Monday, December 19, 2011

பிஞ்சு குழந்தைகள் இழப்பு

zசின்ன குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்களை பார்த்து கொள்வதில் கூடுதல் கவனம் தேவை,அந்த காலத்தில் எப்படியும் குழந்தைகளை பார்த்து கொள்ள கூட்டு குடும்பத்தில் நிறைய பேர் இருப்பார்கள்,. ஒருவர் வேலையா இருந்தால் மற்றொருவர் வைத்து கொள்வார்கள். ஆனால் வெளிநாடுகளுக்கு வருகிறவர்களுக்கோ எல்லாமே அம்மா அப்பா மட்டும் தான்..

எழுத நிறைய இருக்கு எதை முதலில் எழுதுவது.அதற்குள் கீழே உள்ள இந்த செய்தி ரொம்ப கலங்க வைத்து விட்ட்து. ஷார்ஜா, அபுதாபி சைட் எல்லாம் 16 அடுக்கு கட்டிடங்கள், 20 அடுக்கு இது போல் இருக்கும்.


சும்மா நாலாவது மாடியில் இருந்து எட்டி பார்த்தாலே தலை சுற்றும்.

இப்ப்டி வசிப்பவர்கள் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டியது மிக முக்கியம்.


கடந்த டிசம்பர் 4 ந்தேதி சிரியன் நாட்டு 3 வயது பையன் ஷார்ஜாவில் 14 வது மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டான். இந்த செய்தி பார்ததிலிருந்து ஒரே மனகஷ்டம். நினச்சி நினச்சி ரொம்ப வே வேதனையாக இருந்த்து. குழந்தைகளுக்கு என்ன தெரியும்.அடிபடும் உயிரே போய் விடும் என்பது அதுக்கு தெரியுமா? 

பச்ச குழந்தை விழுந்து விட்ட்து என்றால் எப்படி யாராலும் ஜீரனச்சிக்க முடியும். அம்மா குழந்தை இருவரும் விளையாடி கொண்டி இருந்த போது படிக்கட்டில் விளையாட்டு சாமான்கள் போட்டு பையனும் அம்மாவும் பையன் போட அம்மா எடுதது வர விளையாடி கொண்டு இரு்ந்த போது விளையாட்டு சாமானை அம்மா எடுத்து வர சென்ற சமயம் தலையை கம்பி வழியா எட்டி பார்த்ததில் தவறி விழுந்து ஸ்பாட்லேயே குழந்தை..........

என்ன செய்ய யாரை குறை சொல்வது இதே போல் ஷார்ஜாவில் 19.11 அன்று 4 வயது பொண்ணு 15 வது மாடியில் இருந்து, 24.11 அன்று 3 வயது பையன் 14 வது மாடியில் இருந்து ,30.11 அன்று 4 வயது பையன் 16வது மாடியில் இருந்து தவறி விழுந்து இருக்கிறார்கள்.

எத்தனை பிஞ்சுகள் குழந்தைகள் இறப்பு.

இன்னும் எத்தனை இடங்களில் இப்படி நடந்து கொண்டு இருக்கோ.

யாரை குறை சொல்வது பிள்ளைகள் துடிப்பானவர்கள்.
குழந்தைகள் என்று வந்து விட்டால் வளர்ந்து அவர்களுக்கு புரியும் வரை மிகவும் பாதுகாப்பாக வளர்க்கனும்.

பிள்ளைகள் எதை செய்யவேண்டாம் என்று சொல்கிறோமோ அதை தான் முதலில் செய்வார்கள். பால்கனியில் எட்டி பார்க்காதே என்றால் கண்டிப்பாக எட்டி பார்ப்பார்கள்.

வீடு கட்டும் போது அந்த காலத்தில் குட்டி குட்டியா ஜாலி வைத்த்து போல் யாரும் உள்ளே வெளியே நுழையாத வண்ணம் கட்டுவார்கள்
இப்ப எல்லாமே அழகுகாக இடைவெளியிடன் கம்பிகள் போடும், வளைந்தபால்கனிகளும், மேல் திண்டு வழவழப்பாகவும் கட்டு கின்றனர்.

அடுக்குமாடி குடி இருப்புகளில் இருப்பவர்கள் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய அவசியம் உள்ளது.


இங்குள்ள பால்கனி டோர் கள் கூட அப்படியே ஸலைட் போல் சார்த்தும் போது கொஞ்சம் தவ்றினால் கை விரல் நரம்பு கட்டாகும் அளவுக்கு ரொம்ப ஸ்ட்ராஙகாக இருக்கும்.

அம்மாக்கள் மேலும் ஒன்றும் குறை சொல்ல முடியாது குழந்தைகள் எந்த நேரத்தில் எபப்டி ரியாக்ட் கொடுக்கிறாங்கன்னு நம்மால் யூகிக்கவே முடியாது.

எல்லா பிள்ளைகளுக்கும் பால்கனியில் இருந்து எட்டி பார்க்க ரொம்பவே பிடிக்கும், நான் என் பசங்கள கண்னெதிரிலேயே தான் வைத்து கொண்டு சமைப்பதுஆனால் பொதுவாக குழந்தைகள் அங்க கிங்க கொஞ்சம் நகர்ந்தாலும் கண்டிப்பாக அவர்களுக்கு எப்படி தான் கண்டு பிடிப்பார்களோ தெரியாது கூர்மையான விளையாட்டு பொருட்கள் கொண்டு கண்ணை குத்தி கொள்வது ஒருவருக்கொருவர் ச்ண்டையிட்டு் கடித்து வைப்பது, தள்ளி விடுவது , சாமான்களை தூக்கி முகத்தில் அடிப்பது இது போல் பல குழ்ந்தைகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்படி தான் போன வருடம் ஒரு பையனுக்கு கண்ணும் கருத்துமாக கையிலேயேதூக்கி கொண்டு வைத்திருப்பாங்க , அன்னைக்கு பார்த்து கிச்சனில் கூடவே வைத்து இருந்து மற்ற பிள்ளைகளுக்கு பாலை கரைத்து கொண்டு , சிறிய 2 வயது பையனுக்கும் பால் கரைத்து விட்டு தனக்கு பிலாக் டீ போட்டு டீ பேக்குடன் டம்லரை வைத்து விட்டு கை கழுவிட்டு வருவதற்குள் கீழே நின்று கொண்டு இருந்தவன் டீ பேக் தொங்குவதை பார்த்து பிடித்து இழுத்து விட்டான் அவ்வளவு தான் அரை நொடியில் ஒரு டம்ளர் கொதிக்கும் டீ முகத்தில் அப்ப்டியே குளிப்பது போல ஊற்றி கொண்டான் பையன் துடித்து விட்டான், அந்த பெண்ணும் பதறி விட்டால் இவ்வளவு நல்ல வைத்து இருந்தும் இப்படி நடந்து விட்ட்து. கடைசியில் ஹாஸ்பிட்டலில் வைத்து 3 மாதம் கழித்து சரியானது. ஆனால் திட்டியவர்கள் அவன் இழுக்கும் வரை இவள் என்ன செய்தாள் என தாயை தான் வசை, எந்த தாயாவாது இப்படி நடக்க நினைப்பாளா?

குழந்தைகள் விழியத்தில் யாராக இருந்தாலும் என்ன வேலையாக இருந்தாலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.


ஒன்னறை வருடம் முன் ஒரு வீட்டுக்கு போயிருந்த போது கையில் பெரிய க்ட்டு என்னன்னு கேட்டால் எலக்ரானிக் ஆனியன் சாப்பர் நிறைய பிளேட் உடன் கூடியது கடையில் இரு்ந்து வாங்கி வந்து பிரிச்சி பார்த்து அதை உள்ளே எடுத்து வைப்பதறகுள் கூர்மையான பிலேட எடுத்து உடனே கை விரல் வெட்டி கொண்டதாம். என்ன செய்வது பிள்ளைகள் துடுப்பானவர்கள்.

குழ்ந்தை வைத்து இருப்பவ்ர்கள் சில விஷியங்களை நினைவில் கொள்ளுஙக்ள்;

1. டிவி தானே பார்க்கிறார்கள் என்று நீங்க பாட்டு கிச்ச்னில் வேலை பார்க்காதீர்கள்.


2 பாத்ரூமில் போய் தண்ணிய திறந்து விடுறேன்னு ஹாட் வாட்டரை திறந்து விட நேரிடலாம்.

3. கிச்சனில் நின்று கொண்டிருந்தாலும் கத்தி போன்ற பொருட்களை கண் பார்வையில் வைக்காதீர்கள்.

4. மெயினா போன் வந்து விட்ட்து பேசி கொண்டு இருக்கும் போது சேட்டைகள் அதிகம் இருக்கும்5. வெளியில் செல்லும் போது ரோடில் நடந்து போகும் போது கூட கை பிடித்து கொண்டு தான் வந்திருப்பார்கள் , ஒரு சனத்தில் கை உருவி கொண்டு ஓடுவார்கள். பிள்ளைகளை கூப்பிட்டு செல்லும் போது நாம ரொம்ப பராக் பார்க்க கூடாது.6. மிக்சி மறந்து ஆனில் இருந்தால் நாமும் ஆன் பண்ணி பார்க்கலாமேன்னு டக்கு ஆன் செய்து சத்தம் வந்த்தும் பயத்தில் ஓடி விடும்.

7. அயர்ன் பாக்ஸ் அயர்ன் பண்ணுவதை பார்த்து கொண்டே இருந்து நானும் அயர்ன் பண்றேனே ஆன் செய்து ஒரு இட்த்தில் துணி கருகிவிட்ட்து, மற்றொரு வீட்டில் அப்ப்டியே தொடை அந்த குழந்தை வைத்து கொண்ட்து, இன்னும் ஒரு இட்த்தில் சோபாவ அயர்ன் பண்றென்னு அப்படியே உள்ளே வரை எரிந்து விட்ட்து என்றார்கள்.8. சும்மா தூங்க வைத்து விட்டு கதவ சாத்தி விட்டு வேலை பார்த்து கொண்டு இருந்தாலும் உள்ளே அவர்கள் சத்தமில்லாம வொயர் பிளக் போன்றவைகளை குடைந்து கொண்டு இருப்பார்கள்.ஓவ்வொன்றில் கண்டிப்பாக விழிப்புணர்வுடன் இருங்க,
வாழ்வில் குழந்தை செல்வம் தானே உலகத்திலேயே பெருஞ்செல்வம். அதை கண்ணும் கருத்துமாய் வளர்க்கவேண்டியது உங்கள் கடமை அல்லவா//

32 கருத்துகள்:

ஹுஸைனம்மா said...

அக்கா, வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன அசம்பாவிதங்கள் - வெந்நீர் சிந்துவது - போன்றவை இப்படித்தான் திரும்பிப் பார்ப்பதற்குள் நடந்துவிடும். ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும்.

ஆனால், பால்கனி - ஜன்னல்களிலிருந்து கீழே விழுந்த சம்பவங்கள் எல்லாமே, பெற்றோர்கள் அந்தக் குழந்தைகளைத் தனியே வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றபோது நடந்திருக்கின்றன. இது பொறுப்பற்ற தனமையில்லையா?

முதலில், தனியே விட்டுவிட்டு வெளியே போகவே கூடாது; இரண்டாவது, போகிறவர்கள் ஜன்னலையோ, பால்கனி கதவையோ திறக்க முடியாதபடியாவது வைத்திருக்க வேண்டும். இரண்டுமே பெற்றவர்களின் கவனக் குறைவையே காட்டுகிறது. எப்படித்தான் இப்படி இருக்க முடிகிறதோ?

கூட்டுக் குடும்பம் இல்லாமல் எத்தனை பேர் இங்கே தனியாக இருந்து பிள்ளைகளைப் பத்திரமாக வளார்க்கலையா? ஏன் வேலைக்குக் கூடப் போகத்தானே செய்கிறார்கள்? எத்தனைபேர் இருந்தாலும் சில பாதுகாப்புகள் நாம் செய்துகொள்ளத்தானே வேண்டும்.

கொடுமையிலெல்லாம் பெரிய கொடுமை, இரண்டு மாதன்முன், தனியே இருந்த 12 வயதுச் சிறுவன், விளையாடும்போது, பெல்ட் கழுத்தில் மாட்டி இறந்தானே... அது இன்னும் மனதை விட்டு அகலவில்லை. 12 வயது என்றால் பெரியவன், பொறுப்பாக இருந்துகொள்வான் என்றுதானே நினைப்போம்? அவனே இப்படி விபரீதமாக விளையாடினால்?... ஆண்டவன்தான் காப்பாற்றணும்.

Jaleela Kamal said...

////கொடுமையிலெல்லாம் பெரிய கொடுமை, இரண்டு மாதன்முன், தனியே இருந்த 12 வயதுச் சிறுவன், விளையாடும்போது, பெல்ட் கழுத்தில் மாட்டி இறந்தானே... அது இன்னும் மனதை விட்டு அகலவில்லை. 12 வயது என்றால் பெரியவன், பொறுப்பாக இருந்துகொள்வான் என்றுதானே நினைப்போம்? அவனே இப்படி விபரீதமாக விளையாடினால்?... ஆண்டவன்தான் காப்பாற்றணும்.//ஆமா இத ட்சொல்ல மறந்துட்டேன்.

Jaleela Kamal said...

///கூட்டுக் குடும்பம் இல்லாமல் எத்தனை பேர் இங்கே தனியாக இருந்து பிள்ளைகளைப் பத்திரமாக வளார்க்கலையா? ஏன் வேலைக்குக் கூடப் போகத்தானே செய்கிறார்கள்? எத்தனைபேர் இருந்தாலும் சில பாதுகாப்புகள் நாம் செய்துகொள்ளத்தானே வேண்டும்//


ஆமாம் ஹுஸைன்ம்மா//அதான் நானும் யோசிப்பேன், எப்படி இவ்வ்ளவு கவன குறைவு இருக்காங்கன்னு தெரியல

Jaleela Kamal said...

சில பேர் வீட்டில் பூட்டி வைத்து விட்டு வெளியிலும் செல்கின்றனர்.

அன்புடன் மலிக்கா said...

ஆனால், பால்கனி - ஜன்னல்களிலிருந்து கீழே விழுந்த சம்பவங்கள் எல்லாமே, பெற்றோர்கள் அந்தக் குழந்தைகளைத் தனியே வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றபோது நடந்திருக்கின்றன. இது பொறுப்பற்ற தனமையில்லையா?//

பொறுபுகள் பெற்றோர்களுக்கு மிகவும் அவசியம் இல்லையெனில் பல இழப்புகள் நேரிடும்..

நல்ல விழிப்புணர்வுபதிவுக்கா..

athira said...

ஜலீலாக்கா நல்ல நல்ல தகவல்கள் தந்திருக்கிறீங்க.... தலைப்புத்தான் ஒரு மாதிரி இருக்கு..:(.

athira said...

அந்த குழந்தையும் தாயும் விளையாடிக்கொண்டிருந்தபோதே, குழந்தை எட்டிப் பார்த்து விழுந்தது படிக்கவே முடியவில்லை, அந்தத் தாய்க்கு எப்படி இருந்திருக்கும், கற்பனைகூட பண்ண முடியவில்லை...

இதெல்லாம் விதியே தவிர யாரிலும் குறைகூற முடியாது.... தட்டுப் பட்டவுடன்... கதை முடிந்துவிட்ட சம்பவங்களும் இருக்கு, அதே நேரம் 3 ஒரு இரவு முழுவதும் ஸ்னோவில் புதைந்து கிடந்த குழந்தை தப்பிய கதையும் இருக்கு.....

விதி நல்லதெனில் எல்லாம் நல்லதாக இருக்கும்.

athira said...

இருப்பினும் பெற்றோர்தான் அதிக கவனமாக இருக்க வேண்டும், நடந்து முடிந்தபின் ஆரையும் குறை கூறி என்ன பயன்.

ஆனா சில குடும்பத்தில் 10 மாத வித்தியாசத்திலேயே 3,4 குழந்தைகள் இருக்கும், அப்போ ஒரு தாயால் எப்படி தனியே கவனிக்க முடியும், குழந்தை பெறுவதிலும் ஜாக்கிரதையாக இடைவெளி விட்டுப் பெறுவதும் நல்லதே..

athira said...

நல்ல பதிவு ஜலீலாக்கா, இதை இரு பகுதியாகப் போட்டு, கதைகளை விரிவாக எழுதியிருக்கலாமே...

athira said...

இங்கெல்லாம் 14 வயதுக்கு கீழ் இருக்கும் பிள்ளைகளை தனியே விட்டுவிட்டுப் போனால் உடனே போலீஸ் பிடிக்கும் பெற்றோரை. ஸ்கூலில் எல்லாம் சில நேரம்.. ஷோஷல் சேவிஸ் ஆட்கள் போய், சும்மா கதை கேட்பதுபோல இடையிடை விசாரிப்பார்களாம்.. வீட்டில் எப்படி இருப்பீங்க.. ஸ்கூலால் வீட்டுக்குப்போய் என்ன செய்வீங்க இப்படியெல்லாம், அப்போ பிள்ளைகள் கதை சொல்லிவிட்டால்...

உடனே பொலீஸ் வீட்டுக்கு வரும்... நடந்தும் இருக்கு ஒரு ஆந்திரா குடும்பத்துக்கு.

கோமதி அரசு said...

விழிப்புண்ர்வு தேவைதான் பெற்றோர்களுக்கு.

எவ்வளவு கவனமாய் இருந்தாலும் இந்த மாதிரி சிலநேரங்களில் நடப்பது துரதிருஷ்டமே.

பால்கனிக்கு கம்பி தடுப்பு போட்டு குழந்தைகள் விழாமல் இருக்கிறமாதிரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

Priya said...

Very useful and informative post Jaleela, naan oru kuzhanthaigal kappakathil romba naal velai seithathal ithu ponra neeraya sambavangal paarthum ketum irrukiren..Nichayamaga neeraya puthiya thaaimargaluku kattayam udathava kudiya oru post ithu..

Jaleela Kamal said...

ஆமாம் மலிக்கா பெற்றோர்கள் கண்டிபாக குழந்தைகள் விஷியத்தில் அதiிக பொறுப்புணர்வோடு இருக்கனும்,

Jaleela Kamal said...

அதிரா புது சமையல் குறிப்புகள் அதிகமாக செய்து போட பிடிக்கவே இல்லை. நிறைய எச்சரிக்கை பதிவுகளே அதிகம் உள்ளது.
நானும் கடந்த 10 நாட்களாக எப்படி எழுதுவது என யோசித்து கடைசியில் இந்த இந்த பதிவு போட்டாச்சு,

Jaleela Kamal said...

க//தை முடிந்துவிட்ட சம்பவங்களும் இருக்கு, அதே நேரம் 3 ஒரு இரவு முழுவதும் ஸ்னோவில் புதைந்து கிடந்த குழந்தை தப்பிய கதையும் இருக்கு.....//படிக்கவே பயமா இருக்கு

Jaleela Kamal said...

//ஆனா சில குடும்பத்தில் 10 மாத வித்தியாசத்திலேயே 3,4 குழந்தைகள் இருக்கும், அப்போ ஒரு தாயால் எப்படி தனியே கவனிக்க முடியும், குழந்தை பெறுவதிலும் ஜாக்கிரதையாக இடைவெளி விட்டுப் பெறுவதும் நல்லதே..//


இதை பற்றியும் எழுத வேண்டி இருக்கு, நேரம் தான் பத்தல

Jaleela Kamal said...

இங்கு வேலைக்கு போகும் பெண்கள் சில பேபி கேரில் விடுகின்றனர், பெரிய பிள்ளைகள் என வீட்டிலியே விட்டு செல்கின்றனர்,

ஆனால் எல்லா வயது பிள்ளைஅகளாலும் நிறைய ஆப்த்துகள் இருக்கின்றன.

சில பிள்ளைகள் தான் முத்து போல் புரிந்து நடந்து கொள்கின்றனர்

( போலிஸ் வந்து செக் பண்ணுவதும் நலல் விஷியம் தான் இல்லையா)

Jaleela Kamal said...

ஆமாம் கோமதி அரசு மிக மிக விழிப்புணர்வு தேவை.

Jaleela Kamal said...

ஆமாம் பிரியா புதிய தாய் மார்களுக்கு கண்டிப்பாக பயன் படும்.
எனக்கும் பேபி கேர் அனுபவம் நிறைய உண்டு , பின் வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

ஹைதர் அலி said...

படிக்கவே கஷ்டமாக இருக்கு
இரண்டு பிள்ளைகளுக்கு தந்தை என்ற முறையில் அந்த மனபாதிப்பை முழுமையாக உணர்கிறேன்.

அல்லாஹ் அந்த குடும்பங்களுக்கு மன நிம்மதியை அளிப்பனாக

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

படிக்கும்போது ரொம்ப வேதனையாக இருக்கிறது. பிஞ்சு குழந்தைகளை ரொம்ப கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படி எதாவது அசம்பாவிதங்கள் நடக்கும்போது மனது கஷ்டத்துக்கு உள்ளாகிறது.

குழந்தைகள் விசயத்தில் ரொம்ப கவனம் தேவை. குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்கள் மனம் படும்பாடு ரொம்ப வேதனையானது. அல்லாஹ் அவர்களுக்கு நன்மாராயம் செய்வானாக. ஆமீன்.

Kanchana Radhakrishnan said...

நல்ல தகவல்கள்.

asiya omar said...

பதிவை வாசிக்கும்போதே பக்குன்னு இருக்கு,நல்ல விழிப்புணர்வு பகிர்வு..

Oceana said...

hi i dont understand anything here wot should i do to read ur post ?

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி சகோதரி!
படித்து விட்டீர்களா? :
"நீங்க மரமாக போறீங்க..."

ராஜி said...

குழந்தைகள் விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கனும். என் பிள்ளைகள் இப்படியெல்லாம் என்னை அலைக்கழிக்காம சமர்த்தா வளர்ந்துட்டாங்க

Lakshmi said...

இதேபோல செய்திகள் இப்பல்லாம் நிறைய கண்களில் படுகின்றன.பிரபலங்களின் குழந்தைகளும் இதற்கு விதி விலக்கல்ல. பின்னணி பாடகி சின்னக்குயில் சித்ராவுக்கு நீண்ட வருடங்களுக்குப்பிறகு குழந்தை பாக்கியம் கிட்டி இருந்தது அதுவும் சிறப்புக்குழந்தையாக ஒரு பெண் குழந்தை ஆசையும் பாசமுமாக வளர்த்து வந்திருக்காங்க துபாய் போயிருந்த சமயம் ரூமில் குழந்தையை படுக்கையி தூங்க வைத்துவிட்டு குளிக்க பாத்ரூம் போய்ட்டு வந்து பார்த்தப்போ குழந்தை காணோம் அங்கிருந்த ஸ்விம்மிங்க் பூலில் விழுந்து குழந்தை இறந்து விட்டதாம் என்ன கொடுமை இல்லியா?

குட்டி எலி said...

எதிர்பாராமல் நடப்பதுக்கு பேர்தான் ஆக்ஸிடெண்ட் ... எதுவுமே வேனுமென்றே நடப்பதில்லையே ,

முடிந்த வரை மாடிக்கதவை பூட்டி வைப்பது நல்லது . அதிக பட்ச பில்டிங்கில் பூட்டு சிஸ்டம் கிடையாது . எளிதாக விரலால் நகர்த்தும் லாக் சிஸ்டம்தான் இருக்கு . அங்கே மினிமம் ஒரு வருடமாவது தங்கி இருக்கும் பட்சத்தில் நாமே ஒரு லாக் (மேல்புரத்தில் ) தனியே செட் செய்து வைப்பது கூடுதல் சேஃப்டி

angelin said...

படிக்கும்போது அழுகையா வந்தது .குழந்தைகளுக்கு தெரியுமா .நாமதான் கவனமா பாக்கணும் ..நல்ல விழிப்புணர்வு பதிவு .குட்டிகளுக்கு பெரியவங்க பொருள்ளதான் கண் .
சிலநேரம் பிள்ளைகள் என்ன செய்வாங்கன்னே தெரியாது
இங்கே சில வருஷமுன் ஒரு பனிரெண்டு வயது பெண் குண்டூசிய வாய்ல போட்டு டிவி பார்த்துட்டு இருக்கு தெரியாம விழுங்கிசெத்து போச்சி .இந்த இடத்தில அம்மா அப்பா தவறேதுமில்லை .

ஹேமா said...

மனதிற்குச் சங்கடமான பதிவு.அந்தத் தாயின் நிலைமையை நினைக்கவே கஸ்டமாயிருக்கு !

Geetha Anjali said...

ஆமாங்க நாம கொஞ்சம் ஏமாந்தா போச்சு., காலம் பூரா கண்ணீர் தான்.நல விழிப்புணர்வு !

மாதேவி said...

குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் பொறுப்பான விடயம் சற்றுகண்காணிப்பில் இருந்து விலகினாலே விபரீதம்தான்.

நல்ல விழிப்புணர்வுப் பதிவு.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா