Monday, February 6, 2012

கேன்சர் நோயாளிகளுக்கான உணவு முறை



கேன்சர் நோயாளிகளுக்கான உணவு முறை

1..ராகி (கேழ்வரகு ) பானம் அதில் பாதம் மற்றும் வால்நட் பொடித்து சிறிது சேர்த்து காய்ச்சி குடிக்கவும். இது மிகச்சிறந்த பானம், ராகி பானம் .புட்டு ,சேமியா


இதே ரொட்டி, கொழுக்கட்டை, புட்டு , சேமியா, ஸ்னாக்ஸ் என்றால்

   ராகி தட்டை முருக்கு போலும் செய்து சாப்பிடலாம்.


2.. அனைத்து காய்கறிகளையும் சேர்த்து குக்கரில் நன்கு வேகவைத்து சூப் போல செய்து குடிக்கவும்.இல்லை கீரை சூப்   பச்சை வெஜ் குருமா போன்றவை குடிக்கலாம் நல்ல எனர்ஜியாக இருக்கும்.



3. சிக்கன் சின்ன கோழியை வாங்கி சூப்பாக சமைத்து சாப்பிடவும்.

4. முட்டை வெள்ளை கரு காலை முன்று , மாலை முன்று. ( சாப்பிட முடியாது தான்) மருந்து மாத்திரைகள் போல நினைத்து கொண்டு சாப்பிடலாமே.



5.கொத்துமல்லி எலுமிச்சை சேர்த்து துவையல் இது ரத்தத்தை சுத்த படுத்தி கொண்டே இருக்கும்.நாக்கு மறத்து போய் இருப்பதற்கு ருசி தரும்.

6.ஆப்பிள் பழம் சாப்பிடால் ரொம்ப நல்லது நல்ல எவ்வளவு வேண்டுமானலும் சாப்பிடலாம்.  ஜூஸாக தினம் காலை மாலை குடிப்பது நல்லது.

7.கீரை வகைகள் முருங்க்கீரை பொரியல், மேத்தி சப்பாத்தி, மேத்தி ரொட்டி அதிகமாக சேர்த்து கொள்ளவும்.


8. இட்லி, இடியாப்பம், ஆப்பம் , கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேக வைத்த உணவுகள் உட்கொள்ளலாம்.


9. சுண்டல் வகைகள் , சாலட் வகைகள் போன்றவை.

10. உள்ளே உள்ள புண்கள் ஆற ஜவ்வரிசி சேர்த்து காய்ச்சிய பால், கடல் பாசி, இளநீர் கடல் பாசி , ஜவ்வரிசி ரூ ஆப்ஷா ஜிகர்தண்டா போன்றவை சாப்பிடலாம்.


11 காய்கறிகளில் புரோக்கோலி பாஸ்தா ,பொரியல், புரோக்கோலி மட்டன். 

முட்டைகோஸ் பொரியல் ,கூட்டு, கொஃப்தா , ஃப்ரைட் ரைஸ் 

பீட்ரூட் ,பொரியல்,  கூட்டு, ஜூஸ், கட்லெட் 

கேரட் ஜூஸ், பொரியல், சாலட் போன்றவை மிகவும் நல்லது.



12. கருப்பு திராட்சை இது ரொம்ப நல்லது. இத்துடன் வால்நட் சேர்த்து சாப்பிடலாம்.

13.நெல்லிக்காய் இனிப்பு மற்றும் உப்பில் ஊறியது, நெல்லிக்காய் சாதம் போன்றவை நல்லது.



கவனிக்க:  புற்று ஆப்ரேஷன் செய்து கொண்டவர்கள் மேற்கொண்ட உணவு வ்கைகள் எடுத்துகொண்டால் கண்டிப்பாக மீண்டும் பழைய நிலைக்கு வரலாம். மருத்துவரையும் கலந்தாலோசித்து கொள்ளுங்கள். இதெல்லாம் எந்த பக்கவிளைவும் தராதா இயற்கையான உணவு முறை தான் கேன்சர் என்றில்லை அனைவருக்குமே பொருந்தும்.

நேசம் மற்றும் உடான்ஸ் வழங்கும் கேன்சர் விழிப்புணர்வுக்கான பதிவு. 

28 கருத்துகள்:

Menaga Sathia said...

மிகவும் பயனுள்ள பதிவு!!

எம் அப்துல் காதர் said...

எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான பதிவு.

நட்புடன் ஜமால் said...

உங்கள் பதிவுகளிலிருந்தே ஒரு தொகுப்பு எடுத்து போட்டுட்டீங்க

நல்ல விடயம் நன்றி.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ஜலீலா,

பகிர்ந்த அனைத்தும் மிக சத்தான உணவு வகைகள். அப்புறம் http://samaiyalattakaasam.blogspot.com..../../../சுட்டிகளை எல்லாம் நேரிடையாக பதிவில் தந்து இருப்பதால் படிக்க சிரமமாயிருக்கிறது சகோ.

அவற்றை ஹைலைட் பண்ணிய வார்த்தைகளுக்கு பின்னே 'கிளிக்'கினால் வேறொரு விண்டோவில் திறக்கும்படி தந்தால் நன்றாக இருக்கும் சகோ.

நன்றி சகோ.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு ! நன்றி சகோதரி !

Aruna Manikandan said...

nice post akka :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப நல்லாருக்கு. மிக அருமை. கேன்சர் வருவதை தடுக்கு நீங்கள் கூறியிருக்கும் உணவு வகைகள் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும். நன்றி ஜலீலா பகிர்வுக்கு.

Asiya Omar said...

நல்ல தேவையான பகிர்வு ஜலீலா.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Very informative post Akka

ஹுஸைனம்மா said...

பயனுள்ள நல்ல தொகுப்பு அக்கா.

இதுபோல, கொஞ்ச நாள் முன்பு, கேன்ஸர் நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்று மெயிலில் வந்தது. (பலருக்கும் வந்திருக்கலாம்). அதில் பால், பால் சார்ந்த உணவுகள், மட்டன், சிக்கன் உட்பட சில உணவுகள் "mucus-causing" வகையைச் சேர்ந்தவை என்றும், இந்த "mucus"தான் கேன்ஸர் கட்டிகளுக்கு சக்தி தரும் உணவு என்பதால் இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. (மிகவும் சரியான தகவலா என்று தெரியவில்லை)

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

மிகவும் பயனுள்ள அருமையான வதிவு சகோ
உணவே மருந்து மருந்தே உணவு என்கிற முதுமொழிக்கு ஏற்ற பதிவு

ரொம்ப நன்றி சகோ

ஸாதிகா said...

நல்ல பயனுள்ள பகிர்வு ஜலி.உங்கள் ரெஸிப்பியில் இருந்தே தொகுத்து போட்டு இருப்பது அருமை.

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி மேனகா

Jaleela Kamal said...

ஆம் எம் அப்துல் காதர் , அனைவரும் தெரிந்து கொளள வேண்டிய பதிவு
வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஆமாம் ஜமால் என் பதிவில் இருந்த சுட்டிகள் இதே ஆரோக்கிய்மான நல்ல குறிப்புகள் , இது கண்டிப்பாக அனைவருக்கும் பயன் படும்

Jaleela Kamal said...

சலாம் சகோ முகம்மத் ஆஷிக்

முதலில் நேரமின்மையால் அப்படி கொடுத்தேன், இப்போது மாற்றி விட்டேன்

வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

தொடர்வருகைக்கு மிக்க நன்றி திண்டுகல் தனபாலன்,

Jaleela Kamal said...

நன்றீ அருனா

Jaleela Kamal said...

ஆமாம் ஸ்டார்ஜன் கேன்சர் நோயாளி அருகில் இருந்து இந்த உணவுகள் சமைத்து கொடுத்து தேறியதால் தொகுத்து போட்டேன்
அனைவருக்கும் பயன்படும்

வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

கருத்துக்கு மிக்க நன்றி ஆசியா

Jaleela Kamal said...

மிக்க ந்னறி அப்பாவி தங்கமணி

Jaleela Kamal said...

மிக்க நன்றீ ஹுஸைனாம்மா

மட்டன் , சிக்கன் வகைகள் எப்படின்னு தெரியல
பிரஷர், டயாபடிக்ஸ்,கொலஸ்ரால் இருப்பவர்கள் தான் மட்டன், பிஃப் வகைகலை தவிர்க்கனும்.

ஆனால் டாக்டர் சின்ன முழுகோழியை கேன்சர் நோயாளிகளுக்கு சூப்வைத்து குடிக்க சொல்கீறார்கள்

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம் சகோ ஹைதர் அலி ஆமாம் நாம் எடுத்துகொள்ளும் உணவு முறை சரியாக இருந்தால் ஓரளவுக்க்கு இந்த பெறும் வியாதியில் இருந்து விடுபடலாம்.

Jaleela Kamal said...

வாங்க ஸாதிகா அக்கா
ஆமாம் என் குறிப்பில் இருந்தே தொகுத்து போட்டுள்ளேன்.
இன்னும் இருக்கு நேரமினமை காரணம் தான்

தளிகா said...

அழகா தொடுத்திருக்கீங்க ஜலீலக்கா..எல்லோருக்கும் பயன்படும்.நம் உறவுகளுக்கு வந்தால் என்ன செய்வதென்றே புரியாது எதுவும் சாப்பிடவும் பிடிக்காது நமக்கு நியாபகத்துக்கும் வராது.நன்றி ஜலீலக்கா

Priya dharshini said...

Nice post..Indian food menu for cancer patients..I think you can also include rice kanji

Jaleela Kamal said...

Thanks for visit and u r comment priya, yeah i have more recipes for cancer patients ,but this one is old post,i will include later.

Abufaisal Sahib said...

பயனுள்ள குறிப்புகள்....

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா