Wednesday, October 3, 2012

மழலை உலகம் மகத்தானது - 4 (ஓலே ஓலே ஓலே)




மழலை உலகம் மகத்தானது என்ற தொடர் பதிவில் என் 7 வருட பேபி கேர் அனுபவத்தை எழுத ஆரம்பித்தேன். அது நேரமின்மையால் இன்னும் முடிக்க வில்லை. புரியாதவர்கள் மேலே உள்ள முன்று லின்கை யும் பார்த்துட்டு இத படிங்கள்.இனி மீதி பதிவு நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

ஒரு நாள் திடீருன்னு ஒரு கோவன் லேடி வந்து,  கதவ தட்டுன்னாங்க. திறந்தும் எங்க   பெயரை கேட்டு கொண்டு இத பிடிங்க குழந்தைய‌ (பெயர் ஓலியன்) நான் இண்டர்வீவ்க்கு போறேன் இதோ ஒரு மணி நேரத்தில் வந்துடுரேன் பார்த்துக்கங்க மீதி எல்லாம் வந்து பேசுறேன்னுட்டு போயிட்டாங்க.
 நாங்களும் அப்படியே  குழந்தைய கையில் வாங்கவும் அடுத்த நிமிஷமே ஆள் எஸ்கேப்.

சரி குழந்தையை வாங்கியதும் ஒரு பின்னாடி போயிட்டேன், சரியான குண்டு குழந்தை, அந்த குழந்தை அப்ப ஆரம்பித்த அழுகை தான், 2 மணி நேரம் ஆகியும் சத்தம் நின்றபாடில்லை 
-- ஓலியன் ஒன்றும் சாப்பிடவும் இல்லை, தண்ணீரும் குடிக்கல எனக்கு ஒரே பயம் தொண்ட காஞ்சி போச்சுன்னா  இருமி வாமிட் வரும் . 

உடனே முதலில் ஏதாவது பாட்ட போட்டு அழுவதை நிறுத்தி விட்டு ஏதாவது சாப்பிடவைக்கலாம்.பிறகு யோசிக்கலாம்.

டேப் ஆன் செய்தேன், கோவா குழந்ந்தை என்பதல் ஹிந்தி பாட்டு போடலாம் என்று போட்டோம்

ஜப் தேக்கோ லடிக்கி தேக்கோ மேரா தில் திவானே ஓலே ஓலே ஓலே  ஓலே ஏ


என்ற பாட்டை கேட்டதும் ஓரள்வுக்கு அழுகை நின்றது. பாட்டு முடிந்ததும் மறுபடி அழுகை இப்படியா? இருந்தது சரி சாப்பிடவைக்க

மற்ற குழந்தைகளை எல்லாம் ஒன்றாக உட்காரவைத்து ஒரு பேப்பாரை விரித்து அவங்க அவங்க சாப்பாட்டை தனித்தனியாக ஸ்பூன் போட்டு கொடுத்துகொண்டிருக்கும் போது ஓலியனும் அதை பார்த்து கொஞ்சம் சாப்பிட்டு தண்ணீர் குடித்தாள்.
சாப்பிட்டு குடித்து முடித்ததும் பழையபடி அழுகை ஆரம்பம். மறுபடி ஓலே ஓலே தான் , கொடுத்து விட்டு போன லேடி எங்க தங்கி இருக்கங்கன்னும் தெரியல, அவ்ஙக் போன் நம்ப்பரும் வாங்கல,  கொஞ்ச நேரத்துல நேரம் ஆக ஆக பே பே பே

இப்படி முச்சு விடாம அழுது ஏதாச்ச்சு ஆச்சுன்னா போலிஸ் புடிச்சிட்டு போயிடுவாரோ... பயம் வேறு...... 

மற்ற குழந்தைகளை எல்லாரும் முதல் முதல் விட்டு சென்றதும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை போன் செய்து விசாரிப்பார்கள். இவங்க போனே பண்ணவில்லை.

அன்று காலை 7 மணி முதல் மதியம் 2 .30 வரை கழிந்தது. பிறகு 3 மணிக்கு அம்மா ஆடி அசைந்து வராங்க. அவங்களை பார்த்ததும் அப்பாடான்னு உயிர் வந்தது.

என்ன போனும் பண்ணல குழந்தை என்ன ஆச்சுன்னும் விசாரிக்கல. இண்டர்வீவ்க்கு தானே போறேன்னு சொன்னீங்க இவ்வளவு நேரமா? என்று கேட்டதற்கு , அவங்க கூலாக... இண்டர்வீவ் 11.30 க்கு எல்லாம் முடிந்து விட்டது. 

வீட்டுக்கு போய் சமைத்துவிட்டு எல்லா வேலையும் முடிச்சிட்டு வரேன்  அதுவும் இல்லாமல் உஙகள் கிட்ட பழகட்டுமே என்று தான் இடையில் வரல என்றார்கள்.வந்துச்சே கோபம். சரி வந்தது தான் வந்தாங்க உடனே கிளம்பவும் இல்ல, நானும் கூட இருக்கேன் 2 மணி நேரம் அப்ப இன்னும் பழகுவா, (பயங்கர தலை வலி வேறு) சரி என்ன செய்வது  ஒகேன்னு சொல்லிட்டு 5 மணிக்கு அவங்க கிளம்பியதும்.

பெனடால் இரண்டு மாத்திரை போட்டு கொண்டு தைலத்த அள்ளி தலையில் தேய்த்து கொண்டு ரெஸ்ட் எங்கிருந்து எடுப்பது மற்ற குழந்தைகள் இருக்கிறார்களே இரவு 8 வரை ஓய்வில்லை. அதற்கு பிறகு என் வீட்டு வேலைகளை பார்க்கனும்.

தினம் தினம் அதே போல் ஓலியன் வருகையும் + அழுகையும் தொடர்ந்தது, நானும் தினம் பெனடாலோடும் + தைலத்துடனும் தொடர்ந்தேன்.
என்னசெய்வது  அழும் குழந்தையை பார்த்து கொள்ள முடியாது வேறு இடம் பார்த்துக்கோன்னு சொல்லவும் மனம் வரவில்லை.

கொஞ்சம் நாள் ஆக ஆக அழுகை குறைந்தது. ஓலியன் ஒழுங்காக சாப்பிடவும் ஆரம்பித்தாள். 
ஆனால் ஓலே ஓலே ஒலே பாட்டு என்னேரமும் ஒலித்து கொண்டே இருக்கும்.. 


ஆனால் ஆறு மாத குழந்தை என்றாலும் சாப்பாடு மட்டும் நிறைய வைப்பார்கள் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பாடு கொடுக்க சொல்லி . ஓட்ஸ், சூப், ஜூஸ், ப்ரெட், கிச்சிடி என்று , நாங்களும் ஒன்றும் சொல்வதில்லை , எல்லா பிள்ளைகளுக்கும் என்ன் சாப்பாடு வருதோ அதையும் கொடுத்து எங்க சாப்பாட்டை கேட்டாலும் கொடுப்பது.

கொஞ்சம் நாள் கழித்து ஓலியன் நல்ல பழகி வரும் போது  ஆறுமாதம் ஆச்சு ஓலியன் அம்மா , வீட்டு பில்டிங்கிலேயே பார்த்து கொள்ள ஆள் இருக்காங்கன்னு சொல்லிட்டு ஒலியனை இங்கு கொண்டு வந்து விடுவதை நிறுத்தி விட்டார்கள். 

என்ன தான் இருந்தாலும் ஒரு வாரம் ஓலியன் ஞாபகம் இருந்து கொண்டே இருந்தது. நல்ல பழகிய பிறகு போய் விட்டாளே என்று சங்கடமாக இருந்தது.  (ஓலியன் போட்டோ மட்டும் என்னிடம் இல்லை.இப்ப ஓலியன் கனடாவில் காலேஜ் படித்து கொண்டு இருக்கிறாள்.)

இப்படி ஹகீம் ரஷீத், ஸாதியா,டிக்‌ஷா, குட்டன், ஷெரில் எல்லாரும் ஸ்கூல் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
 சாதியாமட்டும் ஸ்கூல் விட்டு திரும்ப 11 மணிக்கு எங்க வீட்டுக்கு வருவாள். 

அடுத்து ரோஸ்லின் 40 நாள் குழந்தை வந்து சேர்ந்தது அவங்க அம்மா கானி, ரொம்ப பிரண்ட்லியா பழகினாங்க. என்ன நேரம் தான் அதிகம். காலை 7 மணிக்கு விட்டு சென்றால் மாலை 6 மணிக்கு தான் வந்து கூப்பிட்டு செல்வார்கள்.

சின்ன பச்ச குழந்தை ஒன்று பிரச்சனை இல்லை 3 மாதம் வரை வயிற்றை நிரைத்தால் மட்டும் போதும் . அந்த பொண்ணு மட்டும் தான் இருந்தது,ஒரு ஓன்னறை வருடம் ஓடியது.  இடையில் ரோஸினுக்கு அம்மை போட்டு இருந்தது அப்பவும் நான் தான் அந்த குழந்தையை பார்த்து கொண்டேன். ரொம்ப படுத்ததால் ஒன்றும் தெரியல எங்க குழந்தைபோல எங்க கூடவே இருந்து கொண்டாள்.

ரோஸிலின் பற்றி சொல்லனுமுன்னா, என்னிடம் வந்ததில் இருந்து ஒரு நாள் கூட அழுததில்லை , சிரித்து கொண்டே இருப்பாள்.
அப்பதான் இரண்டாவது பையன் ஹனீஃபை உண்டாகி இருந்தேன். நிறைமாதம் டெலிவரி டேட் நெருங்கியதும் வேண்டாம் வேறு இடம் பார்த்து கொள்ளும்படி சொல்லிட்டேன்.இதோடு மூனறை வருடம் (1997 ழில்)முடிந்தது.


ரஷீத், குட்டன் ஷெரில், சாதியா, டிக்ஸா, ஹகீம்

ஒரு சோகமான செய்தி , முதல் முதல் வந்த குட்டனின் (படத்தில்  இரண்டாவதாக அழுது கொண்டிருக்கும் குட்டன்) அப்பா 2010 லில் lநடந்த மங்களூர்  விமான விபத்தில் இறந்து விட்டதாக செய்தி இப்ப  சமீபத்தில் தான் தெரியவந்தது. கேட்டுட்டு மனம் கனத்து போச்சு, குட்டன் இப்ப இந்தியாவில் இரண்டாம் ஆண்டு எஞ்சினியரிங் படிப்பதாகவும் சொன்னார்கள்.
மற்ற குழந்தை டிக்ஸா, ஷெரில் பற்றி தெரியவில்லை, சாதியாவும் எஞ்சினியரிங் இரண்டாம் வருடம் படிக்கிறாள்.ரஷீத் , ஹகீம் எஞ்சினியரிங் final year படித்து கொண்டு இருக்கிறார்கள்.


டிஸ்கி:இதில் ஷெரில் பற்றி திடுக்கிடும் சம்பவம் ஒன்று சொல்ல மறந்துட்டேன்.பதிவு நீளம் கருதி அடுத்த பதிவில் எழுதுகிறேன்./
படங்கள், வீடியோ இனைக்கலாம் என்று இருந்தேன் , இப்போதைக்கு நேரம் இல்லை,

நேரம் இருக்கும் போது மீதியை எழுது கிறேன்.

தொடரும்.





27 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் வருத்தப்பட வைத்தது சகோதரி....

சாந்தி மாரியப்பன் said...

இந்தப் பொறுப்பை ஏத்துக்க ரொம்பவே பொறுமை வேணும். இல்லையா ஜலீலாக்கா.

Asiya Omar said...

ஜலீலா, நல்ல அனுபவம் ஆனால் இதற்கெல்லாம் பொறுமையும் வீட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்பும் அவசியம் தேவைப்படும்,தொடர்ந்து எழுதுங்க,குட்டன் அப்பாவின்மரணம் குறித்த மங்களூர் விமான விபத்து செய்தி மனதிற்கு வருத்தமளிதத்து.
எல்லாக் குழந்தைகளின் எதிர் காலமும் நன்றாக அமையட்டும்..

முனைவர் இரா.குணசீலன் said...

மழலை உலகம் மகத்தானது

சித்ரா சுந்தரமூர்த்தி said...

ஜலீலா,

உங்களின் பொறுமை பெரிய‌து. பொறுமையுடன்,உதவும் குணம், நல்ல மனம் இருந்தால்தான் இதெல்லாம் முடியும்.இன்று வரை அவர்களுடனான தொடர்பை நினைத்து ஆச்சரியம்.பதிவின் முடிவில் உள்ளது நல்ல சம்பவமா? அல்லது வேறு ஏதேனுமா என அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Jaleela Kamal said...

தனபாலன் சார் நானே எதிர் பார்க்கல குட்டனின் அப்பா இல்லாமல் போனதை. என்ன செய்வது? எனக்கும் மிக வருத்தமே/

Jaleela Kamal said...

ஆமாம் சாந்திவரும் பிள்ளைகளுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று ரொம்ப பயப்படுவேன்.
நம்மை நம்பி ஒப்படைத்துவிட்டாகளேன்னு ரொம்ப கவனமாக பார்த்து கொண்டேன்.
வீட்டு வேலையெல்லாம் காளை 4.30 லிருந்து 7.30 .,மற்றும் இரவு 8. லிருந்து 12 ( சமையல் + பையனுக்கு சொல்லி கொடுப்பது)

Jaleela Kamal said...

ஆமாம் ஆசியா அந்த விதத்தில் என் கணவர் நல்ல ஒத்துழைத்தார் எதுவும் சொல்லவில்லை உன் விருப்பம் என்ன நடந்தாலும் அதை நீ தான் பார்த்துகொள்ளனும்.
என் கிட்ட எதுவும் வரக்கூடாது என்பார், அவர் வருவதற்குள் எல்லோரும் சென்று விடுவார்கள்.

Jaleela Kamal said...

சித்ரா சுந்தர் வாங்க பதிவை நல்ல படிச்சீங்களா?

குட்டன் அப்பா இறந்த செய்தி தான் அங்கு கெட்ட சம்பவம்.

ஷெரில் பற்றினது ஒரு திகிலே தான் மற்றபடி ஒன்றும் இல்லை.
ஏதோ ஒரு ஊரில்நல்ல படியாக அந்த பொண்ணு படித்து கொண்டு இருக்கும் அவர்களுடன் எனக்கு இப்ப தொடர்பு இல்லை/.

ஸாதிகா said...

ஜலி.உங்களுக்கு எக்கசக்க அனுபவங்கள்.பகிர்வின் இறுதில் நெகிழ வைத்துவிட்டீர்கள்.

enrenrum16 said...

//மறுபடி ஓலே ஓலே தான்/// ஒண்ணு அவ அழுவா...இல்லன்னா டேப் ரெக்கார்டர் அழும்னு சொல்லுங்க...:)))

பரவாயில்லையே அக்கா... அந்த குட்டீஸ் பற்றி லேட்டஸ்ட் தகவல்களும் சொல்லி அசத்திட்டீங்க....

கலகல பதிவு சீரியஸாகிடுச்சே... ஷெரில் பற்றி என்ன சொல்லப்போறீங்களோன்னு பக் பக்குனு இருக்கு....

Chitra said...

hmm. good post :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு அனுப்வப் பகிர்வு. கடைசியில் சோகம்.
பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Asiya Omar said...

அடுத்த பகிர்வுக்காக காத்திருக்கிறோம்.
Participate in My First Event - Feast of Sacrifice Event
http://www.asiyama.blogspot.com/2012/10/my-first-event-feast-of-sacrifice.html

Angel said...

அருமையான அனுபவங்கள் அக்கா ..
உண்மையில் சிறு குழந்தைகளை கவனிக்க அசாத்திய பொறுமை வேணும் ..உங்க தாயுள்ளம் எல்லாவற்றுக்கும் அழகா பொருந்தி வந்திருக்கு இயல்பா ..

Angel said...

அடுத்த பதிவுக்கு வெய்ட்டிங் ..
குட்டன் பற்றி நீங்க சொன்னது நினைவுக்கு வருது .குழந்தைகளை நீங்க சமீபத்தில் மீட் செய்தீங்களா ..UPDATE SUPERB

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஹா.. ஜலீலாக்கா படிக்க படிக்க சுவாரஷ்யம். குழந்தைகளின் கதைகளைக் கேட்டுக் கொண்டே போகலாம்.


அதிலயும் எல்லொரும் இப்போ பெரியவர்களாகி.. நல்ல நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கேட்க இன்னும் மகிழ்ச்சியாக இருக்கு.

ஒலே..ஒலே..

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதே
”மழலைகள் உலகம் மகத்தானது“

என்ற தலைப்பில் நான் ஒரு நகைச்சுவையான படைப்பு ஒன்று கொடுத்திருக்கிறேன்.

நேரம் இருந்தால் பாருங்கோ:

இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html
மழலைகள் உலகம் மகத்தானது

அன்புடன் VGK

ஹுஸைனம்மா said...

ரொம்பப் பொறுமைதான் உங்களுக்கு. நம்ம குழந்தைகளைக் கவனிக்கீறதுக்கே பொறுமை குறைவாய் இருக்கு. பணத்துக்காக என்றாலும், இந்த வேலை ரொம்ப பொறுமையச் சோதிப்பதுதான் இல்லியா.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா பொறுமையை வரவழைத்து கொண்டேன்.

Jaleela Kamal said...

நன்றீ சித்ரா

நன்றி வை கோபலகிருஷ்ணன் சார்

வருகைக்கு நன்றீ ஆசியா விரைவில் போடுகிறேன்

Jaleela Kamal said...

ஏஞ்சலின்
ஸாதியா, இஸ்மாயில், ஓலியன் தவிர மற்ற யாரையும் மீட் பண்ணல

Jaleela Kamal said...

ஆமாம் ஹுஸைனம்மா. ரொம்ப கவனம் , பொறுமை தேவை.
கண்ணு எப்போதும் அவர்களை சுற்றியே இருக்கனும்.

Jaleela Kamal said...

ஆமாம் அதிரா , இன்னும் என் பிள்ளைகளின் கதைகள் கூட ஏராளம் இருக்கின்றன

குறையொன்றுமில்லை. said...

நீங்க செய்வது மிகவும் சிறப்பான சேவை மழலையர் உலகம் மகத்தானதுதான் சந்தேகமே இல்லே

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

உண்மையிலேயே அலுவலக பணிகளை விட பேபி கேர் ரொம்பவும் கஷ்டம்.

பாசமாக பார்த்து கொள்ளும் சகோதரிகளால் தான் பிள்ளைகள் நன்றாக வளரும். என்னுடன் வேலை பார்த்த சகோதரி தன்னுடைய பெண் குழந்தையை ஒரு பெண் இடத்தில் பார்த்து கொள்ள சொல்ல அந்த பெண் நல்ல மாதிரியாக பார்த்து கொண்டாள். ஆனால் அவர்கள் இந்தியா செல்ல இருப்பதால் வேறு ஒரு இடத்தில் பார்த்து கொள்ள சொல்லும் போது குழந்தையை சரியாக பார்த்து கொள்வதில்லை என்று மிகவும் வருத்தப்பட்டார்.

Jaleela Kamal said...

லஷ்மி அக்கா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா