Wednesday, March 28, 2012

சந்தோஷமான பரிசு - நன்றி நேசம் + உடான்ஸ்
நேசம் மற்றும் உடான்ஸ் நடத்திய கேன்சர் விழிப்புணர்வுக்காக நான் எழுதிய புற்றை வெல்வோம் (பெண்களுக்காக) ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.

நேசம் மற்றும் உடான்ஸ் குழுவினர்களுக்கும் இதை தேர்ந்தெடுத்த டாக்டர் ராஜ் மோகன் மற்றும் டாக்டர் ஃப்ரூனோ அவர்களுக்கும் மிக்க நன்றி.


ரொம்ப சந்தோஷம். என்னை ஆதரித்து வரும் பதிவுலக தோழ தோழியர்களுக்கும் மிக்க நன்றி

இந்த பதிவு  எல்லா இடத்திலும் அனைத்து பெண்களையும் சென்றடைந்து விழிப்புணர்வு ஏற்பட்டால் அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷம்.

பெண்க்ள் மட்டும் தான் என்றில்லை புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை ஆண்களும் பின்பற்றவேண்டும்.ஆண்களுக்கான விழிப்புணர்வு பதிவை நேரம் கிடைக்கும் போது இங்கு பகிர்கிறேன்.Tuesday, March 27, 2012

ஓமம் எள் முறுக்கு


SESAME SEED & AJWAIN MURUKKU
ஓமம் எள் முறுக்கு
தேவையானவை
கடலை மாவு – அரை கப்
அரிசி மாவு – ஒரு மேசை கரண்டி
ஓமம் –  அரை தேக்கரண்டி
வெள்ளை எள் (அ) வெள்ளை எள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி
பட்டர் – ஒரு மேசை கரண்டி
செய்முறை
ஓமத்தை வெண்ணீரில் ஊறவைத்து அரைத்து தண்ணீரை வடிக்கவும்.
கடலை மாவுடன், அரிசி மாவு, எள்,உப்பு, மிளகாய் தூள்,பட்டர் உருக்கி சேர்த்து வடித்த  ஓமத்தண்ணீரை சேர்த்து பிசையவும்
பிசைந்த மாவை முறுக்கு அச்சில் வைத்து முறுக்குகளாக  பிழிந்து சுட்டெடுக்கவும்.


7 முறுக்குகள் வரும்.
பரிமாறும் அளவு – 2 (அ) 3 நபர்களுக்கு
சுவையான மருத்துவ குணமுள்ள முறுக்கு, மிளகாய் தூளுக்கு பதில் மிளகு தூளும் சேர்க்கலாம்.டிஸ்கி : தட்டில் 5 முறுக்கு தானே இருக்குன்னு பூஸார் நினைப்பார், சுட்டதும் மணம் , இரண்டு அபேஸ்.... 

Thursday, March 22, 2012

தேனி கூடு கட்டி விட்டதா?உங்கள் வீட்டு தோட்ட்த்திலோ அல்லது பால்கனியிலோ தேனி கூடி கட்டி விட்ட்தா கவ்லை வேண்டாம் , இங்கு துபாயில் அடிக்கடி அங்காங்கே இது போல் தேனி கூடு கட்டிவிடும் ஓவ்வொரு முறையும்  யாரும் பால்கனி பக்கம் போக முடியாது கொட்டி விடுமோன்னு பயம் தான்.
முன்பெல்லாம் என்ன செய்வது என தெரியாமல் பேகான் ஸ்ப்ரே வாங்கி ஸ்பெரே பண்ணிடுவாங்க. இந்த முறை யாரும் ஸ்ப்ரே பண்ண கூடாதுன்னு சொல்லிட்டேன். தேனிகளும் சாக்க்கூடாது, அதிலிருந்து தேனும் எடுக்கனும் என்ன செய்யலாம்.
 அரபி வில்லாக்களில் வீட்டை சுற்றி செடி கொடிகள் இருக்கும் ஆனால் அங்கு கண்டிப்பாக தேனி கூடு கட்ட தானே செய்யும் என்று, வில்லா வில் வசிப்பவர்களிடம் கேட்டேன்.அதற்கு ஒன்றும் அதை துண்புறுத்தாதவரை ஒன்றும் பிரச்சனை இல்லை. அப்ப எப்படி ஓட்டி விடுவது என்றேன்  

ஒன்றும் இல்லை தேனிக்கள் கூடு கட்டி உள்ள இட்த்தில் கீழே நெருப்பை கொளுத்தி வைத்தால் எல்லாம் பறந்து போய் விடும், அடுத்து உள்ளே வலை அழகிய வெள்ளை நிற  கூடு இருக்கும் ஒரு பக்கமா குச்சியால் குத்தி விட்டு கிழே ஒரு கப்பை வைத்து விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக தேன் வடிந்து விடும். சுத்தமான தேன் நமக்கு கிடைக்கும் என்றார்.


நான் வரும வரை அந்த தேனிக்க்ளை கொல்ல கூடாது நானும் வீட்டில் சொல்லிட்டேன். இரண்டு நாள் ஆச்சு யாரும் பால்கனி பக்கம் போகல துணி எல்லாம் உள்ளேயே காயப்போட்டு கொண்டோம்.
அந்த வில்லாவில் உள்ளவர் சொன்ன படி பேப்பரை எரித்து எல்லா தேனியையும் ஓட்டி விட 3 மணி நேரம் ஆச்சு. அவர் சொன்ன படி தேனை எடுத்தேன்.

கொஞசம் பயம் தான் என்னை கடித்துடுமோன்ன்னு சேஃப்டிக்கு கையில் டைகர்பாம் தேய்த்து கொண்டேன், அப்ப தேனி கிட்ட வந்தால் அதுக்கு கண் எரியுமே....ஹிஹி
தேனிக்களும் சாகவில்லை. சிறிய கூடு என்பதால் இரண்டு மேசை கரண்டி தேன் கிடைத்த்து.

// ஆனால் நான் ஆபிஸிலிருந்து வருவதற்குள் என் பையனும் ஆத்துகாரரும் சேர்ந்து பேப்பர கொளுத்துரேன்னு  பால்கனி முழுவதும் கரியாக்கி அரை மணி நேரம் சுத்தம் செய்ய வேண்டியதா போச்சு//
அப்படி அடுக்குமாடி கட்டிடங்களில் நெருப்பு கொளுத்தி போட முடியாதவர்கள் ஒரு பெரிய ச்ட்டியில் உள்ளே துணியை கொளுத்தி போட்டு எரிய விடவும்.சுத்தமான தேனை நாமும் எடுக்கலாமே
தேனி கூடு பார்க்க ரொம்ப அழகாக இருந்து படம் இனைத்துள்ளேன்.


எப்படி எல்லோரும் ஒன்றாக இனைந்து ஒரு கூட்டை கட்டுகிறார்கள். இதே போல் நாமும் வீட்டிலும் ஊர்களிலிலும் , நாட்டிலும் நற்செயல்களுக்கு ஒன்று கூடினால் சிறப்பாக இருக்குமே!!!!!

டிஸ்கி : தேனிய கொல்லாம எப்படி தேனை எடுப்பது.வேற யாருக்கும் ஐடியா இருந்தா கூட இங்கு சொல்லலாம்.
இன்னொரு விஷியம் இது நடந்து 5 மாதம் ஆகுது ஆனால் இன்னும்  அந்த தேன் எடுத்தில் இருந்து ஒரே ஒரு தேனி மற்றும் இன்னைக்கு வரை என்னையே சுற்றி சுற்றி வருது... அவ்வ்வ பேபே
ஆக்கம்
ஜலீலாகமால்
Saturday, March 17, 2012

ஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை - Ajwain Loli Pop Chicken Fry


சிக்கன் லாலி பாப் - 10 துண்டு
உப்பு தேவைக்கு
காஷ்மீரி சில்லி பொடி - ஒரு மேசைகரண்டி
பப்பரிக்கா பவுடர் - அரை தேக்கரண்டி
ஓமம் பொடி - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைகரண்டி
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை சிறிது
எலுமிச்சை - 1/2 + 1/2
தயிர் - ஒரு மேசைகரண்டி

அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
கடலை மாவு - ஒரு மேசை கரண்டி
கார்ன் மாவு - ஒரு மேசை கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி

எண்ணை + பட்டர் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் லாலிபாப்பை நன்கு 6 முறை கழுவி ஆங்காங்கே கிறி விட்டு அரை பழம் லெமன் பிழிந்து ஊற வைக்கவும்.1 0 நிமிடம் கழித்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.

சிக்கன் ஆயில் தவிர அனைத்து மசாலா, பவுடர் வகைகளை நன்கு பேஸ்ட் போல் குழைத்து சிக்கனில் பிறட்டி ஆலிவ் ஆயிலும் சேர்த்து விறவி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
எண்ணை + பட்டரை சூடு படுத்தி வானலியில் கொள்ளும் அளவு முன்று துண்டுகளாக போட்டு டீப் பிரை செய்யவும்.

சுவையான மருத்துவ குணமுள்ள ஓமம் லாலிபாப் ரெடி.


Wednesday, March 14, 2012

துளசி இஞ்சி ப்ளாக் காஃபி - Tulsi Ginger Black Cofee


 தும்மல் இருமல் சளிக்கு ஏற்ற அருமையான துளசி இஞ்சி பிளாக் காஃபி. இப்ப இந்த பனிகாலத்தில் எங்கு பார்த்தாலும் எல்லோருக்கும் தொடர்ந்து தும்மல், சளி , இருமல் அதற்கு துளசி ஒரு அருமையான மருந்து. 
துளசி இஞ்சி பிளாக் காஃபி

தேவையானவை
துளசி இலை – 25 இலைகள்
இஞ்சி சாறு  - ஒரு துண்டு
லெமன் ஜூஸ் – ஒரு தேக்கரண்டி
காஃபி பொடி – கால் தேக்கரண்டி
சர்க்கரை – ஒன்னறை தேக்கரண்டி
தண்ணீர் – ஒன்னறை டம்ளர்
செய்முறை
துளசி இலை சுத்தமாக கழுவி, இஞ்சி சேர்த்து நன்கு நசுக்கி சாறெடுக்கவும் , அதை தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு காஃபி பொடி சர்க்கரை கலந்து வடிகட்டி எலுமிச்ச்சை சாறு  சேர்த்து குடிக்கவும்.


குறிப்பு : தும்மல் இருமல் சளிக்கு ஏற்ற அருமையான துளசி இஞ்சி பிளாக் காஃபி. இப்ப இந்த பனிகாலத்தில் எங்கு பார்த்தாலும் எல்லோருக்கும் தொடர்ந்து தும்மல், சளி , இருமல் அதற்கு துளசி ஒரு அருமையான மருந்து.இதே போல் டீயாகவும் தயாரித்துக்கொள்ளலாம்.
 இதில் துளசியை ,பிலாக் காஃபி (அ) பிலாக் டீ , அல்லது பால் சேர்த்தோ செய்து குடிக்கலாம்.
ஆக்கம்
ஜலீலாகமால்
துபாய்


sikaram

Tuesday, March 13, 2012

கருப்பு கொண்டைகடலை ஆப்பில், ஆரஞ்ச் சாலட்


கருப்பு கொண்டைகடலை ஆப்பிள் சாலட்
தேவையானவை
வேக வைத்த கொண்டைகடலை 25 கிராம்
ஆப்பிள் – நாலில் ஒரு பாகம்
கேரட் – இரண்டு இன்ச் சைஸ்
வெள்ளரி – ஒரு விரல் நீள அளவு

சாலட்டில் சேர்க்கும் சாஸுக்கு:

கட்டியான ஆரஞ்ச் ஜூஸ் – 3 மேசை கரண்டி
கொட்டை நீக்கிய பேரிட்சை – 2
மிளகு தூள் – ஒரு சிட்டிக்கை
உப்பு – இரண்டு சிட்டிக்கை
சாட் மசலா – 2 சிட்டிக்கை


செய்முறை

கேரட், வெள்ளரி, ஆப்பிலை பொடியாக நறுக்கவும். அத்துடன் வேகவைத்த கொண்டை கடலையை சேர்க்கவும்.
கொட்டை நீக்கிய பேரிட்சையை பொடியாக அரிந்து சேர்த்து சாட்மசாலா,மிளகு தூள், உப்பு, கடைசியாக ஆரஞ்ச் ஜூஸ் சேர்த்து கலக்கி குளிரவைக்கவும்.

நல்ல பிரஷான சாலட் , ஒரே சாலடில் அனைத்து சத்தும்.சுவையும் வித்தியாசமாக இருக்கும்.

ஆக்கம்
ஜலீலாகமால்
sikaram

Friday, March 9, 2012

நன்னாரி லெமன் சர்பத் - Nannari Lemon Surbath


கோடைகாலம் ஆரம்பித்து விட்டது, கோடைக்கேற்ற குளு குளு பானம்.
சுவைத்து மகிழுங்கள், உங்கள் பொன்னான கருத்துகக்ளை தெரிவியுங்கள்.
நன்னாரி லெமன் சர்பத்
தேவையானவை

தண்ணீர் – 4 டம்ளர் ( 800 மில்லி)
நன்னாரி எசன்ஸ் – 2 குழிகரண்டி
சர்க்கரை – 6 தேக்கரண்டி
லெமன்  - இரண்டு பழம்
உப்பு – 1 சிட்டிக்கை

அலங்கரிக்க + ஊறவைக்க
புதினா
செய்முறை
லெமனை பிழிந்து சாறெடுத்து தண்ணீருடன் சேர்க்கவும்.
சர்க்கரை,உப்பு  சேர்த்து நன்கு கரைத்து வடிக்கட்டவும்.
அதில் நன்னாரி எசன்ஸை சேர்த்து ப்ரஷ் புதினா இலையைசேர்த்து
குளீரூட்டியில் 3 மணிநேரம் வைக்கவும்.
புதினா மணம் நன்னாரி சர்பத்தில் இரங்கி குடிக்க இதமாக இருக்கும்.
வெயிலில் சென்று வந்த களைப்பும் தீரும்.

நன்னாரி என்றதும் என் அப்பா நினைவுதான் வருது. வெயில் காலம் வந்து விட்டால் நன்னாரி வேர் வாங்கி வந்து மண்பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி வைப்பார்.
நாங்க பள்ளி சென்று வீட்டுக்கு வரும்போது அந்த மண் வாசனையுடன் தண்ணீர் குடிக்க சூப்பராக இருக்கும்.

//உடனே குடிப்பதாக இருந்தால் 10 ஐஸ் கட்டிகளை சேர்த்து தண்ணீருடன் மிக்சியில் லெமன் சர்க்கரை உப்பு. இரண்டு புதினாஇதழ் சேர்த்து ஓடவிட்டு வடிகட்டி நன்னாரி எசன்ஸ் கலந்து பருகவும்.  கோடைக்கேற்ற குளு குளு பானம்.//


அசதி , சோர்வை நீக்கும் அருமையான் பானம்..கர்பிணி பெண்களுக்கு, மசக்கை பெண்களுக்கு, விளையாட்டு பிள்ளைகளுக்கு அனைவருக்கும் ஏற்ற அருமையான பானம்.


சுவைத்து மகிழுங்கள், உங்கள் பொன்னான கருத்துகக்ளை தெரிவித்தால் நானும் குளு குளுன்னு ஆகிடுவேன். அடுத்த குறிப்பு எழுத ஒரு உற்சாகம் வரும் ஹிஹி  எப்பா அதுக்குன்னு ஒரு கிலோ ஐஸ அள்ளி பிலாக்குல தெளித்து விடாதீங்கோ எனக்கு ஜல்பு பிடிச்சிக்குமாக்க்கும்..


டிஸ்கி: என் பக்கம் தொடர்ந்து வருகை தரும் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் போன பதிவில் வெயிலுக்கு ஏற்றாற் போல கூலாக ஏதாவது போடுங்கள். என்றால் அவருக்காக இந்த நன்னாரி ஜூஸ்.. நீங்களும் சுவைத்து மகிழுங்கள்

Wednesday, March 7, 2012

இலங்கை மாத இதழ் சிகரத்தில் என் குறிப்பு
இலங்கை மாத இதழ் - துபாய், சிகரத்தில் என் சமையல் குறிப்பு

டயட் சமையல்
கருப்பு கொண்டை கடலை ஆப்பிள் சாலட், துளசி இஞ்சி பிளாக் காஃபி.


Sunday, March 4, 2012

சிக்கன் பெப்பர் டிக்கா - Chicken Pepper Tikka


சிக்கன் பெப்பர் டிக்கா


தேவையானவை
1.   முதலில் ஊறவைக்க.
எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ
உப்பு- தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு மேசை கரண்டி
2.   இரண்டாவதாக ஊறவைக்க.
தயிர் – 200 கிராம்
உப்பு – கால் தேக்கரண்டி
பச்ச மிளகாய் – ஒன்று அரைத்தது
மிளகு – இரண்டு மேசை கரண்டி (திரித்த்து)
எண்ணை – ஒரு மேசை கரண்டி

அலங்கரிக்க
கொடமொளகா
லெமன்
வெள்ளரி
தக்காளி
மேலே தூவ
லெமன் ஜூஸ்
சாட் மசாலா
உருக்கிய பட்டர்


செய்முறை
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
தயிரில் அரைத்த பச்சமிளகாய், திரித்த மிளகு , உப்பு, எண்ணை கலந்து ஃபோர்க்கால் நன்கு அடித்து சிக்கனுடன் சேர்த்து மீண்டும் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
முற்சூடு செய்த ஓவனில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.பார்பிகியுவும் செய்யலாம்.
ஓவன் இல்லை என்றால் டீப் ஃப்ரை செய்து எடுக்கவும்.

கிரில் செய்த சிக்கனில் சிறிது லெமன் சாறு பிழிந்து , சாட்மசாலா தூவு , சிறிது பட்டரை உருக்கி மேலே ஊற்றவும்.
கொட மிளகாய், வெள்ளரி, தக்காளி கொண்டு அலங்கரிக்கவும்.


குபூஸ் , ஹமூஸ்,  உருளை மசியல் உடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
இதில் நான் செய்துள்ளது பாலக் ஹமூஸ், வெந்த உருளை மசாலா.


Friday, March 2, 2012

இரண்டாம் பரிசு வென்ற குறிப்புகள்Eggplant Bajji with Bread Sandwich
Ingredients
eggplant  (brinjal) - 1 no
besan flour - 3 soup spoon full
corn flour  - 1 soup spoon full
garlic powder -  ¼   tspn
fennel seed powder -  ¼ tspn
red chilli powder – ¼  tspn
salt - to taste
oil – ½  tspn
Baking soda  - 1 pinchMethod

 Add little water and mix all the ingredients, except eggplants,  to become a thick batter (like idli batter consistency) . Heat oil over a medium flame.  Dip the eggplants in the batter one by one and deep fry to golden brown


For sandwich

Bread
Tomato ketchup
Eggplant bajji
Butter

Take two slices of pan fried bread.  Spread the ketchup over it. Place the bajji in between and make a sandwich. 


கத்திரிக்காய் பஜ்ஜி சாண்ட்விச்
தேவையானவை
பெரிய கத்திரிக்காய் – 1
கடலை மாவு – 3 குழிகரண்டி
சோள மாவு – 1 குழி கரண்டி
பூண்டு பொடி – ¼ தேக்கரண்டி
சோம்பு பொடி  - ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள் – ¼ தேக்கரண்டி
இட்லி சோடா – 1 சிட்டிக்கை
எண்ணை – ½ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு

பொரிக்க
எண்ணை – பொரிக்க் தேவையான அளவு
செய்முறை
கத்திரிக்காயை வட்ட வடிவமாக அரிந்து கொள்ளவும்.
கத்திரிக்காயை தவிர பஜ்ஜிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கட்டியாக இட்லி மாவு பத்த்துக்கு கலக்கி கொள்ளவும்.
பொரிக்க்க தேவையான அளவு எண்ணையை காயவைத்து கத்திரிக்கயை பஜ்ஜிகலவையில் முக்கி பஜ்ஜிகளாக பொரித்து வைக்கவும்.
சாண்ட்விச் செய்ய
பிரட் – 8
பஜ்ஜி – 4
பட்டர் – தேவைக்கு
கெட்சப் – தேவைக்கு

பிரட்டில் பட்டரை தடவி பொரிக்கவும். கெட்சப்பை இருபுறமும் தடவி நடுவில் பொரித்த கத்திரிக்காய் பஜ்ஜியை வைத்து மூடவும்.
சுவையான வித்தியாசமான கத்திரிக்காய் பஜ்ஜி சாண்ட் விச் ரெடி


மிக்சட் தந்தூரி பிஷ் ஃப்ரை


King fish, lady fish, black pomfret , sultan Ibrahim (sankara)  - ½ kg

Curd – 3 tbsn
Kashmiri red chilly – 1 tbsn
Ginger garlic paste – 1 tbsn
Cumim powder – ¼ tspn
Garam masala powder – ½ tspn
Paparika powder
Salt – to taste
Black (or) white pepper – ½ tsp
Turmeric powder – ¼ tspn

Method

Add white vinegar and clean the fish pieces.  Drain the water and set aside. 
Mix all the masalas in the curd and beat nicely.  


Dip both side of fish pieces  and marinate for 2 hours.

Heat oil and deep fry the fish pieces .

Very delicious tandoori fish fry is ready.  It goes well with parota, chappathi,kuboos (or) ghee rice and fish kuruma, plain rice,  with plain dal. 


Enjoy.