Monday, March 11, 2013

கிங் பிஷ் லேயர் பிரியாணி - ( Step by Step) King Fish Layer Biriyani



டயட் செய்பவர்கள் அடிக்கடி சிக்கன் மட்டனை விட மீன் பிரியாணி செய்து சாப்பிடலாம்.





தேவையான பொருட்கள்
தரமான பாசுமதி அரிசி 3 டம்ளர்
வஞ்சிர மீன்  - அரை கிலோ
தாளிக்க

தக்காளி 5
வெங்காய்ம் 4
கொத்து மல்லி ,புதினா ஒரு கைபிடி
பச்சமிளகாய் 3
மிளகாய் தூள் ஒன்னறை தேக்க்ரண்டி
மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
ரெட் கலர் பொடி ஒரு சிட்டிக்க்கை
நெய் ஒரு மேசை கரண்டி
தயிர் முன்று மேசை கரண்டி
எண்ணை முக்கால் டம்ளர்
பட்டை,கிராம்பு,ஏலம் = தலா இரண்டு இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் முன்று மேசை கரண்டி 



 மீன் ஃபிரைக்கு மசாலா
காஷ்மிரி சில்லி பொடி ஒரு மேசை கரண்டி
பிரியாணி மசாலா ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு மேசை கரண்டி
லெமன் ஜூஸ் அரை பழம்
உப்பு = ருசிக்கு தேவையான அளவு
 செய்முறை
தேவையான பொருட்களை ரெடியாக வைக்கவும்.
மீனை கழுவி சுத்தம் செய்து அதில் சேர்க்கவேண்டிய மசாலா தூள்களை சேர்த்து 10 நிமிடம் ஊறவைத்து, முக்கால் வேக்காடாக ரொம்ப மொருகாமல் பொரித்து வைக்கவும்
 ஒரு வாயகன்ற வானலியில் எண்ணை , நெய் சேர்த்து காயவைத்து பட்டை ஏலம் ,கிராம்பு சேர்த்து வெடியவிட்டு வெங்காய்ம் சேர்த்து பொன்முறுவலாக வதக்கி,இஞ்சி பூண்டு சேர்த்து கிளறி பச்சை வாடை போக கிளறி தக்காள்,பச்சமிளகாய், கொத்துமல்லி புதினாவை சேர்த்து வதக்கி சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்

 அடுத்து சேர்க்கவேண்டிய தூள் வகைகளை சேர்க்கவும்( மிளகாய் தூள்,உப்பு தூள்,மஞ்சள் தூள், பொரித்த மீன் சிறிது சேர்த்து அரை லெமன்  பிழிந்து மீண்டும் சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்.
தாளித்த கூட்டு கிரிப்பாகி வந்த்தும்
 உலை கொதிக்க விட்டு அரிசியை தட்டி உப்பு சேர்த்து முக்கால் பாகம் வெந்த்தும். ஒரு ஸ்பூன் எண்ணை சேர்த்து கிளறி விட்டு இரக்கி வடிக்கவும்.அப்ப தான் உதிரியாக வரும்.

 வடித்த சாதம், தாளித்த கூட்டில் இருந்து கால் பாகம் அளவுக்கு தனியாக எடுத்து வைக்கவும்.






சட்டியில் 3/4 பாகம் உள்ள தாளித்த மீன்  கூட்டின் மேல் வடித்த சாதத்தை பரவலாக வைத்து பொரித்த மீனில் பாதியை பரவலாக வைத்து 
முதலே எடுத்து வைத்த உதிரி  சாதம் மற்றும் எடுத்து வைத்த கூட்டு, பொரித்த மீனை பரவலாக வைத்து சாதம் சிறிது மீண்டு மேலே கிளறி கலர் பொடி தூவி தம்மில் விடவும்.

சுவையான கிங் பிஷ் லேயர் பிரியாணி ரெடி.

தம் போடும்போது தீயின் தனலை மிகச்சிறியதாக வைத்து 20 நிமிடம் வைக்கவும். பிறகு உடையாமல் மிகப்பதமாக கிழிருந்து மேலாக கிளறி விடவேண்டும்.

சாப்பாட்டு வகையிலேயே மீன் உணவு தான் மிகவும் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. இதை டயட் பிரியாணியாகவும் செய்யலாம். என்னை ஆலிவ் ஆயில் பயன் படுத்தலாம், தாளிப்புக்கு 2 மேசை கரண்டி போதும்.
கிரில் ஓவன் வசதி உள்ளவர்களுக்கு மேலும் வசதி , ஈசியாக செய்யலாம்.


இந்த குறிப்பு ஏற்கனவே தமிழ் குடும்பத்தில் 2 வருடம் முன் பகிர்ந்துள்ளேன். இது என் பெரிவாப்பா மகள் ஹீனா படிப்படியாக எப்படி செய்யனும் என்று போட சொன்னதால் இங்கும் இதை பகிர்ந்துள்ளேன்.


Linking to faiza's Passion on Plate
Ambur mutton biriyani - ஆம்பூர் மட்டன் பிரியாணி

9 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

படிப்படியான செய்முறை சூப்பர்...

இதே போல் தொடரவும்... நன்றி...

Menaga Sathia said...

சூப்பரா இருக்கு,இபப்வே பிரியாணி செய்து சாப்பிடனும் போல் இருக்கு...

Shanavi said...

Supero super dear, Feel like I should attempt it right away..My paati used to make this with viral meen..

Asiya Omar said...

அருமையாக இருக்கு ஜலீலா.

'பரிவை' சே.குமார் said...

படத்துடன் பிரியாணி செய்முறை விளக்கம் அருமை...

Vikis Kitchen said...

இவ்வளவு அழகா மீன் பிரியாணி செய்து எங்களை எல்லாம் இப்படியா பசிக்க வைப்பது:) அசத்திட்டிங்க அக்கா. ரொம்ப அருமையா இருக்கு.

ஸாதிகா said...

சூப்பர்.நானும் இதே முறையில்தான் செய்வேன்.பார்க்கவே யம்மியா இருக்கு ஜலி.

Malar Gandhi said...

Hi Jaleela,

How are you. Its been a while...

This is a hearty meal, wish I lived somewhere close to you...

Its bit hard to find king-fish here...and the pictures are way too tempting for me.

I have moved my blog to a new domain: www.kitchentantantras.com

So, until everyone are going to get used to this new site, I am going to spam the comments section...pardon me:)
http://kitchentantras.com/masala-pori-just-killing-time/

http://kitchentantras.com/thalapakattu-biriyani/

http://kitchentantras.com/my-favorite-song-a-tribute-to-food-lovers/

http://kitchentantras.com/dinner-and-a-movie-famous-food-movies-list/

Unknown said...

அக்கா பார்க்கும் பொழுதே நாவில் நீர் ஊறுகிரது... ரொம்ப அருமையாக செய்து அசத்தியிருக்கிங்க... சூப்பர்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா