Wednesday, February 15, 2012

மழலை உலகம் மகத்தானது 3







மழலை உலகம் மகத்தானது 3


குட்டன் ஜாம் பாட்டிலை பொத்துன்னு போட்டு உடைத்த்தும் , எனக்கு ஒன்றும் ஓடல, அதை அள்ளி போடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். அவன் பயந்து பாட்டில காலவைக்காம இருக்கனுமே. உடனே நூனி , ஜானி என்னவா இருக்கும் இந்த சீரக மிட்டாய் தான்.
இந்த மிட்டாய் குழந்தைகள் உடம்பிற்கு ஒன்றும் செய்யாது செமிக்க வைக்கும், என் பெரிய பையன் சின்னதா இருக்கும் போது என் மாமனார் வாங்கி கொடுப்பார், அது அவன் வைத்த பெயர் தான் நூனி. 
ஜானி என்பது இப்ப எங்க வீடுகளில் உள்ள சின்ன வாண்டுகள் வைத்த பெயர். 
 குட்டி குட்டி சோம்பு, சீரக‌ மிட்டாய், ஜெம்ஸ் பாக்கட், கல்கண்டு பலூன், பெரிய கலர்ஃபுல் பந்து  எல்லாம் எப்போது ரெடியாக இருக்கும். ஆளுக்கு கொஞ்சமாக நூனிய போட்டு வெளியில் வைத்து உடகார வைத்து விட்டு அதஒன்னு ஒன்னா எடுத்து அவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்குள் ஜாம் பாட்டிலை துணியில் அள்ளி போட்டு விட்டு மாப் பண்ணிட்டு அப்பாடான்னு பிள்ளைங்க கூடவே கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொண்டேன்.

இந்த நான்கு பேர் பார்த்து கொண்டு இருக்கும் போதே ஷெரின் ஒரு வயது பொண்ணு வந்த்து மளையாளி ஆனால் வந்த்தில் இருந்து ஒரே அழுகை தான் சாப்பாடு ஊட்ட அப்ப மளையாளத்தில் என்ன்ன்னு தெரியல அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு , களிக்க , ஊன் களிக்க, வேக களிக்க ஏதோ ஒன்று இரண்டு வார்த்தைகள். வைத்து கொஞ்ச நாள் ஓடியது. சாப்பாடு சாப்பிடு விட்டு குப்பர படுத்து கொள்ளும் யாரிடமும் பேச மாட்டாள் சிரிக்க மாட்டாள். ஏதாவது பேசினாள் அழ துடங்கிடுவாள், ஆனால் மற்ற குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை மட்டும் பார்ப்பாள்.பத்துநாள் வரை இருந்த்து பிறகு அவங்க வீட்டில் வேலைக்காரி கிடைத்து விட்ட்தால் பிறகு வரல..
அடுத்து நாங்க பார்த்து கொள்வதை கேள்வி பட்டு 11 மாத விஜி என்ற பெண் குழந்தையை ஒரு நர்ஸ் கொண்டு வந்து விட்டாங்க, அவளும் விட்டுட்டு போனதில் இருந்து மூச்சு விடாம அழுகை , வந்து குளிர் காலம் வேறு இங்கு இருக்கும் கிளைமேட்டுக்கு அந்த பொண்ணுக்கு முகமெல்லாம் ரேஷ் அப்படியே சிகப்பாக ரேஷ்ஷ் அதிகமாகிடும் அது தனியாக மருந்து தேய்த்து விடனும். எல்லா துணிமணிகளையும் ஒருத்தருடன் ஒருத்தர் சேராமல் தனியாக வைக்கவும். சாப்பாடு ஊட்டும் போதும் அப்படி தான் நல்ல சுத்தமாக வைத்து கொள்ளனும். ரேஷ் அதிகமாக இருப்பதால் அழுகை நிறுத்திய பாடில்லை எவ்வளவு தான் விளையாட்டு காட்டினாலும் அழுகை நின்றபாடில்லை. கொஞ்சம் பயமாக இருந்த்து. திடீருன்னு மூச்சு பிடிச்சி கொண்டால் என்ன செய்வது, பார்த்துக்க மாட்டேன் சொல்ல மனமில்லாமல் வேண்டாம் என்று சொல்லிவிட்வோம்.
இங்கு பனிகாலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக முகத்தில் ரேஷ் இருக்கும். சில நேரம் டிக்‌ஷாவுக்கும் ஆகும் உடனே அதற்கேற்ற கிரீம் அவங்க அம்மாவே தேய்த்து கொண்டு வந்து விடுவார்கள். சரியாகிடும்.

அடுத்து கொஞ்சநாளில் சின்சி என்ற 2 வயது குழந்தை எங்க வீட்டு எதிரிலேயே தான் வீடு. அரை நாள் தான் அந்த பொண்ணை பொருத்தவரை எந்த தொந்தரவும் கொடுக்கல. சாப்பாடு வேளையில் எல்லாரையும் ஒன்னா சுற்றி உட்காரவைத்து  நடுவில் பெரிய பேப்பர் விரித்து அவங்க அவஙக் டிபன் பாக்ஸை  வைத்து தனித்தனியாக ஸ்பூன் போட்டு ஊட்டி விடுவோம்,
முதலில் இருந்தேன் பெரிய நாப்கின் எல்லார் கழுத்திலும் கட்டி விட்டு பழக்க படுத்திட்டோம் ஆகையால் போட்டு இருக்கும் டிரெஸ் அழுக்காகாது.
குளிர்காலத்தில் சளி பிடித்தாலும் அதையே கட்டி விட்டு அவர்களா துடைத்து கொள்ளவும் சொல்லி கொடுத்துடுவோம் .
ஒரு ஆச்சரியம் இத்தனை குழந்தைகளை வைத்து வளர்த்தோம் ஆனால் சுவரில் ஒரு கிறுக்கல் கூட கிடையாது, குழந்தைகள் என்றாலே பெண் பென்சில், ஸ்கெச்,மார்க்கரை வைத்து வீடு முழுவது கோலமாக தான் இருக்கும்.
எப்படின்னு கேட்கிறீங்களா நிறைய டைரி , நோட்டுகள் அதில் தான் எல்லாரையும் எழுத சொல்வது. சின்சியும் ஆறு மாதம் கழித்து வீட்டு மாறுதலாகி போவதால் போய் விட்டாள்.
பிறகு ஒரு கென்யா நாட்டு அரபி லேடி அவங்க  பையன்த்தீன் நல்ல கொழு கொழுன்னு அழகாக இருந்தான் கொண்டு விட்டாங்க, விட்டுட்டு யாரும் பேரம் பேசல அவங்க தான் பேரம் பேசினாங்க, சரி என்ன செய்வது குழந்தைங்க விஷியத்தில் பேரம் பேசுவது பிடிக்கல ஆகையால் கொடுப்பதை வாங்கிக்கொண்டேன்.
அதுவும் மா மா என்று ஒட்டி கொண்ட்து, வந்து நோன்பில், மதியம் வந்து கூப்பிட்டு போகும் போது கஞ்சி செய்து வைத்திருப்ப்போம்.வாசனை மூக்கை தொலைத்து இரண்டு கப் கேட்டு வாங்கி போவங்க. மதினூக்கு அவங்க சாப்பாடை விட எங்க சாப்பாடு ரொம்ப பிடித்து இருந்த்து. எல்லா பசங்களுக்கும்மே ரொம்ப பிடிக்கும். மதீனுக்கு அவங்க அம்மா வந்து மதியம் கூப்பிட்டு செல்ல வந்தால் போகவே பிடிக்காது, உள்ளே போய் ஒளிந்து கொள்வான். அவர்களும் 3 மாத்த்தில் வீடு மாறி கொண்டு போய் விட்டார்கள்.
ஓவ்வொரு குழந்தை வரும் போது ஆரம்பத்தில் ரொம்ப அழுது நல்ல பழகி வரும் போது எங்களை விட்டு போய் விடுவார்கள். கொஞ்ச நாளைக்கு கஷ்டமா இருக்கும்... ஹகீம் ரஷீதும் அவஙக்  எல்லா ஏன் வரலன்னு கேட்டு கொண்டே இருப்பார்கள்.

ஒரு நாள் திடீருன்னு ஒரு கோவன் லேடி நல்ல ,  கதவ தட்டுன்னாங்க. திறந்தும் பெயரை கேட்டு கொண்டு இத பிடிங்க குழந்தைய‌ (பெயர் ஓலியன்) நான் இண்டர்வீவ்க்கு போறேன் இதோ ஒரு மணி நேரத்தில் வந்துடுரேன் பார்த்துக்கங்க மீதி எல்லாம் வந்து பேசுறேன்னுட்டு போயிட்டாங்க.
 நாங்களும் அப்படியே  குழந்தைய கையில் வாங்கவும் அடுத்த நிமிஷமே ஆள் எஸ்கேப்.
ஐய்யோ யாரு என்ன்ன்னு தெரியல. எப்ப திரும்பி வருவாங்க , போன் நம்பரும் இல்லையே? என்ன செய்வது தெரியல அந்த குழந்தை ஒரே அழுகை புது ஆள் புது இடம் பின்ன எல்லா குழந்தைகளும் அப்படி தான் ஒரு வாரம் போனால் தான் ஓரளவுக்கு அவர்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்படும்.
அந்த ஒரு மணி நேரம் முடிந்து காலையில் விட்டுட்டு போய் மதியம் 3 மணி ஆகிவிட்ட்து அவங்க வரவே இல்லை. ............அப்பரம் என்ன ஆச்சு , கொஞ்சம் பொறுங்க‌.


இப்படி ஓவ்வொரு குழந்தைகளுக்காக அவர்கள் கொண்டு வரும் உணவை வைத்து கேரளா, மங்களூர், கோவன் ,கென்யா குழந்தைகள் என்ன என்ன உணவு விரும்பி சாப்பிடுவார்கள் என தெரிந்துகொண்டேன்.


18 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி said...

இப்படி ஓவ்வொரு குழந்தைகளுக்காக அவர்கள் கொண்டு வரும் உணவை வைத்து கேரளா, மங்களூர், கோவன் ,கென்யா குழந்தைகள் என்ன என்ன உணவு விரும்பி சாப்பிடுவார்கள் என தெரிந்துகொண்டேன்.

நிறைய அறிந்துகொள்ளவைத்தது பகிர்வு.. பாராட்டுக்கள்..

ஜெய்லானி said...

இதையெல்லாம் செய்ய ஏகப்பட்ட பொறுமை வேனும் :-)).

சிநேகிதன் அக்பர் said...

சுவாரஸ்யமான பகிர்வு.

ஸாதிகா said...

சுவாரஸ்யமான அனுபவங்கள்.

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா.. சஸ்பென்ஸ்ல முடிச்சிட்டீங்களே..

திண்டுக்கல் தனபாலன் said...

மூன்று பதிவுகளும் முத்தான பதிவுகள் ! நன்றி சகோதரி ! வாழ்த்துக்கள் !

Asiya Omar said...

மிக அருமையாக பகிர்ந்திருக்கீங்க.ஜலீலா.

Jaleela Kamal said...

முதலாவதாக வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி இராகராஜேஸ்வரி

Jaleela Kamal said...

ஜெய்லானி கண்டிப்பாக பொறுமை இல்லனா ஒன்னும் முடியாது ஆனால் அப்ப இருந்த பொறுமை இப்ப இருக்குமான்னு தெரியல..

Jaleela Kamal said...

நன்றி சிநேகிதன் அக்பர்

Jaleela Kamal said...

நன்றி ஸாதிகா அக்கா

Jaleela Kamal said...

ஆம் அமைதிசாரல் எனக்கு சஸ்பென்ஸ் வைத்து எழுத அவ்வளவா பிடிக்காது.
பதிவு நீளம் வேறு. சரி அடுத்த பதிவில் மீதி எழுதலாம் என்று அப்படி முடித்து விட்டேன்

Jaleela Kamal said...

திண்டுகல் தனபாலன் தொடர் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

உங்கள் தொட்ர் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி தோழி ஆசியா

முற்றும் அறிந்த அதிரா said...

ஜலீலாக்கா, என் பக்கத்தில உங்கட புளொக்கை கிளிக் பண்ணினால் பழைய தலைப்பையே காட்டுது, உங்கட பக்கத்திலும் பெப்ரவரி மாதத்தைப் பாருங்க, இந்த தலைப்பு அதில் இல்லையல்லவா? எனக்கு ஒரே பயமயமாக்கிடக்கே அவ்வ்வ்:)).

முற்றும் அறிந்த அதிரா said...

அந்த கல்ர்ஃபுல் மிட்டாயை நாங்கள் பல்லிமிட்டாய் என்றுதான் சொல்வோம். இங்கும் ஏசியன் கடைகளில் கிடைக்குது... அதனை வெற்றலை பாக்கு செக்‌ஷனில் வைத்து விற்கிறார்கள், வெற்றலையோடு சேர்த்துப் போட:).

முற்றும் அறிந்த அதிரா said...

அடடா குழந்தைகள் உலகம் சூப்பர்.. ஒரு கலக்கு கலக்குறீங்க தொடராப்போட்டு. குழந்தைகளைப் பராமரிப்பதெனில் முதலில் மூக்குமேல கோபம் வரதவராக இருக்கோணும்.

Jaleela Kamal said...

அதிரா நாங்களும் அங்கனே மே கூறுவோம் ஹிஹி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா