Saturday, November 12, 2011

ஜவ்வரிசி ரூ ஆப்ஷா ஜிகர்தண்டா - Sogo Roo Apsha Jigarthanda






ஜவ்வரிசி வயிற்று புண்ணிற்கு அருமருந்தாகும். அல்சர் வ்யிறு எரிச்சல் உள்ளவர்கள் ஜவ்வரிசி பால் அல்லது ஜிகர்தண்டா செய்து அடிக்கடி குடித்தால்


வயிறு குளுமை அடைவதோடு புண்ணையும் அடியோடு அகற்றும், வயில் வரும் கொப்புளங்கள் வாய் புண்ணிற்கும் இந்த ஜிகர்தண்டா நல்லது,

வாங்க எபப்டி செய்வதுன்னு பார்ப்போம்



தேவையானவை




பால் - 1 டம்ளர்

ஜவ்வரி - 2 மேசை கரண்டி

பாதம் பிஸின் - ஒரு தேக்கரண்டி

ரூ ஆப்சா - 2 மேசை கரண்டி

ஐஸ்கிரீம் - ஒரு குழிகரண்டி

சர்க்கரை - தேவைக்கு

பிஸ்தா பிளேக்ஸ் - அலங்கரிக்க



செய்முறை




பாதம் பிசினை இரவே ஊறவைக்கவும்.

ஜவ்வரிசியை பத்து நிமிடம் ஊறவைத்து பாலுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

வெந்ததும் ஆறவைத்து அத்துடன் ஊறிய பாதம் பிசினை மற்றும்ரூஆப்சா எசனன்ஸையும் தேவைக்கு சர்க்கரையும் சேர்த்து கலக்கி குளிர்சாதன பெட்டியில் 1 மணிநேரம் வைக்கவும். குடிக்கும் போது ஐஸ்கிரீம் மற்றும் பிஸ்தா பிளேக்ஸ் சேர்த்து குடிக்கவும்.



சும்மா குளு குளுன்னு இருக்கும். ஒரு முறை செய்து சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடனும் போல் இருக்கும். சுவைத்து மகிழுங்கள் தவறாமல் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.



பரிமாறும் அளவு : 2 நபர்களுக்கு


17 கருத்துகள்:

அம்பலத்தார் said...

கோடைகாலத்திற்கு உகந்த பானம்போல் இருக்கிறது.

ஆமினா said...

நல்ல குறிப்பு அக்கா

வாழ்த்துக்கள்

Prema said...

wow yummy jigar thanda...luks delicious.

நட்புடன் ஜமால் said...

I like this, but no chance to have it now ...

Asiya Omar said...

வித்தியாசமாக இருக்கே ஜலீலா.அருமை.

Unknown said...

நல்ல இருக்கு

Vikis Kitchen said...

Superb recipe for jigarthanda...seems so delicious akka.

அன்புடன் மலிக்கா said...

அருமையான ஜூஸ் ப்லீஸ் ஒருகப் பார்சல்..


மெயில் பார்கலையா ???????????

Jaleela Kamal said...

அம்பலத்தார் வருகைக்கு மிக்க நன்றி , ஆமாம் கோடைக்கேற்ற பானம்.

Jaleela Kamal said...

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஆமினா

Jaleela Kamal said...

ந்ன்றி பிரேமா

Jaleela Kamal said...

சகோ ஜமால் ஊருக்கு போனா உங்கங்க தங்ஸ் கிட்ட சொல்லி செய்து குடிக்கலாம்,

Jaleela Kamal said...

ஆமாம் ஆசியா நோன்பில் முயற்சி செய்தது

Jaleela Kamal said...

நன்றி பாயிஜா

Jaleela Kamal said...

உங்கள் கருத்து க்கு மிக்க ந்ன்றி விக்கி

Jaleela Kamal said...

மலிக்கா வருகைக்கு மிக்க நன்றி

halal foodie said...

it definitely looks like Jigarthanda, thanks for sending it to my event

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா