Wednesday, September 21, 2011

கேரட்,ஆரஞ்ச் ஜூஸ் - Carrot, Orange juice


//குழந்தைகளுக்கு ஏற்ற ஹெல்தி பானம்,நல்ல எனர்ஜி கிடைக்கும், விளையாடும் பிள்ளைகளுக்கு குடிக்க கொடுக்கலாம். கர்பிணி பெண்களுக்கு தெம்பை கொடுக்கும்.சோர்வை நீக்கும் ,பிறக்க போகும் குழந்தைக்கும் நல்ல கலர் வரும். .

தேவையானவை

கேரட் - 2
ஆரஞ்ச் பழம் - 3
குளுக்கோஸ் - தேவைக்கு
ஐஸ் கட்டிகள் - 15 முதல் 20
சர்க்கரை  (தேவை பட்டால்)
உப்பு - ஒரு சிட்டிக்கை
தண்ணீர் - தேவைக்கு
செய்முறை

இதற்கு முன் ரெசிபியில் சொன்ன படி ஆரஞ்சை பிரிச்சி வச்சிக்கோங்கோ.
கேரட்டை துருவி ஹல்வா வுக்கு துருவது போல் துருவி கொள்ளவும்
ஐஸ் கட்டி சேர்த்து நன்கு மிக்சியில் அரைக்கவும்.

இது வடிகட்டி சாறு எடுப்பத்து தான் சிரமம்.பெரிய டீ வடிகட்டியில் கொஞ்சம் கொஞ்சமா ஊற்றி வடிகட்டவும்.
//இல்லை ஒரு மெல்லிய துணியை வயகன்ற பாத்திரத்தில் விரித்து அடித்த ஜூஸை ஊற்றி வடிய விடலாம்//

கடைசியாக சர்க்கரைக்கு பதில் குளுக்கோஸ் சேர்த்து குடிக்கவும். (விரும்பினால் தேன் கூட சேர்த்து கொள்ளலாம்) ரொம்ப ஹெல்தி.

கண்ணெல்லாம் சும்மா குளு குளுன்னு இருக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்ற ஹெல்தி பானம்,நல்ல எனர்ஜி கிடைக்கும், விளையாடும் பிள்ளைகளுக்கு குடிக்க கொடுக்கலாம், கர்பிணி பெண்களுக்கு தெம்பை கொடுக்கும்.
பிறக்க போகும் குழந்தைக்கும் நல்ல கலர் வரும்.
டிஸ்கி: போன வருடம் தக்காளி கேரட் ஜூஸ் பண்ணும் போது சகோ. நட்புடன் ஜமால் கேரட் ஆரஞ்ச் என் பேவரிட் என்றார். இந்த முறை நோன்பில் எல்லா பழ வகை ஜூஸ்களும் கண்டிப்பா உண்டு, ஆரஞ்ச் பழம் மட்டும் நாலா அரிந்து உப்பு தூவி வைப்போம், இந்த முறை வாங்கிய ஆரஞ்ச் எல்லாமே புளிப்பு அதை இப்படி அடிக்கடி ஜூஸ் செய்து , கட்பண்ணி உப்பு குளுக்கோஸ் தூவி, சாலட் செய்து, கேசரி செய்து காலி பண்ணியாச்சு.
ஆறு பேர் தாராளமாக குடிக்கலாம்.
இது கடைசி ஸ்டெப் போட்டோ எடுக்க மறந்துட்டேன். அப்பரம் பாதி குடிச்சிட்டு இருக்கும் போது ஞாபகம் வந்து போட்டோ எடுத்தேன.

24 கருத்துகள்:

alkan said...

நல்ல பதிவு பிரயோசனமானது

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

எனக்காக போட்டதுக்கு மிக்க நன்றி

க்ளுக்கோஸ் சேர்த்து பழக்கமில்லை.

காரட் பச்சையாக சேர்ப்பதால் "காஸ்"ட்ரிக் பிரச்சனை வரும்ன்னு சொல்றாங்களே, அதுக்கும் சேர்த்து எதுனா யோசனை சொல்லிடுங்களேன் ‍ கமென்ட்டிலேயே ...

Lakshmi said...

நல்ல சுவையான சத்தான ஜூஸ் குறிப்புக்கு நன்றி

சிநேகிதி said...

சுவையான சத்தான ஜூஸ் இது... அருமை

ஸாதிகா said...

கேரட்,ஆரஞ்சு சேர்த்து வித்த்யாசமான ஜூஸ்தான் ஜலி.என் வேண்டுகோளுக்கிணங்கி படங்களை பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி.

ஆயிஷா அபுல் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

ஜூஸ் அருமை. நான் கேரட் ஜூஸில் ஆரஞ்
சேர்க்க மாட்டேன். குளுக்கோஸ் பதில் சர்க்கரை.

தினமும் கேரட் ஜூஸ் குடிப்பேன்.

ஜெய்லானி said...

//இது கடைசி ஸ்டெப் போட்டோ எடுக்க மறந்துட்டேன். அப்பரம் பாதி குடிச்சிட்டு இருக்கும் போது ஞாபகம் வந்து போட்டோ எடுத்தேன.//

நீங்க படம் போடாட்டியும் நாங்க நம்புவோமே :-))))

Jaleela Kamal said...

அல்கான் முதல் கருத்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

சகோ ஜமால் காஸ் டிரிக் பிரச்சனை என்று நீங்க சொல்வது புதுசா இருக்கு

கர்பிணி பெண்களுக்கு நெஞ்செரிச்சல் பிராப்ளத்துக்கு எல்லாம் கேரட்ட அபப்டியே கடிச்சி சாப்பிட சொல்வாஙக்

குளுக்கோஸ் சேர்த்து செய்ய சொல்லி குடிங்க.

Jaleela Kamal said...

லஷ்மி அக்கா வருகை தந்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

பாயிஜா எப்படி இருக்கீங்க நலமா?
வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நேரமின்மையால் கொஞ்சம் சிரமம் தான், அதான் மொத்தமா போடுவேன், உங்களுக்காக ஸ்டெப் பை ஸ்டெப்,
தொடர் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வா அலைக்கும் ஸலாம் ஆயிஷா அபுல்

முன்பு நானும் வெரும் கேரட் தான் ஜூஸ் போடுவேன்.
பிறகு கேரட்டும் ஆப்பிலும்.
இப்ப கேரட் ஆரஞ்ச்.
எல்லாமே நல்ல இருக்கும்
செய்து பாருஙக்ள்

உஙக்ள் வருகைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

ஜெய்லானி நம்ம பூஸார் வந்தால் ஏன் பாதி டம்ளர்னு கண்டிப்பா கேட்பாங்க.

alkan said...

அஸ்ஸலாமு அலைக்கும்
இது முதல் இல்லீங்க இதற்கு முன்னரும் ரமலான் பதிவுகளிலும் எழுதி இருந்தேன்
இலகு தமிழில் எனது மொழியில் பதிவதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி
நன்றி

Kannan said...

சுவையான உணவு....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

அப்பாவி தங்கமணி said...

ஜில்லுனு ஒரு ரெசிபி...சூப்பர் ஜலீலாக்கா...:)

ஸ்ரீராம். said...

சுலப ரெசிப்பி. சுவையான ரெசிப்பி. (இதைச் சாப்பிடுவதால், குங்குமப்பூ சாப்பிடுவதால் எல்லாம் பிறக்கப் போகும் குழந்தை, நிறம் மாறுமா என்ன...அவை ஏற்கெனவே மாற்ற முடியாமல் தீர்மானிக்கப் பட்டவையாயிற்றே...! )

asiya omar said...

படங்களும் குறிப்பும் சூப்பர்.

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம்
அல்கான்
தெரியும் நீங்க முன்புள்ள குறிப்புகளுக்கு கமெண்ட் இட்டது.

இங்கு இந்த குறிப்பில் முதலாவதாக என சொல்ல மறந்துட்டேன்.
தமிழில் க்மெண்ட் எழுத வந்தது குறித்து சந்தோஷம்

Jaleela Kamal said...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கண்ணன்
நேரம் கிடைக்கும் போது உங்கள் காமடி பதிவு பக்கம் வருகிறேன்.

Jaleela Kamal said...

உங்கள் ஜில்லுன்னு கமெண்ட்டுக்கு மிக்க நன்றி புவனா

Jaleela Kamal said...

ஸ்ரீராம் குங்குமப்பூ சாப்பிடுவதால் நிறம் மாறும் என்பதை கால காலமாக பாட்டி மார்கள் சொல்லி வருகிறார்கள்.
ஆரம்ப கர்பகாலத்தில் கரு உருவாகும் முன் 4 மாதங்கள் சாப்பிடும் உணவை பொருத்தும் இருக்கு.

குங்குமப்பூ சாப்பிட சொல்வது இது சளியை கட்டு படுத்தும், மேலும் கர்பினிகளுக்கு பால் குடிப்பதால் கால்சியம் சத்து சேரும்,
இது குடிங்க ந்னா எல்லாருக்குமே கசக்கும், பாலில் குங்குமபூ கலந்து குடித்தால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்றால் எல்லாருமே கண்டிப்பாக குடிப்பார்கள்.
சில நேரம் குழந்தை வேண்டாமென ஏதாவது மாத்திரையோ மருந்துகளோ சாப்பாட்டு ஐட்டமோ அவர்கள் சாப்பிட்டு இருந்தால் குழந்தைகளின் நிறத்தில் ,தோல்களில் மாற்றங்கள் இருக்கும்.

இது எனக்கு தெரிந்த முன்று குடும்பங்களில் பார்த்து இருக்கிறேன்.
6, 7 குழந்தைகள் இருக்கும் இடத்தில் 6 குழந்தைகள் நல்ல கலரா பிறந்துட்டு, ஏழாவதுக்கு ஏதோ மருந்து சாப்பிட்டதில் நேர் மாறாக கண்டங்க்ரேலுன்னும் பிறந்து இருக்கு

Jaleela Kamal said...

வருகைக்கு நன்றி ஆசியா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா