Friday, October 26, 2012

மஞ்சள் பூசணி ஹல்வா - Yellow Pumpkin Halwa


மஞ்சள் பூசணி ஹல்வா
தேவையானவை
துருவிய மஞ்சள் பூசணி – 200 கிராம்
பட்டர் – 1மேசை கரண்டி
ஏலக்காய் – 2
சூடான பால் – 25 மில்லி
குங்குமப்பூ – 3 இதழ்
சர்க்கரை – 100 கிராம்
பொடியாக நறுக்கிய முந்திரி – 6
கருப்பு காய்ந்த திராட்சை – 6
அலங்கரிக்க
பிஸ்தா பிளேக்ஸ்- 1 தேக்கரண்டி
முந்திரி – 3
பாதம்  - 6







செய்முறை
ஒரு வாயகன்ற பேனில் நெய்யை சூடாக்கி முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
சூடான பாலில் சாப்ரான் (குங்குமப்பூவை ஊறவைக்கவும்)
முந்திரி வருத்த அதே பேனில் பட்டர் சேர்த்து துருவிய மஞ்சள் பூசணி,
மற்றும்  ஏலக்காய் சேர்த்து பச்ச வாடை போகும் வரை வதக்கவும்.
அடுத்து  பாலில் ஊறிய குங்குமப்பூ சேர்த்து கலந்து மீண்டும் 5 நிமிடம் வதக்கவும்.
கடைசியாக சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். வறுத்து வைத்த முந்திரி திராட்சையை சேர்த்து நெய் தனியாக பிரிந்து ஹல்வா பதம் வந்ததும் பிஸ்தா பிளேக்ஸ்,பாதம்  மற்றும் முந்திரி தூவி அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான பூசணி ஹல்வா ரெடி.




அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.











11 கருத்துகள்:

GEETHA ACHAL said...

Looks so tempting and yummy halwa...

Chitra said...

looks very nice. new recipe to me.

இமா க்றிஸ் said...

ரெசிபில 'பூசணி' காணாமப் போய்ருக்கா ஜலீ. 'துருவிய மஞ்சள்' மட்டும்தான் தெரியுது.

அன்பான பெருநாள் வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லா இருக்குங்க... வாழ்த்துக்கள்...

மாதேவி said...

அல்வா அருமையாக இருக்கின்றது.

இனிய பெருநாள் வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

வாங்க கீதா ஆச்சல் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

சிதரா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி , கண்டிப்பாக செய்து பாருங்கள்.

Jaleela Kamal said...

இமா அக்கா ஆமா வேலை பிஸி அவச்ரத்தில் விட்டுட்டேன், இப்ப சேர்த்து விட்டேன்.

உங்கள் பெருநாள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

தனபாலன் சார் உங்கள் தெடர்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

மிக்க் நன்றி மேனகா

Jaleela Kamal said...

மாதேவி கருத்து தெரிவித்தமைக்கும் , பெருநாள் வாழ்த்துக்கும் மிக்க் நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா