Wednesday, October 10, 2012

மழலை உலகம் மகத்தானது - 6
மழலை உலகம் மகத்தானது – 6

அடுத்த செட் பிள்ளைகள் ஹனீப், அப்ஷான், இஸ்மாயில் , லஷ்மி இஸ்மாயில் ஹனீப் சேர்ந்து விளையாடி கொண்டு இருப்பார்கள்.
 லஷ்மி சும்மா இவர்களை வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பாள்.


ஹனீப், அப்ஷான், இஸ்மாயில் , லஷ்மி இவர்களில் அப்ஷான் பெரிய பொண்ணு எப்ப பார்த்தாலும் நைசா நழுவி போய் பெரிய ஜான்சன்ஸ் பவுடர் டப்பவை எடுத்து கொண்டு போய் பல்லால் மூடிய பேத்து எடுத்து அவ்வளவும் கீழே கொட்டுவது அவள் வேலை. முதலில் கோபம் வந்தாலும் அதில் பிள்ளைகளோடு நானும் சேர்ந்து கொஞ்சம் நேரம் ஸ்கேட்டிங் விளையாடிட்டு பிறகு எல்லாரையும் பெட்டில் உட்கார வைத்து விட்டு கிளீன் பண்ணிடுவேன். இது போல் முன்று முறை ஆகியது.


குட்டனின் வீட்டில் அவங்க பாட்டி, குட்டன் பேமிலி, அவங்க சித்தி பேமிலி எல்லாரும் ஒன்றாக இருந்தார்கள். வீடு மாறி செல்வதால் லஷ்மியும் நின்று விட்டாள்.

அப்ஷானும் ஒரு வருடம் போல் இருநதாள் பிறகு அவங்க டாடிக்கு வேலை மாறுதல் ஆகவே அவளும் வரவில்லை.

இஸ்மாயிலும் அவங்க வீட்டில் வேலைக்கு ஆள் வைத்ததால் அவனும் வரவில்லை, அக்‌ஷய் மட்டும் கொஞ்சம் மாதம் வந்து விட்டு அவனும் நின்று விட்டான். 

பிறகு நானும் ஹனீபும் மட்டும் வீட்டில் இருந்தோம்.சரி போதும் இனி குழந்தைகளை பார்த்து கொள்ளவேண்டாம் ரெஸ்ட் எடுப்போம் என நினைத்தேன்.

ஒரு வருட தையல் கோர்ஸ் சென்னையில் கற்று கொண்டேன், ஆனால் 6 மாதம் தான் போக முடிந்த்து.
தையல் முதலே கொஞ்சம் காஜா அடிக்க , பட்டன், கொக்கி தைக்க தெரிந்தாலும் சோளி சுடிதாரும் தைக்க் கற்று கொள்ளலாம் என்று சென்றேன். சோளி நல்ல தரோவாகி விட்ட்து. சுடிதார் சரியாக தைக்க ஆரம்பிக்கல. ஓரளவுக்கு தான் தெரிந்த்து.
ஆகையால் இங்கு கற்று கொள்ளலாம் என்று விசாரிக்கையில் பஜார் ஏரியாவில் ஒரு லேடி கற்று தருகிறார்கள் என்று தெரிய வந்த்து. என் வீட்டில் இருந்து பஸ் பிடித்து தான் செல்லனும், கற்று கொள்ளனும் என்ற ஆவல் ஆகையால் பஸ்ஸில் சென்று கற்று கொண்டேன். வாரம் ஒரு நாள் மட்டும் போனேன். தையல் கிளாஸ் குஜராத்தி லேடி பாத்திமாவிடம் சென்று சுடிதார் வகைககள் தைக்க கற்று கொண்டேன்.

நல்ல டெயிலர் தைப்பதுபோலவே தைக்கும் அளவுக்கு ட்ரெயின் பண்ணாங்க.வாரம் ஒரு முறை தானே வருகிறோம் என்று கொஞ்சம் அதிகமாக சொல்லி கேட்பேன். இரண்டு மணிநேரம் சீக்கிரம் முடிந்து விடும்

வீட்டுக்கு போக மணமில்லாமல் போவேன்.  அவங்க அடிக்கடி எல்லா ஸ்டூடன்ஸ் கிட்டேயும் சொல்வது கம் காம் கரோ அச்சா கரோ” . அவங்க சொல்லிகொடுக்கும் போது அவஙக்ளுக்கு வயது 55 , அவங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. சாதா சுடிதார், லைனிங் வைத்த்து லேஸ் வைத்து தைக்கும் முறை, பெயிண்டிங் செய்து சுடிதார் தைப்பது போன்ற பல விதமாக சொல்லி கொடுத்தார்கள்
பிறகு வெகேஷன் போனாங்க அதற்கு பிறகு என்னாலும் போக முடியாம போய் விட்டது.ஹகீமுக்கு எழுத வைக்க டைரி டைரியா வருசையாக கோடு போட்டு ஹிந்தி அரபிக், ஆங்கில வார்த்தைகளை எழுத வைப்பேன்.

வினாத்தாள்களும் தயார் செய்து கொடுப்பேன்.
வீட்டில் கம்பியுட்டர்  இருந்த்தால்   அதில் டைப் செய்வது கற்று கொண்டால் கணினியில் டைப் செய்து ஒரிஜினல் வினாத்தாள் போல தயாரித்து கொடுக்கலாம் என்று கம்பியுட்டர் கற்று கொள்ளலாம் என்று நினைத்தேன்.

.
அந்த நேரம் சரியான வெயில் டைம் ஜூலை  ஆகஸ்ட் மதியம் சாப்பிட்டு முடிச்சிவிட்டு  ஹனீஃபுக்கும் ஊட்டி விட்டுட்டு அவனையும் தூக்கி கொண்டு  மதியம் ஒரு மணி நேரம் கம்பியுட்டர் கிளாஸுக்கும் சென்றேன்.
ஓரளவுக்கு வோர்ட் . எக்சல் எல்லாம் நல்ல தெரிந்து கொண்டேன். வீட்டுக்கு வந்து எங்க கணினியில் ஒவ்வொன்றாக வொர்க் அவுட் செய்து பார்ப்பது.

ஓரளவுக்கு ஆபிஸ்க்கு தேவையானவைகளை எம் எஸ் ஆபிஸ் மற்றும் மெயில் அனுப்புவது பற்றி தெரிந்து கொண்டேன்.என் தம்பி என் கூட இருக்கும் போது அவனும் கொஞ்சம் சொல்லி கொடுத்தான்.

ஹகிமுக்கு வினாத்தாள்கள் வோர்ட் எக்சலிலேயே டைப் செய்து பிரிண்ட் எடுத்து கொடுத்து எழுத வைத்தேன்.

தையல் தெரிந்த்தை வைத்து இரண்டு பேருக்கு தையலும் சொல்லி கொடுத்தேன்.

நிறைய பேருக்கு சொல்லி கொடுக்கலாம் என்று ஐடியா எல்லாம் இருந்த்து மிஷின் கூட முன்று வாங்கி வைத்து இருந்தேன். அப்பரம் முடியாமல் போய் விட்ட்து.

பிறகு கொஞ்ச நாளில்  வெல்ட்ரான் என்ற கோவன் பையன் வந்தான், சரி ஒகே வந்த வரை பார்போம் என்று பார்த்தேன். சரியான வாலு. கராத்தே கிளாஸ் போயிட்டி இங்கு வருவான். அங்க பண்ன காராத்தே பிராக்டிஸ் எல்லாம் இங்கு தான் டுஸுன் டுஸூன் சத்தம் பயங்கரமாக போடுவான். பேச்சும் வல வலன்னு பேசிக்கிட்டே இருப்பான், வித விதமாக கேள்வி கேட்டு கொண்டே இருப்பான். வெல்ரான் அம்மாவும் நல்ல டைப் கொஞ்ச நாளில் அவன் ஸ்கூல் போக ஆரம்பித்தான். பள்ளி முடிந்து நேராக இங்கு தான் வருவான்,  கீழே பஸ்ஸில் இருந்து அழைத்து வருவேன். எம்மாடி ஒரு நிமிஷம் சும்மா இருக்கமாட்டான் ரோட்டிலேயே சரியான ஓட்டம் காட்டுவான், அப்போது மெயில் ரோட்டில் வேறு வீடு கையில் ஹனீஃபையும் கூப்பிட்டு செல்வதால் ரொம்ப கழ்டமாக இருந்த்து. ஏதாவது பலூன் சாக்லேட் இது போல் எடுத்து சென்று கொடுத்து கூப்பிட்டு வருவேன். பிறகு அமைதியாகிடுவான்.பாஸித் என்ற பையன் ஹிந்தி டியுஷனுக்காக வந்தான் புதுசாக இந்தியாவில் இருந்து வந்து இங்கு 4 ஆம் வகுப்பு, அடிப்படை எழுத்துக்கள், வார்த்தைகள் தானே சொல்லி கொடுக்கனும் சரி என்று சொல்லிட்டேன். காலையில் அவன் பள்ளிக்கு செல்வதால் இரவு 7.30 லிருந்து 9 வரை அவனுக்கு சொல்லி கொடுத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்ட்து. என்னால் முடிந்த வரை அவனுக்கு நல்ல பார்த்து படிக்கும் அளவுக்கு ட்ரெயின் பண்ணி விட்டேன். பாஸித் இப்ப ரஷ்யாவில் டாக்டருக்கு படித்து கொண்டு  இருக்கிறார், பிறகு அவனும் நின்று விட்டான். அவங்க அம்மாவை அப்ப லூ லூ செண்டரில் பார்ப்பேன் பாஸித் பற்றி விசாரித்து கொள்வேன்.


 இஸ்மாயில் ஹனீப்

இது வரை பிள்ளைகளை பார்த்த்தில் அவர்கள் எந்த எந்த நேரத்தில் என்ன குறும்பு செய்வார்கள், எப்படி ஆக்‌ஷன் கொடுப்பார்க்கள். பொல்லாத்தனம், எந்த நேரம் பொய்சொல்வார்கள், நம்ம கிட்ட எப்படி இருப்பார்கள் அம்மாமார்கள் வந்த்தும் எப்படி ரியாக்ட் பண்ணுவார்கள் எல்லாமே கண்டு பிடிக்க முடியும்.
பிறகு நானும் வேலைக்கு போக ஆரம்பித்து விட்டேன்.
மழலை உலகம் பதிவு முடிந்த்து.
  ************
//கணவன்மார்கள் வேலைக்கு சென்றதும் வீட்டில் பெண்கள் சும்மா இருந்து கொண்டு போரடிக்காமல் தையல், டியுஷன் அல்லது பேபி கேர் மூலம் நீங்களும் சம்பாதிக்கலாம். இதனால் தனிமை, ஹோம்சிக், மற்றவர்களை பற்றி புரளி பேசுவது, டீவி பார்ப்ப்பது இதிலிருந்து விடுபடலாம்.//


4 கருத்துகள்:

அன்னு said...

அக்கா..... என்ன சொல்ல.... என்ன சொல்ல..... மாஷா அல்லாஹ்..... எவ்ளோ செஞ்சிருக்கீங்க.... எவ்ளோ செய்யறீங்க இப்பவும்.... குழந்தைங்களைப் பத்தி தனி புத்தகமே நீங்க எழுதலாம்... அதே போல உங்களைப் பத்தி தனியா ஒரு புத்தகம் எழுதலாம் போல.... மழலை உலகம் முழு தொடரும் படிக்கலை.... இனிமேதான் முழுதும் படிக்கனும்.... ஆனா இந்த பகுதி மனசை நிறைச்சிடுச்சு..... உங்க கூடவே அந்த குழந்தைங்களோட விளையாண்டு வந்த மாதிரி ஃபீலிங்..... அல்ஹம்துலில்லாஹ்.... உங்க கையில் வளர்ந்த பையன் டாக்டரா..... எம்மா..... ஒமரையும் பேசாம நான் உங்க வீட்டுக்கு அனுப்பிடவா??? :))))

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பகிர்வு... இது போல் இன்னும் நிறைய எழுதவும்...

நன்றி...

angelin said...

பவுடர கொட்டி ஸ்கேட்டிங் விளையாடுவது ...எல்லார் வீட்டிலும் நடப்பதுதானா :))
என் பொண்ணு vinyl floor இல் கொட்டி இப்படி செய்வா ..ஆனா ரொம்ப வழுக்கும் ..
ப்ரூமால் பேருக்கு வைத்து dust pan கொண்டுவந்து பார்த்தா ,,குப்பையில் கோலம் போட்டு வைப்பா :))..மழலை பருவம் கொஞ்ச நாள்தான் அதை நாமும் சேர்ந்து அனுபவிக்கனும் ...ஆனா உங்களுக்கு நிறைய பொறுமை ....பதிவின் இறுதியில் நீங்க சொல்லியிருப்பது சரியே ...

Asiya Omar said...

மழலை உலகம் தொடர் முடிந்து விட்டதா? நல்ல பகிர்வு..

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா