Monday, October 8, 2012

மழலை உலகம் மகத்தானது - 5







மழலை உலகம் மகத்தானது  - 4


/ஷெரில் பற்றின திடுக்கிடும் சம்பவத்தை சொல்கிறேன் என்று போன பதிவில் சொன்னேன்./

ஷெரில் ரொம்ப சைலண்டா எல்லாத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பாள். சாப்பாடு எல்லா பிள்ளைகளுக்கு சூடு படுத்தி தான் கொடுப்பது, கொஞ்சம் நேரம் கிச்சனுக்கு போக கதவுகு வெளியில் வந்தேன். அதற்குள் கதவு பின்னாடி ஷெரில் ஒளிந்து நின்று கொண்டு இருந்தால் மற்ற பிள்ளைகள் ஜோராக கதவை மூட வீரூன்னு ஒரு சததம் பயந்து போய் கதவை திறந்தால் ஷெரில் கை கதவு இடுக்கில் நசுங்கி விட்டது. உடம்பெல்லாம் ஒரு நிமிடம் சிலிர்த்து விட்டது .

என்ன செய்வதென்றே தெரியவில்லை . உடனே முதலில் டாக்டர் கிட்ட போவோனுன்னு எல்லா பிள்ளைகளை கூப்பிட்டு கொண்டு ஒரு டேக்ஸி பிடித்து  (டேக்ஸி கார் பாக்கிஸ்தானி ) ஏதோ ஊரில் படித்த ஹிந்தி வார்ததைகளை வைத்து (ஹிஹி வடிவேலு மாதிரி) இதர் ஜாவோ , உதர் ஜாவோ , நை நை யஹா வாஹா என்று அந்த பாக்கிஸ்தானி டிரைவர்  அன்றே வாழ்க்கைய வெறுத்து இருப்பார் . 

இப்ப இல்ல அப்ப  ( பாக்கிஸ்தானி கிட்ட சண்டை போடும் அளவுக்கு பேச கற்று கொண்டேன் இத பற்றி அப்பறம் பார்க்கலாம்). இப்ப நான் பேசும் ஹிந்திய கேட்டால் ஆப் கிதர் சே , பாக்கிஸ்தான் சே...?

ஒரு வழியா ஹாஸ்பிட்டல் போய் எமர்ஜென்சியில் கையை எக்ரே எடுத்து கட்டு போட்டாச்சு . ஒரு விரல் நசுங்கிடுச்சு கட்டு போட்டா சரியாகிடும் என்றார்கள்.
மறுபடி டேக்ஸி பிடித்து எல்லா குழந்தைகளையும் அழைத்து கொண்டு வீட்டுக்கு போய் சேர்ந்தோம்.

ஷெரில் வீட்டுக்கு ரொம்ப பயந்து பயந்து நாங்களே நேரடியாக ஷெரிலை கூப்பிட்டு கொண்டு விட போனோம்
அவங்க அம்மாவுக்கு  பார்த்ததும் புரியல , என்ன சொல்ல போறாஙக்ளோ திட்டுவாங்களோ, என்று பயந்து மெதுவாக விஷியத்தை சொன்னோம். அவஙக் முகம் சற்றும் மாற வில்லை. பதட்டமும் அடையல. ரொம்ப கவலை படவேண்டாம். பிள்ளைகள் இருக்கும் இடத்தில் இப்படி நடப்பது சகஜம் தான் என்று சொன்னார்கள். பரவாயில்ல விட்டுட்டு போங்க என்றார்கள்.
அப்படியே உயிர் வந்த மாதிரி ஆகி விட்டது.இப்படியும் நம்மை புரிந்து கொள்பவர்கள் இருக்கிறார்களே என்று ஷெரில் அம்மாவை நினைத்து மனம் மிக நெகிழ்வாய் இருந்தது.


மற்ற் குழந்தைகள் விளையாடும் போது நடக்கும் போது தொப்புன்னு கீழே விழுவார்கள் தெரியாம இடிச்சி கொள்ளும். சின்ன கீறல் அவஙக் நகத்தை சரியாக வெட்டாமல் விட்டால் கூட முகத்தில் அவர்கள் சொரியும் போது கீறல் விழும். 
 அப்படி இருந்தால் அவர்கள் அம்மாமார்கள் கொஞ்சம் உற்று நோக்குவார்கள்.

( அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது - குழந்தைகள் தவழ நடக்க குதிக்க ஆரம்பிக்கும் போதும் விளையாட்டு சாமானகளை வைத்து விளையாடும் போது அடி படுவது சகஜம் அதை வைத்து கொண்டு கூட இருப்பவர்கள் யாரையும் சந்தேகிக்காதீர்கள்)

ஆனால் குழந்தைகளுக்குள் விளையாடும் போது அடிதடி வரும் விளையாட்டு பொருட்களை ஓருத்தர் மேல் ஒருத்தர் தூக்கி போடுவார்கள் அது கொஞ்சம் கவனமாக பார்த்து கொள்ளனும்.

**********************************************************


எல்லாருக்கும் ஆளுக்கொரு டைரி கொடுத்து சின்ன ஆப்பிள், மரம், பந்து ,பூனை  போன்றவை வரைந்து கொடுத்து கலர் அடிக்க சொல்வேன்.  ஆனால் அதை தீடீருன்னு வாயில் போட்டு சாப்பிடாமலும் பார்த்து கொள்ளனும். , எழுத சொல்வேன். நிறைய பலூன் வாங்கி கையில் கட்டி விடுவேன்.பிள்ளைகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான் சேர்ந்து விளையாடுவார்கள் சாப்பிடுவார்கள்.

இத்தனை குழந்தைகளை பார்த்து கொண்டேன் ஆனால் எந்த குழந்தையையும் சுவரில் கிறுக்க விட்டதே இல்லை.
பிள்ளைகள் உள்ள ஓவ்வொரு வீட்டுக்கும் போனால் சுவரெல்லாம் சித்திரம் தான். 

சுவரில் விலங்குகள் படம் , மற்றும் எல்லாம்  ஓட்டி வைத்திருப்பேன்.

கொஞ்ச நாட்களில் ஹகீம் ரஷீத் ஸ்கூல் போக ஆரம்பிச்சாச்சு.கே ஜி 1 , கேஜி 2 வரை 11 மணிக்கு வந்து விடுவார்கள்.
 முதல் வகுப்பில் இருந்து ஹகீம் ரஷீத் காலை 11மணிக்கு பள்ளி சென்றால் மாலை 6 மணிக்குதான்வருவார்கள்.ஸாதியா ஸ்கூல் சென்று விட்டு காலை 11 மணிக்கு வருவாள்.


 அடுத்து ரோஸ்லின் 40 நாள் குழந்தை வந்து சேர்ந்தது அவங்க அம்மா கானி, ரொம்ப பிரண்ட்லியா பழகினாங்க. என்ன நேரம் தான் அதிகம். காலை 7 மணிக்கு விட்டு சென்றால் மாலை 6 மணிக்கு தான் வந்து கூப்பிட்டு செல்வார்கள்.


சின்ன பச்ச குழந்தை ஒன்று பிரச்சனை இல்லை 3 மாதம் வரை வயிற்றை நிரைத்தால் மட்டும் போதும். சிரித்து கொண்டே இருப்பாள். அந்த பொண்ணு மட்டும் தான் இருந்தாள்,ஒரு ஓன்னறை வருடம் ஓடியது.  இடையில் ரோஸினுக்கு அம்மை போட்டு இருந்தது அப்பவும் நான் தான் அந்த குழந்தையை பார்த்து கொண்டேன். ரொம்ப படுத்ததால் ஒன்றும் தெரியல எங்க குழந்தைபோல எங்க கூடவே இருந்து கொண்டாள்.

ரோஸிலின் பற்றி சொல்லனுமுன்னா, என்னிடம் வந்ததில் இருந்து ஒரு நாள் கூட அழுததில்லை , என்னேரமும் என்ன பேசினாலும் சிரித்து கொண்டே இருப்பாள்.
இடையில் அக்‌ஷய், வைஷ்ணவ்  என்ற இரண்டு  பையன்க்ள்  வந்தார்கள் இருவராலும் எந்த தொந்தரவும் இல்லை பொறுமையாக இருந்தார்கள். ஆட்டம் இருக்கதான் செய்யும்,  அரை நாள் தான் ஒன்று தொந்தரவு இல்லை.அரை நாள் என்றால் மாலை 4 மணிக்குள் சென்று விடுவார்கள்.

 அப்பதான் இரண்டாவது பையன் ஹனீஃபை உண்டாகி இருந்தேன். நிறைமாதம் டெலிவரி டேட் நெருங்கியதும் வேண்டாம் (அந்த சிரிப்பு குழந்தையை விட மனமில்லாமல்) வேறு இடம் பார்த்து கொள்ளும்படி சொல்லிட்டேன். (ரோஸ்லின் போட்டோ இல்லை)

கல்யாணம் ஆகி 5 வருடம் சென்னையில் தான் இருந்தேன். கணவரும் சவுதி சென்று விட்டார்.  மாமியார் வீட்டிலும் டீவி ரேடியோ எதுவும் கிடையாது.

பிறகு அவருக்கு துபாயில் வேலை கிடைக்கவே கொஞ்சம் மாதங்களை கழித்து என்னை அழைத்து கொள்வதாக சொன்னார். துபாயில் மற்றவர்களிடம் பேச கொள்ள மொழி தெரியாம திண்டாட கூடாது என்று ஹிந்தி கற்று கொள்ளலாமுன்னு நினைத்தேன். சின்ன வயதில் இருந்தே சனி கிழமை டீவியில் போடும் ஹிந்தி பட்த்தை பார்க்க தவற மாட்டேன். ஓரளவுக்கு புரிந்தாலும் எழுத,படிக்க, பேச கற்று கொள்ளனும் என்று வேலையை முடித்து மதியம் எல்லோரும் சாப்பிட்டு விட்டு ஒரு குட்டி தூக்கம் போடும் நேரத்தில் நான் 1 மணி நேரம்  ஹிந்தி கிளாஸ் போய் ஹிந்தி கற்று கொண்டேன்.


 ஹகீம் ரஷீத்க்கு 5 ஆம் வகுப்பு வரை நான் தான் ஹிந்தி சொல்லி கொடுத்தேன். ரஷீத் ஒன்னாம் வகுப்பு எல்லா வகுப்புகளிலும் முதல் வந்து மெரிட் சர்டிபிகேட்டும் வாங்கினான், ஹகீம் அரபிக்கில் வாங்கினான்.அதே போல் ஸாதியாவுக்கும் இடையில் கொஞ்சம் நாட்கள் ஹிந்தி சொல்லி கொடுத்தேன்.பிறகு நாங்களும் விடுமாறி சென்று விட்டோம்.




ஹனீப் ஒரு வயது ஆனதும் மறுபடி அடுத்த பேட்ச் பசங்க வர ஆரம்பித்தார்கள்.
ஸாதியாவின் தம்பி இஸ்மாயில் , குட்டனின் சித்தி பொண்ணு லஷ்மி , இன்னொரு தெரிந்த உருது பொண்ணு  அப்ஷான் அதோடு சேர்த்து என் ஹனீப்  ( ஹனீபுக்கும் , இஸ்மாயிலுக்கு ஒரே வயது) ஹகீம் என் பெரிய பையன், ரஷீத் பக்கது வீட்டு பையன்.


தொடரும்...










15 கருத்துகள்:

Angel said...

ஷெரில்!!! சின்னபிள்ளைங்க விளையாட்டில் கதவு பின் ஒளிவது ரொம்ப ஆசையாச்சே அவங்களுக்கு ..ஹிந்தி நானும் சென்னைல இருந்த வரை படங்கள் மற்றும் சூப்பர் ஹிட் சாங்க்ஸ் பார்த்தே பேச கத்துகிட்டேன் ..
இங்கே லண்டனிலும் நிறையப்பேர் Punjabi/Gujarathis கண்டவுடன் கேட்பது //ஹிந்தி மாலும் //.படத்தில் அனைத்து குழந்தைகளும் சந்தோஷமா இருப்பதை பார்த்தாலே தெரிகிறது நீங்க அவங்களை எவ்வளவு அன்பா கவனிசிருக்கேங்கன்னு
தொடருங்க ஜலீலா ..

மாதேவி said...

மழலைகளின் இனிய பொழுதுகளைப் பகிர்ந்து கொண்டீர்கள்.

Menaga Sathia said...

சுவராஸ்யமான பதிவு.....குழந்தைகளின் படங்களை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு...பிள்ளைகளை பார்த்துக் கொள்வது தனி சந்தோஷம் தான்...

ChitraKrishna said...

Thanks for sharing jaleela.... Amazing journey.

Unknown said...

Ur great akka.. all in all jaleela akkaku oru oohoo..

கோமதி அரசு said...

மழலைகள் விளையாடும் போது இப்படி அடிபடுவது சகஜம் என்று ஏற்றுக் கொண்ட குழந்தையின் அம்மா பாராட்டபட வேண்டியவர்கள்.
குழந்தைகளை அருமையாக பார்த்துக் கொண்டதால் அவர்களின் சின்ன சின்ன அசைவுகளையும் அழகாய் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி ஜலீலா.

enrenrum16 said...

இப்படிப்பட்ட ஒரு நல்ல கேர்டேக்கர் கிடைத்தது அதிசயம் தான்.... உங்களைப் புரிந்து கொண்ட கஸ்டமர்ஸ் கிடைத்ததும் வியப்பான விஷயம் தான்க்கா....

உங்க முந்தைய ஹிந்தி ரொம்ம்ம்ம்ப நல்லருக்கு....ஹி..ஹி...

Jaleela Kamal said...

ஏஞ்சலின் ஆமாம் எல்லோருக்கும் நல்ல ஃபிரீடம் கொடுத்து ஆட்டம் பாட்டம் அவர்கள் இஷ்டம் தான்

வருகைக்கும் தொடர்ந்து படித்து கருத்து தெரிவிப்பதற்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி மாதேவி

Jaleela Kamal said...

ஆமாம் மேனகா கொஞ்சம் நாம எரிச்சல் படாமல் அவர்கள் போக்கில் போனால் எல்லாம் சந்தோஷம் தான்

Jaleela Kamal said...

வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றீ சித்ரா கிருஷ்னா

Jaleela Kamal said...

உங்கள் பாராட்டுக்கு மிக்க் நன்றி பாயிஜா

Jaleela Kamal said...

ஆமாம் கோமதி அரசு எனக்கு அவர்களின் எல்லா அசைவுகளை உடனே கண்டு பிடிக்க முடியும்,
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

எவர் 16 வாங்க ஆமாம் முன்பு நான் பேசிய ஹிந்திய கேட்டு பல பேர் தலைய பிச்சிக்கிடத்த நேரம் கிடைக்கும் போது சொல்கிறேன்..

Asiya Omar said...

ஒரிரு குழந்தைகளைப் பார்ப்பதே சிரமம்,நீங்கள் இத்தனை குழந்தைகளைப் பார்த்த அனுபவப் பகிர்வு மிக அருமை.,பாராட்டுக்கள்..

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா