Thursday, August 9, 2012

தேங்காய் பால் சீரக கஞ்சி – நோன்பு கால சமையல்

 தேங்காய் பால் சீரக கஞ்சி – நோன்பு கால சமையல்
இஸ்லாமிய இல்லங்களில் ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பில் தினம் மாலை நோன்பு திறக்க செய்யும் பல வகை கஞ்சி (சூப்) வகைகளில் இது சிம்பிளான அதே நேரத்தில் அதிக மருத்துவகுணமுள்ள கஞ்சியாகும்.

குக்கரில் வேகவைக்க
உடைத்த அரிசி – 100 கிராம்
சீரகம் – 2 தேக்க்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
பூண்டு – 8 பல்
உப்பு – தேவைக்கு
தாளிக்க
எண்ணை + நெய் – 1 மேசை கரண்டி
பட்டை -  ½ இன்ச் சைஸ் ஒன்று
பொடியாக அரிந்த வெங்காயம் – 2 மேசைகரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட்  - ½ தேக்கரண்டி
பொடியாக அரிந்த கொத்துமல்லி தழை – 1 மேசைகரண்டி
கட்டி தேங்காய் பால் – 200 மில்லி



செய்முறை
அரிசியை களைந்து அதில் பூண்டு, மிளகு சீரகம், உப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் (800 மில்லி) ஊற்றி குக்கரில் மிதமான தீயில் 4 விசில் வைத்து இரக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து தேங்காய் பால் மற்றும் வெந்த கஞ்சியை கட்டியில்லாமல் மசித்து சேர்த்து தேவைக்கு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு இரக்கவும்
கொத்துமல்லிதழை தூவி அலங்கரிக்கவும்.
பொட்டுகடலை துவையல் , பகோடாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
டிப்ஸ்:
நோன்புகாலங்களில் செய்யகூடிய அருமையான கஞ்சி. வாய் புண் வயிற்று, அல்சருக்கு ஏற்ற இதமான கஞ்சி.கர்பிணி பெண்களுக்கு  சுகப்பிரசவம் ஆக இந்த கஞ்சியை கொடுத்தால் வாயு தொல்லை அகன்று சுகப்பிரசம் ஆகும்.பிரசவத்துக்கு பிறகும் இந்த கஞ்சியை குடித்தால் வயிற்றில் உள்ள் கேஸ் பிரப்ளம் குறையும். (பூண்டின் அளவை சற்று கூட்டி கொள்ளலாம்) குழந்தைகளுக்கும் ஆறு மாத்த்தில் இருந்து இந்த கஞ்சியை கொடுக்க்லாம்.



டிஸ்கி: இந்த பிலாக்கில் போடுவது அனைத்தும் என் சொந்த ஆக்கம், ஆளாளாக்கு அவங்க வெப் சைட்டில் போட்டு கொள்கீறார்கள். அடுத்தவங்க உழைப்ப திருடுறீஙக்ளே உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் சொரனை இல்லையா? கேட்டா அவன் திருடுன்னா அங்கிருந்து நான் திருடுன்னேன்னு சொல்கீறார்கள். கொஞ்ச்மாவது மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்கள்.

Tag: Coconut Milk Porriadge, Coconut Rice Soup,Cumin Coconut Soup, Indian  Spice less Soup, Ifthar Soup, 
இஸ்லாமிய இல்ல சமையல், நோன்புகால சமையல். கஞ்சி வகைகள்



14 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

எளிதான சமையல் குறிப்பிற்கு நன்றி சகோதரி...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

Priya Suresh said...

Yumm,inviting and super comforting kanji.

ஸாதிகா said...

சுலபமாக இருக்கே.ஒரு நாள் இம்முறையில் கஞ்சி செய்திடவேண்டும்.

Unknown said...

சத்தான கஞ்சி..தெளிவான விளக்கம் அக்கா

முற்றும் அறிந்த அதிரா said...

சூப்பர் கஞ்சி ஜல் அக்கா. நம் வரகரியில் செய்திருக்கிறோம் இப்படி ஆனா பச்சை மிளகய் வெங்காயமும் சேர்த்து.

இப்படிச் செய்தால் எந்தக் கஞ்சியும் அமிர்தம்தான்.

மாதேவி said...

பூண்டு சீரகக் கஞ்சி நன்றாக இருக்கின்றது ஜலீலா.

VijiParthiban said...

சூப்பர் கஞ்சி அருமை அக்கா....

VijiParthiban said...

நான் அடிக்கடி செய்யும் கஞ்சி.... மிகவும் அருமையாக இருக்கும்....

Jaleela Kamal said...

ஆமாம் திண்டுக்கல் தனபாலம் ரொம்ப எளிது உடல் நலத்துக்கு மிக நல்லது.
வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி பிரியா

Jaleela Kamal said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் , அப்படியே உங்கள் வீட்டு கஞ்சி முறையும் போடுங்கள்.
ஸாதிகா அக்கா

Jaleela Kamal said...

அதிரா வருகைக்கு மிக்க நன்றி

கறி, சிக்கன் சேர்த்தும் செய்வோம்.
இது ரொம்ப லைட்டாக இருக்கும்

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி மாதேவி

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி விஜிபார்த்திபன்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா