடு தொழுதோமே அந்த நாளை எண்ணிதான் பார்க்க தோனும். ஆனால் அது போல் சொந்தங்களோடு கூட்டாக தொழுகை எப்ப தொழுவோம் என நினைத்து கொள்வேன், 27 குர் ஆன் கத்தம் செய்வதால் எங்க மாமியார் பாலும் பழம் கரைத்து எல்லோருக்கும் கொடுப்பார்கள்.மற்றநாட்களில் அம்மா ரோஸ்மில்க் சப்ஜாவிதை சேர்த்து கரைப்பார்கள்.பார்க்கவேகலர் அழகாகாக இருக்கும் பெரிமா நன்னாரி சர்பத் கரைத்து கொடுப்பார்கள்எல்லோருக்கும் விளம்புவதும் ஒன்றாக சேர்ந்து குடிப்பதும் அருமையாக இருக்கும்.

##############################################################################

இன்றுஇரவு 27 தொழுகைக்கு போகனும் மதியம் சகோ,ஹுஸைனாம்மா பதிவு படித்து விட்டு இன்னும் பழைய நாட்கள் ஞாபகம் அதிகமாவே அசை போட்டு கொண்டு இருந்தது.
 பதிவ படிச்சிட்டு கமெண்ட் டும் போட்டுட்டு மாலை நோன்பு திறந்து முடிந்ததும் என் சின்ன பையன் குர் ஆன் முடித்தான் அவனுக்காக கமலா பழ கேசரி செய்தேன்.



(கேசரியில பெயர் போட நேரமில்லை யாராவது சுட்டிங்க அவ்வளவு தான்)

குர் ஆன் முடித்து விட்டு, தரவீஹ் சென்றோம் . அங்கும் தொழுகை முடிந்ததும் இரவு தொழுகை என்ன செய்வது பள்ளியில் சுபுஹ் வரை தொழுவார்கள் காலை வேலைக்கும் போகனும் தள்ள ஆரம்பித்துடுமே. அங்குள்ள பங்களாதேசி, சூடானி,மேங்க்ளூர் பெண்கள் எல்லாம் இதே தான் பேசி கொண்டு இருந்தார்கள் , உடனே தினம் வரும் பங்ளாதேசி பெண் வேனுமுன்னா வாஙக் ஈரானி அம்மா (ஈரானி அம்மாக்கே கர்)  வீட்டுக்கு போய் தொழலாம்.
எனன் ஈரானி அம்மாவா அவங்க வீடு எங்கிருக்கு சரி தொழுகை முடிந்தது கூடவே போய் பார்த்து வைத்து கொண்டு இரவு தொழுகை ஆரம்பிக்கும் நேரத்தையும் கேட்டு வரலாம் என போனால் ஒரு பெரிய வில்லா.
வீட்டு கிட்டதான் , தினம் அதை கடந்து தான் போவேன், வண்டிக்காக காலையில் காத்திருக்கும் போது நிறைய பெண்கள் குர் ஆனுடன் அங்கு போவார்கள்.

தினம் ஒரு நோட்ட்ம் இடுவேன் எப்படியாவது ஒரு நாள் இந்த வீடு எப்படி இருக்குன்னு பார்க்கனும் எனக்கு ஆசை. ஆனால் அவர்களோ ஈரானிகளும் அரபிகளும்.12 மணிக்கு வரனும் என்று சொன்னார்கள்.2.30 க்கும் முடியும் என்றார்கள்.



ரொம்ப சந்தோஷம் நானும் என் கூட இருக்கும் தோழியும் போய் துக்கமே வரல அந்த வீட்டுக்கு போகப்போறோம் என்று 11.30 க்கே ரெடி யாகிட்டோம்.



இரண்டு பேரும் அங்கு போனோம் உள்ளே தொழுகை ஆரம்பிச்சிட்டாங்க போய் சேர்ந்து கொண்டோம் , ஏற்கன்வே ஹால் முழுவது ஆட்கள் நிறம்பி இருந்ததால் முதல் வரிசையில் இடம் கிடைத்தது அங்கே நின்று கொண்டேன்,



இது வரை பள்ளி வாசலில் பெண்கள் பகுதியில் ஆண்கள் பக்கம் தொழவைப்பார்கள் அங்கு தான் மைக் இருக்கும். இங்கு மைக் இல்லாமலே அந்த பெண்ணின் கிரா அத் குரல் மிக அருமையாக இருந்தது. 4 பெண்கள் தொழ வைத்தார்கள்.அதில் ஒரு அம்மா தான் ”ஈரானி அம்மா” அசல் எங்க கிரான்மாவ பார்த்த மாதிரி இருந்தது, 4 பெண்கள் மாற்றி மாற்றி தொழ வைத்தார்கள். மைக் சவுண்டில் தொழ கேட்டு இப்ப பக்கத்திலேயே நின்று ஒதி தொழ வைத்தபோது இன்னும் நல்ல இருந்தது.

அதில் என் தங்கையின் பெயர் கொண்ட ஹுமேரா, இடையில் அடுத்து தொழ வைக்க ஹுமேரா ஹுமேரா என்று கூப்பிட்டார்கள். நம் தங்கை எங்கு திடீருன்ன்னு இங்கே என்று நினைத்தேன், பின்னாடி சோபாவில் கை குழந்தையோடு உட்கார்ந்து இருந்த பெண் நுழையும் போது தொழ வைத்தவர், மீண்டும் கடைசியாக வந்து தொழ மு.டித்தார்கள் அருமையான ராகத்துடன் எல்லா துஆக்களும் ஓதி முடித்தார்கள்.

பிறகு கிளம்புறோம் என்றோம். கை துரு துருன்னு இருந்து எப்படியாவது போட்டோ எடுக்கனும் என்று தெரியாம ஒரு கிளிக்.



வெயிட் பண்ணுங்க சாப்பிட்டு போங்க என்றார்கள் , பிள்ளைகள் இருக்க்கிறார்கள் கிளம்பனும் என்றேன், 10 நிமிடம்தான் வாங்க வந்து உட்காருங்கன்னு வெளி ஹாலுக்கு கூப்பிட்டு போனாங்க.



சுற்றிலும் உள்ள சோபாவில் வ்ந்திருந்த எல்லா பெண்களும் அமர்ந்தோம்.

ஈரானி அம்மாவும் இரண்டு வேலை காரிகளும்,  சின்ன பெண்களும்  நடுவில் உள்ள டேபிலில் எல்லா உணவு பொருட்களையும் கொண்டு வந்து வைத்தார்கள்.


பாயில்ட் டபுள் பீன்ஸ் சுட சுட, இரண்டு வகை ஜூஸ், எள் கார கேக், மஷ்ரூம் பிஸ்ஸா, டேட்ஸ் நட்ஸ் கேக்,இன்னும் ஒரு கான்பிளேக்ஸ் டேஸ்ட் டிலைட்,சாக்லேட் எல்லாம் வைத்து கொடுத்தார்கள்.
.அங்கு இருக்கும் வீட்டு ஆட்களுக்கு உட்கர சோபாவில் இடம் இல்லை , எல்லாம் அழகாக கீழே வட்டமாக உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள், நான் என் பங்கை என் பையனுக்காக எடுத்து வைத்து கொண்டேன். ஈராணி அம்மாவின் அருமையான விருந்தோம்பல், ஓடி ஆடி சிரித்த முகத்துடன் எடுக்க வெக்கப்பட்டாலும் டிரேவை நீட்டி களாஸ் கரோ களாஸ் கரோ என்றார்கள்.கடைசியா சுலைமானி டீயும் வந்தது. குடித்து விட்டு கை கொடுத்து முஸாபா (ஹக்) செய்துட்டு கிளம்பிட்டோம்.




எல்லாமே அந்த இறைவனின் கருனை என்னன்னு நான் சொல்வது , மதியம் 20 வருட முன் தொழுத தொழுகை இனி எப்ப கிடைக்கும் என நினைத்தேன் இரவே ஆண்டவன் நிறைவேற்றி வைத்து விட்டான், அதே சமயம் நீண்ட நாளா அந்த வீட்டிற்குள் போகனும் என்ற என் எண்ணமும் நிறைவேறியது. இதுவரை துபாய் வந்து வெளியில் போய் தொழுததில் இன்று ரொம்ப மனநிறைவாகவும், சந்தோஷமாக வும் இருந்தது. இன்ஷா அல்லா அடுத்தவருடம் இங்கிருந்தா தினம் தராவீஹ் தொழுகைக்கு இங்கு தான் வரனும் என்று நினைத்து கொண்டு வெளியில் வந்தேன்.
அந்த ஈரானி அம்மா வீடு உள்ளே சும்மா சொல்லகூடாது அருமையாக இருந்தது.





தொழுது கொண்டு இருக்கும் இடையில் அர்ரஹ்மான் சூராவும் வந்தது. இது அவர்கள் ஓதி கொண்டு இருக்கும் போது என் டாடி ஞாபகம் வந்து விட்டது கம்பியுட்டரில் சாட், மெயில் உள்ளே உள்ள எந்த ஆப்ரேஷனும் தெரியாது ஆனால் என் பையன் காலேஜ் சேரும் முன் அங்கு இருந்து குர் ஆன் டவுண்ட் லோடு செய்து டெஸ்க் டாப்பில் போட்டு கொடுத்தான் கம்பியுட்டரை ஆன் செய்து குர் ஆன் பகுதியை ஓப்பன் செய்து தினம் கூடவே ஓதிகொண்டு இருப்பார்கள். இந்த சூராவை டாடி ஓதும் போது இன்னும் நல்ல இருக்கும்.



மறுநாள் இந்தியாவில் 27 தொழுகை மம்மியிடம் போன் செய்து பித்ரா கொடுக்க வேண்டியதை கொடுக்க சொல்லிட்டு , முன்பு நாம் எல்லம் ஒன்று சேர்ந்த்து கிரான்மாவுடன் தொழுதது போல் நேற்று போய் தொழுதேன் என்றேன்.ரொம்ப சந்தோஷ பட்டார்கள்.
  நோன்பு 27 பிறை யில் தான் பெரிய பையனும் பிறந்தான்.இன்று காலை போன் செய்தேன்,எப்படி இருக்கே நல்ல இருக்கிறான்னு கேட்டேன். 27 வது ஜுஜு வரேன் மம்மி என்றான், துஆ செய்யுங்கள் என்றான் என்றான் துஆ செய்தேன்.

ஆண்டவன் அனைவரின் நாட்ட தேட்டங்களையும் நிறைவேற்றி வைப்பானாக..

டிஸ்கி: இந்த பதிவு போட்டது வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளில் பெண்களுக்கென தனி இடம் இருக்கு என்பதை தெரிவிக்க தான். நிறைய பெண்கள் ஊரில் எல்லோரோடும் இருந்து விட்டு இங்கு வந்து தனிமையாகிவிடுகிறார்கள். நோன்பு காலங்களிலும் மற்ற நாட்களில் இப்படி போய் தொழுது கொள்ளலாம்.






Thursday, August 25, 2011

பெண்ணரசிகளே உங்கள் கைப்பை கொஞ்சம் கவனியுங்கள்













//இந்த பதிவ படிக்கும் ரங்கமணிகளே உங்கள் தங்கமணிகளுக்கு கண்டிப்பாக இந்த டிப்ஸை சொல்லலுங்கள்.//









எல்லா பெண்களும் வெளியில் போகும் போது கை பை (ஹாண்ட் பேக்) இல்லாமல்  போவதில்லை. நிறைய பேருக்கு உடைக்கேற்ற கை பை கொண்டு செல்ல பிடிக்கும்.


ஷாப்பிங் போகும் போதோ, ஹாஸ்பிட்டல் மற்றும் பல இடங்களுக்கு செல்லும் போது பொருட்களை வாங்கிவிட்டு பில்லை கட்டி விட்டு பில்லையும் மீதி சில்லறையை யும் அவசரமாக கை பையில் திணித்து கொண்டு போவார்கள். அப்படி திணிக்கும் போது ஜிப்பில் கை விரலின் நகம் பட்டு பட்டு நாளைடைவில் அதில் ஓட்டை விழுந்து அவரசரமாக திணீக்கும் பில்கள், வீட்டு சாவி, சில்லறைகள் எல்லாம் அதனுள் சென்று விடும்.


இப்படி அவசரமாக பில்லை தினிப்பது, சில்லரைகள் மட்டும் இல்லை தங்க நகைகள் மோதிரம், மூக்குத்தி ,கம்மல் போன்ற சிறிய நகைகளை அப்பபடியே பேக்கில் போட்டு திணிப்பார்க‌ள்.அதுவும் உள்ளே போய் மாட்டி கொள்ளும்.


சரி சரி அதற்கு இப்ப என்ன செய்யலாம்,
வார‌ம் ஒரு முறையாவ‌து ஹ‌ண்ட் பேக்கை ந‌ன்கு செக் செய்து குலுக்கி தட்டினால் தொலைந்து போன‌ பொருட்க‌ள் எல்லாம் அங்கு கிடைக்கும்.

அப்ப‌டியே அடைத்து வைக்காம‌ல் சிறிது நேர‌ம் கைப்பையை திற‌ந்து வையுங்கள்  ஒரு ஸ்கேல் அல்லது பென்சிலை குறுக்காக‌ வைத்து பிரித்து காற்றோட்ட‌மாக‌ விட்டு பிற‌கு மூட‌வும்.

இது போல் நிறைய‌ பேருக்கு காணாம‌ல் போன‌ மூக்குத்தி க‌ம்ம‌ல் எல்லாம் ரொம்ப நாள் கழித்து கிடைத்துள்ள‌து.


இப்படி தான் ஒரு பெண் ஹாஸ்பிட்டலுக்கு பிரசவத்துக்கு போகும் போது டாக்டர் ஹேர் கிளிப், கம்மல்,மூக்குத்தியை கழட்ட சொன்னார்கள், அந்த பெண் இப்படி கழற்றி அவசர அவசரமா திணித்ததில் அது இப்படி தான் உள்ளே மாட்டி கொண்டு ரொம்ப நாள் கழித்து கிடைத்தது.

கை பை உட்புறம் லைனிங் துணி மெல்லியதாக வைத்து தைத்துஇருப்பதால் இப்படி ஆகுது.

இது போல் நடக்காமல் பல தேவையான பில்கள், சாவிகள், சில்லறைகள் , நகைகளை பாது காத்து கொள்ளுங்கள்.


டிஸ்கி: இந்த பதிவு எல்லா பெண்களுக்கும் கண்டிப்பாக பயனுள்ளது, ஆனால் ஒரு நாளை எத்தனையோ பேர் பார்வையிடுகிறீர்கள் ஆனால் ஒரு நன்றி கடனுக்காகவாவது உங்கள் பொன்னான கருத்தை பதிக்கலாமே///
இந்த பதிவ படிக்கும் ரங்கமணிகளே உங்கள் தங்கமணிகளுக்கு கண்டிப்பாக இந்த டிப்ஸை சொல்லலுங்கள்.




Tuesday, August 23, 2011

இனிப்பு மாங்காய் டேங்க் கடல் பாசி - Mango Tank Agar Agar

நோன்பு காலங்களில் இஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்க படுவது கடல் பாசி இது உடல் சூட்டை  தணிக்கும். இங்கு ஏற்கனவே பல வகையில் செய்து குறிப்புகள் கொடுத்துள்ளேன் அதில் இப்ப முயற்சி செய்தது. ரொம்ப அருமை..நீங்களும் முயற்சித்து உங்கள் பொன்னான கருத்துக்களை வந்து சொல்லுங்கள்.


தேவையனவை
கடல் பாசி - ஒரு கை பிடி அளவு
தண்ணீர் - இரண்டறை டம்ளர்
மேங்கோ டேங்க் - இரண்டு மேசை கரண்டி
மேங்கோ எசன்ஸ் - இரண்டு துளி
இனிப்பு மாங்காய் - முன்று துண்டுகள்
சர்க்கரை - 50 கிராம்


கடல் பாசியை கழுவி இரண்டறை டம்ளர் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவைத்து காய்ச்சவும்.

நல்ல கரைந்து வரும் போது சர்க்கரை டேங்க் பவுடர் மாம்பழ எசன்ஸ் சேர்த்து கலக்கி ஒரு சதுர வடிவ கண்டெயினரில் ஊற்றை மாங்காய் துண்டுகளை பொடியாக அரிந்து தூவி ஆறவைத்து பிரிட்ஜில் வைக்கவும்.


மாலை நோன்பு திறக்கும் வேலையில் எடுத்து துண்டு போட்டு சாப்பிடவும்.

அருமையான ருசியான சுவையுள்ள இனிப்பு மாங்காய் டேங்க் கடல் பாசி ரெடி.



Monday, August 22, 2011

தொடர் மரணம்

அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ் கூறுகிறான்: -


ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 21:35)



வாப்பா மரணத்துக்கு பிறகு தொடர்ந்து மரண செய்திகள் தான் ஆண்டவன் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பானாக? இதே ஏன் ஏன் என்று கேள்வி கேட்டு கொண்டே அவர்கள் பேசிய பேச்சை பேசி பேசி ஆற்றி கொண்டு இருக்கிறோம்.

அடுத்து எங்க சொந்தங்களிலே

ஒருவர் பெண்களுக்கு நிச்சயத்துவிட்டு வெளிநாடு வந்த போது ஏர்போர்டிலேயே ஹார்ட் அட்டாக் வந்துள்ளது இங்குள்ள ஹாஸ்பிட்டலில் சேர்த்து சிகிச்சை பெற்று நல்ல ஆகி மறுபடி பெங்க்ளூரில் சிகிச்சை பெற்று சென்னை வந்து இரண்டு நாளில் இறைவனடி சேர்ந்தார்,
என்னத்த சொல்வது அவருக்கு முன்பே ஹார்ட் அட்டாக் வந்துள்ளதாம் வீட்டுக்கு சொல்லாமல் மறைத்து இருக்கிறார்.
இப்ப பாதிக்க பட்டது யார்.. முதலே நல்ல முறையில் சிகிச்சை பெற்று இருக்கலாம்.

மற்றொருவர் பெண்ணிற்கு கல்யாணம் முடித்து பேரபிள்ளையை பிறக்கும் நேரத்தில் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார்.

40 வயதை அடையும் போதே ஜெனரல் செக்கப் பண்ணிகொள்வது நல்லது.

இன்னொரு குடும்பத்தில் ஒரு பொண்ணு இப்படி அடுத்து அடுத்து கேட்டு ரொம்ப மனக்‌ஷ்டமாக இருக்கு.

எல்லாம் இறைவனில் கணக்கு நாம் ஒன்றும் சொல்லுவதற்கில்லை


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


பதிவுலக சகோ.எம் அப்துல் காதர் - ஆஹா பக்கங்கள் , மூத்த சகோதரி ஜுலை 31 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்கள். துஆ செய்யுங்கள் .

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இந்த நோன்பில் என் தங்கையின் மாமியாரும், என் பெரிமா ( வாப்பாவின் அண்ணன் மனைவியும் இறைவனடி சேர்ந்தார்கள்.பெரிமாவை நினைத்தால் ரொம்ப மனவருத்தமாக இருக்கு. சின்னதில் எல்லாம் ஒரே குடும்பமாக இருந்தோம்.

இன்னும் பதிவுலகில் முன்று பேர் குறிப்பிட்டு இருந்தார்கள்
இப்படி தொடர் மரணச்செய்தி ரொம்பவே வருத்தமாக இருக்கிறது

 ஆண்டவன் அனைவரின் குடும்பங்களுக்கும் மன அமைதியை கொடுத்து சகஜ நிலை படுத்த தூஆ செய்வோம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் செய்யவேண்டிய துஆ:-

“முஃமினான மண்ணறைவாசிகளே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். நிச்சயமாக நாங்களும் அல்லாஹ் நாடினால் உங்களை மரணம் மூலம் சந்திப்பவர்களே!”
அறிவிப்பவர் : அபூஹுரைரா, رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்கள் : முஸ்லிம், அஹ்மது, நஸயீ.
*********************************************************************
“முஃமினான, முஸ்லிமான மண்ணறை வாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! நிச்சயமாக, இன்ஷா அல்லாஹ், நாங்களும் உங்களை அடுத்து வருபவர்களே! உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்விடம் சுகவாழ்வைக் கேட்கிறோம்”
அறிவிப்பவர் : புரைதா رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்கள்: முஸ்லிம், அஹ்மது, இப்னு மாஜா.
***********************************************************************8
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் இறந்து விட்டால்


அவனுடைய செயல் முடிந்து விடுகிறது, ஆனால் மூன்று விதமான செயல்கள் மட்டும்

எஞ்சியிருக்கின்றன.



1. 1. அதாவது மக்கள் காலங்காலமாக பயன் அனுபவித்து வரும் வகையிலான தருமங்கள்.

2. 2. பயன் அளிக்கும் கல்வி

3. 3. அவனுக்காகப் பிராத்தனை புரிந்து வரும் நல்ல பிள்ளைகள்



அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி)

ஆதாரம் : முஸ்லிம், மிஷ்காத்

******************************************************************

-- இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்"
நபி(ஸல்)அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி
 ***************************************************************************
 
டிஸ்கி: இந்த நோன்பு நேரத்தில் நோன்பு திறக்கும் போது சுட சுட வ்டை பஜ்ஜி கஞ்சி வகைகளை குடிக்காதீர்கள்.
கொஞ்சம் ஆற்றி சாப்பிடுங்கள் , பேரிட்சை, ஜூஸ் கஞ்சிக்கு பிறகு எண்ணையில் பொரித்த ஐட்டங்களை சாப்பிடுங்கள், ஊரில் ஒருவருக்கு சுட சுட சாப்பிட்டதின் விளைவாக கடுமையான வயிற்று வலி, காலி வயிற்றில் முதல் முதல் நீராகாரம் சாப்பிடுவது நல்லது.
 

Friday, August 19, 2011

ஃப்ரவுன் அரிசி வாழைப்பழ குழிபணியாரம் - brown rice banana kuzipaniyaram


தேவையானவை
ஃப்ரவுன் அரிசி – அரை ஆழாக்கு
மைதா மாவு  - அரை ஆழாக்கு
வெல்லம் – இரண்டு அச்சு
பெரிய கனிந்த வாழைப்பழம் ஒன்று
ஏலக்காய் – 3
தேங்காய் – இரண்டு பத்தை
இட்லி சோடா – ஒரு பின்ச்
எண்ணை – சுட தேவையான அளவு
பாதம் பொடித்த்து – ஒரு தேக்கரண்டி
சுக்கு பொடி – அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிக்கை



செய்முறை
ஃப்ரவுன் அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.
ஊறிய அரிசியை கிரைண்டரில் அரைத்து அத்துடன் சிட்டிக்கை உப்பு,ஏலம்,மைதா சேர்த்து அரைத்து கடைசியாக வாழைபழத்தை நருக்கி சேர்த்து அரைக்கவும்.
வெல்லத்தை பொடித்து அத்துடன் சிறிதுதண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
மாவில் இட்லி சோடா, பொடித்த பாதம், சுக்குபொடி, தேங்காய் பொடியாக அரிந்து சேர்க்கவும்.
வெல்ல கரைசல் ஆறியதும் மாவில் வடிக்கட்டி சேர்க்கவும்
மாவை நன்கு கலக்கவும்..

குழி பணியார சட்டியை காயவைத்து லேசாக எண்ணை ஒரு துளி விட்டால் போதும். மாவை ஊற்றி தீயின் தனலை மிதமாக வைத்து முடிபோடு 2 நிமிடம் வேக விடவும்
மறுபுறம் திருப்பி போட்டு மேலும் சிறிது எண்ணைவிட்டு மூடி போட்டு 2 நிமிடம் வேகவிடவும்.
சுவையான வாழை பழ குழிபணியாரம் ரெடி

குறிப்பு
இனிப்பு குழிபணியாரங்களை பல விதமாக செய்யலாம், மைதாவிற்கு பதில் கோதுமைமாவையும் சேர்க்கலாம். அரிசி பச்சரிசியிலும் செய்யலாம். அசைவ பிரியர்கள் முட்டை சேர்த்து கொள்ளலாம். முட்டை சேர்த்தால் இன்னும் நல்ல பொங்கி வரும்.
குழந்தைகளுக்கு நெய் ஊற்றியும் சுடலாம்.வெல்லகரைசல் கட்டியாக ஒரு நாள் முன்பே செய்து பிரிட்ஜில் வைத்து ஊற்றினால் நல்ல இருக்கும்.


Sunday, August 14, 2011

சுதந்திர தின ஊத்தாப்பம்





தேவையானவை

தோசை மாவு - இரண்டு பெரிய குழிகரண்டி

கேரட் துருவியது - தேவைக்கு

வெங்காயம் - தேவைக்கு

கொத்துமல்லிகால் கப்,பச்சமிளகாய்-1 கொட மிளகாய் கால் கப்

எண்ணை + நெய் - சிறிது



//சுந்தந்திர தின ஊத்தாப்பம் அருசுவை மற்றும் தமிழ் குடும்ப , பிலாக் தோழி விஜி செய்தது பார்த்து முன்பு செய்தது.இப்ப தான் போஸ்ட் பண்ண முடிந்தது. என் முறைப்படி செய்துள்ளேன்.//



செய்முறை

தோசை தவ்வாவை காயவைத்து தோசைமாவை ஒரு குழிகரண்டி எடுத்து தடிமனாக ஊற்ற்வும், பாதி வேகும் போது துருவிய கேரட், அடுத்து பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், அடுத்து பொடியாக அரிந்து வைத்துள்ள கொத்துமல்லி, பச்சமிளகாய், கொடமிளகாயை வரிசையாக தூவி  சுற்றிலும் எண்ணை + நெய் சிறிது ஊற்றி முடி போட்டு வேகவிடவும்.
வெந்ததும் தோசையை திருப்பி போட்டு இரண்டு நிமிடத்தில் எடுத்து விடவும், திருப்பி போடமலும் எடுக்கலாம்/.


சுதந்திர தின கடல் பாசி

பதிவுலக தோழ தோழியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள். அகிம்சை முறையில் போராடிய காந்திஜீயை நினைவு கூறுங்கள்..



Thursday, August 11, 2011

டயட் நோன்பு கஞ்சி - Deit Ramadan Soup

டயட் நோன்பு கஞ்சி


நோன்பு கஞ்சி இல்லாத நோன்பே கிடையாது. வருட வருடம் நோன்பு வந்து விட்ட்து என்றால் மாலை இஃப்தாருக்கு அனைவரின் இல்லத்திலும் தயாரிப்பது நோன்பு கஞ்சியும் அதுக்கு துணையா பஜ்ஜி கட்லெட் சமோசா இதில் ஏதாவது ஒன்று. காலையில் இருந்து நோன்பு நோற்று மாலை நோன்பு திறக்கும் போது இந்த கஞ்சியை முதலில் குடிப்பதால் வயிறு குளிர்ந்து எந்த உபாதையும் இல்லாமல் இருப்ப்து நோன்பு கஞ்சி தான், இது ஊருக்கு ஊர் செய்முறைகள் மாறுபடும். நான் பல முறைகளில் செய்து பார்த்தாச்சு, இப்ப நேற்று செய்த்து எண்ணையில்லாமல் அதாவது தாளிப்பு இல்லாமல் செய்து பார்க்கலாம் என்று செய்தேன். குடிக்க பாகமாக அருமையாக இருந்த்து.



இதில் எனக்கு ரொம்ப பிடித்த்து சென்னையில் பள்ளி வாசல்களில் கொடுக்கும் நோன்புகஞ்சி சூப்பர் அது மொத்த்மாக பெரிய தேக்‌ஷாவில் செய்வதால் சுவை இன்னும் கூடும்.

கஞ்சி குடித்துவிட்டு கண்டிப்பாக லெமன் ஜூஸ் குடிக்க ரொம்ப பிடிக்கும்/



தேவையானவை

பொடித்த நொய் (அரிசி பொடித்த்து) – அரை டம்ளர்

கடலை பருப்பு – இரண்டு மேசைகரண்டி

கேரட் – ஒரு சிறிய துண்டு

வெங்காயம் – ஒன்று

தக்காளி – ஒன்று

பச்ச மிளகாய் – ஒன்று

உப்பு – தேவைக்கு

பொடியாக அரிந்த இஞ்சி - அரை ஸ்பூன்

பொடியாக அரிந்த பூண்டு - முன்று

கொத்துமல்லி தழை – சிறிது

புதினா – சிறிது



மட்டன் (அல்லது) சிக்கன் கீமா – 100 கிராம்

மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

உப்பு – கால் தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி (பட்டை,ஏலம்,கிராம்பு தூள்)



செய்முறை



அரிசியை பொடித்து நொய்யாக அரை டம்ளர் எடுத்து அத்துடன் கடலை பருப்பை ஊறவைக்கவும்.

கீமா (மட்டன் (அ) சிக்கனை எடுத்து கழுவி சுத்தம் செய்து அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு , கரம் மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.

ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க் வைத்து கொதி வரும் போது ஊறிய அரிசி + கடலை பருப்பை போடவும்.

தேவைக்கு (ஒரு ஸ்பூன் ) உப்பு சேர்த்து கேரட் துருவி போட்டு, இஞ்சி , பூண்டு, வெங்காயம் அரிந்து போட்டு, தக்காளியை நீளவாக்கில் நான்காக அரிந்து சேர்த்து , பச்சமிளகாயையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க விட்டு வேக விடவும்.

நன்கு வெந்து கொண்டு இருக்கும் போது வெந்து வைத்துள்ள கீமாவையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கடைசியாக கொத்துமல்லி தழை, புதினா, ஒரு ஸ்பூன் நெய் விட்டு இரக்கவும். தேவைபட்டால் சிறிது தேங்காய் பவுடர் கரைத்து ஊற்றிக்கொள்ளலாம்.



பிரஷர் , சுகர் உள்ளவ்ர்கள் பிரியாணி போல் தாளித்த கஞ்சி அதிகம் சாப்பிட முடியாது. எண்ணை இல்லாமல் இருப்பதால் இதைதாராளமாக நல்ல குடிக்கலாம்.தாளிப்பு சுவைதான் பிடிக்கும் என்பவர்கள் கடைசியாக சிறிது எண்ணை + நெய் கலந்து பட்டை சிறிய துண்டு போட்டு வெங்காயம், சிறிது இஞ்சி பூண்டு, கருவேப்பிலை போட்டு தாளித்து குடிக்கலாம்.

பேச்சிலர்களுக்கு இந்த முறை கொஞ்சம் ஈசியாக இருக்கும், குக்கர் இல்லாதவர்கள் இப்படி சட்டியில் வெளியில் கஞ்சியை வேகவைத்து செய்யலாம்.

Iftar Menu
கீமா கஞ்சி ,வாழக்காய் பஜ்ஜி , தர்பூஸ், லெமன் ஜூஸ், பேரிட்சை புதினா சட்னி,பழங்கள்



சிக்கன் சூப், ரோஸ் மில்க், உளுந்து வடை, கல்கண்டு வடை, வெங்காய பஜ்ஜி,கருப்பு கொண்டைகடலை சுண்டல், ஜவ்வரிசி கடல் பாசி, பழங்கள்


மேங்கோ  கடல் பாசி, சாக்லேட் கடல் பாசி, ரூ ஆப்ஷா கடல் பாசி
இப்படி கஞ்சியில் வடை பிச்சி போட்டு கூடவே புதினா சட்னி சேர்த்து சாப்பிட்டால் சூப்பர் தான்..






டிஸ்கி: என்ன படிச்சாச்சா பயனுள்ளதா இருந்ததா? அப்படி காசா பணமா உங்கள் கருத்தையும் சொல்லிட்டு ஒரே ஒரு ஓட்டையும் போட்டுட்டு தான் போறது.

Tuesday, August 9, 2011

சாப்ரான் ஜின்ஜர் கிரேப் கூலர் - Saffron ,Ginger Grape Cooler



பித்தம்,சூடு, வயிற்று வலி, பெண்களுக்கு மாத விடாய் காலத்து வயிற்று வலிக்கு மிகவும் நல்லது. நோன்புகாலத்திற்கு ஏற்ப அருமையான பானம்.

தேவையான பொருட்கள்
  • கருப்பு திராட்சை - அரை கிலோ
  • உப்பு - ஒரு சிட்டிகை
  • சர்க்கரை - ஐந்து டேபுள் ஸ்பூன்
  • தண்ணீர் - இரண்டு கப்
  • இஞ்சி சாறு - மூன்று டேபுள் ஸ்பூன்
  • குங்மப்பூ - இரண்டு இதழ்
  • ஐஸ் கியுப்ஸ் - ஆறு



செய்முறை
  • திராட்ச்சையில் ஒரு பத்து பதினைந்து எடுத்து மேல் தோல் உரித்து கொட்டையை எடுத்து ஒவ்வொன்றையும் நான்காக அரிந்து தனியாக எடுத்து வைக்கவும்.
  • மீதி உள்ள திராட்சையில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு மிக்சியில் விப்பரில் ஒடவிட்டு, மிக்சியில் நல்ல பத்து நிமிடம் ஓட விட்டு வ்டிகட்டி பெரிய ஜுஸ் டம்ளரில் ஊற்றி கட் பண்ணி வைத்துள்ள திராட்சையை எல்லா டம்ளரில் போடவும்.

குறிப்பு:
திராட்சை சிலது புளிக்கும் ஆகையால் இஞ்சி சாறு சேர்க்க வேண்டும். திராட்சை குளுமை சிலபேருக்கு தொண்டை பிடிக்கும் ஆகையால் குங்மப்பூ சேர்த்தால் இஞ்சி, குங்குமப்பூ சேர்ந்து சளியை கட்டு படுத்தும்.




Monday, August 8, 2011

பாலக் கீரை போண்டா,பேரிட்சை புதினா துவையல் - Palak Bonda,dates mint chutney




நோன்பு காலங்களில் கஞ்சிக்கு பகோடா, உளுந்து வடை, போண்டா, சமோசா இப்படி ஏதாவது கூட வைத்து சாப்பிட இது போல அயிட்டங்களில் ஏதாவது ஒன்றும் கூடவே சட்னியும் இருந்தால் தான் அது கஞ்சி சாப்பிட காம்பினேஷன் சரியாக இருக்கும், சட்னி அதிலும் 5 பேரிட்சையை புதினாவுடன்

Saturday, August 6, 2011

பெசரட் குழி பணியாரம், பாசி பயிறு இனிப்பு சுண்டல் - Pesarat kuzipaniyaram, sweet sundal



பெசரட் குழிபணியரம்

தேவையானவை

பச்சரிசி  அரை கப்
முழு பாசி பயிறு  - அரை கப்
இஞ்சி - அரை இன்ச் அளவு
பச்சமிளகாய் - இரண்டு

Wednesday, August 3, 2011

துபாயில் இஃப்தார் -பேச்சுலர்கள் பாகம் - 3




துபாயில் பேச்சிலர்களின் வாழ்க்கை பாகம் - 1

துபாயில் பேச்சிலர்களின் வாழ்க்கை பாகம் - 2


நோன்பு காலம் வந்துவிட்டால் துபாயில் வேலை நேரம் அரை நாள் தான்.
வேலை முடிந்ததும் பேச்சுலர்கள் ரூமில் நன்கு ஓய்வெடுத்து கொண்டு பிறகு மாலை இஃப்தாருக்கு ரெடி பண்ணுவார்கள். ஆனால் காலை சஹருக்கு தான் சில பேச்சிலருக்கு

Monday, August 1, 2011

நோன்பு கால சமையல் டிப்ஸ் = 2



நோன்புகால சமையல் டிப்ஸ் - 1


1. தினம் ஜூஸ் குடிப்பதால், பழங்கள் சாப்பிடுவதால் தொண்டை கட்டும், சிலருக்கு தொண்டை கர கரப்பு ஏற்படும், தராவீஹ் தொழும் போது கனைத்து கொண்டே இருப்பார்கள், அதற்கு சுக்கு, ஏலம், கிராம்பு, மிளகு தட்டி போட்டு டீ குடிக்கலாம். இல்லை இதை பொடித்தும் டீ தூளுடன் கலந்து கொள்ளலாம்





2.கடல் பாசி செய்து ஆறவைக்கும் போது காய்ச்சியதும் சின்ன தட்டில் ஊற்றி மேல கீழ கொட்டுவதை விட இப்படி ஒரு பெரிய சட்டியில் காய்ச்சி ஆறவத்து குளிர வைக்கலாம். ஆறி கட்டி ஆகி குளிர்ந்ததும் துண்டுகள் உடையாமல் தனித்தனியாக எடுக்க வரும்.









3. தினம் செய்யும் கஞ்சிக்கு அரிசியை பொடித்து வைத்து கொள்ள வேண்டும் அதன் அளவு ஒரு கிலோ அரிசியை மிக்சியில் நன்கு பொடித்து கால் கிலோ அளவிற்கு பச்ச பருப்பை கருகாமல் வருத்து , ஒரு மேசை கரண்டி அளவிற்கு வெந்தயம் சேர்த்து கலந்து வைக்கவும்.தினம் தேவைக்கு அரை டம்ளர் ஒரு டம்ளர் என்று எடுத்து செய்து கொள்ளலாம்.





4. சமோசா, ஸோமாஸி கட்லெட் போன்றவற்றை அதிகமாக செய்து பிரிட்ஜில் ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும், ஒரு மணி நேரம் கழித்து அது நல்ல பிரீஜ் ஆகி இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து ஒரு கவரில் அல்லது கண்டெயினரில் போட்டு வைத்து கொள்ளலாம். நோன்பிற்கு பொரிக்கும் சமையத்தில் அரை மணி நேரம் முன் எடுத்து ஒரு தட்டில் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் அடுக்கி வைத்து ஐஸ் விட்டதும் பொரித்து கொள்ளலாம்.




5. இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லாவகையான அசைவ சமையலுக்கும் தேவைபடும், அது ஒரு கிலோ இஞ்சிக்கு, 600 கிராம் பூண்டு சேர்த்து அரைத்து லேசாக உப்பு தூவி ஒரு பெரிய பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளலாம். சில பேருக்கு இஞ்சி பூண்டு அரைத்து வைத்தால் பச்சையாகிவிடும் அது பூண்டு அதிகம் சேர்த்து இருந்தால் அப்படி ஆகும்.






6. தினம் ரொட்டி , சப்பாத்தி பரோட்டா சாப்பிடுபவர்கள், மாவு குழைத்து உருண்டைகள் போட்டு இப்படி மாவு தூவி டைட்டான கன்டெயினரில் போட்டு இப்படி வைத்து கொண்டால் சுடும் போது எடுத்து சுட்டு சாப்பிட்டு கொள்ளலாம். ரொம்ப ஈசியாக இருக்கும் தண்ணீர் விடாமல் இருக்கும்.








7.சிலர் சகருக்கு சாப்பிட சாதம் பிடிக்காது அவர்கள் இது போல் மொத்தமாக ரொட்டியை அடுக்கு போட்டு லேசாக எண்ணையில்லாமல் இரண்டு பக்கம் திருப்பி போட்டு ஆறவைத்து மொத்தமாக அடுக்கிவைத்து கொள்ளலாம். தேவைக்கு எடுத்து எண்ணை விட்டு சுட்டு சாப்பிடவும்.இது என் அண்ணி எனக்கு சொன்ன டிப்ஸ்

8. நோன்பில் சகரில் ஈசியாக சாப்பிட்டு முடிக்க கட்டு சாதம் (லெமென் ரைஸ், புளி சாதம், லைட் மசாலா கொடுத்து பிரியாணி, தக்காளிசாதம், தயிர் சாதம், மோர்குழம்பு, ரசம் வகைகள்
சேமியா ) இதுபோலும் செய்து சாப்பிடலாம்.



9. சிலர் மீதியான சாதத்தில் கஞ்சி செய்வார்கள் அது அந்த அளவிற்கு டேஸ்ட் வராது , அரிசி பொடித்து நொய்யில் போடுவது தான் நல்ல இருக்கும்.


10. தினம் ரசம் செய்ய, புளி குழம்பு செய்ய புளி பேஸ்ட் செய்து பிரீஜ் செய்து வைத்து கொள்ளுங்கள், தேவைக்கு உடனே இரண்டு முன்று கியுப்ஸ் எடுத்து போட்டு கொள்ளலாம்.புளி பேஸ்ட் செய்வது (கால் கிலோ அளவிற்கு புளி எடுத்து குக்கரில் முன்று நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு இற‌க்குங்கள் ஆறியதும் கரைத்து வடிகட்டி ஐஸ்கியுப்கள் அல்லது சின்ன கவர்களில் ஒரு நாளைக்கு தேவையான அளவை கட்டி வைத்து கொள்ளலாம்.



11. குருமா, கஞ்சிக்கு தினம் தேங்காய் பால் தேவைபடும் அதற்கு தேங்காய், முந்திரி பாதம் சேர்த்து அரைத்து ஐஸ் கியுபுகளாக்கி பிரீஜரில் வைத்து கொண்டால் வேலை சுலபம். வெளி நாடு களில் தேங்காய் பொடி கிடைக்கிறது.
ஏற்கனவே முன்பு போட்ட பதிவுதான், இருந்தாலும் இப்ப எல்லோருக்கும் உதவும்.

டிஸ்கி 1.8.2011
இந்த தடவை நோன்பு நேரம் அதிகமாக உள்ளதாலும் சரியான வெயிலாக இருப்பதாலும் வாய் புண்கள் வயிற்று புண்கள் அதிகம் வரலாம், அதற்கு பானவகைகள், பழ சாறுகள், ஜவ்வரிசி கஞ்சி ,கீர், பாயாசம் என்று செய்து தினமும் சேர்த்து கொண்டால் நல்லது.