Friday, December 7, 2012

தக்காளி கருவேப்பிலை சூப் - Tomato Curry Leaves Soup


லைக்கோப்பென் கான்சர் நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளிஉட்கொள்வது கான்சரிலிருந்து பாதுகாக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல்.


தக்காளி -  அரைகிலோ
கருவேப்பிலை – அரை கப்
கொர கொரப்பாக திரித்த மிளகு தூள் – 1 தேக்கரண்டி
பொடியாக அரிந்த வெங்காயம் – 1 மேசைகரண்டி
உபு  - ருசிக்கு தேவையான அளவு
சர்க்கரை – 1 சிட்டிக்கை
பட்டர் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 750 மில்லி
கார்ன் மாவு (சோளமாவு) – 1 தேக்கரண்டி
தண்ணீர்  - 50 மில்லி


 

தக்காளி , கருவேப்பிலையை நன்கு கழுவிக்கொள்ளவும்.
குக்கரில் தக்காளியை நான்காக அரிந்து போடவும், கருவேப்பிலை முடிந்த வரை கிள்ளி போடவும், அதனுடன் மிளகுதூள், உப்பு சேர்த்து 650மில்லி தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி தீயின் தனலை மிதமாக வைத்து 3 விசில் விட்டு இரக்கவும்.
குக்கர் ஆவி அடங்கியதும் அதைகரண்டி ப்ளெண்டர் கொண்டு மசித்து ஜூஸைமட்டும் வடிக்கட்டவும்.
வடிகட்டிய வேஸ்டில் மேலும் 50 மில்லி தண்ணீர் சேர்த்து பிசைந்து அந்த ஜூஸையும் கலந்து கொள்ளவும்.
வடித்த ஜூஸை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி பட்டர், உப்பு, சர்க்கரை , மேலும் தேவைக்கு மிளகு தூள் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
கார்ன் மாவை மீதி இருக்கும் 50 மில்லி தண்ணீரில் கலக்கி சூப்புடன் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு கிரிப்பானதும் இரக்கவும்.
சுட சுட தக்காளி கருவேப்பிலை சூப் ரெடி , பொரித்த பிரட் அல்லது சிப்ஸ் உடன் குடிக்கவும்.

***************************
ஜலீலாவின்  டிப்ஸ்: குழந்தையினமையை போக்க இது ஒரு அருமருந்து. பெண்களுக்கு முடிவளர கருவேப்பிலையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவேண்டும். அதை இந்த முறையிலும் சேர்த்து கொள்ளலாம்.

என் பிள்ளைகளுக்கு தக்காளி போட்டாலே பிடிக்காது, ஆனால் தக்காளி சேர்த்தால் தான் குருமாக்கள் எல்லாம் நல்ல சுவைபடும்.
அதில் மசிய வேகவிட்டுடுவேன், ஆனால் ரசம் ,சாரு போன்றவைகளில் எல்லாமே வேக வைத்து அரைத்து , அல்லது வடிக்கட்டி சேர்த்து விடுவேன்.

*******************************

கீழே உள்ள இந்த தகவல் தமிழ் குடும்பத்தில் படித்த்து:


தக்காளி குடிப்பது ஆண்களின் விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
தினமும் ஒரு கப் சூப் குடிப்பதால் விந்தணுக்கள் அதிக சக்தி பெற்றுவிடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்பது போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் முடிவு.
லைக்கோப்பென் கான்சர் நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளிஉட்கொள்வது கான்சரிலிருந்து பாதுகாக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது இந்தபுதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது.
நாற்பத்து இரண்டு வயதுக்கு மேல் இருக்கும் நபர்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையில் இரண்டு வாரங்களிலேயே பன்னிரண்டு சதவீதம் வரை விந்தணு வீரியம் அதிகரித்திருக்கும் தகவல் ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்திருக்கிறதாம்.
அப்புறமென்ன, இனிமேல் வழியில் தக்காளி சூப் விற்றுக் கொண்டிருப்பவனைப் பார்த்தால் பைக்கை கொஞ்சம் நிப்பாட்டி ஒரு சூப் குடிச்சிட்டு போங்க 


இதை என் ஈவண்டுக்கு லின்க் கொடுக்கிறேன்8 கருத்துகள்:

ஸாதிகா said...

வித்தியாசமான சூப்தான் கருவேப்பிலை மணமுடன் சூப் கமகம என்று இருக்கும்.

சேக்கனா M. நிஜாம் said...

நல்லதொரு குறிப்பு !


இன்னிக்கே ட்ரைப் பண்ணிப் பாப்போம் :)

தொடர வாழ்த்துகள்...

Asiya Omar said...

அருமையாக இருக்கு.

இமா said...

பார்க்கவே சுவையாக இருக்கும் என்று தெரிகிறது.

M. Shanmugam said...

வித்தியாசமான ஒரு சமையல் குறிப்பு
மிக்க நன்றி.

Tamil Magazine

Priya said...

Attagasama irruku intha soup.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சூப் வித்யாசமா இருக்கு

அஸ்மா said...

ஆஹா... சூப்பரா இருக்கு ஜலீலாக்கா. நானும் ஏதாவது உங்க ஈவெண்ட்டுக்கு இன்ஷா அல்லாஹ் அனுப்புறேன் :)

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா