Sunday, November 27, 2011

ஒரு சோக செய்தி

என் வாப்பாவின் கடைசி தம்பி முஸ்தபா சின்ன வாப்பா ஒரு வருடமாக சுகர் வந்தது தெரியாததால் கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டு,  கிட்னி பிரப்ளத்தால் இப்ப கொஞ்சம் நாளா படுத்த படுக்கையாகி இன்று காலை . வருஷ கடைசி முஹரம் முதல் நாளில் 12.30 மணிக்கு வஃபாத்தாகிவிட்டார்கள்

///'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் - நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்.//

இறைவனிடம் அன்னாரின் மஃபிரத்துக்காக நானும் துஆ செய்கிறேன் நீங்களும் துஆ செய்யுங்கள்.
மறுமை நாளின் கேள்விகணக்கை எளிதாக்கி
கப்ரின் அதாபிலிருந்து  இடுக்கத்திலிருந்தும், பாதுகாத்து கப்ரில் வெளிச்சத்தையும, விசாலத்தையும் தந்தருள்வானாக.!!
ஆண்டவன் அவர்களின் பாவங்களை ம்ன்னித்து ஜன்னத்துல் பிர்தவுஸில் நுழைய செய்வானக!!

மறுமை வாழ்வை வல்ல ரஹ்மான் சிறப்பானதாக்கி தருவானாக!!ஆமின்

(சின்னடாடி 4 அண்ணன் தம்பிகளில் கடைகுட்டி நல்ல எல்லோரும் நல்ல உதவி செய்யும் குணம் படைத்தவர்.  படிப்பு முடித்ததும் சவுதி சென்று சிலகாலம் இருந்து மீண்டும் இந்தியா வந்து , மறுபடி சவுதி சென்ற்று சில வருடம் இருந்தார் , அப்பதான் சர்க்கரைவியாதி இருப்பது தெரியமலே இருந்து இருக்க்கு. ஊருக்கு வந்து செட்டில் ஆகும் போது செக் பண்ணிய போது தெரிந்து இருக்கு சுகர் லெவல் ஹை கிட்னிய பாதித்து விட்டது.ஒரு வருட காலம் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை.)

(அண்ணன்கள் பெண்குழந்தைகள் அனைவரை பெற்ற பிள்ளைகள் போல கண்டிப்புடனும் பாசத்துடனும் பாதுகாத்தவர். எல்லோருக்கும் சின்னவாப்பான்னா தனி பிரியம். என் கணவர் சவுதி போயிருந்த போதும் எனக்கு ஹாஸ்பிட்டலுக்கு கூட வருவது பாஸ்போட் எடுக்க எல்லாம் உதவி செய்தது சின்ன டாடி தான்.)


சின்ன வாப்பாவை இழந்து வாடும் எங்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் ஆண்டவன் பொறுமையையும், மனதைரியத்தையும்,தாங்கிக்கொள்ள கூடிய சக்தியையும் கொடுப்பானாக!! ஆமின்


Friday, November 25, 2011

ஆண்களுக்கு ஹிமோகுளோபின்

ஆரோக்கியமான வாழ்க்கையில் பல உடல் உபாதைகளில் உடலில் இரத்தத்தின் அளவு சரியாக இருப்பது மிகவும் முக்கியம்.
ஹிமோ குளோபின் அளவை அடிக்கடி பெண்கள் சரிபார்ப்பது போல் ஆண்கள் யாரும் சரி பார்த்து கொள்வதில்லை.பெண்களுக்கு திருமணம் முடிந்ததும் கர்ப காலத்தில், பிரசவ நேரத்தில் இரத்ததின் அளவை மருத்துவர்கள் சரி பார்ப்பதால் ஹிமோ குளோபின் அளவு குறைவாக உள்ளதை கண்டு பிடித்து அதற்குறிய சிகிச்சையை அளிக்கின்றனர். என்ன உணவு உட்கொண்டால் ஹிமோ குளோபின் அளவு அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

ஆனால் ஆண்கள் தங்கள் ஹிமோகுளோபின் அளவை சரிபார்க்க வாய்ப்பே இல்லை. குறிப்பிட்ட வயதிற்கு பிறகு ஏதேனும் உடல் உபாதைகள் வரும் போது தான் தெரிய வருகிறது.ஆண்கள் படிப்பிற்க்காக மேற்படிப்பிற்காக ஹாஸ்டலில் தங்க வேண்டிய சூழ் நிலை,உள்ளூரிலேயே வேறு வேறு ஊர்களில் படிப்பு மற்றும் வேலை தேடுதல், வெளிநாடுகளில் படிப்பு மற்றும் வேலைக்காக செல்ல நேர்வதால் முறையான உணவுவகைகளை உட்கொள்வதில்லை.பெற்றோர்களுடன் இருக்கும் வரை அவர்களுக்கு கவலை இல்லை சத்தான சாப்பாடு வீட்டு சாப்பாடு அம்மாவின் பராமரிப்பில் அமைந்து விடுகின்றன.

ஆனால் இப்படி வெளியிடங்களுக்கு போய் சாப்பிடும் போது சிலருக்கு அந்த வகை சாப்பாடு ஒத்துக்கொள்ளவே நாள் எடுக்கும். (இப்படிதான் ஒருத்தருக்கு உணவு முறை ஒத்துக்கொள்ளாததால் இரத்தில் கேன்சர் வந்து விட்டது அதிர்ஷ்டவசமா இரண்டு வருடமாக சிகிச்சை பெற்று சரியாகி விட்டார்)அதே போல் வேலை பார்க்கும் ஆண்களும் பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள் என குடும்பங்களை நேர் வழியில் கொண்டு செல்லவே சரியாக இருக்கு ஆனால் அவர்களுக்கு குறிப்பிட்ட வயதில் மன அழுத்தம் இயலாமை , உடல் சோர்வு , கிட்னி ஸ்டோன், ஈரல் வீக்கம், ஹெர்னியா , அல்சர் , வயிறு எரிச்சல் , ஹார்ட் அட்டாக், உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறை இரத்த அழுத்தம் , சர்க்கரை வியாதி ,கேஸ் பிராப்ளம் இது போல் பல வியாதிகளில் ஓவ்வொருவருக்கும் ஓவ்வொரு மாதிரியான நோய் சூழ் நிலை, உணவு , இருப்பிடத்தை பொறுத்து கண்டிப்பாக தாக்குகிறது.இது போல வியாதிகளுக்கு மற்றும் ஒரு முக்கிய காரணம் மன அழுத்தம், கவலை, சூழ்நிலையாகவும் இருக்கலாம்.இந்த நோய் ஏன் எப்படி தாக்குகிறது என பார்ப்போம்.மன அழுத்தம் : பல விழியங்களை மனதிலேயே தேக்கிவைத்து யாரிடமும் மனம் விட்டு பேசாததினால் ஏற்படுகிறது, இதுவே தலை வலியாக மாறுகிறது.உடல் சோர்வு: சரியான சாப்பாடு கிடைக்காமல் , சரியான நேரத்துக்கு சாப்பிடாமல் அதிக கடின உழைப்பினால் வருகிறது.

இயலாமை உடலில் போதுமான எதிர்ப்பு சக்தி இல்லாததால் இரத்ததின் அளவு குறைத்தல்கிட்னி ஸ்டோன்: ஆபிஸில் வேலை பார்ப்பவர்கள் அதிக நேரம் கணனியிலேயே இருப்பவர்கள் , சாஃப்ட்வேர் இஞ்சினியர்கள் அவர்களுக்கு கொடுக்கப்படும் பிரஜெக்டுகளில் உட்கார்ந்தால் இரவு பகல் பாராமல் நேரம் போவதே தெரியாது அப்போது தண்ணீரோ , சாப்பாடோ எல்லாம் அவர்களுக்கு சுத்தமாக மறந்து விடுகிறது. அதே போல் பெரிய பெரிய ஷாப்பிங் மாலில் வேலை பார்க்கும் சேல்ஸ் மேன் கள் நின்று கொண்டே தான் இருக்கனும் உட்காரமாட்டார்கள். இதனாலும் அவர்கள் தண்ணீரோ சாப்பாடோ உட்கொள்ள நேரம் கிடைப்பதில்லை. இதனால் கண்டிப்பாக கிட்னி ஸ்டோன் வருகிறது. அப்படியே உட்கார்ந்து இருப்பதாலும் ஈரல் வீக்கமும் ஏற்படுகிறது.ஹெர்னியா குடல் இரங்கி விடுவது இது லேபர்கள் அதிக வெயிட்டை தூக்குவதால் வருகிறது.அல்சர் வயிறு எரிச்சல் எல்லாமே முறையான சரியான உணவு வகைகள் எடுக்காததால் தான் வருகிறது.இதற்கெல்லாம் முக்கியம் ஆண்கள் உழைக்கும் காலத்தில் தொடர்ந்து ஜுரம், தலைவலி, வந்தால் உடனே மருத்துவரை அனுகி முதலில் அவரவர் ஹிமோகுளோபின் அளவை முறையாக பரிசோதித்து. அதற்கு தகுந்த சத்து மாத்திரைகள், சத்தான உணவு வகைகள் உட்கொள்வது நல்லது.உடலில் கிட்னி, லிவர் போன்றவை சரி வர வேலை செய்தால் தான் மற்ற நோய்கள் தாக்காமல் இருக்கும். அதற்கு ஆண்களும் தங்கள் ஹிமோ குளோபின் அளவை சரி பார்த்து கொள்வது நல்லது.(நல்ல உழைத்து விட்டு கழ்ட பட்டு பிள்ளைகளை படிக்க வைத்து அவர்களுக்கு கல்யாணம் செய்யும் நேரம் கல்யாணத்துக்கு முன் ஹார்ட் அட்டாக்கில் அப்பா இறந்துட்டார் என்று நிறைய இடங்களில் கேள்வி படுவதுண்டு. இது அவர்கள் தங்களை கவனித்து கொள்ளாதது தான் காரணம் என்பது என் கருத்து)உடல் சோர்வோக இருந்தாலோ உடல் நிலை சரியாக இல்லை என்றாலோ உங்கள் இரத்தத்தில் அளவை (ஹிமோ குளோபின் ) யும் சரி பார்த்து கொள்வது நல்லது.

உடலில் இரத்ததின் அளவு சரியாக சீராக இருந்தால் ஓரளவுக்கு இது போல் நோய் தாக்குதலில் இருந்து விடை பெறலாம்.காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்டீ காஃபி குடிக்காமல் முடிந்த வரை தண்ணீர் குடிப்பது ஓரளவுக்கு உடல் நிலையை சீராக்கும்.உணவு வகைகள்பச்சை கீரை வகைகள்,பச்சை காய்கறிகள்,பழச்சாறுகள், பேரிட்சை,புரோக்கோலி,பீட்ரூட், மாதுளை பழம், அத்தி பழம் ,ஆட்டு ஈரல்,கிட்னி, மட்டன் , மீன் போன்ற உணவு வகைகளை உணவில் அதிகமாக சேர்த்து கொள்வது நல்லது.பருப்பு சேர்த்து கீரை மற்றும் காய்கறி கூட்டு வகைகள்

அத்திழ ஜுஸ்

மாதுளை ஜூஸ்

பேரிட்சை துவையல்

பீட்ரூட் கூட்டு

ப்ரோக்கோலி சூப்

புரோக்கோலி பாஸ்தா

புரோக்கோலி பொரியல்

எலுமிச்சை ஜூஸ்

சுண்டல் வகைகள்

பழ வகைகளில் ஆப்பில் எல்லோரும் சாப்பிடலாம்.மாலை நேரம் பசி எடுத்தால் நட்ஸில் குறிப்பா வால்நட் ரொம்ப நல்லது. நட்ஸ் வகைகள் , கருப்பு கிஸ்மிஸ் பழம், பேரிட்சை இது போல் சாப்பிடலாம்

கேழ்வரகு, இன்னும் ரெடிமேடாக கிடைக்கும்.கோதுமை, கம்பு , கேழ்வரகு போல் இப்ப Flax seed என்னும் ஆளிவிதையில் அதிக சத்து ஒமேகா3 மீன் உணவுக்கு சமமான சத்து உள்ளது. இதை வெஜ்டேரியன்கள் அதிகமாக சாப்ப்பிடலாம்.ஆளிவிதை ரொட்டி.கார்ன் பிளேக்சில் அதிக சத்து எல்லாமே அதில் கிடைத்து விடுகிறது, அனைத்து வகையான விட்டமின்களும் அதில் உள்ளது.தினம் பாலுடன் கார்ன் பிளேக்ஸ் கூட ஒரு கப் சாப்பிடலாம், ஓட்ஸ் கஞ்சி போல் காய்ச்சி குடிக்கலாம் ,தினம் அதை குடிக்க விரும்பாதவர்கள் ஓட்ஸ் காய்ச்சி அதில் சிறிது அவல் ஊறவைத்து சேர்த்து இனிப்புக்கு பதிலாக கிஸ்மிஸ் பழம் , சிறிது நட்ஸும் சேர்த்து சாப்பிட்டால் சுவையும் வித்தியாசமாக இருக்கும். சத்தும் அதிகம்.வீட்டில் தயாரிக்கும் ஆரோக்கியமான உணவு போல் வெளியிடங்களில் இருக்காது ,சாப்பிடும் போது காய் கறி, மற்றும் கடல் உணவுகள் மட்டும் அதிகமாக எடுத்து கொள்வது நல்லது.
டிஸ்கி: இந்த பதிவு அதீததில் நவம்பர் ஹெல்த் கார்னரில்.

( இது என் செந்த ஆலோசனை மற்றும் கருத்து. அப்பா, சித்தப்ப்பா மற்றும் குடும்பத்தில் இருவரின் உடல் நிலையை நேரில் கண்டதில் என் கருத்து கணிப்பு)

எங்க டாடிக்கு இடுப்பு எலும்பு ஆப்ரேஷன் 8 மணி நேரமா நடந்தது. ஆனால் ஆப்ரேஷன் சக்ஸஸ் என்று சொன்னார்கள் இரத்ததில் அள்வை கவனிக்கல, கொஞ்சம் நல்ல நினைவு வந்தது சில நேரம் நல்லவும் சில நேரம் குழம்பிய நிலையிலும் பேசினார்கள், அப்படியே வீட்டுக்கும் அனுப்பி ஒரு மாதம் ஆகிவிட்டது. தீடீருன்னு ஆப்ரேஷன் பண்ண காயம் ஆரல பிளட் வந்து கொண்டே இருக்கு சாப்பாடும் ஏற்கல பிஸியோ தரபி வந்தால் நடக்க வைக்கவும் முடியல,உடனே மறுபடி ஹாஸ்பிட்டலில் சேர்த்தால் சத்து இல்லை, பிளட், ஹிமோகுளோபின் அளவு 6 ஆக குறைந்து விட்டது . பொதுவாக 12 லிருந்து 13 இருககனும் அது தான் நார்மல்) அப்பரம் எல்லாம் பார்த்து ஒன்றும் பிளட் ஏற்றியும் ஒன்னும் முடியல .அம்மா எவ்வளவோ போராடினாங்க. .... பிரிவின் துயரால் 

Sunday, November 20, 2011

ராகி பார்லி,கருஞ்சீரக தட்டை - Ragi Barley ,Nijella Seed thattai


மருத்துவ குணமுள்ள சூப்பர் ஸ்நாக்ஸ்.

தேவையானவை


ராகி பவுடர் – அரை டம்ளர்
பார்லி பொடித்த்து – அரை டம்ளர்
உளுந்து வறுத்து பொடித்தது – ஒரு மேசை கரண்டி
அரிசி மாவு – ஒரு மேசை கரண்டி
மிளகு கொர கொரப்பாக திரித்தது – ஒரு தேக்கரண்டி
ஓமம் (AJWAIN)– அரைத்தேக்கரண்டி
இட்லி சோடா மாவு – அரை சிட்டிக்கை
கருஞ்சீரகம் (NAJILA SEED)– அரை தேக்கரண்டி
உப்பு – ருசிக்கு தேவையான அளவு
பட்டர் – ஒன்னறை மேசைகரண்டி
கடலை பருப்பு – ஒரு மேசைகரண்டி

செய்முறை
கடலை பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
ராகி மாவு, அரிசிமாவு, பார்லி உளுந்து பொடித்தது, மிளகு , கருஞ்சீரகம், ஓமம்,பட்டர் , உப்பு , இட்லி சோடா அனைத்தையும் சிறிது நீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
பிசைந்த மாவை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் தட்டைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.
சுவையான சூப்பரான டயட் தட்டை ரெடி
20 தட்டைகள் வரும்.


Tuesday, November 15, 2011

ஆண்களுக்கு தையல் பாகம் - 1

தையல் கற்று கொள்வது மிகவும் பயனுள்ளது.

 நிறைய பேர் இதை கற்று கொள்வதில்லை.

கைத்தொழில்அதிலும் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் ஆண்களுக்கு தீடீரென தையல் விட்டு போய் விட்டாலோ அல்லது பட்டன் அறுந்து விட்டாலோ பேண்ட் உயரத்தை குறைக்கனும் என்றாலே டெயிலரை நோக்கி ஓடனும்.

 அதுவும் விடுமுறை வரும் போது தான் போய் தைக்க கொடுக்கனும். அதை வாங்கி வர அடுத்த விடுமுறையை எதிர்பார்க்கனும்.


 சிலருக்கு வேலை பார்க்கும் இட்த்தில் இருந்து வெளியில் செல்ல வாய்ப்பே கிடைப்பதில்லை.

அப்படி இருப்பவர்களுக்கு எளிதாக இங்கு நான் சில எளிய தையல் முறைகளை சொல்லி தரலாம் என்று இருக்கேன்.


இது தையல் தெரியாத பெண்களுக்கும் உதவும். உங்க ஆசை கணவரின் பட்டனை நீங்களே தைக்கலாம் இல்லையா?


ஆ ஆ எல்லாம் எங்களுக்குதெரியும் இது சின்ன மேட்டர் இத சொல்லி கொடுக்க வந்துட்டாங்களாக்கும் என நினைப்பவர்கள் அப்ப்டியே கொஞ்ச ஓரங்க்கட்டிக்கோங்கோ......

வாங்க முதலில் பட்டன் தைக்கலாம்.

முடிந்த வரை இரண்டு டைப்பா போட்டோ எடுத்து இருக்கேன் புரியுதான்னு பாருங்கள்.இந்த முறையில் தைத்தால் உங்கள் ஷர்ட் கிழிந்தாலும் பட்டனில் தையல் கிழியாது.
ரெடி மேட் ஷர்ட்கள் கூடுமானவரை லாட் லாட்டா தைக்கப்படுவதால் ஒரே ஒரு தையல் தான் போட்டு இருப்பார்கள். இரண்டு முறை போட்டு வாஷிங் மிஷினில் போட்ட்துமே பட்டன் கானாபோய்விடும்.


முதலில் தேவையானவை
ஊசி மற்றும் நூல்கள்


நல்ல விலை உயர்ந்த ஷர்ட்களில் பார்த்தீங்க அந்த கலருக்கு ஏற்றார் போல பட்டன்கள் வைக்க பட்டிருக்கும். அது அறுந்து விட்டால் தேடி அதே போல் அதே டிசைனில் வாஙக் முடியாது.


ஆகையால் ஷர்டில் கடைசி பட்டன் போடும் இட்த்தில் திருப்பி பார்த்தீங்கன்னா இரண்டு பட்டன் எக்ஸ்ரா வைத்து தைத்து இருப்பார்கள்.


அது பட்டன் அறுந்து விட்டால் அந்த பட்டனை எடுத்து வைத்து கொள்ளலாம்.இப்ப கடைசியில் இருக்கும் ஒரு பட்டனை ஷர்ட் கிழியாமல் கட் செய்து எடுத்து கொள்ளுங்கள்.
எந்த இட்த்தில் பட்டன் இல்லையோ அந்த இட்த்தில் கண்டிப்பாக அதில் தைக்கும் மார்க் இருக்கும் அப்ப்டி இல்லை என்றால் எதிரே உள்ள பட்டன் மாட்டும் பொத்தான் ஹோலுக்கு நேராக வைத்து ஒரு புள்ளி போல் பென்சிலில் மார்க பண்ணிக்கோங்கோ


ஊசியில் நூலை இரட்டை பட்டையாக கோர்த்து கொள்ளுஙக்ள் இரண்டு முழம் அளவு நூல் எடுத்து கொண்டால் போதும் கோர்த்த்தும் இரண்டு நூலையும் சேர்த்து கடைசியில் முடியும் இட்த்தில் முடிச்சி போட்டு கொள்ளுங்கள்./இப்போது மேல் பக்க (நல்ல பக்க)த்தில் இட்து கையால் பட்டனை வைத்து பிடித்துகொள்ளுங்கள்.   சில பட்டனில் 2 ஹோல் கள் , சில பட்டனில் 4 ஹோல் கள் இருக்கும் அதில் கீழிருந்து பட்டனில் மேலாக ஊசியை குத்தி மேலே கொண்டு வரவும். எதிர் எதிரே உள்ள துளைகளில் பெருக்க்ல் குறி போல் மாற்றி மாற்றி மேலிருந்து கீழாக 4 முறை குத்தி கடைசியாக கீழே கொண்டுவரவும்.

கீழே உள்ள துணியில் சுருக்கம் வராத வாறு சின்னதாக ஒரு ஓட்டு தையல் போட்டு முடிச்சி போடவும்.
மறுபடி மேல் நோக்கி பட்டன் துளையில் குத்தாமல் பட்டனுக்கு பின் ஊசி வருமாறு குத்தவும்.

குத்தி விட்டு பூ கட்டுவது போல் பட்டனை சுற்று முன்று முறை முடிச்சி போடவும்,
திருப்பி கிழ் நோக்கி குத்தி விட்டு கீழே சின்னதாக ஒரு முடிச்சி போட்டு நூலை கட் பண்ணவும்.

அவ்வளவு தான் உங்கள் சட்டை பட்டனை நீங்களே தைத்தாச்சு.


இது என் பையனுக்காக சொல்லி கொடுக்கும் போது எடுத்தது.


டிஸ்கி:பதிவு பிடித்து இருக்கான்னு மறக்காம உங்கள் கருத்துக்களை கீழே பதியுங்கள்/
Saturday, November 12, 2011

ஜவ்வரிசி ரூ ஆப்ஷா ஜிகர்தண்டா - Sogo Roo Apsha Jigarthanda


ஜவ்வரிசி வயிற்று புண்ணிற்கு அருமருந்தாகும். அல்சர் வ்யிறு எரிச்சல் உள்ளவர்கள் ஜவ்வரிசி பால் அல்லது ஜிகர்தண்டா செய்து அடிக்கடி குடித்தால்


வயிறு குளுமை அடைவதோடு புண்ணையும் அடியோடு அகற்றும், வயில் வரும் கொப்புளங்கள் வாய் புண்ணிற்கும் இந்த ஜிகர்தண்டா நல்லது,

வாங்க எபப்டி செய்வதுன்னு பார்ப்போம்தேவையானவை
பால் - 1 டம்ளர்

ஜவ்வரி - 2 மேசை கரண்டி

பாதம் பிஸின் - ஒரு தேக்கரண்டி

ரூ ஆப்சா - 2 மேசை கரண்டி

ஐஸ்கிரீம் - ஒரு குழிகரண்டி

சர்க்கரை - தேவைக்கு

பிஸ்தா பிளேக்ஸ் - அலங்கரிக்கசெய்முறை
பாதம் பிசினை இரவே ஊறவைக்கவும்.

ஜவ்வரிசியை பத்து நிமிடம் ஊறவைத்து பாலுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

வெந்ததும் ஆறவைத்து அத்துடன் ஊறிய பாதம் பிசினை மற்றும்ரூஆப்சா எசனன்ஸையும் தேவைக்கு சர்க்கரையும் சேர்த்து கலக்கி குளிர்சாதன பெட்டியில் 1 மணிநேரம் வைக்கவும். குடிக்கும் போது ஐஸ்கிரீம் மற்றும் பிஸ்தா பிளேக்ஸ் சேர்த்து குடிக்கவும்.சும்மா குளு குளுன்னு இருக்கும். ஒரு முறை செய்து சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடனும் போல் இருக்கும். சுவைத்து மகிழுங்கள் தவறாமல் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.பரிமாறும் அளவு : 2 நபர்களுக்கு


Friday, November 11, 2011

உங்க ஜீ மெயில் தகவல் திருடப்படுகிறதா? 11-11-11

இது எனக்கு மெயிலில் வந்த மெசேஜ் பலருக்கும் பயன் படும் என இங்கு பதிந்துள்ளேன்.ஜி மெயில் தகவல் திருடப்படுகிறதா ?


மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக் கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார்கள்.ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது. கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது மொபைல் போன் மூலமோ, எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப் பட்டிருந்தாலும், அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி. முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது. வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் ஒரு ஐ.பி. முகவரியிலிருந்து உங்கள் ஜிமெயில் தளம் திறக்கப் பட்டிருந்தால், அதனைக் காட்டி எச்சரிக்கை செய்கிறது. எந்த நாள், நேரம் என்பவையும் பட்டியலில் கிடைக் கின்றன.

இதனைக் காண உங்கள் ஜிமெயில் தளத்தின் கீழாக, Last account activity என்ற வரிக்கு அருகே Detailsஎன்பதில் கிளிக் செய்திடவும். உடன் தகவல்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும்.

இந்த பட்டியலில் Access type என்பதில், என்ன மாதிரியான வகையில் (பிரவுசர், மொபைல் போன்,பி.ஓ.பி. கிளையண்ட் போன்றவை) உங்கள் தளம் அணுகப்பட்டது என்று காட்டப்படுகிறது. இந்த பட்டியலில் நீங்கள் பயன்படுத்தாத வகை எதுவும் காணப்பட்டால், உடனே உங்கள் அக்கவுண்ட் தகவல்களை (யூசர் நேம், பாஸ்வேர்ட்) யாரோ திருடி இருக்கிறார்கள் என நீங்கள் அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, நீங்கள் மொபைல் போன் வழி இணையத்தைப் பார்க்கும் வழக்கம் இல்லாதவராக இருந்து, பட்டியலில் மொபைல் போன் வழி பார்க்கப்பட்டது காட்டப்பட்டால், உங்கள் அக்கவுண்ட் திருடு போயுள்ளது என அறியலாம்.

அடுத்ததாக, Location (IP address) என்ற தலைப்பின் கீழ், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை அணுகிய பத்து ஐ.பி. முகவரிகள் தரப்படுகின்றன. இதில் சந்தேகப்படும்படியான ஐ.பி. முகவரிகள் எச்சரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இவ்வாறு ஏதேனும் காட்டப்பட்டால், உடனடியாக உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டினை மாற்றுவது நல்லது.உங்களுடைய ஐ.பி. முகவரியும் பட்டியலில் இருக்கும். இது உங்களுடையதுதானா? என்று எப்படி அறியலாம். இணைய இணைப்பு பெறுபவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் ஒரு ஐ.பி. முகவரி தரப்படுகிறதே என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். நீங்கள் பயன்படுத்தும் இணைய இணைப்பின் ஐ.பி. முகவரியின் முதல் இரு எண்கள் எப்போதும் மாறாமல் இருக்கும். எடுத்துக்காட்டாக, 172.16.xx.xx என்ற எண்ணில் இங்கு காட்டப்பட்டுள்ள முதல் இரு எண்களும், நீங்கள் ஒரே இணைய இணைப்பைப் பயன் படுத்தினால் எப்போதும் மாறாமலே இருக்கும். அதே போல, மொபைல் போன் வழியே ஜிமெயில் காண்பவர்களுக்கு, மொபைல் சேவை வழங்கும் நிறுவனத்தின் முதல் எண்கள் மாறாமல் இருக்கும். இவற்றிலிருந்து உங்களுடைய ஐ.பி. முகவரியினை அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.www.kalvikalanjiam.com

ஒரே நேரத்தில், இருவேறு கம்ப்யூட்டர் களில், இரு வேறு இணைய இணைப்பு மூலம் ஜிமெயில் அக்கவுண்ட்டினை அணுகினால், அவை Concurrent sessions என்பதன் கீழ் தரப்படும்.

தகவல்களைத் திருடியவர்களும் இதே போல பட்டியல் பெற்று, உஷார் ஆகலாமே? என்று நாம் எண்ணலாம். ஜிமெயில் தளம் மிகக் கவனமாக இதனைக் கையாள்கிறது. வழக்கத்திற்கு மாறான ஐ.பி. முகவரிகளில் இருந்து அக்கவுண்ட் பார்க்கப்பட்டதாக இருந்தால், அந்த முகவரிகளுக்கு இந்த எச்சரிக்கைப் பட்டியல் காட்டப்படாது.

நம் அக்கவுண்ட் தகவல்கள் திருடப் பட்டுவிட்டன என்று உறுதியாக அறிந்தால், பாஸ்வேர்ட் மாற்றுவதுடன், கூகுள் http://www.google.com/help/security/என்ற முகவரியில் தரப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின் பற்றவும்.நான் அடிக்கடி கம்ப்யூட்டர், இணைய இணைப்பு, மொபைல் போன் ஆகியவற்றை மாற்றி என் ஜிமெயில் தளத்தினை அணுகுகிறேன். எனவே இது போலக் காட்டப்படும் எச்சரிக்கை பட்டியல் எனக்குத் தேவையில்லை என்று கருதுகிறீர்களா? அப்படியானால், இந்த வசதி இயங்குவதை நிறுத்திவிடலாம். இந்த பட்டியலின் கீழாக இதற்கான வசதி தரப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் ஆப்ஷன் தெரிவித்து ஒரு வாரம் கழித்தே இந்த வசதி நிறுத்தப்படும்.Wednesday, November 9, 2011

கர்நாடகா ஸ்டைல் நெல்லிக்காய் சாதம்
கர்நாடகா ஸ்டைல் நெல்லிக்காய் சாதம்.
தேவையான பொருட்கள்
அரிசி - ஒரு டம்ளர்
லெமன் ஜூஸ்  - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி  -கால் தேக்கரண்டி
உப்பு – ருசிக்கு தேவையான அளவு
அரைக்க
பெரிய நெல்லிக்காய் - இரண்டு
கொத்துமல்லி கீரை – இரண்டு மேசை கரண்டி பொடியாக அரிந்தது
பச்சமிளகாய் – ஒன்று (அ) காரத்திற்கு ஏற்ப
இஞ்சி – அரை இஞ்ச் அளவு
தாளிக்க
எண்ணை – ஒரு மேசைகரண்டி
கடுகு ¼ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு –ஒரு மேசைகரண்டி
வேர்கடலை – ஒரு மேசைகரண்டி
கருவேப்பிலை – 8 இதழ்
பூண்டு – ஒரு பல் 


செய்முறை
சாதத்தை உதிரியாக வடித்து கொள்ளவும். ஆறவைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை மையாக அரைக்காமல் மிக்சியில் கர கரப்பாக திரித்து கொள்ளவும்.
தாளிகக் கொடுத்துள்ளவைகளை தாளித்து திரித்த கலவையை சேர்த்து வதக்கி எலுமிச்சைசாறு பிழியவும். தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்.
கலவையை சாதத்தில் கொட்டி நன்கு கிளறவும்.
சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் ரெடி.
தொட்டுக்கொள்ள பாப்கார்ன் சிக்கன், மற்றும் 

 உருளை வறுவலுடன் சாப்பிட யம்மியாக இருக்கும்.

இது மகியின் கர்நாடக ஸ்டைல் எலுமிச்சை சாதத்தை செய்து பார்த்து மேலும் அதே ஸ்டைலில் சிறிது மாற்றத்துடன் என் சுவைக்கு ஏற்ப நெல்லிக்காய் சாதமாக செய்துள்ளேன்.Saturday, November 5, 2011

ஜவ்வரிசி பேரிட்ச்சை பாயத்துடன் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்அஸ்ஸலாமு அலைக்கும்
வலையுலக தோழ தோழியர்கள் அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.


ஜவ்வரிசி பேரிட்சை பாயாசம்


தேவையானவை

ஜவ்வரிசி – 50 கிராம்

பேரிட்சை – 5

பால் – 2 டம்ளர்

நட்ஸ் வகைகள் – 50 கிராம்

(பாதம் பிஸ்தா,முந்திரி,கிஸ்மிஸ்)

கண்டென்ஸ்ட் மில்க் – சிறிய டின்.

நெய் – ஒரு மேசைகரண்டி

சாப்ரான்(குங்குமப்பூ) - சிறிது


செய்முறை
ஜவ்வரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும்.

பாலை காய்ச்சி ஆறவைக்கவும்.

இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்கவிட்டு கொதி வரும் போது ஜவ்வரிசி சேர்த்து வேகவிடவும்.

பேரிட்சையை கொட்டையை நீக்கி ஆறிய பாலுடன் சேர்த்து அரைத்து வைக்கவும்.

ஜவ்வரிசி வெந்ததும் அரைத்துவைத்திருந்த டேட்ஸ் பாலை சேர்த்து நட்ஸ்வகைகளை நெயில் வறுத்து சேர்த்து சிறிது குங்குமபூ தூவி விடவும்.

இதில் ஒளித்து வைத்திருக்கும் முட்டை எல்லாம் அதிராவுக்கும் பூஸாருக்கும்,
Eid Mubarak

Wednesday, November 2, 2011

சென்னை ப்ளாசாவின் புது மாடல் புர்கா வகைகள்


சென்னை ஃப்ளாசாவின் புது மாடல்களை இங்கு எனக்கு தெரிந்த முறையில் எடிட் செய்துள்ளேன். பார்த்து நல்ல இருக்கான்னானு சொல்லுங்கள் ,

புர்கா மட்டும் இல்லை.
எல் யீ டி எமர்ஜென்சி லேம்ப், பேன், டார்ச் வகைகளும் உண்டு.
 மற்றும் வித வித மான பேன்சி கல் வைத்த கிளிப் மற்றும் நெக்லஸ் செட்டுகளும் உண்டு. அதோடு இல்லாமல் கிச்சன் கத்திரிக்கோல்,  வெஜிடேபுள் பீலரும் உண்டு.


டிசைன்களிலேயே கலர் மென்ஷன் பண்ணியுள்ளேன் ஆகையால் இங்கு சொல்ல தேவையில்ல்ல் உங்களுக்கு தெரிந்த சென்னை யில் உள்ளவர்களுக்கும் மற்றும் சென்னை செல்பவர்களுக்கும் தெரியபடு்த்துங்கள்.எப்படி வேண்டும் எந்த டிசைன் வேண்டும் என்று சொன்னாலும் ஆர்டர் கொடுத்தாலும் தைத்து தருவோம்.


இப்போது ஹஜ் டைம் என்றதால் எல்லா வீட்டிலும் குர்பானி கொடுப்பார்கள் அதை பங்கு வைக்க தேவைபடும் கிச்சன் ஸ்கேலும் உண்டு.பல வகையான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணியக்கூடிய காட்டன் , சில்க் பூப்போட்ட போன்ற ஹிஜாப் வகைகள்,் ஷேலாக்கள் அனைத்தும் வேண்டிய டிசைன் மற்றும் வண்ணத்தில் கிடைக்கும். இங்கிருந்து ஊர் செல்லும் பேச்சுலர்கள் தேடி அலைந்து வாங்குவீர்கள் அது உங்க தங்கைக்கோ , மனைவிக்கோ பிடிக்கனும். இங்கு கடையில் நேராக சென்றால் தேவைக்கு பிடித்த டிசைனை வாங்கிக்கொள்ளலாம்.அங்கேயே டெயிலரும் இருப்பதால் தேவைக்கு ஆல்டரும் செய்து கொள்ளலாம்.
எல்லாமே துபாயிலிருந்ந்து அனுப்புவது தான். துணி கொஞ்சம் விலை அதிகமாக இருந்தாலும் நல்ல குவாலிட்டி துணியாக தான் அனுப்புகிறோம்.


ஓவ்வொரு டிசைனும் பார்த்து பார்த்து ரொம்ப அதிக பட்டா பட்டாவுமாக இல்லாமல் ரொம்ப நீட்டானா டிசைன்கள். கலர்களும் மைல்டான கலராகா இருக்கும்.

அங்கேயே ஜெராக்ஸ் சும் எடுத்துகொள்ளலாம்.


தலையனை , பிலாங்கெட், போல்டபுள் பெட் , கிளாத் ட்ரையர், போன்றவை ஆர்டர் கொடுத்தால் அனுப்பி இங்கிருந்து கடைக்கு அனுப்பி வைப்போம்.
அங்கு வாங்கி கொள்ளலாம்.


CHENNAI PLAZA
No, 277/30 Pycrofts Road,1st Floor,
(opp:shoba cut piece)
Triplicane , Chennai 600 005
Tel: 91 44 4556 6787
 Mr.Mohideen Mob: 91 78 45367954
Mr.Ibrahim      Mob:  91 98 43709497