Thursday, August 25, 2011

பெண்ணரசிகளே உங்கள் கைப்பை கொஞ்சம் கவனியுங்கள்













//இந்த பதிவ படிக்கும் ரங்கமணிகளே உங்கள் தங்கமணிகளுக்கு கண்டிப்பாக இந்த டிப்ஸை சொல்லலுங்கள்.//









எல்லா பெண்களும் வெளியில் போகும் போது கை பை (ஹாண்ட் பேக்) இல்லாமல்  போவதில்லை. நிறைய பேருக்கு உடைக்கேற்ற கை பை கொண்டு செல்ல பிடிக்கும்.


ஷாப்பிங் போகும் போதோ, ஹாஸ்பிட்டல் மற்றும் பல இடங்களுக்கு செல்லும் போது பொருட்களை வாங்கிவிட்டு பில்லை கட்டி விட்டு பில்லையும் மீதி சில்லறையை யும் அவசரமாக கை பையில் திணித்து கொண்டு போவார்கள். அப்படி திணிக்கும் போது ஜிப்பில் கை விரலின் நகம் பட்டு பட்டு நாளைடைவில் அதில் ஓட்டை விழுந்து அவரசரமாக திணீக்கும் பில்கள், வீட்டு சாவி, சில்லறைகள் எல்லாம் அதனுள் சென்று விடும்.


இப்படி அவசரமாக பில்லை தினிப்பது, சில்லரைகள் மட்டும் இல்லை தங்க நகைகள் மோதிரம், மூக்குத்தி ,கம்மல் போன்ற சிறிய நகைகளை அப்பபடியே பேக்கில் போட்டு திணிப்பார்க‌ள்.அதுவும் உள்ளே போய் மாட்டி கொள்ளும்.


சரி சரி அதற்கு இப்ப என்ன செய்யலாம்,
வார‌ம் ஒரு முறையாவ‌து ஹ‌ண்ட் பேக்கை ந‌ன்கு செக் செய்து குலுக்கி தட்டினால் தொலைந்து போன‌ பொருட்க‌ள் எல்லாம் அங்கு கிடைக்கும்.

அப்ப‌டியே அடைத்து வைக்காம‌ல் சிறிது நேர‌ம் கைப்பையை திற‌ந்து வையுங்கள்  ஒரு ஸ்கேல் அல்லது பென்சிலை குறுக்காக‌ வைத்து பிரித்து காற்றோட்ட‌மாக‌ விட்டு பிற‌கு மூட‌வும்.

இது போல் நிறைய‌ பேருக்கு காணாம‌ல் போன‌ மூக்குத்தி க‌ம்ம‌ல் எல்லாம் ரொம்ப நாள் கழித்து கிடைத்துள்ள‌து.


இப்படி தான் ஒரு பெண் ஹாஸ்பிட்டலுக்கு பிரசவத்துக்கு போகும் போது டாக்டர் ஹேர் கிளிப், கம்மல்,மூக்குத்தியை கழட்ட சொன்னார்கள், அந்த பெண் இப்படி கழற்றி அவசர அவசரமா திணித்ததில் அது இப்படி தான் உள்ளே மாட்டி கொண்டு ரொம்ப நாள் கழித்து கிடைத்தது.

கை பை உட்புறம் லைனிங் துணி மெல்லியதாக வைத்து தைத்துஇருப்பதால் இப்படி ஆகுது.

இது போல் நடக்காமல் பல தேவையான பில்கள், சாவிகள், சில்லறைகள் , நகைகளை பாது காத்து கொள்ளுங்கள்.


டிஸ்கி: இந்த பதிவு எல்லா பெண்களுக்கும் கண்டிப்பாக பயனுள்ளது, ஆனால் ஒரு நாளை எத்தனையோ பேர் பார்வையிடுகிறீர்கள் ஆனால் ஒரு நன்றி கடனுக்காகவாவது உங்கள் பொன்னான கருத்தை பதிக்கலாமே///
இந்த பதிவ படிக்கும் ரங்கமணிகளே உங்கள் தங்கமணிகளுக்கு கண்டிப்பாக இந்த டிப்ஸை சொல்லலுங்கள்.




31 கருத்துகள்:

Chitra said...

useful tips. :-)

athira said...

ஜலீலாக்கா இது முந்தி நீங்க போட்டிருக்கிறீங்களே.. நான் படித்த ஞாபகம்.... அது உங்களின் மற்றைய புளொக்கோ?

நல்ல தகவல்... மீண்டும் ஞாபகப்படுத்தியிருக்கிறீங்க.

Chitra said...

Correct , useful info. I've experienced this many times ;)

Lifewithspices said...

must follow tips..thanks!!

சாருஸ்ரீராஜ் said...

nice tips

Hema Nova said...

Really nice and useful tips to everybody

ADHI VENKAT said...

பயனுள்ள தகவல்கள்...
இனிமேல் நீங்க சொன்னது ஞாபகம் வரும்.

ChitraKrishna said...

//வார‌ம் ஒரு முறையாவ‌து ஹ‌ண்ட் பேக்கை ந‌ன்கு செக் செய்து குலுக்கி தட்டினால் தொலைந்து போன‌ பொருட்க‌ள் எல்லாம் அங்கு கிடைக்கும்.// :)

thanks for the useful tips.

பித்தனின் வாக்கு said...

good advice and useful.

Please give your hand bag with dhirams. i will check it properly.

Antha kolukattai enna aachu?

ஸ்ரீராம். said...

தங்கமணியிடம் சொல்லி விட்டேன்! ஒரு கைப்பைக்குள் கணிசமாகச் சில்லறை நாணயங்கள் சில மாட்டியுள்ளன. அவற்றை எடுக்க முடியாமல் இருக்கும் அவஸ்தையைச் சொன்னார்கள். ஆனாலும் தொலைந்து போன ஒரு கம்மல் கிடைக்கவேயில்லை. (ஹி...ஹி...அது ரெங்கநாதன் ஸ்ட்ரீட்டில் தொலைத்தது!)

குறையொன்றுமில்லை. said...

நல்லதகவல்கள் மீண்டும் பகிர்ந்ததுக்கு
நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

பயனுள்ள தகவல்கள்.

R.Gopi said...

அருமையான, அனைவருக்கும் உபயோகமான டிப்ஸ்கள் கொண்ட பதிவு...

வாழ்த்துகள் ஜலீலா....

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்

நம்ம எங்க போனாலும் தூக்கி மாட்டிகிறது.எங்க போனாலும் முதல் பட்ஜெட்டும் இதுக்கு தான் .


பயனுள்ள தகவல்கள்.வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

ஆமாக்கா, கைப்பையை குப்பைப்பையாக ஆக்கிவிடக்கூடாது. மீள்பதிவு செய்து ஞாபகம் செய்தமைக்கு நன்றி!!

தெய்வசுகந்தி said...

nice tips!!

Jaleela Kamal said...

நன்றி
சித்ரா

Jaleela Kamal said...

அதிரா இது முன்பு டிப்ஸ் பிளாகில் போட்டது அதான் இப்ப இழுத்து முடியாச்சே,
அப்ப நீங்க அங்க கமெண்ட் போட்டு இருந்தீங்க , கண்டு பிடிச்சீட்டீங்களா?

ஒகே
திரும்ப ஞ்பக ப்டுத்துவதும் நல்லதல்லவா?

Jaleela Kamal said...

ஆமாம் சித்ரா இது எல்லா பெண்களுக்கே இது போல அனுபவம் உண்டு

Jaleela Kamal said...

நன்றி கல்பனா


சாரு வாங்க ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க மிக்க நன்றி


புது வருகை யுவனா வாங்க வருகைக்கும் மிக்க நன்றி
ஆமாம் இது அனைவருக்கும் பயன் படக்கூடிய டிப்ஸ்.

Jaleela Kamal said...

வாங்க கோவை2தில்லி
கண்டிப்பா இத படிக்கிறவங்களுக்கு ஹாண்ட் பேக் எடுக்கும் போது இந்த ஜலீலாக்கா சொன்னது ஞாபகம் வரும்

Jaleela Kamal said...

வாங்க சித்ரா கிருஷனன் வருகைக்கு கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

அஸ்கு புஸ்கு ரொம்ப நாள் கழித்து வந்ததும் இல்லாம, ஐ வாங்க உங்க வீட்டு ஹாண்ட் பேக செக் பண்ண சொனன,

கொழுக்கட்ட மேட்டர் முடித்து 2 வருடம் காலம் ஆகுது

இன்னும் அந்த கொழுக்க்ட்டைய நீங்க மறக்கலையா?


சரி சரி உஙக்ள் அட்ரஸ் கொடுங்க பார்சல் அனுப்பிடுரேன்


சுதாகர் சார் பல மாதங்கள் கழித்து வந்த்மைக்கு மிக்க் நன்றி

Jaleela Kamal said...

//தங்கமணியிடம் சொல்லி விட்டேன்! ஒரு கைப்பைக்குள் கணிசமாகச் சில்லறை நாணயங்கள் சில மாட்டியுள்ளன. அவற்றை எடுக்க முடியாமல் இருக்கும் அவஸ்தையைச் சொன்னார்கள். ஆனாலும் தொலைந்து போன ஒரு கம்மல் கிடைக்கவேயில்லை. (ஹி...ஹி...அது ரெங்கநாதன் ஸ்ட்ரீட்டில் தொலைத்தது!)//

இது கொஞ்சம் கூட நல்லவே இல்ல
அங்க தொலைத்த இப்ப இங்கு வந்து சொன்னா, இனி தொலைக்காம இருக்க தான் இப்படி ஒரு டிப்ஸ்.

வருகைக்கு மிக்க ந்ன்றீ

Jaleela Kamal said...

வாங்க லக்‌ஷிமி அக்கா வருகைக்கு மிக்க ந்ன்றி


நன்றி சினேகிதன் அக்பர்

Jaleela Kamal said...

வாங்க கோபி உங்கள் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம்

ஆயிஷா

ஆமாம் கை பை இல்லைன்னா முடியாது ,ஆகையால் முதல் பட்ஜெட் இதுக்கு தான்

Jaleela Kamal said...

வாங்க ஹுஸைன்னாம்மா
ஆமாம் அப்ப அப்ப நினைவூட்டல் நல்லது இல்லையா>

அதான் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க தெய்வ சுகந்தி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

சாந்தி மாரியப்பன் said...

பயனுள்ள தகவல்கள் ஜலீலாக்கா..

பில்கள், ரசீதுகள் இதெல்லாம் ஷாப்பிங்கோ, இல்லை பேங்குக்கோ போயிட்டு வீட்டுக்கு வந்ததுமே கைப்பையிலிருந்து எடுத்து பத்திரப்படுத்த வேண்டியதை பத்திரமாவும், தூக்கிப்போட வேண்டியதை குப்பையில் போட்டும் கைப்பையை உடனுக்குடன் சுத்தப்படுத்திடறதும் ரொம்பவே நல்லது.

Anonymous said...

Useful tips madam.. Once I found my bedroom key after a long search frm my handbag :)

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா