Sunday, June 3, 2012

வரனும் ஆனா எப்ப வருவேன்னு தெரியல

பதிவுலக தோழ தோழியர்களே எல்லாரும் நலமா? என்ன கொஞ்சம் நாளா ஜலீலாக்காவ காணுமே தேடினீங்களா? என்ன செய்வது தீடீருன்னு உடல் நலம் சரியில்லாம போய்விட்டது. இவ்வளவு நாள் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்தேன். இப்ப பரவாயில்லை. ஒன்னும் இல்ல சாதாரான இருமல் தான் சீரியஸ் ஆகிவிட்டது. இனி தான் உடல் நலம் தேறிவரனும். கை துரு துன்னுவருது ஆனா டைப் பண்ண முடியல, சீக்கிரம் வரனும் ஆனால் எப்ப நல்ல ஆகிவருவேன்னு தெரியாது.. எனக்காக துஆ செய்யுங்கள்.

என்னை கவனித்து கொண்டு ஆதரவு கொடுத்த என் கணவர், என் பிள்ளைகள், இரு தோழிகள் ஹபஷியா குடும்பத்தினர் மற்றும் சல்மா வுக்கும் மிக்க நன்றி என் அதிக துஆக்களும் நீங்களும் அவர்களுக்கு துஆ செய்யுங்கள்.


ஒரு நாளைக்கு எத்தனை பேர் வந்து பார்த்து பயனடைகிறீர்கள், ஏன் ஒரு கமெண்ட் போட கூட மனமில்லையா? ஒரு பதில் போட்டால் எனக்கும் சந்தோஷமாக இருக்கும் இல்லையா? சில பழைய பயனுள்ள பதிவுகள் நிறைய  யாரும் படிக்காதது நிறைய இருக்கு . ஏற்கனவே இருப்பதை போன மாதமே  ரீபோஸ்ட் கொடுத்து வைத்துள்ளேன். அனைவரும் பயனடைந்து கொள்ளுங்கள்.டிஸ்கி: சென்னை ப்ளாசா பக்கமும் வாங்க. அப்டேட் டிசைன்ஸ் வரும் யாருகும் ஆர்டர் தேவை என்றால் மெயில் பண்ணுங்கள். இதன் முலம் நிறைய தோழிகள் புர்கா விபரம் கேட்டு இருக்கிறார்கள் சிலர் ஆர்டரும் கொடுத்து இருக்கின்றனர். ரொம்ப சந்தோஷம்.
17 கருத்துகள்:

ஸாதிகா said...

ஜலி டிஸ்சார்ஜ் ஆகிட்டீங்களா?ரொம்ப சந்தோஷம்.தொடர்ந்து பழையபடி உடல் நிலையில் முன்னேறி விரைவில் பதிவிட வாருங்கள்.

இமா said...

சீக்கிரம் குணமாகி வரவேண்டும் ஜலீ. என் பிரார்த்தனைகள்.

கோமதி அரசு said...

நானும் வெகு நாட்களாய் ஊரில் இல்லை. . இன்று தான் உங்கள் பதிவைப் பார்த்தேன்.

என்ன உடம்புக்கு? நீங்கள் இறைவன் அருளால் உடல் நலம் பெற்று பதிவுகள் எழுத விரைவில் வரவேண்டும்.

வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!

திண்டுக்கல் தனபாலன் said...

ஆண்டவனை வேண்டுகிறேன் !

Asiya Omar said...

நல்ல ரெஸ்ட் எடுத்து விரைவில் உடல் நலம் தேறி வாங்க ஜலீலா.

புதுகைத் தென்றல் said...

உடம்பை கவனிச்சிக்கோங்க.

நானும் பிசியா இருந்ததால அதிகமா ப்ளாக் பக்கம் வர முடியவில்லை.

enrenrum16 said...

என்னாச்சு ஜலீலாக்கா...? இருமல் இந்தளவுக்கு சீரியஸாகிவிட்டதா? கேட்கவே கவலையாயிருக்கு.... இப்ப பரவாயில்லையா? சீக்கிரம் உங்கள் உடல்நிலை குணமடைய அல்லாஹ் கிருபை செய்வானாக. மற்றவர்களுக்காக அக்கறையோடு அறிவுரை சொன்ன நீங்கள் உங்கள் உடம்பையும் பத்திரமாக பார்த்துக்கங்க....

Priya said...

Wishing you a speedy recovery,take care.

இந்திரா said...

விரைவில் நலமுடன் திரும்பி வர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

vanathy said...

உடல் நிலை தேறி பழையபடி ரெசிப்பிகள், குறிப்புகள் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உடம்பை பத்திரமா பார்த்துக் கொள்ளுங்கள். நானும் இப்ப ப்ளாக் பக்கம் வருவது குறைவு. நீண்ட நாட்களின் பின்னர் இன்று தான் நேரம் கிடைத்தது.

அமைதிச்சாரல் said...

நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. உடல் நலம் முக்கியமில்லையா!!..

Anonymous said...

hello,jaleela sister take care of your health.we pray for your health.bye

Vijiskitchencreations said...

Take care jalee.

மாதேவி said...

இப்போது எப்படி?
உடல்நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள்.

nasreen fathima said...

அஸ்ஸலாம் அலைக்கும். உங்களுக்கு உடம்பு சரி இல்லதாதது இப்ப தான் உங்க பிளாக் இல் பார்த்தேன். நீங்கள் பூரண குணமடைய அல்லா விடம் துவா பன்றேன்.

nasreen fathima said...

அஸ்ஸலாம் அலைக்கும். உங்களுக்கு உடம்பு சரி இல்லதாதது இப்ப தான் உங்க பிளாக் இல் பார்த்தேன். நீங்கள் பூரண குணமடைய அல்லா விடம் துவா பன்றேன்.

ஜெய்லானி said...

ரீடரில் இந்த பேஜ் வருவதே இல்லை ..!! கொஞ்ச் நாள பிளாக் பக்கம் வராததால் எதுவும் தெரியவில்லை :-(.

விரைவில் நலமுடன் திரும்ப என்னுடைய பிராத்தனைகளும்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா