Thursday, August 30, 2012

தர்பூசணி பிங்கர்ஸ் (குழந்தைகளுக்கு) - Watermelon Fingersதர்பூசணி பிங்கர்ஸ் (குழந்தைகளுக்கு)
தேவையானவை

தர்பூசணி பெரிய துண்டு – 1
சுக்கு பொடி – ஒரு பின்ச்
குளுக்கோஸ் – 1 தேக்கரண்டி
செய்முறை
தர்பூஸ் பழத்தில் உள்ள தோலையும் கொட்டைகளை நீக்கவும்.
பழங்களை ஒரு விரல் நீள அளவிற்கு வெட்டவும்.
அதில் சுக்கு தூள் மற்றும் குளுக்கோஸை தூவ்வும்.
வேண்டிய வடிவில் தட்டில் அழகாக அடுக்கிவைக்கவும்.
தர்பூசணி கலருக்கும் பார்த்த்தும் எடுத்து சாப்பிடும் வண்ணம் இப்படி ரெடியாவைத்தால் குழந்தைகள் மட்டும் இல்ல பெரியவர்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.


பார்ட்டி, வீட்டில் விருந்தாளி என்றாலே நான் முதலில் யோசிப்பது குழந்தைகளை தான் பிறகு தான் மற்ற மெனுவை பற்றி யோசிப்பது.
இது இரண்டு பேருக்கு தேவையான அளவு , பார்ட்டி ஏற்றவாறு நிறைய தர்பூசணி வாங்கி இப்படி அழகாக பரிமாறலாம்.

டிப்ஸ்:
சுக்கு தூள் தூவுவது சளி ஏற்படுத்துவதை கட்டுப்படுத்தும். இனிப்பு சுவை குறைவாக உள்ள பழங்களில் சர்க்கரை தூவி சாப்பிடலாம் , சர்க்கரைக்கு பதில் குளுக்கோஸ் சேர்ப்பது மிகவும் நல்லது.


டிஸ்கி: ஆங்கில தளங்களில் தான் நிறைய ஈவண்டுகள் நட்த்தி கொண்டு இருக்கிறார்கள். இப்போது முதல் முறையாக தோழி பாயிஜா ஆரம்பித்து இருக்காங்க. இது கண்டிப்பாக எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகளுக்கும் வித விதமாக செய்து கொடுக்கலாம்.

நாமும் இங்கு தமிழ் வலைகளிலும் நிறைய் தோழிகள் இருக்கிறார்கள்.நாமும் நட்த்தினால் என்ன் என்று சில மாதங்கள் முன்பு தான் நானும் ஆசியாவும் சந்திக்கும் போது இதை பற்றி பேசி கொண்டு இருந்தோம்.கூடிய விரைவில் ஆரம்பிப்போம். இப்ப பல வேலைகளில் பிஸியாக இருப்பதால் கொஞ்ச நாட்கள் கழித்து ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு வலையில் சமையல் குறிப்பு எழுதாத தோழிகளையும் அன்புடன் அழைக்கிறேன். எல்லாரும் கலந்து கொள்ளனும்.

Monday, August 27, 2012

ஒரே அவார்டு மழை தான்


வை கோபாலகிருஷ்ணன் அவர்கள். அவருக்கு கிடைத்த அவார்டுகளை. பதிவுலக தோழ தோழியர்கள் 108 பேருடன் நட்புடன் பகிர்ந்து இருக்கிறார்.
மிக்க நன்றி முதலில் இருக்கும் அவார்டு அப்படியேமின்னுது 

பேபி பிங்க் ஸ்டோன் புர்கா அப்படியே இந்த பக்கம் வந்து பாருங்களேன்ன் 

Sunday, August 26, 2012

ஹே ஹே நானும் சென்னை தான் நானும் சென்னை தான்


 ஹே ஹே நானும் சென்னை தான் நானும் சென்னை தான்.

சென்னையில் இன்று மாபெரும் பதிவர் சந்திப்பு நடக்க இருக்கிறது, விழா சிறப்படைய வாழ்த்துக்கள்.


இரண்டுமாதமாக சென்னையில் தான் இருந்தேன் , கலந்து கொள்ளமுடியவில்லையேன்னு மிக வருத்தம்....

பதிவர் சந்திப்பபில் கலந்து கொள்ளமுடியாதவர்களுக்காக நேரடியாகவும் ஒளிபரப்புகிறார்கள்.


பதிவர் சந்திப்பு நேரலையை வரும் ஞாயிறு 26.8.2012 அன்று காலை 9 மணிமுதல் மாலை ஆறு மணி வரை காணலாம்.
மேலே உள்ள இடுகையை சொடுகி காணொளியை கண்டு மகிழுங்கள்.


Shadiqa 


 டிஸ்கி: சென்னை பதிவர்கள் இங்கு ஒரு சைன் போட்டுட்டு போனீங்கனா நானும் சென்னை பதிவர்களை தெரிந்து கொள்வேன்.அடுத்த முறை சந்திக்க வசதியாக இருக்கும்.


Wednesday, August 22, 2012

மீண்டும் ஒரு சந்தோஷமான அவார்டு
திருமணமாகி முதல் குழந்தை பிறந்த சில புது  அம்மா மார்களுக்கு குழந்தைகள் உணவு எப்படி தயாரிப்பது , என்ன தயாரிப்பது, என்று குழம்பி கொள்வார்கள். அவர்களுக்கு உதவும்வண்ணம் இங்கு பிலாக்கில் நான் பல குழந்தை வளர்பு டிப்ஸும், குழந்தை உணவும் கொடுத்து இருக்கிறேன் அதில் ஒன்று தான் குழந்தைகளுக்கு ஏற்படும் சளிக்கு மிக அருமையான் மருந்து இஞ்சி சாறு .


 இரண்டாம் சுற்றில் - குழந்தைகளுக்கு ஏற்படும் சளிக்கு இஞ்சி சாறு + டிப்ஸ்  - லின்கை கிளிக் செய்து பார்க்கவும்.
குழந்தைகள் உணவு ஈவண்டுக்கு அனுப்பிய பல குறிப்புகளில் இந்த இஞ்சி சாறுடன் கொடுத்துள்ள டிப்ஸ் தேர்வாகி உள்ளது.


Healthy Morsel Team (மிக்க நன்றி)

Taste of Pearl City
Lecker and Yummy Recipes
Schmetterlingwords

Thank you Healthy Morsel Team


முன்று பேர் சேர்ந்து நடத்தியதில் என்னுடைய இந்த இஞ்சி சாறு + குழந்தைகளுக்கான டிப்ஸ் குறிப்பு  தேர்வாகி உள்ளது. மிகவும் சந்தோஷம் உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் மிக்க நன்றி. பயடைபவர்கள் உங்கள் கருத்தை தெரிவித்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

டிஸ்கி: இது முதல் சுற்றில்  கர்பிணிபெண்களுக்காக அனுப்பியதற்கு தேர்வானது

Sunday, August 19, 2012

ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்,அனைவருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்

Eid Special Mutton Biriyani


பீட்ரூட் ஹல்வா

மிட்டாகானா

குலோப் ஜாமூன்

Saturday, August 18, 2012

புது மாடல் புர்கா - New Model BurkaMODEL NO: MP 413 pe
SIZE : 56"
TYPE : CLOSE

Only Hand Design
Sholder to hand full Stretch


Model : MP 392
Type : Open
Size : 52
Shoulder to hand Stretch
Grand Hand design
Blueish Green with Gold stone

மேலும் விபரங்களுக்கு சென்னை ப்ளாசா  க்கு வாருங்கள்.

சென்னை ப்ளாசா புர்கா மற்றும் பேன்சி அயிட்டங்கள்

புர்கா மற்றும் ஹ்ஜாப் கள் ஹோல் சேலிலும் ரீடெயிலிலும் கொடுக்கப்படும்.
எல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.

அங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட்சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.
சென்னை ப்ளாசாவில் லேடீஸ் டெயிலரும் உண்டு சுடிதார் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் தைத்து கொடுக்கப்படும்./


CHENNAI PLAZA

No, 277/30 Pycrofts Road,1st Floor,
(opp:shoba cut piece)
Triplicane , Chennai 600 005
Tel: 91 44 4556 6787
Mr.Mohideen Mob: 91 78 45367954
Mr.Ibrahim Mob: 91 98 43709497


feedbackjaleela@gmail.com

Wednesday, August 15, 2012

மூவர்ண ஃப்ரூட்ஸ் & நட்ஸ் கடல் பாசி - Tri ColourFruits and Nuts Agar Agar


இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

அகர் அகர் , இந்த கடல் பாசிய விதவிதமா செய்வதில் எனக்கு ரொம்ப விருப்பம்.

அதுவும் இப்ப நோன்புகாலம் என்பதால் தினம் வித விதமான கடல் பாசி தான்..

அதிலும் இந்த விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது. குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.Tri ColourFruits and Nuts Agar Agarகடல்பாசி என்னும் சைனா கிராஸ்(அகர் அகர்) ஒரு சைவ உணவு.உணவகங்களில் டெசர்ட் மற்றும் ஐஸ்கீரிம் வகைகளுக்கும் இதைசேர்த்து செய்வார்கள் .இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உணவுகளில் இதுவும் ஒரு வகையாகும்.உடலுக்கு மிகவும் குளிர்ச்சிகொளுத்தும் கோடையிலும் இதை செய்து சாப்பிடலாம்அல்சர்வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.ஜெல்லி போல் கலர் கலராக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்

கடல்பாசி -  (அகர் அகர்) - 15 கிராம்
தண்ணீர்  900 மில்லி (4 ½ டம்ளர்)
சர்க்கரை125 கிராம்
ரோஸ்வாட்டர் ஒருதேக்கரண்டி
எசன்ஸ் – (பச்சை மற்றும் சிவப்பு)
நட்ஸ் வகைகள் – பாதம் பிஸ்தா பிளேக்ஸ் தேவைக்கு
பொடியாக அரிந்த பழங்கள்- ஸ்ட்ராபெர்ரி, தேஙகாய் மற்றும் கிவிதேவைக்கு
பால் – 1மேசைகரண்டி
அலங்கரிக்க
யம் யம் மிட்டாய் (அ) ஜெம்ஸ் மிட்டாய்
பிரட் ஸ்டிக் (அ) சாக்லேட் ஸ்டிக்


 செய்முறை

1 தண்ணீரில் கடல் பாசியைஉதிர்த்து போட்டு  15 நிமிடம் ஊறவைத்து சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கடல்பாசி கரையும் வரை  காய்ச்சவும்.
 2 காய்ச்சி சிறிது கட்டியாகி  வரும் போது .காய்ச்சியதை முன்றாக முன்று கிண்ணங்களில் ஊற்றவும்
இரண்டு கிண்ணத்தில் சிவப்பு மற்றும் பச்சை வண்ண எசன்ஸ் ஊற்றி கலக்கவும்.4 சிவப்பு வண்ணத்தில்ஸ்ட்ராபெர்ரிபழம்மற்றும்பாதம், பிஸ்தாபிளேக்ஸ்சேர்க்கவும்.5.வெள்ளை வண்ணத்தில்பால், தேங்காய், பிஸ்தா ,பாதம்பிளேக்ஸ் சேர்க்கவும்

6 முன்று கிண்ணத்தில் உள்ள கலவைகளையும்  ஐஸ் கியுப் ட்ரேவில் ஊற்றி குளிரூட்டியில் குளிரவைக்கவும்.குளிர்ந்த்தும் அலங்கரித்து பரிமாறவும்

7 . சுவையான மூவர்ண ஃப்ரூட் அண்ட் நட்ஸ் அகர் அகர் ரெடி.

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 15  நிமிடம்
சமைக்கும் நேரம்: 20 நிமிடம் + குளிர வைக்கும் நேரம்

How to Make Agar Agar - Step by Step
Fruit Jelly
Indian Flag Agar Agar

சுதந்திர தின ஊத்தாப்பம்


சுதந்திர தின கடல்பாசி (பிளெயின்)Sunday, August 12, 2012

நோன்பு ஸ்பெஷல் மெனு - Ifthar Menu - 1

வலை உலக தோழ தோழியர்களே. இஃப்தார் மெனு முதல் நாளில் இருந்து போட இருந்தேன் நேரமின்மையால் தொடர முடியல பிறகுநேரம் கிடைக்கும் போது மற்ற மெனுக்களை தொடர் கிறேன். இது ஏற்கனவே போட்டு வைத்திருந்தது உஙக்ளுக்க்காக , எல்லாவற்றையும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.பிரியாணி நோன்பு கஞ்சிகலர்ஃபுல் அகர் அகர்


ஜவ்வரிசி ரூ ஆப்சா ஜிகர் தண்டா
ஈத் ஸ்பெஷல் மட்டன் பிரியாணிஸ்டஃப்ட் பிரட் பஜ்ஜிSending these to Halal Foodie Ramadan Friendly Recipe event


Thursday, August 9, 2012

தேங்காய் பால் சீரக கஞ்சி – நோன்பு கால சமையல்

 தேங்காய் பால் சீரக கஞ்சி – நோன்பு கால சமையல்
இஸ்லாமிய இல்லங்களில் ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பில் தினம் மாலை நோன்பு திறக்க செய்யும் பல வகை கஞ்சி (சூப்) வகைகளில் இது சிம்பிளான அதே நேரத்தில் அதிக மருத்துவகுணமுள்ள கஞ்சியாகும்.

குக்கரில் வேகவைக்க
உடைத்த அரிசி – 100 கிராம்
சீரகம் – 2 தேக்க்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
பூண்டு – 8 பல்
உப்பு – தேவைக்கு
தாளிக்க
எண்ணை + நெய் – 1 மேசை கரண்டி
பட்டை -  ½ இன்ச் சைஸ் ஒன்று
பொடியாக அரிந்த வெங்காயம் – 2 மேசைகரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட்  - ½ தேக்கரண்டி
பொடியாக அரிந்த கொத்துமல்லி தழை – 1 மேசைகரண்டி
கட்டி தேங்காய் பால் – 200 மில்லிசெய்முறை
அரிசியை களைந்து அதில் பூண்டு, மிளகு சீரகம், உப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் (800 மில்லி) ஊற்றி குக்கரில் மிதமான தீயில் 4 விசில் வைத்து இரக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து தேங்காய் பால் மற்றும் வெந்த கஞ்சியை கட்டியில்லாமல் மசித்து சேர்த்து தேவைக்கு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு இரக்கவும்
கொத்துமல்லிதழை தூவி அலங்கரிக்கவும்.
பொட்டுகடலை துவையல் , பகோடாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
டிப்ஸ்:
நோன்புகாலங்களில் செய்யகூடிய அருமையான கஞ்சி. வாய் புண் வயிற்று, அல்சருக்கு ஏற்ற இதமான கஞ்சி.கர்பிணி பெண்களுக்கு  சுகப்பிரசவம் ஆக இந்த கஞ்சியை கொடுத்தால் வாயு தொல்லை அகன்று சுகப்பிரசம் ஆகும்.பிரசவத்துக்கு பிறகும் இந்த கஞ்சியை குடித்தால் வயிற்றில் உள்ள் கேஸ் பிரப்ளம் குறையும். (பூண்டின் அளவை சற்று கூட்டி கொள்ளலாம்) குழந்தைகளுக்கும் ஆறு மாத்த்தில் இருந்து இந்த கஞ்சியை கொடுக்க்லாம்.டிஸ்கி: இந்த பிலாக்கில் போடுவது அனைத்தும் என் சொந்த ஆக்கம், ஆளாளாக்கு அவங்க வெப் சைட்டில் போட்டு கொள்கீறார்கள். அடுத்தவங்க உழைப்ப திருடுறீஙக்ளே உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் சொரனை இல்லையா? கேட்டா அவன் திருடுன்னா அங்கிருந்து நான் திருடுன்னேன்னு சொல்கீறார்கள். கொஞ்ச்மாவது மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்கள்.

Tag: Coconut Milk Porriadge, Coconut Rice Soup,Cumin Coconut Soup, Indian  Spice less Soup, Ifthar Soup, 
இஸ்லாமிய இல்ல சமையல், நோன்புகால சமையல். கஞ்சி வகைகள்Saturday, August 4, 2012

சைனா கிராஸ் (கடற்பாசி) அகர் அகர்////கடற் பாசி என்னும் சைனா கிராஸ் இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உனவு களில் இதுவும் ஒரு வகையாகும்.

இது புட்டிங், ஐஸ் கிரீம், பாலுதா, ஸ்வீட்ஸ்க்கு பயன் படுத்துவது, ஜெல்லி ஆகியவற்றிற்கு ரெஸ்டாரண்ட்களில் அதிகமாக பயன் படுத்துவார்கள்

வயிறு எரிச்சல், அல்சர் , வயிற்று புண் மற்றும் உடல் சூட்டை தணிக்கும் அருமையான டெசர்ட் அயிட்டம் இந்த கடல் பாசி. தினம் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

கடற்பாசியை ரோஸ் எஸன்ஸ் ஊற்றி பால் சேர்த்தும் செய்யலாம்,

விருப்பமான  கலர்கள் சேர்த்து தனித்தனியாக செய்து கலந்து கலர்புல்லாகவும் செய்யலாம்

இளநீரில் (அ) தேங்காய் உடைத்த தண்ணீரிலும் செய்யலாம், இளநீரில் செய்தால் சாப்பிட நுங்குபோல் இருக்கும்.

நட்ஸ் வகைகள் அதிகமாக சேர்த்து நட்ஸ் கடல் பாசியும் தயாரிக்கலாம்.

ஜூஸுக்கு கரைக்கும் டேங்க் பவுடர் சேர்த்து வித விதமான சுவையில் செய்யலாம்.

பழங்கள் சேர்த்து ஃபுரூட் கடல் பாசியாகவும் செய்யலாம்.


பாலுதாவில் ஜெல்லிக்கு பதில் இதை சேர்க்கலாம்.
இது ஒரு வெஜ்டேரிய‌ன் உண‌வு தான்

டேங்க் க‌ட‌ற்பாசி

க‌ட‌ற்பாசி = ஒரு கை பிடி அள‌வு
ச‌ர்க்க‌ரை = ஒரு மேசைக‌ர‌ண்டி அள‌வு
ஏதாவ‌து ஒரு பிளேவ‌ர் டேங்க் ப‌வுட‌ர் = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி அளவு
த‌ண்ணீர் = இர‌ண்டு ட‌ம்ளர்
செய்முறை

ஒன்ன‌றை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் க‌ட‌ற்பாசியை க‌ரைத்து ஊற‌வைத்து ச‌ர்க‌க்ரை சேர்த்து ந‌ன்கு காய்ச்ச‌வும்.
ந‌ன்கு க‌ரைந்து வ‌ரும் போது டேங்க் ப‌வுட‌ரை க‌ல‌ந்த்து ஊற்றி ஒரு டிரேயில் ஊற்றி தேவையான நட்ஸ் வகையை ஊற்றி ஆற‌விட‌வும்.
ஆறிய‌தும் பிரிட்ஜில் வைத்து குளிற‌வைத்து சாப்பிட‌வும்.

இது காய்ச்சி பிளாஸ்டிக்கில் ஊற்ற‌ வேண்டாம் சில்வ‌ர் டிப‌னில் ஊற்றி வைத்தால் ந‌ல்ல‌து.

இள‌நீர் க‌ட‌ற்பாசி


இள‌நீர் = ஒன்று முழுவ‌தும்
ச‌ர்க்க‌ரை = ஒரு மேசை க‌ர‌ண்டி
தேவையான‌ ந‌ட்ஸ் = 4 பாத‌ம் (அ) பிஸ்தா, முந்திரி ‍
க‌ட‌ற் பாசி = ஒரு கைபிடி அள‌வு

க‌ட‌ற்பாசியை அரை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் பொடியாக‌ அரிந்து போட்டு ஊற‌வைத்து ந‌ன்கு க‌ரையும் வ‌ரை காய்ச்சி சர்க்கரை சேர்த்து இள‌நீரை ஊற்றி உட‌னே அடுப்பை அனைக்க‌வும்.ஒரு டிரே (அ) த‌ட்டில் ஊற்றி மேலே ந‌ட்ஸ் வ‌கைக‌ளை தூவி ஆற‌வைத்து குளிற‌வைத்து சாப்பிட‌வும்.
இது சாப்பிட‌ சாப்பிட‌ நிறைய‌ சாப்பிட‌னும் போல் தோன்றும் அவ்வ‌ள‌வு ருசியாக‌ இருக்கும்.


ரூ ஆப்ஷா என்பது பாக்கிஸ்தானியர்கள் பயன் படுத்துவது இது பாலில் கரைத்து குடிக்கும் பானம் இது உடல் சூட்டை தணிக்கும், வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.
க‌ட‌ற்பாசி = ஒரு கைபிடி அள‌வு
ச‌ர்க்க‌ரை = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி அள‌வு
பால் = ஒரு ட‌ம்ள‌ர்
ரூ ஆப்ஷா = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி
பாத‌ம் = நான்கு
அரை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் க‌ட‌ற்பாசியை பொடியாக‌ அரிந்து போட்டு சிறிது நேர‌ம் ஊற‌வைத்து காய்ச்ச‌வும்.
க‌ரைந்து வ‌ரும் ச‌மைய‌த்தில் அதில் பாலை ச‌ர்க்க‌ரை சேர்த்து கொதிக‌க் விட்டு வ‌டிக‌ட்ட‌வும் ந‌ல்ல‌ க‌ரைந்து விட்டால் வ‌டிக‌ட்ட‌ தேவையில்லை.அதில் ரூ ஆப்ஷாவை க‌ல‌ந்து ஒரு த‌ட்டில் ஊற்றி அத‌ன் மேல் பாத‌த்தை தோலெடுத்து பொடியாக‌ அரிந்து தூவி விட்டு ஆற‌வைத்து பிரிட்ஜில் வைத்து குளிற‌விட‌வும்.ந‌ன்கு ஆறி செட்டான‌தும் வேண்டிய‌ வ‌டிவில் துண்டுக‌ள் போட்டு சாப்பிட‌வும்.