Saturday, April 21, 2012

அரபு நாடுகளில் பெண்கள் தொழுகை



அபுதாபி கிராண்ட் மாஸ்க்




அரபு  நாடுகளில் பெண்கள் தொழுகை.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 நம் அனைவருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக


இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ஐவேளை தொழுகை ஆகும்

ஐந்து கடமைகளில் மிக முக்கியமானதும்மறுமை நாளில் முதலில் கேட்கப்படும் கேள்வியும் தொழுகையப் பற்றிதான்!தொழுகையினால் உடல் சுத்தம் மற்றும் மனச் சுத்தம் கிடைக்கிறது. .

////அரபு நாடுகளில் யு ஏ யில் உள்ள எல்லா இடங்களில் மற்றும் சவுதி கத்தார்,குவைத் பஹ்ரின் போன்ற் நாடுகளில் பள்ளிவாசல்களிலேயே பெண்களுக்கு என தனியாக தொழுகை இடம் உண்டு. 
இது முன்பு துபாய் வந்த புதிதில் எனக்கு தெரியாது, எங்கு வெளியில் செல்வதாக இருந்தாலும் மாலை மக்ரீப் வீட்டிலேயே தொழுதுட்டு செல்வோம்.

இதே போல நோன்பு காலங்களிலிலும் தினம் தராவீஹ் தொழுகைஇரவு தொழுகை பள்ளிவாசலிலே தொழும் வசதி உள்ளது.சில பெண்கள் வீடுகளிலும் தொழுகை நடத்துகின்றனர்.

அதே போல் பெருநாள் தொழுகைக்கும் வீட்டிலேயே தொழுது கொள்வோம். ஆண்கள் மட்டும் பள்ளி வாசலில் போய் தொழுவார்கள்.பிறகு தான் ஈத்காவில் தொழுகை நடப்பது தெரிய வந்தது. அதிலிருந்து ஓவ்வொரு வருடமும் பெருநாள் தொழுகைக்கு ஈத்கா (திறந்த வெளி மைதானாம்) சென்று தொழுவது. 


ஈத்கா பெண்கள் தொழுகை இடம்



அங்கு ஆண்களுக்கு , பெண்க்ளுக்கு என தனித்தனி  இடம் உண்டு. ஓவ்வொரு வருடமும் பெருநாள் தொழுகை எப்போது வரும் எனறு காத்து கொண்டு இருப்பேன்.

சொந்தங்கள் மற்றும் பல நாட்டு மக்களை அங்கு காணலாம்.
இங்கு அதிகாலை 6 மணிக்கெல்லாம் நாங்க சென்று விடுவோம்.

ஈத்கா 




ஆனால் இப்போது தொழுகை பள்ளிவாசலில் மட்டும் தான் என்று இல்லை. துபாய் மற்றும் அரபு நாடுகளில் எங்கு வெளியில் ஷாப்பிங்  சென்றாலும் தொழுகை களாவாகும் என  கவலை பட தேவையில்லை.
இப்ப ரொம்ப வசதியாக போச்சு எந்த நேரத்திலும் வெளியில்     இகிளம்பலாம். அந்த அந்த வக்துக்கு வழியில் இருக்கும் பள்ளி வாசல்களில் தொழுதுகொள்ளலாம்.


 எல்லா இடங்களிலும் அரை கிலோ மீட்டர் தொலைவிற்குள் கண்டிப்பாக பள்ளி வாசல்கள் உண்டு. அங்கேயே பெண்களுக்கென்று பிரேயர் ஹாலும் தனியாக இருக்கும்.இது பள்ளிவாசல்களின் பின்புறம் அமைந்து இருக்கும்.
அங்கேயே பாத்ரூம் வசதிகள் ஒலு எடுக்கும் வசதிகள் தொழும் இடம்உள்ளேயே குர் ஆன்தொழுகை விரிப்பு தொழும் போது போட்டுகொள்ளுங்கள் துப்பட்டாக்கள் எல்லாமே இருக்கும்.





ஏழு எமிரேட்ஸிலும் (துபாய், ஷார்ஜா, அபுதாபி,புஜேரா,ராசல் கைமா, உம்முல் கொய்ன் ) பெட்ரோல் பங்குகள், தொலை தூரம் , ஹைவே சென்றாலும் அங்காங்கே உள்ள பெட்ரோல் பங்குகளிலும் பெண்களுக்கு தொழுகை வசதி உள்ளது. அங்காங்கே மஸ்ஜீத் களும் இருக்கின்றன.




எப்போதும் ஜும்மாவை வைத்து கொண்டு எங்க ஹஸுக்கு எங்கும் போக பிடிக்காது. ஒன்று தொழுதுட்டு கிளம்பனும் , இல்லை அதிகாலை பஜர் தொழுதுட்டு கிளம்பி ஜும்மாவிற்கு முன் போய் சேர்ந்து விடனும்.


ஒரு முறை ருவைஸ் போகும் போது 5 மணி நேர பயணம் வெள்ளிக்கிழமை வழியில் ஜும்மாவுக்கு ஒரு காடு மாதிரி இடம ஆனால் பள்ளிவாசல் இருந்தது,
அங்கு சென்று பள்ளிவாசலின் பின் புறம் உள்ள பெண்களுக்கான தொழுகை இடத்தில் தொழுதுட்டு கொஞ்சம் நேரம் இளைப்பாறி விட்டு கிளம்பினோம்.
அங்கு பல நாட்டு பெண்கள் தொலை தூரம் போகிறவர்கள் தொழுகைக்காக அங்கு வந்து தொழுத்துட்டு சொல்கின்றனர்.

அதே போல் மஸ்கட் போகும் போது 5 லிருந்து 6 மணி நேர பயணம் , அங்கும் வழியில் தொழும் நேரம் செக்கிங் இட்த்தில் வண்டி நின்றது. அங்கு மக்ரீப் தொழுகை தொழுதுட்டு சென்றோம்.


பள்ளி வாசலில் மட்டும் என்றில்லை உள்ள எல்லா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், ஹாஸ்பிட்டல்கள், எல்லா இடத்திலும் பெண்களுக்கு தனியாக தொழும் இடம் உண்ட்ய்.


ஊருக்கு செல்ல ஏர்போர்ட் சென்றாலும் அங்கும் தனியாக தொழுகை இடம் உண்டு.



இங்கு துபாயில் ஷாப்பிங்க் காம்பள்ஸ் களில் ,கேரிபோர், கே.எம் ட்ரேடிங் ரீஃப் மால் எல்லா இடத்தில் பெண்கள் குழந்தையுடன் சென்று தொழுது விட்டு ரெஸ்டும் எடுத்துக்கொள்ளலாம்.





//இதனால் ஐ வேளை தொழுகைகளை அந்த அந்த வக்துகளிலிலேயே முடித்து கொள்ளலாம்.களாவாகும் வாய்ப்பில்லை..///அல்ஹம்துலில்லாஹ். 
.

தொழுகை என்பது முஸ்லிம்களின் மதக் கடமைகளுள் ஒன்றாகும். வயதுவந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாவைத் தொழ வேண்டும். இஸ்லாத்தின் முக்கிய கடமைகளுள் தொழுகை ஒன்றென்பதால் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இதற்கு விலக்களிக்கப்படுகிறது.


மனிதன்  ஒரே  ஒரு  நோக்கத்திற்காகவே  படைக்கப்பட்டுள்ளான்.
"என்னை வணங்குவதற்காகவே  ஜின்களையும்  மனிதரையும் 
படைத்திருக்கின்றோம் என்று  அல்லாஹ்  கூறுகிறான் {51:56}
                                                                                                         மனிதர்கள்  இவ்வுலகில்  தன்னைப்படைத்த இறைவனை   வணங்கி          
வாழ வேண்டும்வணக்கத்தில் மிகச்  சிறந்தது  தொழுகை. தீர்ப்பு 
நாளில்  மனிதன் தான்  இவ்வுலகில்  செய்த  ஒவ்வொரு செயலுக்கும்
பதில்  அளித்தே  ஆக வேண்டும்.இவ்வாழ்கையில் அவனுக்களிப்பட்ட  
அருட்கொடைகளைப்  பற்றி  அவன் விசாரனை செய்யப்படுவான்.

பின்னர்  உங்களுக்கு  இறைவன்  புரிந்த  அருளைப்பற்றியும் அந்நாளில்
நீங்கள்  கேட்கப்படுவீர்கள்.என்று  குர்ஆன  கூறுகிறது  [102:8}.
 ஆனால் கடுமையான  அந்நாளில்  கேட்கப்படும்  முதல் கேள்வி 
தொழுகையைப்  பற்றியதாகும்.




தொழுகையின் முக்கியத்துவம்
அறிவிப்பாளர் அபூஹுரைரா  (ரலி)
உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து வந்தாரென்றால்,அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு எஞ்சியிருக்குமா?” என நபி   அவர்கள் தம் தோழர்களிடம்வினவினார்கள்.
அதற்குத் தோழர்கள், “இல்லைஅவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது” என்றார்கள்இது போன்றுதான் ஐவேளைத் தொழுகையும் அல்லாஹ்  இத்தொழுகைகளின்மூலம் பாவக்கறைகளைப் போக்குகின்றான்” என்று நபி அவர்கள் அருளினார்கள். (புகாரிமுஸ்லிம்


25 கருத்துகள்:

Anisha Yunus said...

//ஆனால் இப்போது தொழுகை பள்ளிவாசலில் மட்டும் தான் என்று இல்லை. துபாய் மற்றும் அரபு நாடுகளில் எங்கு வெளியில் ஷாப்பிங் சென்றாலும் தொழுகை களாவாகும் என கவலை பட தேவையில்லை.
இப்ப ரொம்ப வசதியாக போச்சு எந்த நேரத்திலும் வெளியில் கிளம்பலாம். அந்த அந்த வக்துக்கு வழியில் இருக்கும் பள்ளி வாசல்களில் தொழுதுகொள்ளலாம்.


எல்லா இடங்களிலும் அரை கிலோ மீட்டர் தொலைவிற்குள் கண்டிப்பாக பள்ளி வாசல்கள் உண்டு. அங்கேயே பெண்களுக்கென்று பிரேயர் ஹாலும் தனியாக இருக்கும்.இது பள்ளிவாசல்களின் பின்புறம் அமைந்து இருக்கும்.//

poraamaiyaaga irukku jaleelaa akkaa....

USA vil orae oru nanmai, americans office , shop engu vendumaanaalum tholuvatharku sari endru solli viduvaargal. koodaathu endrellaam solla maattaargal. clean toilets, wash basins iruppathaal olu edukkavum siramam iruppathillai. veetai vittu kilambum munnarae wudhu seythu socks maatik kolvathaal meendum wudhu seyvathu elithaagirathu. tholugaiyum athae pola easy-aaga engae vendumaanaalum tholuthu kolla mudigirathu. endraalum, vaalkaiyil sila naatkalaavathu intha maathiri islamic countries-il vaalnthu paarka vendum angria aasai mattum theeruvahtillai..... vaalthukkal :)

நட்புடன் ஜமால் said...

Alhamdulillah ...

இவ்வளவு வசதிகள் இருந்தும் பலர் தொழுகையில் பாராமுகமாக இருக்கின்றார்கள் ...

வல்ல ஏகன் அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் சொல்லப்பட்ட நல் வழியில் செலுத்தட்டும் - ஆமின்.

ஸாதிகா said...

அல்ஹம்துலில்லாஹ்..நல்லதொரு அவசியமான இடுகை.

ஜெய்லானி said...

நிறைய பெண்கள் பள்ளிகளில், பெண்கள்,குழந்தைகளுக்கு காலை 8 டு 11 குர் ஆன் , ஹதிஸ் சொல்லிக் கொடுப்பதுண்டு.

VANJOOR said...

.
.
CLICK >>>> அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் . “தொழுகை .”
மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……எல்லா சூழ்நிலைக‌ளிலும் அகிலத்தில் ஒவ்வொரு விநாடியும் அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் தொழும் ஒரு முஸ்லீம்கள். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள்.
<<<<< TO SEE
.
.

சிராஜ் said...

சலாம்,

தொழுகை விசயத்தில் அரபு நாடுகளில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்களே.....
சகோ அனு சொன்னதுபோல் எனக்கும் ஒரு சில வருடங்களாவது அரபு நாட்டில் குறிப்பாக சவுதியில் வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளது...
பார்ப்போம் இறைவன் என்ன நாடி உள்ளான் என்று..

Admin said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

நானும் இதனை உணர்ந்திருக்கிறேன் சகோ. அதிக முறை ஷாப்பிங் சென்ற போது மால்களில் தான் தொழுதிருக்கிறோம்.

Ayushabegum said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

அல்ஹம்துலில்லாஹ்..வாழ்வில் ஒரு முறையாவது அந்த நாடுகளுக்கு சென்று வர இறை நாட வேணும்..

நல்லதொரு பதிவுக்கு நன்றி சகோ..

Asiya Omar said...

நல்ல பகிர்வு ஜலீலா.

enrenrum16 said...

ஆமா ஜலீலாக்கா...இது ஒரு அருமையான வாய்ப்புதான் நமக்கு. எங்கு சென்றாலும் தொழுகை மிஸ்ஸாகாது... மால்களில் தொழுகை அறை இருப்பது எனகும் முன்பு தெரியாது. மக்ரிப்புக்கு பிறகுதான் கிளம்பியிருக்கிறோம்.. தற்செயலாக ஒரு நாள் மாலிலுள்ள தொழுகை அறைக்குச் சென்ற எனக்கு பயங்கர சர்ப்ரைஸ்... எவ்வளவு கூட்டம்... மனதினுள் சந்தோஷமும் உற்சாகமும் தொற்றிக்கொள்ள தொழுதுவிட்டு வந்தேன். (ஆனால் இது போல் வசதி இல்லையென்றாலும் நாம் செல்லும் வாகனத்தினுள் அமர்ந்து கூட நம் தொழுகையை நிறைவேற்றிக்கொள்ளலாம்) அழகான குர் ஆன் வசனங்களையும் ஹதீஸையும் பகிர்ந்ததுக்கு நன்றிக்கா.

Flavour Studio Team said...

அல்ஹம்துலில்லாஹ்.இங்கு மலேசியா விலும் அதே போல்தான்....
ஷாப்பிங் மால்ஸ், பெட்ரோல் ஸ்டேஷன் என்று எல்லா இடங்களிலும் தொழுகைக்குரிய இடம் கழிப்பிட வசதி உடன் ஆண், பெண் தனி அறைகளுடன்... அமைக்கப்பட்டு உள்ளது...... உண்மைலேயே நாம் கொடுத்து வைத்தவர்கள்தான் சகோதரி.... :)

அருமையான பதிவு... வாழ்த்துக்கள்....

Jaleela Kamal said...

அன்னு மற்ற நாடுகளில் எப்படின்னு தெரியலையேன்னு நினைத்தேன் அங்கும், பரவாயில்ல ஆபிஸில் தொழும் வசதி உண்டு அல்ஹம்துலில்லாஹ்
//vaalkaiyil sila naatkalaavathu intha maathiri islamic countries-il vaalnthu paarka vendum angria aasai mattum theeruvahtillai..... vaalthukkal :)//

உங்கள் நாட்டம் நிறைவேற என் துஆக்கள்

Jaleela Kamal said...

வாங்க நட்புடன் ஜமால்
///இவ்வளவு வசதிகள் இருந்தும் பலர் தொழுகையில் பாராமுகமாக இருக்கின்றார்கள் //

ஆமாம் என்ன செய்வது ஆண்டவன் அவர்களுக்கு நல் வழியில் செலுத்த நாம் துஆ கேட்போம்

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி ஸாதிகா அக்கா

Jaleela Kamal said...

//நிறைய பெண்கள் பள்ளிகளில், பெண்கள்,குழந்தைகளுக்கு காலை 8 டு 11 குர் ஆன் , ஹதிஸ் சொல்லிக் கொடுப்பதுண்டு.//


ஆமாம் ஜெய்லானி இங்கும் சல்மான் பார்சி மஸ்ஜிலும் ,ஈ டி ஏவிலும், ஈரானி வீட்ட்டிலும் மற்ற இடங்களிலிம், கூட் நீங்க சொல்வது போல் 8 லிருந்து 11 குர் ஆன் வகுப்பு நடக்கின்றது,

அல்ஹம்து லில்லாஹ்
வருகைக்கு நன்றி

Jaleela Kamal said...

சலாம் சிராஜ் பாய்



//தொழுகை விசயத்தில் அரபு நாடுகளில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்களே.....
சகோ அனு சொன்னதுபோல் எனக்கும் ஒரு சில வருடங்களாவது அரபு நாட்டில் குறிப்பாக சவுதியில் வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளது...
பார்ப்போம் இறைவன் என்ன நாடி உள்ளான் என்று..//

நீங்கள் விரும்பிய படி சவுதியில் வேலை கிடைத்து உஙக்ள் ஆசை நிறைவேற என் துஆக்கள்

Jaleela Kamal said...

சலாம் சிராஜ் பாய்



//தொழுகை விசயத்தில் அரபு நாடுகளில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்களே.....
சகோ அனு சொன்னதுபோல் எனக்கும் ஒரு சில வருடங்களாவது அரபு நாட்டில் குறிப்பாக சவுதியில் வாழ வேண்டும் என்ற ஆசை உள்ளது...
பார்ப்போம் இறைவன் என்ன நாடி உள்ளான் என்று..//

நீங்கள் விரும்பிய படி சவுதியில் வேலை கிடைத்து உஙக்ள் ஆசை நிறைவேற என் துஆக்கள்

Jaleela Kamal said...

//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

நானும் இதனை உணர்ந்திருக்கிறேன் சகோ. அதிக முறை ஷாப்பிங் சென்ற போது மால்களில் தான் தொழுதிருக்கிறோம்.//

வா அலைக்கும் சலாம் பாஸித்

அல்ஹம்துலில்லாஹ்

Jaleela Kamal said...

என்றென்றும் 16

ஆமாம் எனக்கும் முன்பு தெரியாது


இனி இங்கு வருகிறவர்களுக்கு பயன் படுமே என்று தான் பதிவாக போட்டேன்


வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம் ஆயிஷா பேகம்

வருகைக்கு மிக்க் நன்றி

Jaleela Kamal said...

வ்ருகைக்கு மிக்க் நன்றி சகோ. வாஞ்ஜூர்

Jaleela Kamal said...

தொடர் வருகைக்கு மிக்க நன்றி ஆசியா

Jaleela Kamal said...

ஷர்மிலா ஹமீது உங்கள் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

Anonymous said...

உங்கள் பணி தொடர நல்வாழ்த்துகள்.
இறையாசி நிறையட்டும்.

வேதா. இலங்காதிலகம்.

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி கோவை கவி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா