Sunday, January 27, 2013

புல்ஸ் ஐ ஆப்பம் - Bull's eye Appam


-- புல்ஸ் ஐ ஆப்பம்

டயட் செய்பவர்களுக்கு அல்லது எண்ணை அதிகமாக இல்லாத உணவு என்றால் கொழுக்கட்டை, இட்லி , புட்டு, ஆப்பம் இது போன்ற டிபன் வகைகளை செய்து  சாப்பிடலாம்.

எண்ணையில்லமல் முட்டையுடன் சத்தான டிபன்,
 குழந்தைகளுக்கு காரமில்லாமல் சாப்பிட நல்லதொரு டிபன் அயிட்டம்.டயட் செய்பவர்களுக்கும் ஏற்ற டிபன். 


தேவையானவை
ஆப்பத்துக்கு
பச்சரிசி அரிசி  – அரை டம்ளர்
புழுங்கல் அரிசி – அரை டம்ளர்
அவல் – ஒரு மேசை கரண்டி
ஜவ்வரிசி – ஒரு தேக்கரண்டி
உளுந்து – ஒரு மேசைகரண்டி
உப்பு – முக்கால் தேக்கரண்டி
ஆப்ப சோடா – கால் தேக்கரண்டி
தேங்காய் – நான்கு பத்தை துருவியது
வெந்தயம் – ஒரு அரை தேக்கரண்டி

புல்ஸ் ஐக்கு 
முட்டை – 3
மிளகு தூள்  - தேவைக்கு
உப்பு தூள் தேவைக்கு


 செய்முறை 
முதலில் இருவகை அரிசி  அவல் ,உளுந்து,ஜவ்வரிசிவெந்தயத்தை முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
தேங்காய் அனைத்தையும் சேர்த்து அரைத்து உப்பு சோடாமாவு போட்டு 8 மணி நேரம் புளிக்க விடவும்.
 ஆப்ப ச்சட்டியை காயவைத்து வெங்காயத்தை பாதியாக அரிந்து ஃபோர்க்கில் குத்தி எண்ணை சிறிது விட்டு சுற்றிலும் தேய்க்கவும். அப்பதான் ஒட்டாமல் பிஞ்சி போகாமல் வரும்.
ஒரு குழிகரண்டி ஆப்பமாவை உற்றி சுழற்றி விடவும்.

ஒரு முட்டையை கலக்காமல் அப்படியே ஊற்றி மேலும் சிறியதாக சுழற்றிவிட்டால் வெள்ளை கருமட்டும் எல்லா மாவிலும் படும். பிறகு முடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்
நல்ல முக்கால் பாகம் வெந்து வரும் போது மிளகு உப்பு தூவி  இரக்கவும்.




தேவைக்கு  இது போல் செய்து 3 செய்து  கொண்டு மீதி உள்ள மாவில் பிளெயின் ஆப்பம் ஊற்றி கொண்டு அதற்கு பக்க உணவாக தேங்காய் பால் , சப்ஜி,  சால்னா ,சட்னியுடன் ஏதாவது ஒன்று செய்து கொள்ளலாம்.

முழு பாசி பயிறு தால் தர்கா, பஞ்சி ஆப்பம், ஏலக்காய் தேங்காய் பால் சுட்டியை செடுகி பார்க்கவும்.

எண்ணையில்லதா முட்டையுடன் சத்தான டிபன்குழந்தைகளுக்கு காரமில்லாமல் சாப்பிட நல்லதொரு டிபன் அயிட்டம்.



இப்ப இங்கு துபாயில் மாவு கூட அரைக்க தேவையில்லை , எல்லா சூப்பர் மார்கெட்டுகளிலும் ரெடி மேட் மாவு கிடைக்கிறது. இன்னும் வேலையும் மிச்சம் மாவு வாங்கி வந்தால் 10 நிமிடத்தில் புல்ஸ் ஐ ஆப்பர் ரெடி.

சமைக்கும் நேரம் : 30 நிமிடம் 
பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு
ஆயத்த நேரம் : (ஊறவைக்கும் நேரம் + அரைக்கும் நேரம் + புளிக்க வைக்க)


Bull's Eye 


linking to saras 30 minutes dish rice recipe

Tuesday, January 22, 2013

கிட்ஸ் தக்காளி சூப் - Kids Tomato Soup


குளிர் காலம் வந்துவிட்டது,
இது போல் சூப் செய்து குடிப்பது தொண்டை கர கரப்புக்கு , இதில் இஞ்சி சேர்ந்து இருபப்தால் சளிக்கு எல்லாம் மிகவும் நல்லது.

எளிய முறையில் தயாரித்து விடலாம்.இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.குழந்தைகள் என்றில்லை பெரியவர்களுக்கும் , கர்பிணி பெண்களுக்கும் உகந்தது

குளிர்காலத்தில் இந்த சூப்பை குடித்தால் உங்கள் தொண்டை சொல்லுமே ஆஹா...












தேவையானவை



தக்காளி = நான்கு
இஞ்சி = இரண்டு அங்குல துண்டு
சின்ன வெங்காயம் = 10

தாளிக்க

பட்டர் = ஒரு தேக்கரண்டி
மிளகு = தேவைக்கு
உப்பு = தேவைக்கு

கார்ன் பிளார் மாவு = இரண்டு தேக்கரண்டி



செய்முறை






தக்காளியில் பொடியாக அரிந்த இஞ்சி, வெங்காயம் சிறிது உப்பு சேர்த்து நன்கு குக்கரில் 5 விசில் விட்டுவேகவிடவும்.
குக்கரின் ஆவி அடங்கியதும்  வெந்ததை ஆறவைத்து
முக்கால் பாகம் அரையுமாறு மிக்சியில் அரைத்து பெரிய துளையுள்ள வடிகட்டியில் வடிக்கவும்.

கடைசியாக ஒரு பேனில்  பட்டர்  சேர்த்து தாளித்து தக்காளி கலவையை ஊற்றி கொதிக்க விட்டு கார்ன் மாவை கரைத்து ஊற்றவும்.

கடைசியாக தேவைக்கு மிளகு தூள் , உப்பு தூள் தூவி குடிக்கவும்.

இது சிம்பிள் சூப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம்,
வருகிற குளிர் காலத்துக்கு தொண்டைக்கு மிக இதமாக இருக்கும்.



Linking to nithu's healthy food for healthy kids party food and priya suresh's valentines day recipe contest



Monday, January 21, 2013

கண்ணாடிகள் கவனம்.-M அப்துல் ரஹ்மான் M.P.




(பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது கண்ணாடி டம்ளரை உடையாமல் பாதுக்காப்பது போலாக்கும்)



கண்ணாடிகள் கவனம். = M அப்துல் ரஹ்மான் M.P.

நமது சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்னைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன. இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம்பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது. செல்போன், சின்னத்திரை, பெரிய திரை, கல்வி நிலையங்களில் கலந்து பழகுதல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். காரணம் எதுவாயினும் சரி செய்யப்பட வேண்டிய தலையாய விசயம் இது. இந்தப் பொறுப்பும் கடமையும் பெற்றோர்களையே சாருகின்றது.

பெற்றோர்களின் கவனக்குறைவினால்தானே அவர்கள் கீழிறங்கிப் போகின்றார்கள். செல்போன், தொலைக்காட்சி, இணையதளம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு பெற்றோர்களின் பங்கு முடிந்து விடுவதில்லை. அதை அவர்கள் எப்படிப்பயன்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லித்தர வேண்டும். அதன் நன்மை தீமைகளை விளக்கித் தர வேண்டும். தீவிர கண்காணிப்பும் வேண்டும். மீறும்போது கண்டிக்கவும் வேண்டும்.
தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்கும்போது அதில் காட்டப்படும் கற்பனைக் காட்சிகளால் ஈர்க்கப்படும் பிள்ளைகள் இளமைக்கால தூண்டுதலால் தானும் அதுபோல செய்ய வேண்டுமென உந்தப்படுகிறார்கள். பிள்ளைகளை வைத்துக்கொண்டே தொடர்நாடகங்கள், சினிமாக்களைப் பார்க்கின்றோம். வரம்பு மீறிய காட்சிகளைப் பார்க்கும் சூழலை நாமே உருவாக்கித் தருகின்றோம். பெற்றோர்கள் நல்ல முன்மாதிரிகளாக இருந்து தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

நம் பிள்ளைகள் தனி அறையில் நீண்டநேரம் யாரோடு பேசிக்கொண்டிருக்கின்றார்கள்? என்பதைக் கண்காணிக்க வேண்டும். அவர்களின் கல்லூரி நண்பர்கள் யார்யாரோடெல்லாம் பழகுகின்றார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். செலவுகளுக்காக அதிகமாகப் பணம் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். அதிக நகைகளை அணிவிக்காமலிருப்பதும், நகைகள் இருக்குமிடம், பணப்புழக்கம் அவர்களுக்குத் தெரியாமலிருப்பதும் நல்லது. ஏனென்றால் ஓடிப்போகலாம் என்று அவர்கள் முடிவெடுக்கும்போது பணபலமும் அவர்களுக்குச் சக்தி ஊட்டும் அம்சமாக இருக்கலாம். நம் பிள்ளைகளின் உரிமைகளில் தலையிடலாமாஎன்றெல்லாம் பார்க்காமல் அவர்களின் நலன்களைக் கருதி கண்காணிக்க வேண்டும். படியில் பார்த்து இறங்கு’ என்று சொல்வது அவர்கள் கீழே விழப் போகிறார்கள்’ என்பதற்காக அல்ல. கீழே விழுந்து விடக்கூடாதுஎன்பதற்காகத்தான். எல்லாவற்றிற்கும் மேலாக இறையச்சத்தையும், மறுமைச் சிந்தனைகளையும் ஊட்டி வளர்க்க வேண்டும். ஒழுக்க மாண்புகளை விதைக்க வேண்டும். 

குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் அழகிய வாழ்வுமுறைகளையும் தெளிவாகப் போதித்தாலே அவர்கள் சிறந்தவர்களாக வளர்வதற்குப் போதுமானதாகும். பெண்கள் கண்ணாடிகளைப் போன்றவர்கள் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். பெண்களை கண்ணாடியைப் போன்று பாதுகாக்க வேண்டும். கை தவறினால் கீழே விழுந்து உடைந்து நொறுங்கும். நம் காலையே அது குத்திக் கிழிக்கும். கவனமோடு நம் பிள்ளைகளை வளர்ப்போம். கண்ணாடிகள் கவனம்.

M அப்துல் ரஹ்மான் M.P.
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர்
***************************************** 

நானும் என் பதிவில் டிப்ஸ் பகுதியில் முன்பு சொல்லி இருக்கிறேன். 

(பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது கண்ணாடி டம்ளரை உடையாமல் பாதுக்காப்பது போலாகும்)



அப்துல் ரஹ்மான் காக்காவை பற்றிசொல்லனும் என்றால் முதல் முதல் துபாய் வந்த போது முன்பு  அண்ணன் வீட்டில் தான் தங்கி இருந்தோம் அப்ப அவரும் அதே  அப்பாட்மெட்டில் எதிர் எதிர் பிளாட்டில் எல்லோரும் தங்கி இருந்தோம்.அதற்கு பிறகு எல்லோரும் வீடு மாறி வேறு வேறு இடத்துக்கு சென்று விட்டோம்.

இப்போது பாராளு மன்ற எம்.பி. என்னிலையிலும் பெருமை கிடையாது . அப்ப பார்க்கும் போது எப்படி பேசுவாரோ அதே போல் தான் இப்போதும். சில பேருக்கு பதவி வந்து விட்டால் அவர்களுடைய நடை உடை பாவனை எல்லாமே மாறிவிடும். இது நிறைய பேரிடம் நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன்.

முன்று மாதம் முன்பு இங்கு துபாய் வந்த போது அப்துர் ரஹ்மான் வந்து இருக்கிறார்ர் என்றார்கள். ரொம்ப பிஸியாக இருப்பார், அவரை எங்க போய் பார்க்க முடியும் என்று நினைத்தேன்.
நான்கு நாட்கள் கழித்து என்ன ஆச்சரியம். ஆபிஸில் லுஹர் தொழுதுட்டு என் இருக்கைக்கு வந்த போது சாதரணமாக வரவேற்பரையில் உட்கார்ந்து இருந்தார். எனக்கு ஒன்றுமே புரியல. என்ன என்று கேட்டதற்கு கிஃப்டுகள் கொடுக்க வாட்ச் வாங்க வந்தேன் என்றார். பிறகு பேசிவிட்டு என் ஹஸ்கிட்ட பேசனுமே என்று பல் வேலைகள் இருக்கும், திரும்ப எப்ப கூப்பிடலாம் எப்ப நீங்க பிரி என்றேன். சிரிச்சிட்டு எப்ப வேண்டுமானாலும் பேசலாம், கமாலை பேச சொல்லுங்க என்று சொன்னார்.
அதே இப்ப மறுபடி துபாய் வந்த சமயம், ரீஃப் மாலில் என் கணவரை பார்த்து இருக்கிறார். புர்கா ஷாஃப் ஆரம்பித்ததை பற்றி என் கணவர் அவரிடம் சொல்ல, நீங்க எப்படி ஆரம்பித்தீங்க இதுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லையே ஜலீலா தானே பார்க்கனும் என்றார். 
அவர் எதை வைத்து சொல்கிறார் என்றால் முன்பு 15 வருடம் முன் அவங்க மகளுக்கு பட்டு பாவாடையும் , சோளியும் தைத்து கொடுத்தேன். அதை ஞாபகம் வைத்து சொல்லி இருக்கிறார்.
***************************************************

டிஸ்கி டெல்லி சம்பவத்திற்கு  எல்லாருமே பதறி போய் உள்ளனர்.
என்ன இருந்தாலும் வக்கிரபுத்தி கொண்ட சில மிருகங்கள் உள்ள இந்த நாட்டில் பெண்கள் என்றுமே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
இரவில் தனியாக செல்வதை தவிர்ப்பது நல்லது.
அதுக்கு தான் பெரியவர்கள் பெண் பிள்ளைகளை விளக்கு வைத்ததும்  (மக்ரிப் தொழுகைக்கு பின்) தனியாக வெளியே போகாதே என்பார்கள்.
ஏன்னு கேள்வி கேட்டா ஷைத்தான் பினனடியே அலைவான் என்பார்கள்.
அது இப்படி பட்ட மிருக ஷைத்தான் களை தான் சொன்னார்களோ என்னவோ?

( நான் சின்ன வயதில் ரொம்ப பயப்படுவேன் ஷைத்தான் பின்னாடியே வருவான் என்றது சின்ன சாமான்கள் வாங்க சந்து முனை கடையில் போய் சக்கரையோ , டீத்தூளோ வாங்கிட்டு வரும் போது ஆஹா கிரான்மா பின்னாடி ஷைத்தான்வருனு சொன்னாஙகளே திரும்பி பார்க்காம ஓட்டம் பிடிப்பேன்.)

இதே தான் 20 வருடம் முன் என் கிரான்மாவும் 
 பிள்ளைவளர்க்க எங்களுக்கு நல்ல மதியையும்
பிள்ளைகள் வளர அவர்களுக்கு நல்ல புத்தியும் தா நாயனே
 என்று சொல்லுவாரக்ள்.


ஏற்கனவே பதிவுகளில் பெண்களுக்கான டிப்ஸ் பகுதியிலும் , வலைச்சர பதிவுகளில் நல்ல பதிவுகளாக அறிமுக படுத்தியதில் குழந்தைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு பகுதிகள் நான் போட்டு இருந்ததையும் மற்றவரக்ள் பதிந்து இருந்தததையும் சுட்டி இருந்தேன்.
 குழந்தைகள்  கண்ணாடி யை போல் அதை  உடையாமல் பாது காத்து கொள்ளவேண்டியது நம் கடமை.

இங்கு ஜனாப் அப்துல் ரஹ்மான் காக்காவும் அதையே மேலே வெளியிட்டுள்ள செய்தியில்  சொல்லி இருக்கிறார்கள்.
பெற்றோர்களாகிய நான் ஆண் பிள்ளைகளாக இருந்தாலும் பெண் பிள்ளைகளாக இருந்தாலும் பிள்ளைகளை வளர்பதில் மேலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.



(பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது கண்ணாடி டம்ளரை உடையாமல் பாதுக்காப்பது போலாக்கும்)





Thursday, January 17, 2013

பேச்சுலர் சமையல் போட்டி வெற்றியாளர்கள்




அருமை பதிவுலக தோழ தோழியர்களே

ஒரு வழியாக பேச்சுலர் ஈவண்ட் சமையல் போட்டி முடிவாகிவிட்டது.
பேச்சுலர் சமையல் போட்டி நவம்பர் 20 முதல்  டிசம்பர் 20 நடந்ததில் மொத்தம் 26 பேர் கலந்து கொண்டதில் தேர்வாகியவர்கள் விபரமும், பரிசு விபரமும் கிழே கொடுத்துள்ளேன்.
உங்கள் பிஸியான பல வேலைகளுக்கிடையில் என் அழைப்புக்கு இணங்கி கலந்து கொண்ட அனைத்து தோழிகளுக்கும், தோழர்களுக்கும் மிக்க நன்றி.தேர்வாகத குறிப்புகள் எல்லாமும் மிக்க அருமை சின்ன சின்ன பாயிண்ட் தான் குறைவு மற்றபடி எல்லோருடைய குறிப்புகளுமே மிக மிக அருமை. ஹெல்தியான ரெசிபி ரொம்ப கடினமாக இருந்தது தேர்வு செய்வது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாச்சு. 
போட்டி முடிவு அறிப்பு கொஞ்சம் லேட் ஆகிவிட்டது பொறுமையாக  காத்திருந்த அனைவருக்கும் மிக்க நன்றி.

1.Faiza

என் இனிய இல்லம்

தோழி பாயிஜா கொடுத்துள்ள குறிப்புகள் அனைத்துமே ஒன்றுக்கு ஒன்று அசத்தலாக இருந்தது. இந்த கோல்டன் பிரான்ஸ் எல்லாருக்கும் பிடித்து இருந்தது. மற்றும் இட்லி , நூடுல்ஸ் ரைஸ் வகைகளும் அருமை.
Golden Prawns , Tandoori lolipop, Palak Rice, Egg Paneer Noodles












Exclusive Party Hand Purse

Golden Prawns ,இந்த குறிப்பு முதலாவதாக தேர்வாகி உள்ளது.முதல் பரிசாக பாயிஜாவுக்கு மேலே Exclusive Party Hand Purse பார்டி ஹாண்ட் பர்ஸை பரிசாக வழங்குகிறேன். 

*******************************************************

2. Vai.Gopu -Healthy Adai

வை கோபு சாரின் அடை குறிப்பு விரிவான விளக்கம், பேச்சுலர்களுக்கு டிப்ஸ் , பேச்சுலர்களுக்கு ஒரு தந்தையை போல் அறிவுரையுடன் அக்கறையாக போட்டுள்ளார். இந்த குறிப்பை அனைவரும் ரசித்து ருசித்து பாராட்டி உள்ளனர்.












Emergency Rechargeable  Light 33 Led PF 733

அடை குறிப்பு இரண்டாவதாக தேர்வாகி உள்ளது.
 வை .கோபு சாருக்கு  படத்தில் உள்ள Emergency Rechargeable  Light 33 Led PF 733 பரிசாக வழங்குகிறேன்.

*******************************************************************

3.மகி அருன்  மகிஸ் அருன்ஸ் கிச்சன்


.இந்த குறிப்பு முன்றாவாக தேர்வாகி உள்ளது.










மகிக்கு படத்தில் உள்ள Stone Hand Bag ஹாண்ட்பேக் பரிசாக வழங்குகிறேன்.


ியின் கிப்பில் புமையாகொட்டுகை சம்ற்றும் ஸ்ைசி எக் பிர,குமோச ும் அரும.

**************************************************************












அதிரா குறிப்பில் இது சாசேஜ் பேன் கேக் நான்காவதாக  செலக்ட் ஆகியது. 

அதிரா அனுப்பிய அநேக குறிப்புகளில் (broccoli Spinach curry,salman curry, sausage sandwich,cauliflower curry) உப்பின் அளவும், கிராம் அளவும் குறிப்பிட்டு இருக்கிறாங்க. அவங்க குறிப்பில் பெரும்பாலும் தக்காளி இல்லாத சமையல்.சில பேச்சுலர்களுக்கு கண்டிப்பாக உதவும்.

அதிராவுக்கு படத்தில் போட்டுள்ள Flower Type Hand Bag பரிசாக வழங்குகிறேன்.


**************************************************





முள்ளங்கி கீரை , மரவள்ளி கிழங்கு கேக்
Healthy Recipe + Neat Presentation










அஸ்மா குறிப்பில் உணவின் படம் அழகாகவும், குறிப்பும் தெளிவாகவும், கீரையின் பயன்களை பற்றியும் மிக அருமையாக எழுது இருக்காங்க.ஆகையால்  5வதாக தேர்வாகி உள்ளது.

அஸ்மாவுக்கு படத்தில் இருக்கும்  Hand Bag ஹாண்ட் பேக் பரிசாக வழங்குகிறேன்.

***********************************************

கிழே அமைதிசாரல், ஆமினா ரொம்ப அழகான பிரஷண்ட் பண்ணி இருக்காங்க இருவருக்கும் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.



Chuura (சூரா)




***************************************************************

சமையல் எக்ஸ்ப்ரஸ் - தேங்காய் சாதம்.







ஆமினா வுக்கு படத்தில் உள்ள வால் கிலாக் பரிசாக வழங்குகிறேன்.

*********************************************************************


ஆசியா அதிக குறிப்புகள் அனுப்பி இருக்கிறார்கள்.


ஈசி சிக்கன் கறி, பிரிஞ்சால் பொட்டேடோ சால்னா, ஈசி சாம்பார், சிக்கன் சுக்கா, வெஜ் நூடுல்ஸ் பிரியாணி , முட்டை சால்னா, புரோக்கோலி எக் ப்ரை
ஆங்கிலதளத்திலும் குறிப்பு கொடுத்துள்ளமையால் அங்கு ஆசியாவுக்கு பரிசு வழங்கலாம் என்று இங்கு *Star of The Kitchen* அவார்டை வழங்குகிறேன்

***************************************************************

போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் மிக அருமையான ரெசிபிகளை அனுப்பி இருந்தார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கீழே உள்ள சான்றிதழை பெற்றுகொள்ளவும்.



பரிசு பெற்றவர்கள் அனைவரும் கீழே  சென்னையில் உள்ள எங்க சென்னை ப்ளாசா கடையில் பரிசுகளை பெற்று கொள்ளவும்.

பரிசுகளை கடைக்கு இப்ப தான் இங்கிருந்து (துபாய்) அனுப்பி உள்ளேன். அங்கு சென்னை கடைக்கு போய் சேர்ந்ததும் எப்போது வந்து பெற்றுகொள்ளனும்  என்பதை மெயில் தெரிவிக்கிறேன். அவார்டுகளும் காப்பி செய்ய முடியவில்லை என்றால் அனைவருக்கும்  மெயிலில்  இன்னும் இரண்டு நாட்களுக்குள் அனுப்பி விடுகிறேன்.


 

No, 277/30 Pycrofts Road,1st Floor,
(opp:shoba cut piece)
(Near Marina Beach/Near Rathna cafe/EA)
Triplicane , Chennai 600 005
Tel: 91 44 4556 6787
Mr.Mohideen Mob: 91 78 45367954
Mr.Ibrahim Mob: 91 98 43709497



டிஸ்கி: இந்த ஈவண்ட் நடத்த அனுமதி கொடுத்து இதற்கான ஆலோசனை கொடுத்த என் கணவருக்கு தான் நான்  முதலில் நன்றியை தெரிவிக்கனும்.