Wednesday, August 1, 2012

போ பிஸ்கேட் (ப்ளவர் பிஸ்கேட்) - Bow Biscuit



போ பிஸ்கேட் (ப்ளவர் பிஸ்கேட்)
தேவையானவை
மைதா மாவு – அரை டம்ளர்
சர்க்கரை – 2 மேசை கரண்டி
பட்டர் – ஒரு மேசை கரண்டி
உப்பு – அரை சிட்டிக்கை
ஏலப்பொடி – அரை தேக்கரண்டி




செய்முறை
பட்டரை உருக்கிகொள்ளவும், சர்க்கரையை பொடித்து கொள்ளவும்.
மைதாவுடன் , பட்டர், சர்க்கரை , ஏலப்பொடி உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை முன்று உருண்டையாக பிரித்து வட்டவடிவமாக தேய்த்து குறுக்கும் நெடுக்குமாக ஒரு இன்ச் அள்வுக்கு கட்செய்து போ ஷேப்பில் பிடித்து வைக்கவும்.

எண்ணையை காயவைத்து எல்லா போ க்களையும் பொரித்து எடுக்கவும்.

சுவையான போ பிஸ்கேட் ரெடி, ஒரு மாதம் ஆனாலும் கெடாது மொறு மொறுன்னு இருக்கும்.
டிஸ்கி: நோன்பு கால டிப்ஸ்: இந்த முறை நோன்பு நேரம் வெயில் அதிகமாக இருப்பதால் நாவறட்சி அதிகமாக இருக்கும். ஜூஸ் வகைகள், தண்ணீர், மோர் , கஞ்சி , சூப் போன்றவைகளை அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.

மெயினாக லெமன் ஜூஸ், மற்றும் மாதுளை ஜூஸ் குடிப்பது நல்லது.

19 கருத்துகள்:

ஸாதிகா said...

அட வித்தியாசமாக உள்ளதே!!!!!!!!!!

Jaleela Kamal said...

ஆமாம் ஸாதிகா அக்கா வித்தியாசமான பிஸ்கேட், இது சிறு வயதில் நான் விரும்பி சாப்பிடும் ஹோம்மேட் பிஸ்கேட்.
சாச்சி அடிக்கடி செய்து தருவாங்க.

Chitra said...

New to me. Looks yum.. Will try sometime..:)

Unknown said...

இது ரொம்ப விதியாசமாக இருக்கே

Angel said...

எனக்கு இந்த பிஸ்கட் ரொம்ப பிடிக்கும் பகிர்வுக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

இவ்வளவு பொறுமையாக வீட்டில் செய்வார்களா...? சந்தேகம் தான்...

நன்றி…

Mahi said...

Nice biscuit jaleela kaka!

'பரிவை' சே.குமார் said...

வித்தியாசமா இருக்கே...

Priya Suresh said...

Cute and addictive biscuits.

Jaleela Kamal said...

சித்ரா வருகைக்கு மிக்க நன்றி முயற்சி செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்,

Jaleela Kamal said...

வாங்க பாயிஜா ஆம் கொஞ்சம் வித்தியாசம் குழந்தைகளுக்கு ரொம்ப் பிடிக்கும்

Jaleela Kamal said...

ஏஞ்சலின் இந்த பிஸ்கட் உங்களுக்கும் ரொம்ப் பிடிக்குமா?
வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க திண்டுக்கல் தனபாலன் ஆம், சாப்பிடனுமுன்னா செய்யலாமே.
வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி மகி

Jaleela Kamal said...

நன்றி சே குமார்

Jaleela Kamal said...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி பிரியா

R.Gopi said...

ஜலீலா....

மைதாவில் செய்வது எப்படி மொறுமொறுன்னு இருக்கும்?

பொதுவாக மைதாவில் செய்வது மெது மெதுவென்று தானே இருக்கும், அதான் கேட்டேன்.....

ஆனாலும், இந்த மைதா போ பிஸ்கெட் பார்க்கவே சூப்பரா இருக்கு... எப்போ வந்து வாங்கிக்கலாம்னு சொன்னா வந்து வாங்கிக்குவேன்....

Jaleela Kamal said...

கோபி இது மிகவும் கிரிஸ்பியாக மொரு மொருன்னு இருக்கும்
மெது மெதுன்னு ஆகாது.

இதோடு இரண்டாவது அயிட்டம் கேட்டு இருக்கீங்க..

பார்க்கலாம் முடிந்தால்ல்//// சொல்கீறேன்

tech news in tamil said...

nice tips

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா