Thursday, September 29, 2011

மேஜிக் ஷோ - Magic show

இது போன வருடம் என் பையன் எடுத்த மேஜிக் ஷோ

உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக 


டிஸ்கி: ஒரு வாரமா பிளாக்குக்கு ஜுரம் வந்துடுச்சி, ரொம்ப பேர் வந்துட்டு ஓடியே போயிட்டாங்க. ஒரு வாரம் சரியான வைரல் ஃபீவர்,
ஐய்யோ ஜலீலாக்கா பிலாக்குல மால்வேர் வைரஸ். எல்லாரும் பயம் காண்பிச்சிட்டாங்க.போன வருடமும் இதே மால்வேர் வைரஸ் தான் அபப் தான் பிலாக்கே போயிடுச்சின்னு ரொம்ப பயந்துட்டேன், ஆனால் எல்லாம் பேக் அப் எடுத்து வைத்திருந்ததால் பரவாயில்லா போனா போகட்டும் அப்பரம் பார்த்து கொள்ளலாம். என்றாகிவிட்டது.
இத பற்றி விரிவா போட நேரம் இல்லை பையன் ஊரில் இருந்து வந்துள்ளான், கொஞ்சம் பிஸி.
 .இப்ப எல்லா சரியா போச்சு வாங்க எல்லாரும்.
இன்னும் சில செட்டிங்க்ஸ் எதுவும் செய்யல.
இது சரியா ஓப்பன் ஆகலன்னா வேர ஏதும் எரர் இருந்தா உடனே சொல்லுங்க.

Sunday, September 25, 2011

பேச்சுலர்ஸ் முட்டை சேமியா - Bachelor's egg semiya


இஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்கும் டிபன் வகைகளில் சேமியா பிரியாணி எல்லோருக்கும் ரொம்ப பிடித்தமான ஒன்று. கல்யாண விஷேஷங்களில் கண்டிப்பா ஒரு நாள் மட்டன் சேர்த்து செய்யும் சேமியா பிரியாணியும் உண்டு. வீட்டில் தினசரி டிபனுக்கு காய்கறிகள் சேர்த்தோ, கீமா சேர்த்தோ , முட்டை சேர்த்தோ செய்யலாம்.

இதை சிக்கன் மற்றும் இறாலிலும் செய்தால் எல்லா வகைகளும் மிக அருமையாக இருக்கும்.

வெளிநாடுகளில் சமைத்து சாப்பிடும் பேச்சுலர்களும் ஈசியாக செய்துடலாம்.

தேவையானவை
சேமியா – கால் கிலோ
வெங்காயம் – ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி
தக்காளி – ஒன்று
தயிர் – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் – முக்கால் தேக்கரண்டி
பச்சமிளகாய்  - ஒன்று
முட்டை – இரண்டு
கொத்துமல்லி தழை – சிறிது
எண்ணை – ஒரு மேசை கரண்டி
நெய் – அரை தேக்கரண்டி
பட்டை – ஒரு அங்குலம் அளவு ஒன்று

செய்முறை
1.சேமியாவை நெய் விட்டு வறுத்து கொள்ளவும்
2. எண்ணையை காயவைத்து பட்டை சேர்த்து  வெடிய விட்டு அதில் வெங்காயம் சேர்த்து வதக்க்வும்.
3. பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போக வதக்கி தக்காளி தயிர், மிளகாய் தூள், உப்பு தூள்,கொத்துமல்லி தழை சேர்த்து கிளறி பச்சமிளகாயை இரண்டாக ஒடித்து போட்டு சிறிது நேரம் வதங்க விடவும்.
4. தண்ணீர் ஒருகப்புக்கு ஒன்னறை வீதம் (கால் கிலோ என்பது ஒன்னேகால் கப் இருக்கும், இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுகொதிக்கவிட்டு சேமியாவை சேர்த்து கிளறி 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
5. கடைசியாக முட்டையை ஊற்றி 5 நிமிடம் தீயின் தனலை குறைத்து சிம்மில் வைக்கவும்.
6. முட்டை வெந்து பாதி சேமியாவுடன் கலந்து. மஞ்சள் கரு முழுசாக வெந்து நிற்கும், தேவை பட்டல் இரண்டாக வெட்டி விடலாம்,
எக் சேமியா ரெடி.
குறிப்பு: காலை டிபனுக்கும் , லஞ்ச் பாக்ஸ்க்கும் ஏற்ற உணவு.


பேச்சுலர்ஸ் பிரியாணி டோஸ்ட்

இறால் காய்கறி சேமியா

சேமியா கேசரி

Wednesday, September 21, 2011

கேரட்,ஆரஞ்ச் ஜூஸ் - Carrot, Orange juice


//குழந்தைகளுக்கு ஏற்ற ஹெல்தி பானம்,நல்ல எனர்ஜி கிடைக்கும், விளையாடும் பிள்ளைகளுக்கு குடிக்க கொடுக்கலாம். கர்பிணி பெண்களுக்கு தெம்பை கொடுக்கும்.சோர்வை நீக்கும் ,பிறக்க போகும் குழந்தைக்கும் நல்ல கலர் வரும். .

தேவையானவை

கேரட் - 2
ஆரஞ்ச் பழம் - 3
குளுக்கோஸ் - தேவைக்கு
ஐஸ் கட்டிகள் - 15 முதல் 20
சர்க்கரை  (தேவை பட்டால்)
உப்பு - ஒரு சிட்டிக்கை
தண்ணீர் - தேவைக்கு
செய்முறை

இதற்கு முன் ரெசிபியில் சொன்ன படி ஆரஞ்சை பிரிச்சி வச்சிக்கோங்கோ.
கேரட்டை துருவி ஹல்வா வுக்கு துருவது போல் துருவி கொள்ளவும்
ஐஸ் கட்டி சேர்த்து நன்கு மிக்சியில் அரைக்கவும்.

இது வடிகட்டி சாறு எடுப்பத்து தான் சிரமம்.பெரிய டீ வடிகட்டியில் கொஞ்சம் கொஞ்சமா ஊற்றி வடிகட்டவும்.
//இல்லை ஒரு மெல்லிய துணியை வயகன்ற பாத்திரத்தில் விரித்து அடித்த ஜூஸை ஊற்றி வடிய விடலாம்//

கடைசியாக சர்க்கரைக்கு பதில் குளுக்கோஸ் சேர்த்து குடிக்கவும். (விரும்பினால் தேன் கூட சேர்த்து கொள்ளலாம்) ரொம்ப ஹெல்தி.

கண்ணெல்லாம் சும்மா குளு குளுன்னு இருக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்ற ஹெல்தி பானம்,நல்ல எனர்ஜி கிடைக்கும், விளையாடும் பிள்ளைகளுக்கு குடிக்க கொடுக்கலாம், கர்பிணி பெண்களுக்கு தெம்பை கொடுக்கும்.
பிறக்க போகும் குழந்தைக்கும் நல்ல கலர் வரும்.
டிஸ்கி: போன வருடம் தக்காளி கேரட் ஜூஸ் பண்ணும் போது சகோ. நட்புடன் ஜமால் கேரட் ஆரஞ்ச் என் பேவரிட் என்றார். இந்த முறை நோன்பில் எல்லா பழ வகை ஜூஸ்களும் கண்டிப்பா உண்டு, ஆரஞ்ச் பழம் மட்டும் நாலா அரிந்து உப்பு தூவி வைப்போம், இந்த முறை வாங்கிய ஆரஞ்ச் எல்லாமே புளிப்பு அதை இப்படி அடிக்கடி ஜூஸ் செய்து , கட்பண்ணி உப்பு குளுக்கோஸ் தூவி, சாலட் செய்து, கேசரி செய்து காலி பண்ணியாச்சு.
ஆறு பேர் தாராளமாக குடிக்கலாம்.
இது கடைசி ஸ்டெப் போட்டோ எடுக்க மறந்துட்டேன். அப்பரம் பாதி குடிச்சிட்டு இருக்கும் போது ஞாபகம் வந்து போட்டோ எடுத்தேன.

Sunday, September 18, 2011

வாங்க ஆரஞ்சு, சாத்துகுடி பழத்தை சுலபமாக உரிக்கலாம்

//அரசியல் வாதிகள் உண்ணாவிரதம் இருக்கும் போது அவர்களுக்கு இந்த ஆரஞ்ச் ஜூஸ கொடுத்து தான் உண்ணாவிரதத்த முடிப்பாங்க, இழந்த தெம்பை , எனர்ஜியை மீட்டு கொடுக்கும் அதுக்கு தான் இந்த ஜூஸ கொடுத்து உண்ணவிரத்தத்த சுமூக ம முடிக்கிறாங்க.//


 


எல்லா வகை பழங்களிலும் சாத்துகுடி பழம் உடம்பிற்கு மிகவும் நல்லது, 

நோயாளிகளை நலம் விசாரிக்க போனால் கண்டிப்பா ஒரு பையில் சாத்துகுடியோடு போவார்கள்.

அதே போல் இஸ்லாமிய இல்ல திருமணங்களில் கல்யாண நாள் அடுத்து வைக்கும் மாப்பிள்ளை தஸ்தரில் பல வகையான பழங்களில் இந்த சாத்துகுடியும் ஒன்று.

பழங்கள் சாப்பிடுமுன் அதை நேர்த்தியா கட் பண்ணிவைத்தால் பார்கக்வும் அழக்காக இருக்கும்.

ஊரில் இந்த சாத்துகுடி பழம் பச்சை கலரில் இருக்கும் இங்கு கமலா பழம் போலவே இருக்கும்.


எப்படி சுலபமாக உறிக்கலாம்,  தெரியுது (ஆமா  புரியுது புரியுது இத பெரிசா சொல்லி கொடுக்க வந்துட்டாங்களாக்குமுன்னு ) நீங்க முனு முனுப்பது தெரியுது ம்ம் பிடிச்சவங்க படிங்க , சிலருக்கு இதை உறிக்கும் முன் போதும் போதும் என்றாகிடும், நகத்தை வைத்து கீறி பிச்சி எடுப்பார்கள்.

இந்த ஆரஞ்சு பழத்த எடுத்து மேலே தலை பகக்ம் வால் பக்கம் முதலில் அரிந்து கொள்ளுங்கள்.


சைடில் படத்தில் காட்டியுள்ளபடி குறுகாக எட்டு கோடு போட்டு கீறி விட்டு கொள்ளுங்கள்.
அப்படியே கீற்று கீற்றாக பிரித்தெடுக்க வேண்டியது தான்

படத்தில் உள்ளது கேரட் ஆரஞ்ச் ஜூஸுக்காக கட் பண்ணியது குறிப்பு அடுத்து பிறகு பார்க்கலாம்.
பிரித்து இப்போது சுளையாக பிரித்தெடுக்கவும்.


அந்த சுளையை பின்பக்கம் கத்தியால் கீறி பிரித்தால் இப்படி வரும்.
நடுவில் உள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு இப்படி அடுக்கி வைக்கவும்.


இஸ்லாமிய இல்ல திருமனத்தில் நடக்கும் மாப்பிள்ளை தஸ்தரில் இப்படி தான் அரிந்து வைப்போம்.

இப்படி நோகாம எடுத்து சாப்பிட்டா எப்படி இருக்கும்.
இன்னும் என் தங்கை பஷிரா அதையும் பிரித்து சர்க்கரை தூவி  ஒரு ஸ்பூன் போட்டு பிள்ளைகளுக்கு கொடுப்பாள்.

ஆனால் ரொம்ப புளிப்பாக உள்ள சாத்துகுடி, ஆரஞ்சை இப்படி பிரித்து சர்க்கரை (அ) குளுக்கோஸ் ஒரு  சிட்டிக்கை உப்பு தூவி சாப்பிடலாம்.

இப்ப டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்

1. பிள்ளைகளுக்கு நம்பர்  2 போக ரொம்ப டைட்டாக இருந்தால் இது போல் சாத்துகுடியை பிரித்து போட்டு சாப்பிட வைத்தால் பிரியாகும்.

2. அரசியல் வாதிகள் உண்ணாவிரதம் இருக்கும் போது அவர்களுக்கு இந்த ஆரஞ்ச் ஜூஸ கொடுத்து தான் உண்ணாவிரதத்த முடிப்பாங்க, இழந்த தொம்பு, எனர்ஜியை மீட்டு கொடுக்கும்.அதுக்கு தான் ஒரு பெரிய டம்ளர் முழுவது ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பார்கள்.

3. மசக்கை நேரத்தில் கர்பிணி பெண்களுக்கு ஏற்படும்  வாய் கசப்பிற்கு சாப்பிட அருமையாக இருக்கும்.

4. புளிப்பு பழத்தை மற்ற பழத்துடன் சேர்த்து சாலட் போல் செய்து போல் செய்து சாப்பிடலாம்.

5. லோ பிரஷரினால் அடிக்கடி மயக்கம் வந்தால்  இரண்டு ஆரஞ்சு பழத்தில் ஜூஸ் எடுத்து உப்பு சர்க்கரை ( அ) குளுக்கோஸ் கலந்து குடித்தால் உடனே  நல்ல கேட்கும்.(இது என் அனுபவம்)

Friday, September 16, 2011

கொத்தவரங்காய் பொரியல் - Cluster beans stir fryபச்சை காய் கறிகள் உணவில் அதிகம் சேர்த்து கொள்வது மிகவும் நல்ல , சர்க்கரை வியாதி, பீபி உள்ளவர்கள் இது போல் பொரியல் செய்து ரசத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்..தேவையானவை

கொத்தவரங்காய்  - கால் கிலோ
உப்பு - அரை தேக்கரண்டி
 மஞ்சள் பொடி  - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

தேங்காய் - கால் முறி ( 4 பத்தை)
தாளிக்க
எண்ணை - இரண்டு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு -  ஒரு தேக்கரண்டி
காஞ்சமிளகாய் (வர மிளகாய் )  - இரண்டு
பூண்டு - இரண்டு பல் ( அல்லது) பெருங்காயம் கால் தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது 
செய்முறை

கொத்தவரங்காயை நன்கு கழுவி  இரண்டுஓரங்களையும் அரிந்து விட்டு
பொடியாக அரிந்து 5 நிமிடம் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிக்கவும்.

தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து கொத்தவரங்காயை சேர்த்து வதக்கி உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வதக்கி 5 நிமிடம் சிம்மில் வேக விடவும்.

கடைசியாக தேங்காய் பூ சேர்த்து கிளறி வதக்கி இரக்கவும்.
சுவையான கொத்தவரங்காய் பொரியல் ரெடி.

இதை தக்காளி சேர்த்தும் செய்யலாம் , கூட்டு போலவும் செய்யலாம்.

டிப்ஸ்: சைவ குறிப்புகள் அதிலும் பொரியல் வகைகள் செய்வது ரொம்ப சுலபம். எனக்கு ரசம், பொரியல் , அப்பளம், இருந்தால் போதும்.
வாரத்தில் இரண்டு முறை இது போல் செய்து சாப்பிடுவோம்.
அதிலும் கொத்தவரங்காய் நலல் டயட் க்குக்கான பொரியல் தேங்காய் அதிகம் வேண்டாம் என்பவர்கள். இதில் நிறைய வெங்காயம் தக்க்காளி சேர்த்து வதக்கி செய்தால் ரொம்ப சூப்பராக இருக்கும். இதில் பருப்புசிலி செய்தாலும் பிரமாதமாக இருக்கும். மட்டனுடன் சேர்த்தும் சமைக்கலாம்.

கொத்தவரங்காய் பித்த்ம் என்று சொல்வார்கள் அதுக்கு தான் தண்ணீரில் கொத்திக்க வைத்து வடிப்பது.Monday, September 12, 2011

வெங்காய கொடமிளகாய் பிஸ்ஸா பிரெட் டோஸ்ட்- Onion capsicum pizza bread


சைவ பிரியர்களுக்கு ஏற்ற அருமையான வெங்காய கொட மிளகாய் பிட்சா பிரெட், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காலை உணவு.


இட்லி தோசைய பார்த்து முகம் சுழிக்கும் பிள்ளைகளுக்கு இத கொடுத்து பாருஙக்ள். கப் சிப்புன்னு எத்தனை உள்ளே போகுதுன்னு...

அசைவம் விரும்புவோர் இத செய்து சாப்பிடுங்கள் இதிலேயே சைவம் விரும்புவோர் சிக்கனுக்கு பதில் பனீர் மஷ்ரூம் சேர்த்துக்கங்க

ஸ்மால் பிரெட் - ஒரு பாக்கெட் (10 ஸ்லைஸ்கள்)


பிட்சா சாஸ் - ஐந்து தேக்கரண்டி

மொஜெரெல்லா சீஸ் - ஐந்து மேசைகரண்டி

கருப்பு ஆலிவ் காய் - ஐந்து

டெமோட்டோ கெட்சப் - ஐந்து தேக்கரண்டி

பட்டர் - பத்து தேக்கரண்டி

வெங்காயம் - இரண்டு

கொடமிளகாய் - ஒன்று

உப்பு - கால் தேக்கரண்டி

பட்டர் + எண்ணை - இரண்டு தேக்கரண்டி

செய்முறை
1.வெங்காயம், குடை மிளகாயை பொடியாக அரிந்து அதில் உப்பு தூவி பட்டர் + எண்ணை இரண்டு தேக்கரண்டி ஊற்றி வதக்கி கொள்ள வேண்டும்.

2.எல்லா பிரெட்களிலும் படரை லேசாக தடவி கருகாமல் பொரித்து எடுத்து கொள்ள வேண்டும்.

4. முதலில் பத்து ஸலைஸ் பிரெட்டில் ஐந்து எடுத்து அதில்  பிட்சா சாஸை பரவலாக தடவவும்.

5.அடுத்து வதக்கிய வெங்காய, குடை மிளகாய் கலவை மற்றும் ஆலிவ் காயை பொடியாக நருக்கி பிரெட்டில் கொள்ளும் அளவிற்கு தூவவும்.

6.பிறகு மொஜெரெல்லா சீஸை தூவவும். கொஞ்சம் அதிகமாக தூவினால் நல்ல ஒன்றோடொன்று நல்ல ஜாமாகும் சாப்பிடும் போது நல்ல இருக்கும்.

7. கடைசியாக டொமேட்டோ கெட்சப்பை தெளித்து விட வேண்டும்.

8. எல்லா கலவையையும் வைத்திருக்கும் பிரெட்டின் மேல் . மற்றொரு பொரித்த பிரெட்டை வைத்து அழுத்த வேண்டும்.

9.மைக்ரோவேவில் இரண்டு நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்

10.சுவையான யம்மி யம்மி பிட்சா பிரெட் ரெடி.
குறிப்பு


**************

இதை பிரெட், ஸ்மால் பன், லாங் பன், ரவுண்டு பன் , தோசை எல்லா வற்றிலும் செய்யலாம். பிரெட் மில்க் பிரெட் என்றால் இன்னும் சுவை கூடும். பிரெட்டை பொரிக்கமலும் செய்யலாம். குழந்தைகளுக்காக கிர்ஸ்பியாக இருக்கனும் ஆகையால் பட்டரில் பொரித்துள்ளேன். இது நானே டிரை பண்ண ரெஸிபி இது போல எல்லா வகையான காய்களையும் பைனாக சாப் செய்து இந்த மாதிரி செய்யலாம்


.

Saturday, September 10, 2011

பர்கர் சாண்ட்விச் - Burgar Sandwich
பர்கர் இது விரும்பாதவர்களே கிடையாது.இப்ப எங்கு பார்த்தாலும் பிக் பஜார் களில் Mcdonal's உண்டு இது போல் செய்து கொடுத்தால் Mcdonalds  சில் சாப்பிட்ட எபக்ட் கிடைக்கும்.இதனுடன் பிரெஞ்ச் ஃப்ரைஸ், ஒரு ஜுஸ் கொடுத்துட்டா போதும் பிள்ளைகள் உங்களை வாழ்த்தி வாழ்த்தி சாப்பிடுவாங்க  பாஸ்புட்

Tuesday, September 6, 2011

மருதாணி மோகம் ஏன் இப்படி?மருதாணி மோகம் ஏன் இப்படி பெண்களை ஆட்டிப்படைக்குது.

மருதாணிய விரும்பாத பெண்களே கிடையாது, முன்பெல்லாம் கல்யானங்களுக்கு கல்யாண பெண்களுக்கு தான் கை முழுவதும் வைப்பார்கள், ஆனால் இப்ப சின்ன சின்ன விஷேசங்களுக்கெல்லாம் எல்லோரும் மருதாணியை விரும்பி கை முழுவதும் வைத்த் கொள்கின்றனர்.

மருதாணி பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று முன்பெல்லாம் உள்ளங்கையில் ஒரு ரவுண்டு ஷேப்பு, கை விரல்களில் தொப்பி இப்படிதான் வைப்பார்கள்
எனக்கு மருதாணி வைத்துகொள்ள் ரொம்ப பிடிக்கும்.
ஆனால் டிசைனோ சுத்தம் ஒன்றுமே தெரியாது, சின்னவயதில் என் தங்கைகளுக்கெல்லாம் நான் தான் வைப்பேன் ஆனால் நான் வைப்பது தான் டிசைன்.

ஆனால் அதே இப்ப காலம் மாறி போச்சு இப்ப ஊர் சென்றிருந்த போது ஆச்சரியம் என் தங்கை பெண்கள் மற்றும் என் நாத்தனார் பிள்ளைகள் எல்லாம் அடிச்சி தூள் கிளப்புறாங்க, சின்ன குட்டிகள் எல்லாம் என்னமா டிசைன் போடுறாங்க , என் கையையும் கொடுத்தேன், எனக்கு டிசைன் வைத்து முடிக்கும் வரை பொருமை இல்ல ஆண்டி அசைக்காதீஙக், கைய நேரா காட்டுங்கள், இன்னும் மாமி ஆட்டகூடாது. எப்பா எனக்கு பெருமையே போச்சு.

அதே போல் இப்ப இந்த ஈதுக்கு ஒரு கையில் எப்படியோ வைத்து கொண்டேன்.முதல் முறையா பொறுமையாக ஒரு டிசைன் போட்டேன், எனக்கே சந்தோஷம் தாங்கலஇது நான் கிறுக்கியதுஇன்னொரு கையில் என் தோழி மகள் சாதியா போட்டுவிட்டால். ( அந்த டிசைன் இங்கு பதியவில்லை ) வலது கையில் கொஞ்சம் ஹனீஃப் போட்டு விட்டான்.


அவளுக்கும் என் கையில் டிசைன் போடுமுன் பத்து முறை ஆட்டி ஆட்டி அவளுக்கும் வைப்பதற்குள் போதும் போது என்று ஆகிவிட்டது.

சாதியா ரொம்ப சூப்பரா மருதாணி போடுவா . இது அவள் கையில் போட்ட டிசைன்.


இது இந்த தடவை போட்ட புது டிசைன்.


(பதிவு போட வந்ததோ மருதாணி டிசைன்கள் இந்த இரண்டு மாதமாக போட்ட்து சேகரித்துவைத்ததை ஆனால், கீழ் காணும் வீடியோ பார்த்ததில் மற்ற இன்னொரு பதிவும் சேர்ந்து கொண்டது)

சாதியா போட்ட டிசைனை வீடியோ எடுத்து போடலாமுன்னு எடிட் செய்து எல்லோருக்கும் விடியோ லிங்க் கொடுக்கலாம் என்று  அட கொடுமையே அங்கு இந்த விடியோ பார்க்க்க நேர்ந்தது .
கீழே உள்ள இந்த வீடியோ பார்த்ததும். சே ஏன் இப்படி மருதாணி மோகம் பெண்கள் இப்படி ஆட்டி படைக்குது.

ஏன் இப்படியும் மெகந்தி வைத்துகொள்ளனுமா? இந்த வீடியோவை பாருங்க

எவ்வளவோ பெண்கள் பியிட்டி பார்லர் இருக்கின்றன, நிறைய பெண்கள் வீட்டிற்கும் வந்து வைத்து விடுகின்றனர்.
மெகந்தி மேலே ரொம்ப கிரேஸ் உள்ளவர்கள் மெகந்தி கிளாஸ் போயும் கற்றுகொள்ளலாலே.நாமே வீட்டில் போட்டு கொள்ளலாமே//இது ஆக்ராவில் நான் எடுத்த போட்டோ


போன வருடம் டெல்லி, ஆக்ரா, ராஜஸ்தான் போன போது ஆக்ராவில் இந்த வாலிப ஆண்கள் சின்ன பெண்களுக்கு மெகந்தி போட்டு விடுவத பார்த்து அதிர்ந்து போனேன், ஆனால் அதே போல் நம் தமிழ் பெண்களும் இப்படி முகம் தெரியதவனுடன் மருதாணிக்காக அதுவும் நல்ல டிசைனுக்கா ஒட்டி கொண்டு போட்டு கொள்ளனுமா என்ன?
வட இந்தியாவில் அங்குள்ள கலாச்சாரத்துக்கு எல்லோரும் டேக்கிட் ஈசியா எடுத்து கொண்டாலும், இங்கு தமிழ் பெண்களை இப்படி பார்ப்பது ரொம்ப வருத்தபடவைக்கிறது.யாரோ ஒரு முகம் தெரியாதவன் மெகந்தி போட்டு விடுகிறன், சின்ன சின்ன பதின்மவயது பெண்களும், கல்லூரி பெண்களும் இபப்டி ஒட்டி உட்கார்ந்து போட்டு கொள்வதை பார்த்தாலே முகம் சுளிக்க வைக்கிறது.
வட இந்தியாவில் இருந்து சென்னையில் கடை போட்டு அங்கிருந்தே மெகந்திக்கும் ஆட்களை கூப்பிட்டு வந்து கடை வாசலிலேயே கடைய போட்டு விடுகின்றனர்.


வெளியில் செல்லும் உங்கள் வீட்டு பிள்ளைகளை இப்படி மருதாணி போட்டு கொள்ள அனுமதிப்பீங்களா? இது தவறு அல்லாவா? இதனால் சில பேரை வழிதவறவைக்கும் இல்லையா?

டிஸ்கி: காண்டு பிடிச்ச அனானி உங்கள யாரும் இங்க வெத்தல பாக்கு வைத்து அழைத்தா , வந்துட்டு வயத்தெரிச்சல் பட்டு கொண்டு ஏன் வீனாக  கமெண்ட் போட்டுட்டு போறீங்க. ஹிஹி


Thursday, September 1, 2011

ஜிங்கா தயிர் பிரியாணி - Jhinga Biriyani

--///பேபி அதிரா தக்காளி அவ்வளவா பயன் படுத்த மாட்ட்டாங்க, அன்பு இமா அக்கா ஏதோ ஒரு பதிவில் இங்கு தக்காளிக்கு தடா என்று சொன்னார்கள்// அவர்களுக்காக நான் ஸ்பெஷலா தயாரித்த பிரியாணி.

ஜிங்காபிரியாணி எண்டதும் கெதியா பாட்ட போட்டு ஜிங்கு ஜிங்கு ந்னு ஆடப்படாதாக்கும்.


தக்காளி இல்லாம எங்க வீட்டில் பிரியாணியே கிடையாது.
ஆனால் இது 18 வருடகாலம் முன் உள்ள துண்டு பேப்பரில் படித்தது..

// ஹைத்ராபாத் பிரியாணியில் கூட தக்காளி சேர்க்க மாட்டார்கள்.
 நான்கைந்து முறை தான் தக்காளி இல்லாம பிரியாணி செய்து இருக்கேன்.என் பையனுக்கு தக்காளி நிறைய போட்டா பிடிக்காது. என் பையனுக்காக முயற்சி செய்தது/, கிட்னி ஸ்டோன் இருப்பவர்கள் தக்க்காளி பயன் படுத்த மாட்டார்கள். அவர்களும் இது போல் தயாரித்து சாப்பிடலாம்.
//

தேவையானவை


இறால்(ஜிங்கா) - 200 கிராம்
இறால் தலை - 100 கிராம்
தயிர் - 3 மேசைகரண்டி
வெங்காயம் - முன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 தேக்கரண்டி
பட்டை,லவங்க தூள் - கால் தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - இரண்டு சிட்டிக்கை
சீரக தூள் - ஒரு ஸ்பூன்
ஓமம்(Ajwan) தூள் - கால் தேக்கரண்டி்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
நெய்+எண்ணை - அரை கப்
கொத்து மல்லி புதினா - சிறிது
பழுத்த சிவப்பு மிளகாய் - இரண்டு

அரிசி வேகவைக்க

தரமான பாசுமதி அரிசி - 400 கிராம்
பிரியாணி இலை - இரண்டு
ஷாஜீரா( caraway seed)- அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி

சூடான பால் - ஒரு மேசை கரண்டி
சாஃப்ரான் - 6 இதழ்

செய்முறை

இறால் தயிரில் செய்வதால் வேக ரொம்ப நேரம் எடுக்காது. ரொம்ப சீக்கிரமாக தயாரித்துவிடலாம்.


இறாலை தோலெடுத்து இறாலையும், தலையையும் ஆய்ந்து கழுவிவை வைக்கவும்.(இது தான் கொஞ்சம் கழ்டமான வேலை) தலை சேர்த்து செய்வதால் இன்னும் கூடுதல் ருசி கிடைக்கும்.

வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.

தயிரில் பட்டை கிராம்பு பொடி,மிளகாய் தூள் ,சீரகத்தூள், ஓமம் தூள், உப்பு, ஏலக்காய் தூள், தனியாத்தூள், போட்டு நன்கு கலக்கி வைக்கவும்.

வாயகன்ற வானலியை காயவைத்து எண்ணை + நெய்யை ஊற்றி வெங்காயத்தை போட்டு நன்கு பொன் முறுவலாக வதக்கவும்.அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட், பாதி கொத்துமல்லி புதினா போட்டு நன்கு வதக்கவும்.

மற்றொரு அடுப்பில் சாதம் வடிக்க உலையை கொதிக்கபோடவும்.
தண்ணீருடன் பிரியாணி இலை , ஷாஜீரா, மீதி உள்ள கொத்துமல்லி புதினா, கரம்மசாலாதூள் சேர்த்து கொதிக்க விடவும்.

இஞ்சி பூண்டு வாடை போனதும் மசால கலக்கிய தயிர் கலவை + இறால் சேர்த்து நன்கு வதக்கி சிறிது நேரம் மசாலாக்களை ஒரு சேர கொதிக்க விடவும், தீயின் தனலை சிம்மில் வைக்கவும்.

உலை கொதித்ததும் அரிசி தட்டி முக்கால் பதத்தில் வடிக்கவும்.

கிரிப்பான இறால் கிரேவியில் அரிசியை தட்டி சமப்படுத்தவும்.
சாஃப்ரானை மேலே ஊற்றி 20 நிமிடம் தம்மில் விடவும்.
சுவையான ஜிங்கா தயிர் பிரியாணி ரெடி

மியாவ் க்கு ரொம்ப பிடிச்சிருக்குமுன்னு நினைக்க்றேன்.பூஸார் சாப்பிட்டு பார்த்து ஒகே சொல்லிட்டார்... இனி பேபி அதிராவும் இமாக்காவும் தாரளமாக சாப்பிடலாம்.


இதில் பிரியாணி மசாலா (அ) இலங்கை கறி மசாலாத்தூள் ஏதும் சேர்ப்பதா இருந்தால் தாராளமாக 1 தேக்கரண்டி சேர்த்து கொள்ளலாம்.
இறால் தலை வறுத்து சாப்பிட்டால் நல்ல இருக்கும், சிலர் வறுத்து சம்பல் வைப்பார்கள். நான் இறால் தலை பெரிய தா இருந்தால் சில நேரம் பஜ்ஜியும் போடுவதுண்டு, அதே போல் சேமியா, கார உப்புமா, பிரியாணி வகைகளிலும் சிறிது சேர்ப்பேன் சுவை கூடுதலாக இருக்கும், குச்சிபோல் நீட்டி கொண்டு இருக்கும் மீசைகளை வெட்டிட்டு போடனும். பிடித்தவர்கள் அதனுடன் சாப்பிடலாம் பிடிக்காதவரக்ள் அதை எடுத்து விட்டு சாப்பிடாலாம்.

( ஜிங்கா என்பது இறால்.) சாரி முதலே சொல்ல மறந்துட்டேன்.